அநேகமாமாக முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் இயங்கும் எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் இந்த வார்த்தையை சொல்லி நிற்கின்றன. அதன்படி இந்த இயக்கங்கள் எல்லாமே தாம் சுன்னாவின் வழி இயங்குவதாக மார்தட்டி நிற்கின்றன . அந்த அடிப்படையில் தமக்கான ஆதரவுத் தளத்தையும் ,ஆட் சேர்ப்பையும் மையப்படுத்திய அழைப்பை முன்வைத்து நிற்கின்றன .
இஸ்லாத்தை நிலைநாட்டுதல் என்ற பொதுக் கருத்தில் ஒன்று பட்டிருந்தாலும் ,பல்வேறு பாதைகளையும் ,வழிமுறைகளையும் இவை பேசி நிற்பதால் முரண்பாட்டு மோதலுக்கான காரணங்கள் இங்கு தோற்றம் பெற்று குழு நிலை போட்டியும் ஆரம்பித்து விடுகின்றது .அது இறுதியாக பலத்த சச்சரவுக்கும் ,உள்வீட்டு சண்டைகளுக்கும் , சகோதரத்துவ முறிவுக்கும் இட்டுச் செல்கின்றது . இதை எல்லாம் விட ஆபத்தான நிலையாக தம்மை சரிகாட்டி ஏனைய அமைப்புகளை வழிகேட்டு பட்டம் கொடுத்தும் .விடுகின்றனர் .
இகாமதுத் தீன் எனும் விடயத்தில் அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) சீறா மிக அவதானமாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் . அந்தவகையில் இஸ்லாமிய சரீயாவை சுதந்திரமாகவும் , தெளிவாகவும் பிரயோகிக்கத் தக்கதும் ,அமுல் படுத்தத் தக்கதுமான அரசியல் அதிகார வடிவமே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) காட்டித் தந்த இகமதுத் தீன் என்ற உண்மை புரிய வரும் .
இது விடயத்தில் அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) பார்வையும் ,நடத்தையும் தெளிவானது . அவரது மக்கா வாழ்வின் பகிரங்க பிரச்சாரம் இகாமதுத் தீன் நோக்கிய நிபந்தனை அற்ற ஆதரவையும் , உதவியையும் வேண்டியதாகவே ஆரம்பிக்கின்றது . குறைசிகளிடம் விடயம் எடுபடாத போது தகுதியும் ,தரமும் மிக்க பல கோத்திரங்கள் இதற்காக அனுகப்பட்டது . இறுதியில் அவ்ஸ் ,கஸ்ரஜ் எனும் இரு கோத்திரத்தினதும் நிபந்தனை அற்ற ஆதரவுடன் மதீனாவில் இகாமதுத் தீன் கட்டமைப்பு வடிவம் பெறுகின்றது .
ஒரு முக்கியமான விடயத்தை முஸ்லீம் உம்மா புரிந்து கொள்ள வேண்டும் . அது இஸ்லாமிய சரீயாவின் ஒரு அணு அளவு பகுதியை பிரயோகிக்க முடியா விட்டாலும் 'தீன் ' நிலை நாட்டப் பட்டதாக கருத முடியாது . அதே போல நிபந்தனைகளும் ,தடைகளும் இருக்கும் நிலையிலும் என்றும் தீனை நிலைநாட்ட முடியாது . அத்தகைய நிலையில் சரீயாவை பிரயோகிக்க நினைப்பது இஸ்லாத்தின் எதிரிகளால் அரசியல் ,இராணுவ ,பொருளாதார ரீதியில் முஸ்லீம் உம்மத் ஒடுக்கப்படும் ,அவமதிக்கப்படும் நிலைக்கே இட்டுச் செல்லும் . மிகக் குறைந்த பட்ச அடையாலங்களுக்காக இன்று முஸ்லீம் உம்மத் இன்று சந்திக்கும் அவலங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும் .
இஸ்லாமிய அகீதாவில் வார்க்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பு ,தனது உறுதியான சகோதரத்துவ பலத்தின் மூலம் ,சுன்னாவின் வழி தனது இயலுமையின் இறுதிக் கட்டம்வரை தீனை அமுல் படுத்த தயாரான நிலை இகாமதுத் தீன் நோக்கிய முதல் நிலையாகும் . அதே நேரத்தில் அந்த குறிப்பிட்ட பகுதி பௌதீக நில அமைப்பு ,வளங்கள் என்பவற்றிலும் அதிக பட்ச தயார் நிலை கொண்டதாக தீர்மானிக்கப் படவேண்டும் . இத்தகு தேடலும் போராட்டமும் தான் தீனை நிலைநாட்டுவதட்கான போராட்டமாகும் .
மேலும் இத்தகு எல்லை விரிவடைந்து செல்லத் தக்க தொடர் போராட்டமாக அமைய வேண்டும் . அதாவது அல்லாஹ்வின் பூமியில் அவனது மார்க்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ,அனைத்து மர்ர்க்கங்களையும் மிகைத்து செல்லும் வரை போராடுவது கடமை . மேலும் 'தாகூத்திய ' கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதர்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான , நியாயமான வடிவத்தை எடுத்துக் காட்டுவதும் இந்த இகாமதுத் தீனின் எதிர்பார்ப்பாகும் .
இதிலிருந்து புரியக்கூடிய விடயம் யாதெனில் இகாமதுத் தீன் என்பது சுதந்திரமாகவும் , தெளிவாகவும் இஸ்லாத்தை பூரணமாக பிரயோகித்து பாதுகாக்கும் அரசியல் அதிகார நிலையாகும் . அகீதா பலத்தையும் ,சகோதரத்துவ பலத்தையும் முன்னெடுத்த சமூக ஆதரவுடன் கூடிய தொடர் அரசியல் போராட்டமே இகாமதுத் தீன் நோக்கிய மிகச் சரியான நகர்வாகும் . மாற்றமாக கருத்து வேறுபாடுகளுக்குள் காலம் தள்ளி சமூகத்தை பிளவு படுத்துவதோ , குப்ரிய தாகூத்திய அதிகாரங்களின் கீழ் இருந்து கொண்டு முடிந்தவரை சரீயாவை பிரயோகித்து திருப்தி காண்பதோ இகாமதுத் தீன் ஆகாது . மாறாக அவை குப்பார்களால் தீனை அவமதிக்க வைப்பதற்கான தயார் நிலையே ஆகும் .
No comments:
Post a Comment