தாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனையாகும். இவ் எண்ணக்கருவைப் பயன்படுத்தியே சாம்ராஜியங்கள் வீழ்த்தப்பட்டது. அந்த வகையில் உதுமானிய கிலாபாவின் வீழ்ச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கிய ஒரு அடிப்படைச் சிந்தனைதான் இந்த தாராண்மைவாதச் சிந்தனை. இன்று 21 ஆம் நூற்...றாண்டில் இஸ்லாமிய எழுச்சியை தடைசெய்யும் ஒரு கருவியாக மேற்கினால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக உள்ளது என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரக் கடமைப்பட்டுள்ளனர்.
Liberalism என்பது Freedom எனும் கவர்ச்சியான வார்த்தையினாலும்அழைக்கப்படும். இது சாதாரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு கிடைக்கும் “சுதந்திரம்” என்று பார்க்கும் ஒரு பார்வையாகவும் உள்ளது.
சுதந்திரம் என்பது.. மனிதன் தனது அடிமைத்தனத்தில் இருந்து கிடைக்கும் விடுதலையாகவும்; இராணுவ அடக்கு முறையில் இருந்து கிடைக்கும் சுதந்திரமாகவும் கருதினாலும், அரசியலில் மனிதன் தனக்கான “இறைமையை” அதிகார வர்க்கத்திற்கு வழங்கி மீண்டும் அடிமையாகிவிடுகிறான்.
உண்மையில் “இறைமை (Sovereignty)” என்பது மனிதனுக்கு இருக்க முடியாது. ஏன் எனில் அவன் பக்கச்சார்பான சட்டங்களை இயற்றுபவனாக இருக்கிறான். அதிலும் மனிதன் தமக்குத் தேவையான சட்டத்தை ஆக்குவதற்கு அதிகார வர்க்கத்திடம் உரிய ஆணையை ஒப்படைப்பதால் மனிதன் அடிப்படையில் சுரண்டலுக்குட்படுத்தப்படுகிறான ். மீண்டும் அடிமையாக நடாத்தப்படுவதற்கு ஆணையை வழங்குகிறான்.
மாறாக இறையாண்மை என்பது மனிதனைப்படைத்த இறைவனுக்குரியாதாக இருக்கும் போதுதான் மனிதன் நீதியாக நடாத்தப்பட வழியேற்படுவதுடன் முதலாளித்துவ மற்றும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலில் இருந்து பாதுகாக்கப்பட முடியும். அத்துடன் வல்ல நாயன் மாத்திரமே மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை நன்கறிந்தவனாகவும் பூரண அறிவுடையவனாகவும் இருக்கிறான்.
தாராண்மைவாதம் மதங்களுக்கு முற்றிலும் முறணான எண்ணக்கரு. ஏனெனில் அது மனிதன் மனிதனுக்கு முற்றிலும் கீழ்படியவேண்டும் என்று கோருவதுடன் இறைவனுக்கு கீழ்படிவதனை முற்றிலும் மறுக்கிறது. அத்துடன் மனிதன் மனோ இச்சையின்படி தான்தோன்றித்தனமாக தனிமனித சுதந்திரம் எனும் எண்ணக்கருவினூடகவும் மதச்சுதந்திரம் எனும் எண்ணக்கருவினூடாகவும் வாழவழிசமைக்கிறது. இது முற்றிலும் மதத்தை புறக்கணிக்கும் ஒரு வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்தும் சிந்தனையாகும்.
இதனாலேயே ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் இறைவன் விதித்தபடி ஒழுகிடுவதனை வெறுக்கிறது. அதனை விமர்சிக்கிறது. அவனை “கற்காலத்தவன்” எனக் குற்றம்சாட்டுகிறது. அத்துடன் இஸ்லாம் உலகில் மீள் எழச்சிபெற்றுவிடக் கூடாது என்பதனை தடுக்கும் மேற்கினது வாழ்வியல் ஒழுங்கினது ஒரு கருவியாக இன்று முஸ்லிம் நாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டு “முஸ்லிமினது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை” மிக மோசமாக பாதிப்பதுடன் அவனை இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்தும் ஒரு கருவியாக தொழிற்படுகிறது.
இவ்வுண்மைகளை உணர்வோம்! இதன் பேராபத்தை உணர்வோம்! எமது இஸ்லாமிய அகீதாவையும் அதன்மீது நிறுவப்பட்டுள்ள வாழ்வொழுங்கையும் அறிந்தொழுக முற்படுவோம். இஸ்லாம் மீண்டும் மீள்எழுச்சிபெற உழைப்போம்! மேற்கினது சிந்தனைத் தாக்கத்தில் இருந்து எமது உம்மத்தை பாதுகாப்போம்!
Liberalism என்பது Freedom எனும் கவர்ச்சியான வார்த்தையினாலும்அழைக்கப்படும்.
சுதந்திரம் என்பது.. மனிதன் தனது அடிமைத்தனத்தில் இருந்து கிடைக்கும் விடுதலையாகவும்; இராணுவ அடக்கு முறையில் இருந்து கிடைக்கும் சுதந்திரமாகவும் கருதினாலும், அரசியலில் மனிதன் தனக்கான “இறைமையை” அதிகார வர்க்கத்திற்கு வழங்கி மீண்டும் அடிமையாகிவிடுகிறான்.
உண்மையில் “இறைமை (Sovereignty)” என்பது மனிதனுக்கு இருக்க முடியாது. ஏன் எனில் அவன் பக்கச்சார்பான சட்டங்களை இயற்றுபவனாக இருக்கிறான். அதிலும் மனிதன் தமக்குத் தேவையான சட்டத்தை ஆக்குவதற்கு அதிகார வர்க்கத்திடம் உரிய ஆணையை ஒப்படைப்பதால் மனிதன் அடிப்படையில் சுரண்டலுக்குட்படுத்தப்படுகிறான