Sep 17, 2015

குரேஷியா வழியாகச் செல்ல குடியேறிகளுக்கு அனுமதி

வடக்கு ஐரோப்பாவில் விரும்பிய இடங்களுக்கு தனது நாட்டின் வழியாகச் செல்ல குடியேறிகளை அனுமதிக்கப்போவதாக குரோஷிய அரசு தெரிவித்துள்ளது.

 

            

குரேஷியா வழியாக வடக்கு ஐரோப்பாவை நோக்கி நகரும் குடியேறிகள்.

ஹங்கேரி தற்போது, சட்டவிரோத குடியேறிகளுக்காக தனது எல்லையை சீல் வைத்து முடியுள்ள நிலையில், ஸ்லோவேனியா ஊடாக ஆஸ்திரியா செல்வதற்கு குரோஷியாவில் மாற்று வழி உள்ளது.

குடியேறிகள் நெருக்கடிக்கு முட்கம்பிகள் பதில் அல்ல என்றும் குடியேறிகள் தங்களது பாதையை சென்றடைய தனது நாடு உதவும் என்றும் குரோஷிய பிரதமர் சோரன் மிலானோவிக் தெரிவித்துள்ளார்.

குடியேறிகளுக்காக குரேஷியர்கள் அனுதாபப்படுகின்றபோதிலும், தனது நகரத்தில் அதிக குடியேறிகளை நீண்ட காலம் சமாளிக்க முடியது என்று செர்பியாலிருந்து குடியேறிகள் வந்துச்சேரும் எல்லை நகரான டொவார்னிக்கின் மேயர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான குடியேறிகள் ஜெர்மனியைச் சென்றடைய விரும்புகின்றனர்.




BBC News

No comments:

Post a Comment