Mar 19, 2014

அரசியல் முஸ்லீம் உம்மத்தின் அடிப்படை இபாதத் ! (முக நூல் பதிவுகளில் இருந்து ...)


ரிஸாலத் - நுபுவ்வத் என்பதில் ஆட்சியும் அடக்கம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில் இருந்தும் நாம் அறியலாம்.

அமீர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை மனனம் செய்திருக்கின்றீரா? என்று அபூ ஸஃலபா கேட்டார். நான் நபியவர்களின் சொற்பொழிவை மனனம் செய்துள்ளேன் என்று கூறி ஹூதைபா (ரலி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.
நபித்துவம் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என அல்லாஹ் நாடியுள்ளானோ அந்த அளவு நபித்துவம் இருக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்த அளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பின்னர் அடக்கு முறையைக் கொண்ட மன்னராட்சி அமையும். அல்லாஹ் எந்தளவுக்கு நாடியுள்ளானோ அந்த அளவுக்கு அது நீடிக்கும். பிறகு அல்லாஹ் நாடும் போது உயர்த்த வேண்டிய தருனத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாஃபத் ஆட்சி அமையும் என்று நபியவர்கள் கூறி முடித்து அமைதியாகி விட்டார்கள்.

நூல் : அஹ்மத் 17680.


இந்த ஹதீஸில் ஆட்சி முறையைப் பற்றி நபியவர்கள் அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள் எனினும் தன்னுடைய ஆட்சி முறையைப் பற்றிக் குறிப்பிடும் போது, நபித்துவம் இருக்கும் என்றே குறிப்பிடுகின்றார்கள். எனவே அல்லாஹ்வின் திருத்தூதர் என்ற பெயரைத் தவிர வேறு ஆட்சி முறைகளைக் குறிப்பிடும் எந்த அடை மொழியிலும் நபியவர்களை அழைப்பது சரியல்ல என்பதை இதில் இருந்து உணரலாம்.

இவ்வாறு ரிஸாலத்தை (அல்லாஹ்வின் தூதர் எனும் தகுதியை) அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாத்திரம் ஆட்சி செலுத்தவில்லை. இஸ்ரவேல் மக்களையும் நபிமார்கள் இப்படித் தான் ஆட்சி செலுத்தியுள்ளனர்.

இஸ்ரவேலர்களை நபிமார்களே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஒரு நபி மறைந்ததும் இன்னொரு நபி அவருக்குப் பதிலாக பொறுப்பு வகிப்பார். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது. கலீஃபாக்கள் உருவாவார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நபியவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! (அது தொடர்பாக) எங்களுக்கு என்ன கட்டளையிடப் போகிறீர்கள் எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள், அவர்களில் முதலில் யாரிடத்தில் உடன்படிக்கை செய்தீர்களோ அவரிடத்திலேயே அதை நிறைவேற்றுங்கள். அவர்களுடைய கடமையை அவர்களுக்குச் செலுத்தி விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் விசாரனை செய்வான் என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : புகாரி 3455


இவ்விரு ஹதீஸ்களும் ரிஸாலத் (அல்லாஹ்வின் தூதர் எனும் தகுதி) என்பதில் ஸியாஸத் (அரசியல் தலைமை)யும் அடங்கும் என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன.


இஸ்லாமிய ஆட்சி என்பது....?

வாழ்வில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை குர்ஆன் சுன்னாவில் இருந்து எடுத்து மனிதனது வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் ஆட்சிமுறைதான் இஸ்லாம் கூறும் ஆட்சிமுறையாகும்!

இஸ்லாம் ஆட்சிசெய்யப்படுவதென்பது குறித்த தேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைய முடியாது. அது தாவாமூலமும் ஜிஹாத் மூலமும் அவ்வரசினால் முன்னெடுக்ப்படவேண்டும். அத்துடன் ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினை என்றால் அந்த ஆட்சியாளன் அது குறித்து தீவிரமான நடவடிக்கை எடுத்து குறித்த இஸ்லாத்தின் எதிரியுடன் கடும்போக்கை கையாளவேண்டும். மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளனை பதவிநீக்கம் செய்யும் வழிமுறையாக காலவரையறை என்பது இஸ்லாத்தில் கிடையாது.

