Apr 27, 2013

அமெரிக்க டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ! முஸ்லீம்கள் மீது முத்திரை குத்தும் இன்னொரு முகமூடித் தாக்குதலா!? ( பகுதி 03)

1980 களில் 'சோவியத் நாடு ' எனும் ஒரு சஞ்சிகை வெளி வந்து கொண்டிருந்தது. முதலாளித்துவ எகாதிபத்திய அடக்குமுறைகளுக்கு சவாலாக சோவியத் யூனியனாக நாஸ்திக கம்பியூநிஸம் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த காலப்பகுதி அதுவாகும்.(இந்தசஞ்சிகை அமெரிக்க எதிர்ப்பு மனப்பாங்கு உள்ளவர்களுக்கு தீனி போடும் ரஸ்ய
மார்க்சிய கம்பியூநிசத்தின் கொள்கை மற்றும் சுய சுத்தம் பேசும் சஞ்சிகையாகும்.)

ஆனால் இந்த சஞ்சிகையில் சில சம்பவங்கள் தொடர்பாக ஆதாரங்களையும்,தகவல்களையும் தருவதில் பல உண்மைகள் இருப்பதை எம்மால் மறுக்க முடியாது. அப்படி ஒரு தகவல்
தான் 'பயலாஜிகால் வெப்பனாக' பிரயோகிக்க அமெரிக்க இராணுவ ஆய்வு கூடமொன்றில் திட்டமிட்டு வீரியம் அதிகரிக்கப்பட்ட ஒரு 'வைரஸ்' தான் எச் .ஐ .வீ என்பதும் . அதன் பரீட்சார்த்த கசிவின் விளைவே 'எய்ட்ஸ்' என்பதாகவும் ஒரு நீண்ட விமர்சனம் வெளியிடப்
பட்டிருந்தது.

முழு மனித சமூகத்தையும் பணயம் வைத்து அதிகார ஆதிக்க ஆயுதப் போட்டியில் நீயா நானா ? என அமெரிக்காவும் , சோவியத் யூனியனும் அக்காலத்தில் ஈடுபட்டிருந்ததுபகிரங்க உண்மை.அரிசோனா பாலை வனத்தில் இரும்புப் பாலங்களை சில நொடிகளில் உருக்கிய சிறிய அணு குண்டு பரிசோதனை போதாமல் அதன் அகோரமான அழிக்கும் திறன் 'ஹீரோஸிமா' நாகாஸாக்கியில் ' பிரயோகிக்கப் பட்ட உதாரணமே போதும் !! அமெரிக்காவின் பாதுகாப்பான மனித நலன் மிக்க ஆய்வுத் திறமையை எடுத்துக் காட்ட.

ஆனால் இந்த விடயங்கள் முக்கியத்துவம் பெறாமல் 'அந்திறாக்ஸ்' என்ற 'பக்டீரியா' உலக உருண்டையை மறுபக்கம் சூழட்டியது!? 'மேட் பை அல்கைதா ' எனும் 'லேபில்' ஓட்டப்பட்டு 'இஸ்லாமிக் டேரர் இஸம்' என்ற ஒரு அச்சப் படுத்தும் 'செண்டி மென்டை' மனித உள்ளங்களில் விதைத்தது! காரணம் முஸ்லீம் உலகு ஆக்கிரமிக்கப் பட சில நியாயங்களை அரசியல் இராணுவ ரீதியில் அமைக்க வேண்டிய அவசியம் சீ. ஐ .ஏ இனால் உணரப் பட்டதே. பின்னர் இரட்டை கோபுரத் தாக்குதலை நேரடிக் காரணம் காட்டி ஈராக்கும் , ஆப்கானும் ஆக்கிரமிக்கப் பட்டது.

'கெமிகள் வெப்பன்' நாடகம் மூலம் ஈராக்கினுள் நுழைந்த அமெரிக்கா தகுதியான ஆதாரத்தை அங்கிருந்து தர முடிந்ததா!? 'ஓசாமா பின் லேடனுக்காக' ஆப்கான் நுழைந்த அமெரிக்கா இன்னும் வேறு எதைக் கிழிக்க அங்கே இருக்கிறது!? எனும் சாதாரண கேள்விகளுக்கே இன்னும்
பதில் சரியாக தரப்படவில்லை. 'ஆக்கிரமிப்புக்கான நியாயம் அதனால் இது நியாயமான ஆக்கிரமிப்பு ' எனும் நாடக அரசியல் கதை தவிர உறுப்படியாக இவர்களால் பதில் தர முடியாது .(தொடரும்)

No comments:

Post a Comment