லிபியாவின் கடற்கரையில் 85 அகதிகளின் உடல்கள் கரையொதுங்கியதாக சர்வதேச செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவை அடையும் லிபிய கடற்கரை பகுதியில் கடந்த 5 நாட்களாக உடல்கள்களை தொண்டு நிறுவன ஆர்வலர்கள் கண்டெடுத்து வருவதாக செம்பிறை சங்கச் செய்தித் தொடர்பாளர் முகமது அல் மிஸ்ராடி தெரிவித்தார்.
திரிபோலி கடற்பகுதியில் 75 உடல்களும் சப்ரதாவில் 10 உடல்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் சூடான் அல்லது செங்காலிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரேக்க தீவில் 25 அகதிகள் சென்ற படகு விபத்துக்குளானது. இவர்களது உடல்கள் தேடப்பட்டு வருகின்றன. இதைத் தவிர லிபிய கடற்கரையோரம் 212 அகதிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதை அடுத்து அவர்களை கடற்படை வீரர்கள் மீட்டனர்.
The Hindu
No comments:
Post a Comment