நேற்றுவரை குன்றும் குழியுமாக இருந்த வீதிகளுக்கு திடீரென கற்கள் கொட்டப் படுகின்றது ! செபனிடப் போகிறார்களாம் . ஆளும் அதிகாரத்தின் பாசப்பார்வையில் பக்காவான சுயநலம் .இது தேர்தல் காலம் அல்லவா ! வாக்கு வேட்டைக்காகாக நடத்தும் நாடக அரசியல் அது .
மக்களுக்காக அதிகாரமா அதிகாரத்துக்காக மக்களா? இந்தக் கேள்வியை புரிந்த நிலையிலேயே இன்றைய அரசியல் நோக்கப்பட வேண்டும் . சுய தேவைக்காக சேவை என்றால் அது வியாபாரம் . உரிமைகளை எதோ சலுகை போல் காட்டி நூற்றுக்கு தொண்ணூறை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் களவாணித் தனமே இன்றைய அரசியல் .
சந்தர்ப்பதிட்கு சேறு பூசிவிட்டு குட்டிக்கரணங்கள் அடித்து கட்சி மாறி சாக்கடையை சந்தனமாக்கி பேசும் (அ)யோக்கிய தலைவர்களை நம்பி அடிமாடாய் உழைக்கும் முஸ்லீம் உம்மத்தின் உதிரங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அது பட்ட மரத்தில் ஏறி பழம் பறிக்க முடியாது எனும் உண்மையே ஆகும் . சந்தனமாக இஸ்லாம் இருக்க சாக்கடையை நம்பிய வாழ்வு எதற்கு !? குப்ரை நம்பினால் உனக்கு இம்மையும் ஏமாற்றமே ,மறுமையும் ஏமாற்றமே.
No comments:
Post a Comment