நான்கு வருடத்திற்கு ஒருமுறை விரும்பியவரை தெரிவுசெய்து ஆட்சிசெய்வது என்பது எமது வழிமுறை இல்லை. ஆட்சித் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரிடம் தெளிவான குப்ர் வெளிப்படும் வரை அந்த ஆட்சியாளரை பதவி நீக்கம் செய்ய முடியாது. அவ்வாட்சியாளர் இன்று முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போது கண்டுகொல்லாமல் மேற்கோடும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளோடும் கைகுழுக்கியபடி முஸ்லிம்களது விவகாரங்களை கவனிக்க முடியாது.

அவ்வாட்சியாளர் எதிரிகளுடன் கண்டிப்பான இராஜதந்திர முறைப்படி நடந்து உம்மத்தை மீட்கவேண்டும். இவை யாவற்றையும் இந்த பல்கட்சி முறைகளுடன் கூடிய எதிர்கட்சி ஆளும்கட்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட மனிதன் சட்டத்ததை ஆக்கும் சட்டசபை வடிவமைப்புக்குள் இருந்து கொண்டு நிறைவேற்ற முடியாது. நிறைய விட்டுக் கொடுப்பபுடன் பகுதியாக தீனுல் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியுமே தவிர முழுமையாக இஸ்லாத்தை ஆளுகை நிலைக்குள் வைத்துக்கொள்ள முடியாது.

இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அமுலாக்கப்படத் தேவையான அரசு கிலாபா அரசு மட்டுமேயாகும் . இவ்வரசு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் நபி வழியில் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதுவே இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சவால்களுக்கும் முகம் கொடுக்கும் அரசாகும்.

இவ்வரசு முஸ்லிம் நாட்டு இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்படுவது நபி வழியாகும். அவ்வாறு நிறுவப்பட்டால் அவ்வரசு இன்றுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான தேசிய எல்லைகளை களையச் செய்யும். முஸ்லிம்களை உம்மத் எனும் சகோதரச் சிந்தனையால் இணைக்கும். பொது எதிரியை எதிர்கொள்ளும். தீனுல் இஸ்லாத்தை முழுமையான தனது அரசின் எல்லைக்குள் அமுல்படுத்தும். வெளிநாட்டு கொள்கை மூலமும் ஜிஹாத் மூலம் அவ்வரசு தீனுல் இஸ்லாத்தை உலகமுழுவதிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

இன்றைய முஸ்லிம் இராணுவங்கள் கற்றவேண்டிய பாடங்கள்?

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் கேடயமாக இருந்தது முஸ்லிம்களது இராணுவம். அது ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றில் மேற்கொண்டதன் பயனாகவே மதீனாவில் நிறுவிய இஸ்லாம் மிகப்பெரும் இரு பேரரசுகளான ரோம் மற்றும் பாரசீகத்தை தோற்கடிக்கும் சக்தியை பெற்று இஸ்லாத்தை நிலைநிறுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கியது என்பது எமது வீரவரலாறு. ஆனால் இன்று எமது உம்மத்தினது இராணுவம் 4.7 மில்லியனாக அமெரிக்க ரஷ்ய மற்றும் இந்திய இராணுவங்களின் தொகையிலும் அதிகமாக இருந்தும் எத்தகைய பங்களிப்பைச் செய்கிறது? அது இஸ்லாத்தின் எழுச்சியிலும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதிலும் இன்று நாம் இழந்துள்ள கிலாபத அரசை நிறுவுவதிலும் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?

நிச்சயமாக, இன்றைய எமது முஸ்லிம் இராணுவம் தமது தேசிய எல்லைக்கு அப்பால் இணைந்து தமது அமானிதமான இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்து இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுவுவதில் பங்களிப்பு செய்யும் அதி உன்னத காலத்தில் உள்ளது. இன்றுள்ள துர்பாக்கியமான நிலை யாதெனில் இன்றுள்ள முஸ்லிம் தலைமைகளால் தங்களது சொந்த நலனுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகவும் தொழிற்பட்டு இன்று முஸ்லிம்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய முஸ்லிம் இராணுவங்கள் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களையும் கொன்று குவிக்கும் கொடூர நிலைக்கு அவர்களது போக்கை மாற்றி வைத்துள்ளார்கள்.

