Apr 27, 2013

அமெரிக்க டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ! முஸ்லீம்கள் மீது முத்திரை குத்தும் இன்னொரு முகமூடித் தாக்குதலா!? (02)

அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஒரு திசை திருப்பும் உளவியல் தரம் வாய்ந்த ஒரு நடவடிக்கையா? எனும் சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது. அந்த நடவடிக்கை ஏன் செய்யப்பட்டது ? என்பதை புரிந்து கொள்ள ஒரு வரலாற்றுத் தெளிவு அவசியமானது. ஆழமான ஆய்வுகள் இல்லாத விடத்தும் எனக்கு புரிந்தவரை சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

குப்ரிய மேலாதிக்கமுதலாளித்துவ உலகு முஸ்லீம் உலகின் மீது தமது நியாயங்களுக்காகதொடரான ஒரு உளவியல் யுத்தத்தை தொடுத்தே வந்துள்ளது . சர்வதேச மீடியாக்களின் பக்கபலம் , அவைகளின் மிகை விமர்சன பிரச்சார போலிகள் என்பன அமெரிக்கா முதல் இலங்கையின் பொது பல சேனாவின் பிரச்சாரம் வரை ஆதிக்கம் செலுத்தி உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

அது இஸ்லாம் ஒரு வன்முறை வழிமுறை ! அதன் வழி; முஸ்லிம் நிலையான வன்முறையாளன் என்பதும் அந்த வகையில் அடிப்படை வாத ,தீவிர வாத ,பயங்கர வாத முத்திரைகளை குத்தி காட்டுவதன் ஊடாக சரணடைவு, அல்லது சமாதி என்ற அச்சத்தை
முன்னிறுத்தி தமது சித்தாந்த வழிமுறைகளை நிபந்தனைப் படுத்தி முஸ்லிமை கட்டுப்பட வைப்பதே குப்பார்ககளின் தொடரான வழிமுறை ஆகும்.

அதோடு இன்று இஸ்லாத்தை விருப்பு அடிப்படையில் பலதில் ஒன்றாக தேர்வு செய்யும் மனோபாவத்தை நோக்கி முஸ்லிமை இட்டுச் செல்வதே குப்ரிய மேலாதிக்க வாதிகளின் ஒரே தெளிவான முடிவு . ஸரீயா சட்டம் அமுலில் இருக்கும் சவூதி அரேபியாவை ஒருபுறமும் , ஜனநாயக தெரிவின் அடிப்படையில் இஸ்லாத்தை இரண்டாம் தர தெரிவு (மனித விருப்பு)அடிப்படையில் நவ இஸ்லாமிசம் பேசும் தேசிய அரசுகளின் எழுச்சியை மறுபுறமும், ஆப்கான், மாலி, செச்னியா
போன்ற பகுதிகளின் சூழ்நிலையை ஒரு புறமும் என மாற்றி மாற்றி காட்டுவதன் ஊடாக யதார்த்தமான ஜனநாயகத்திட்கும் , காட்டுமிராண்டித் தனமான ஒரு பிட்போக்கு வழிமுறைக்கும் இடையிலான ஒரு தெரிவு நோக்கி முஸ்லிமை நகர்த்துவதே குப்பார்ககளின் அரசியல் இலக்கு. (தொடரும்)

No comments:

Post a Comment