Jan 27, 2016

பெண்மணியே கேள்!


*******************
பெண்கள் விவகாரத்தில் அவசியமான வேலிகள் மீறப்பட்டு அவளது பாதுகாப்பு, இயல்புநிலை தாண்டிய பல விவகாரங்களை முதலாளித்துவ மேற்குலகு சுதந்திரம் என்ற பெயரில் அவள் மீது திணித்துள்ளது! இந்த இக்கட்டான சூழலை அறிவு பூர்வமாக சந்திப்பது என்ற தரத்தை முஸ்லீம் உம்மத் இழந்த நிலையில் வெறும் சம்பிரதாய பூர்வமாக அதை எதிர் கொள்ள நினைத்ததால் ஏகப்பட்ட தவறுகளை அது விட்டுள்ளது!
இதனால் பெண்மையின் கண்ணியத்தை காக்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் பார்வை பெண்ணிய ஒடுக்குமுறையாக சுட்டிக்காட்ட இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பாக மாறியது. ஆனால் பிரத்தியோகமாக சட்டங்கள் சொல்லப்படாத அனைத்து விவகாரங்களிலும் ஆணுக்கு நிகராக உரிமைகளை அனுபவிக்கும் உரிமை பெண்களுக்குண்டு. அதில் பிரதான விவகாரம் கல்வி கற்கும் உரிமையாகும். 
பெண்வைத்தியர்கள், தாதிகள் என அவர்களுக்கே என பிரத்தியோகமாக இருக்க வேண்டிய பல விவகாரங்களில் கூட முஸ்லீம் உம்மா சரியானதும் தகுதியானதுமான வழிநடாத்தலின்றி தவிக்கிறது! மேற்கு பெண்ணை போகப் பொருளாக பார்க்க முஸ்லீம் உம்மத்தோ பதுக்கி அனுபவிக்கும் பொருளாக பார்க்கிறது! இந்த இரண்டுமே முரண்பட்ட தீவிரங்களே! 
மருத்துவம், சமூக அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் முஸ்லீம் பெண்களின் தேவை பர்ளு கிபாயா என்ற நிலையை தாண்டி பர்ளு ஜன் என்ற அளவுக்கு ஏறத்தாழ வந்துவிட்டது. நடக்கும் இஸ்லாமிய எழுச்சியில் அவளின் பங்கு ஆணுக்கு நிகரானதென்பது உம்மத்திற்கு புரியப்படுத்த வேண்டும். தொடரும் எழுச்சிப் பணிகளில் நவ சுமையாக்கள் சுமைதாங்க தயாராகுவார்களா!?

No comments:

Post a Comment