Apr 20, 2013

இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறப்போகிறீர், ஜனாதிபதி அவர்களே!



وَقِفُوهُمْ ۖ إِنَّهُمْ مَسْئُولُونَ

“மேலும் அவர்களை நிறுத்துங்கள், அவர்களிடம் கேள்வி கேட்கப்பட வேண்டும்”
(சூரா அஸ்-ஸாஃப்ஃபாத்:24)


ஜனாதிபதி அவர்களே, சிரியக் கொடுங்கோலனின் பங்காளன் அஹ்மதிநஜாதை வரவேற்றுக் குலாவினீர்களே, அதைப் பற்றி இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறப்போகிறீர்கள்?!
2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 05 ம் திகதி, செவ்வாய்கிழமை, ஈரானிய ஜனாதிபதி ஒருவரால் எகிப்துக்கு 34 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது விஜயமாக ஈரானின் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநஜாத் கெய்ரோ சென்றடைந்தார். அங்கு அவர்கள் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட்தோடு அதன் பின்னர் எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்சியுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். மேலும் அவர் அல்-அஸ்ஹர் பீடத்தின் அறிஞர்களையும் சந்தித்தார். அல்-அஸ்ஹர் பீடாதிபதி அஹ்மத் அல்-தையிப் உடனான சந்திப்பின் போது ஈரானின் பிராந்திய வெளியுறவுக் கொள்கைகள் குறித்து விசனம் தெரிவிக்கப் பட்டுமிருந்தது.
ஜனாதிபதி முர்சி வழங்கிய இந்த வரவேற்பு புதுமையானது, கண்டிக்கத்தக்கது மேலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஓ அதிபர் முர்சி, நீங்கள் ஆரத்தழுவி வரவேற்றது யாரைத்தெரியுமா?நீங்கள் கௌரவித்தது அஷ்-ஷாமின் குழந்தைகளை அனாதைகளாக்கி, பெண்களை விதவைகளாக்கி, வயோதிபர்களைக் கொன்று பள்ளிவாசல்களைத் தரைமட்டமாகிய படுகொலைப் பாதகன் பஷார் அல்-அசாதின் உற்ற நண்பனை. ஒரு கொடுங்கோலனின் கூட்டாளிக்கு அப்படியொரு வரவேற்பு கொடுக்கத்தகுமானதா? அது ஈரானிய அரசு அந்தக் கொடுங்கோலனுக்கு வழங்கிய ஆதரவுக்கும் அவன் உயிரைக் காத்துக்கொள்ள வழங்கிய சகல வகையான உதவிகளுக்கும் எகிப்து கொடுத்த வெகுமதியா?
ஆம், இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்துவத்தையும் அன்பையும் வேண்டி நிற்கிறது தான். உலகலாவிய முஸ்லிம் பிரிவினருக்கிடையில் கூட்டுறவு, கலந்துரையாடல், ஒன்றுபடுதல், விட்டுக்கொடுத்தல் அன்பன அவசியமானவை தான். ஆனால் தன் சொந்த நாட்டு மக்களையே கொன்றுகுவிக்கும் பஷார் அல்-அசாத் போன்ற ஒரு கொடுங்கோலனுக்கு பகிரங்கமாகவே ஆதரவு வழங்கும் ஒருவருடனல்ல. பஷார் அல்-அசாதையும் அவனுடைய ஷபிஹாவையும் பாதுகாப்பதில் ஈரானிய அரசு வெகுதூரம் சென்றிருக்கிறது. உண்மையில், ஈரானியப் புரட்சியின் அதி உயர் தலைவருடைய சர்வதேச விவகாரத்துக்கான ஆலோசகர் அலி அக்பர் வலாயதி ஜனவரி 26, 2013 அன்று “சிரியாவின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல் ஈரானின் மீதான ஒரு தாக்குதலாகவே கருதப்படும்” என்று அறிவித்ததன் மூலம் கொலைகார சிரிய அரசுடனான தன் உறவைப் பிரிக்க முடியாத பிணைப்பாக ஆக்கியுள்ளது. மேலும் இதன் மூலம் பஷாருக்குத் துணையாக ஈரானிய அரசு போராளிகளையும் ராணுவ நிபுணர்களையும் வழங்குகிறது என்ற உண்மை மறுக்க முடியாததாகியுள்ளது.
ஜனாதிபதி முர்சியே, பஷாரின் பங்காளியை உபசரணையுடன் வரவேற்பதை விடுத்து உங்கள் நாட்டிலுள்ள ஈரானியத் தூதரகத்தை மூடுவது தான் உங்கள் தலையாய கடமையாக இருந்திருக்கும். நீங்கள் செய்திருப்பது பெரும் பாவமும் பாரதூரமான குற்றமுமாகும்! டமஸ்கஸில் அப்பாவிப் பிள்ளைகளையும், தர’ஆவில் பயபக்தியுள்ள முதியோர்களையும், விசுவாசமுள்ள அலெப்போவின் வாலிபர்களையும், இடம்பெயர்ந்த இத்லிபின் கற்பொழுக்கமுள்ள பெண்களையும் எந்த முகத்தோடு சந்திக்கப் போகிறீர்கள்?
யா அல்லாஹ், கொடுப்பவர்களில் மிகத் தாராளமானவனே, கேட்கப்படுபவர்களில் அதிகம் கொடுப்பவனே, கொடுங்கோலன் பஷாரையும் அவனின் உதவியாளர்களையும், அவனோடு கைகோர்த்துள்ளவர்களையும், அவனுக்கு பணமோ, ஆயுதமோ, ஆட்களோ கொடுப்பவர்களையும் அழித்துவிடும் படி உன்னிடம் கேட்கின்றோம். யா அல்லாஹ், அஷ்-ஷாமிலுள்ள உன்னையஞ்சிய, தூய்மையான முஜாஹிதீன்களுடன் துணையிருப்பாயாக. அவர்களுக்கு நேர் வழியில் நின்று எம்மத்தியில் இஸ்லாமிய கிலாபத்தை நிறுவுவதற்கு வழிகாட்டுவாயாக. அதன் மூலம் எங்களுக்கு உறுதியும் இறையச்சமுமுள்ள, முகஸ்துதியையும் புகழ்ச்சியையும் எதிர்பாராது முஸ்லிம் உம்மத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தலைவரை அருளுவாயாக. நிச்சயமாக நீ து’ஆக்களை ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றாய்.

إِنَّمَا يَنْهَاكُمْ اللَّهُ عَنْ الَّذِينَ قَاتَلُوكُمْ فِى الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَى إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ
(உங்களுடைய) மார்க்கத்தில் உங்களுடன் போரிடுபவர்கள், உங்கள் வீடுகளை விட்டும் உங்களை வெளியேற்றுபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஆகியோரின் பக்கம் (நட்புக்காகவோ, பாதுகாப்புக்கோ) திரும்புவதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுத்துள்ளான். அவ்வாறு (இந்நிலமைகளில்) திரும்புவோர், அவர்கள் தான் அநியாயக் காரர்கள்.
உத்மான் பகாஷ்
மத்திய ஊடகத்துறை அலுவலக இயக்குநர்
ஹிஸ்புத் தஹ்ரீர்


உங்கள் கருத்தை இணைக்க

No comments:

Post a Comment