Sep 16, 2015

பலஸ்தீனியர்களை எங்கள் இஷ்டபிரகாரம் கொன்றொழித்தோம்!!!

எனது தலைமையின் கீழ் இஸ்ரேலிய படையினர் அராபியரின் கிராமங்களை அழித்தொழித்தார்கள். பலஸ்தீனியர்களை எங்கள் இஷ்டபிரகாரம் கொன்றொழித்தோம்- இஸ்ரேலிய ஜெனரலின் நினைவுகள்



தான் செய்த அநியாயங்களை பெருமையுடன் யாரும் நினைவு கூறுவதில்லை. அதை முடீயுமான வரை மறைக்கவே விரும்புவார்கள். இது மனித குலத்தின் பொதுவான ஒரு பண்பு. ஆனால் அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவங்களை பொருத்தவரை இது விதிவிலக்கு. அந்த வரிசையில் தான் செய்த அக்கிரமங்களை இனிமையாக நினைவு கூர்ந்துள்ளான் ஒரு இஸ்ரேலிய ஜெனரல். அவனின் 100-வது வயது பிறந்த தினத்தையொட்டி இஸ்ரேலிய இராணுவ வானொலிக்கு வழங்கிய செவ்வியில் இதனை அவன் பெருமையுடன் சொல்லியுள்ளான்.

Yitzhak Pondak. முன்னாள் இராணுவ வீரன். இளைப்பாறும் போது அவன் ஒரு இஸ்ரேலிய ஜெனரல். இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் Givati Brigade-ன், 53 பிளட்டூனிற்கு தலைமை தாங்கியவன் இவன். கடந்த வாரம் இஸ்ரேலிய இராணுவ வீரர் 100 வயதை பூர்த்தி செய்ததையிட்டு யூத இராணுவ வானொலியான Galei Tzahal அவனை பேட்டி கண்டது. அதில் இரத்த புலால் மணக்கும் அவன் கூறிய வார்த்தைகளின் வரி வடிவங்கள் இதோ.

“நான் இப்போதெல்லாம் நிம்மதியாக தூங்குகிறேன். ஏனென்றால் என்னை சுற்றி தூய்மையான யூதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலங்களை நாம் ஆக்கிமிக்காவிட்டால் என்னை சுற்றி வகை தொகையில்லாத அரபிகள் அல்லவா தூங்கிக்கொண்டிருப்பார்கள். நாம் அவர்களை துரத்தியடித்து விட்டோம். அதானால் தான் எனது 100-வது வயதிலும் இங்கு நிம்மதியாக என்னால் தூங்க முடிகிறது”.

“எனது தலைமையின் கீழ் இஸ்ரேலிய படையினர் அராபியரின் கிராமங்களை அழித்தொழித்தார்கள். பலஸ்தீனியர்களை எங்கள் இஷ்டபிரகாரம் கொன்றொழித்தோம். எங்கள் செயற்பாடுகளிற்கு எந்த எல்லையும் இருக்கவில்லை அப்போது. நாங்களாக நிறுத்திக் கொண்டால் தவிர. அவர்களை உயிருடன் விட்டிருந்தால் இன்று மில்லியன் கணக்கில் பெருகியிருப்பார்கள் புளுக்களைப்போல. அதனால் தான் அன்று நாங்கள் ஆயிரக்கணக்கில் கொன்றதையிட்டு திருப்தியடைகின்றேன்”.

“இன்னும் அதே அச்சுறுத்தல்கள் மகத்தான இஸ்ரேல் தேசத்திற்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்கள் 1948 ல் செய்ததை இன்றும் செய்துகொண்டேயிருக்க வேண்டும். அல்லா விட்டால் தேசம் மிகவும் கடுமையான சவால்களை முகங்கொடுக்க நேரிடும்”.

“யூதர்கள் நாங்கள் செய்த தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். அரபிகளை கொல்வதை நிறுத்தி விட்டால் எமது தேசம் பயங்கரான அபாய நிலைக்கு சென்று விடும். அதனால் கொல்வதை நிறுத்தவே கூடாது”.

“யுத்தங்களே யூதர்களை இணைக்கிறது. சமாதானங்கள் வந்து விட்டால் யூதர்கள் பலவாறாக பிரிந்து விடுகிறார்கள். எனவே அராபியர்களுடனான யுத்தம் எமக்கு நித்தமும் தேவை”.

“எனது சேவைக்காலத்தில் எனது தலைமைத்துவத்தின் கீழ் மரணித்த 145 இஸ்ரேலிய இராணுவ வீரர்களிற்காக நான் வருந்துகிறேன். அவர்கள் அராபியர்களையும் அவர்கள் கிராமங்களை அழிப்பதிலும் தோள் நின்றவர்கள்”.

Yitzhak Pondak காஸா பிராந்தியத்தின் கொமாண்டிங் ஒபிஸராக ஆயிரத்தி தொளாயிரத்து எழுபதுகளில் பணியாற்றியவன். அவன் தன் சேவைக்காலத்தில் மிகச் சிறந்த தளபதியாகவும், இஸ்ரேலிய பிரதமராகவும் “ஏரியல் ஷரோனை” நினைவு கூர்கிறான். காயப்பட்ட எதிரியை கூட ஏரியல் ஷரோன் கொன்று விடுவார் என புகழாரம் வேறு சூட்டுகிறான் பொன்டக். யூதர்களின் “ரோல் மொடல்” அவர் என புகழ்கிறான். இளைய இஸ்ரேலிய தலைமுறையினர் ஏரியல் ஷரோனின் முன்மாதிரிகளை பின்பற்ற வேண்டும் என தனது 100 பிறந்த தினத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளான் இந்த ஸியோனிஸ்ட்.

மேலே உள்ளது ஒரு இஸ்ரேலிய யூத இராணுவ வீரனின் சாம்பிள் மட்டுமே..............


நன்றி:
khaibarthalam

No comments:

Post a Comment