இந்த இழிநிலையில் இருந்து எமது சகோதர இராணுவத்தினை மீட்டெடுப்பதற்கு நாம் பொறுப்புடனும் பக்குவமாகவும் தஃவத் கொடுத்து அவர்களை இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலன்களின் பக்கம் மீட்கவேண்டும். அத்துடன் இஸ்லாம் மீண்டும் ஒரு வல்லரசாக மாற்றப்படுவதிலும் குர்ஆன் சுன்னா வாழ்வின் அனைத்து துறைகளில் அமுலாக்கப்படுவதிலும் பாரிய பங்களிப்பை கோரி அவர்கள் மத்தியில் மிகப்பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இன்றைய முஸ்லிம் சகோதர சகோதரிகளிக்கு பாரிய பொறுப்புள்ளது.

ஒரு நாடு இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமாயின்...?

ஒரு நாடு இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமாயின் அங்கு இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் நிறுவப்பட்ட மனிதனுடைய அரசியல் பொருளில் சமூகவியல் கல்வி மற்றும் வெளிநாட்டு உறவுகளுடன் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு வழங்கப்படும் நிலையில் ஆட்சி நிகழ வேண்டும்.

அதன் ஆட்சியாளர் என்பவர் ஆட்சி புரிதல், ஆட்சி அதிகாரத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுதல் மற்றும் அஹ்காமுஸ் ஷரீஆவை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் உம்மாவின் சார்பில் அதன் பிரதிநிதியாக செயலாற்றுவார்.

இந்த இஸ்லாமிய ஆட்சியில் 4 விதிமுறைகள் இருக்கும்.

1.இறையாண்மை ஷரீஆவிற்குரியது. அது உம்மாவிற்குரியதல்ல.
2.ஆட்சி அதிகாரம் உம்மாவிற்குரியது.
3.கலீபாவை நியமனம் செய்யவேண்டியது அனைத்து முஸ்லிம்களின் மீது வாஜிபாகும்
4.இறைசட்டங்களை ஏற்று அமுல்படுத்துவது கலீபாவிற்குரிய தனிப்பட்ட அதிகாரம்.


அதே நேரம் இஸ்லாமிய அரசில் 8 ஆட்சியமைப்பு அம்சங்கள் காணப்படும்.

1.கலீபா
2.ஆட்சித்துறை உதவியாளர்
3.நிர்வாகத்துறை உதவியாளர்
4. அமீருல் ஜிஹாத்
5.மாகாண ஆளுநர்கள்
6.நீதித்துறை
7.அரசத்துறைகள்
8.மக்கள் ஆலோசனை மன்றம் (மஜ்லிசுல் உம்மா)


இஸ்லாத்தை ஒட்டுமொத்தமான நன்மையாக ஏவவேண்டும்..!

இன்று இஸ்லாம் அல்லாத வாழ்கைமுறை இன்றைய நவீன உலகில் நன்மையாக பல மேற்கினது ஊடகங்களால் ஏவப்பட்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மேற்கினது சிந்தனை மற்றும் வாழ்கைமுறைக்கு ஆட்பட்டு சீரழிவதனை நாம் காணலாம். அத்துடன் இஸ்லாம் மனிதவாழ்வில் பின்பற்றப்படாத நிலையில் இருப்பது மிகப்பபெரிய தீமை! இந்த தீமையை நாம் தடுக்கவேண்டும்.

தனிமனித வாழ்வில் தீமைகளை முடிந்தளவு தவிர்ந்து வாழ்ந்தலும் பொதுவாழ்வில் இஸ்லாமிய வாழ்வு அதன் சமூகவியல் பொருளியல் அரசியல் போன்ற துறைகளில் இல்லாது மேற்கினது வாழ்வில் சீரழிந்த நிலையில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் வாழும் துர்பாக்கிய நிலையில் இருந்து உலக மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு மிகப்பெரிய பொறுப்பு. இந்த தீமையை தடுப்பதற்கு இஸ்லாமிய உலக தலைமை - "கிலாபா" மீள உருவாக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment