காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12
இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களின் பெயர்களில் இதுவும் ஒன்று. இறைவனின் வாள் (சைபுல்லாஹ்) என்ற பெயர் பெற்ற காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் வீர வாளையும், சாகசங்களையும் எதிர்க்க முடியாமல் சக்திமிக்க ரோம சாம்ராஜ்ஜியமும், பாரசிக ஏகாதிபத்தியமும் தலைகுப்புற வழிந்தன. கி.பி 7 நுற்றாண்டில் அவரது பெயரைக் கேட்டு நடுங்காத உலக அரசுகள் இல்லை என்ற சொல்லலாம்.
காலித் பின் வலீத்(ரழி) அவர்கள் தலைமை ஏற்று சென்ற எல்லா போர்களிலும் வெற்றி வாகை சூடினார். அப்படிப்பட்ட மாவிரர் காலித் பின் வலீத்(ரழி) அவர்களை, ஒரு போர்களத்தில் ஒரே ஒரு உத்தரவு முலம் தளபதி பதவியிலிருந்து உமர்((ரழி) அவர்கள் நிக்கிவிட்டார்கள்.
சிரியா நாட்டிலே ரோமானிய பெரும் படைகளை எதிரித்துப் போராடிக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகளின் தளபதியாகிய காலித் பின் வலீத்(ரழி) அவர்களுக்கு போர்க்கள முகாமில் உமர்((ரழி) அவர்களின் கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில்,
"தளபதி காலித் அவர்களுக்கு உமர் பின் கத்தாப் எழுதிக் கொள்வது. இந்த உத்தரவு முலம் காலித் அவர்கள் தளபதி பதவியிலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக அபூ உதைபா அவர்கள் நியமிக்கபடுகிறார். உடனடியாக காலித் அவர்கள் பொறுப்புகள் அனைத்தையும், அபூ உதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதினாவுக்குத் திருப்ப வேண்டும்."
படைவீரர்களிடம் இந்த கடிதம் பகிரங்கமாகப் படிக்கப்பட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இஸ்லாத்திரிக்க வாழ்நாளையே அரிப்பணித்தவர். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து தளபதிப் பதவி விகித்து வருபர். போர்க்களத்திலே இணையற்ற செல்வாக்கும் , நன்மதிப்பும் பெற்றிருப்பார் காலித் பின் வலீத்(ரழி) அவர்கள்.
அப்படிப்பட்ட மாவிரர் காரணமின்றி விலக்கப்படுவதை ஏற்றுக் கொள்வாறா? கலிபாவின் உத்தரவை அவர் ஏற்க மறுத்து புரட்சிக் கோடி உயர்த்தினால் என்னவாகும்? இஸ்லாமிய குடியரசே கலகலத்துவிடுமே!! முஸ்லிம் படை விரர்களிடம் கவலை பற்றிக்கொண்டது.
ஆனால் இதில் எதுவுமே நடக்கவில்லை. ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை காலித் பின் வலீத்(ரழி) அவர்கள். உடனடியாக பொறுப்புகள் அனைத்தையும் அபூ உதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதினாவுக்கு புறப்பட்டார்.
மதீனா வந்தடைத்த தளபதி காலித் பின் வலீத்(ரழி) அவர்கள், அவரது நீண்டநாள் நண்பரும், கலிபாவான உமர்((ரழி) அவார்களை காணச் சென்றரர். இரு நண்பர்களும் கட்டித் தழுவி கொண்டு, குடும்ப நலன்களைப் பரிமாறிக் கொண்டனர். கடைசியாக காலித் பின் வலீத்(ரழி) அவர்கள், நண்பரே !! தளபதி பதவியிலிருந்து நான் ஏன் விலக்கப்பட்டேன் என்பதை அறியலாமா?" என்று கேட்டார்.
அதற்கு உமர்((ரழி) அவர்கள், "உங்களது வீரமும், வெற்றியும் பொதுமக்களின் கண்ணை மறைப்பதைக் கண்டேன். இறைவனது புகழ்பாட வேண்டிய மக்களின் நாவுகள் உங்கள் புகல்பாடுவதைக் கேட்டேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனால் பதவி நீக்கிவிடக் கூடிய சாதாரண மனிதர்தான் காலித் என்பதை பொதுமக்களுக்கு உடனடியாக உணர்த்தாவிடடால் நிலைமை மிஞ்சி விடுமென அஞ்சினேன். ஆகவே விளக்கினேன். இதன் முலம் பொதுமக்களையும், உங்களையும், என்னையும் கூடத்தான் புகழ் என்ற போதையிலிருந்து காப்பாற்றிவிட்டதாக நம்புகிறேன்.
நீங்களும் நானும் இறந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள். இஸ்லாத்தின் பொறுமையோ என்றும் நிலைத்து நிற்க வேண்டியது என்பது நமது இலட்சியம். அந்தப் பெருமை காலித் இல்லாவிட்டாலும், உமர் இல்லாவிட்டாலும் நின்று நிலைக்கும் என்பதை நாம் நிருப்பித்தாக வேண்டும்.
உங்களை விலக்கியது முலம் அதை ஓரளவு நிருபித்துவிட்டதாக நம்புகிறேன் என்று கூறினார்கள்.
உமர்((ரழி) அவர்களின் பதிலை கேட்டு மாவிரர் காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தவழ்ந்தது.
பகுதி - 11 / பகுதி - 13
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:
Post a Comment