Apr 16, 2016

சிரியாவின் நிலப்பரப்பு அரசியல் அம்பலமானது

 
 

1970ம் ஆண்டு ராணுவ புரட்சி மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த அசாதின் தந்தை ஹாஃபிஸின் காலத்திலிருந்தே அமெரிக்கா சிரியா அரசுக்கு தனது முழுமையான ஆதரவை அளித்து வருகிறது. கடந்த காலத்தில் நிக்சன் மற்றும் கிளின்டன் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகள் நேரடி விஜயம் செய்யும் அளவிற்கு அதன் ஆதரவு வெளிப்படையாக இருந்தது, தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடைபெற்று வரும் இக்காலத்தில், புரட்சிக்குழுக்களான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு சிரியா ஆதரவு அளித்து வரும் காரணத்தால் கடந்த புஷ் அரசாங்கம் அதன் உறவை மறைமுகமாகவே மேற்கொண்டு வருகிறது.
 
அல்-அசாத் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் அலவைத் கோத்திரத்தை சார்ந்தவர், இது இஸ்லாமிய அடிப்படையில் முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடைய கோத்திரம் ஆகும், மேலும் அஹ்லுஸ் சுன்னாவினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நாட்டில் அதன் ஆதிக்கத்தை குறைத்து உலகின் ஏதாவதொரு ஜாம்பவானின் ஆதரவை பெற்றால் மட்டுமே அங்கு ஆட்சியை பிடிக்க முடியும். அமெரிக்கவை பொறுத்தவரை சிரியா தனக்கு ஒரு பூலோக ரீதியான பலன்களை அடைய மிக முக்கிய மையப்பகுதியாக கருதிகிறது . இதர காலணித்துவ நாடுகளை போல இயற்கை வளத்தால் முக்கியத்துவம் பெறவில்லை, மாறாக அதன் பூலோக அரசியல் காரணங்களுக்காகவே அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதலாவதாக, சிரியா இஸ்ரேலுடன் எல்லையை கொண்டிருக்கிறது அதனால் இஸ்ரேலுக்கு ஆதரவான அரசை கொண்டிருப்பது அமெரிக்காவுக்கு இன்றியமையாததாகும். இரண்டாவதாக, சிரியாவின் மூலமாக இஸ்ரேலுடன் எல்லையை கொண்டிருக்கும் இன்னொரு நாடான லெபனானின் கட்டுப்பாட்டை ஒருவர் கைப்பற்ற முடியும். மூன்றாவதாக, சிரியா மத்திய கிழக்கு மற்றும் அரபுலகின் மையப்பகுதியல் உள்ளது மேலும் இந்த நாட்டின் மீது கட்டுபாடு கொண்டிருத்தல் இந்த பிராந்தியம் முழுவதுமான ஆதிக்கத்தை செலுத்திட உதவி புரியும். அந்த இடத்தில் தான் அலவிகள் மற்றும் அமெரிக்காவினுடைய இந்த தேசங்களுக்கு இடையிலாக நடைபெறும் விளையாட்டில் தத்தமது நலன்கள் ஒன்று சேருகிறது!
 
சிரிய புரட்சியின் போது, அமெரிக்கா அந்த சூழ்நிலையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாத நிலையை கடைபிடித்தது, இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொடுங்கோல் அரசால் கொல்லப்பட்டும் மானபங்க படுத்தப்பட்ட நிலைக்கும் வழி வகுத்தது. ஊடகங்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் வலியுறுத்துவது போல் உலக அபிப்ராயத்தாலும் மனித உரிமை போன்றவற்றினாலும் அமெரிக்கா தனது நலனை இதுபோன்ற அரசிடம் விற்றுவிட்டு இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உதவும் என ஒருவர் நினைக்கலாம். உண்மை நிலவரம் என்னவெனில் ஒரே ஒரு காரணத்திற்காக இந்த விஷயத்தில் இதுபோல் எதுவும் செய்யவில்லை என்னவெனில் இது போன்று ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு சிரியாவில் அமெரிக்காவின் நலன்களை காக்கும் ஒரு மாற்று தலைமையை கண்டெடுக்க வேண்டும். அமெரிக்காவின் நலன்களை காக்கும் ஒரு நிழல் அரசாங்கத்தை நிறுவும் உத்திகள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில் தனது நலன்களை பாதுகாத்து வந்த அரசை கவிழ்ப்பதற்கு எந்த விதமான அரசியல் மற்றும் யதார்த்த நிலையும் அதற்கு இருக்கவில்லை.
 
அங்கு தான் சிரியாவில் அமெரிக்காவின் குழப்பமான நிலை நலவுகிறது: ராணுவத்திலிருந்து விலகியவர்களால் உருவான குழுவின் மூலம் எதிர்ப்பாளர்களை கொண்டுள்ளது, தங்களுக்கென கட்டளையிட ஒரு சரியான ஒருங்கிணைப்பை கொண்டிராத இந்த எதிர்ப்பாளர்களை அந்த அரசு ஒன்றரை வருட காலமாக வேறருக்க முடியாத நிலையில் உள்ளது, அமெரிக்கா அதன் மீது ஆதிக்கத்தை செலுத்த முடியும் அல்லது அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்! இந்த பிரச்சினை மேலும் மோசமான நிலையை அடைவதற்கு சர்வதேச சமூகத்திடமிருந்து உதவி வராதது மற்றும் சிரியா சமூகத்தின் மத பழமைவாத தன்மையுமே ஆகும், FSA எனப்படும் சுதந்திர சிரிய படை எனும் லேபிலிற்கு கீழ் செயலாற்றி வரும் ராணுவத்திலிருந்து  வெளியேறிய வீரர்களிடையே  பலமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய உணர்வுகள். இந்த உணர்வுகள் எந்த அளவு பலமாக அதிமாகியிருக்கிறது என்றால் FSA வின் பல உட்பிரிவுகள் சிரியாவில் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர், இந்த கோரிக்கையை அமெரிக்கா நிச்சயம் எக்காலும் ஏற்றுக்கொள்ளாது.
 
மேலுள்ள அனைத்து காரணங்களால், வேறு எந்தவொரு மாற்றும் அதற்கு இல்லாத நிலையில் அமெரிக்கா ஏற்கனவே கவிழ்ந்து வரும் பஷார் அல்-அசாதின் அரசை பிடித்து தொங்கி கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. அமைதியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஒபாமா அரசாங்கத்தின் தொடர்ச்சியான வேண்டுகோள் அங்கு அதன் கையாளாகாத தன்மையால் ஏற்பட்ட விளைவே ஆகும். சிரிய புரட்சியாளர்களை பொருத்தமட்டில், சிரியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள யாராவது ஒருவரையாவது அல்லது அதற்கும் மேற்பட்டோரை கொன்ற அல்லது மானபங்கப்படுத்தியவர்களை கொண்ட அதே மக்களை கொண்ட ஒரு ஒருங்கிணைந்த மாற்று அரசை ஏற்படுத்துவது என்பது அடி முட்டாள்தனமாகவும் நகைப்பிற்குரியதாகவும் கருதப்படுகிறது. அமெரிக்காவின் அந்த கையாளாகாதனத்தை அதன் பாதுகாப்பு அமைச்சர், சி.என்.என் தொலைக்கான்சிக்கு 2012 ஜூலை 30ம் தேதி லியோன் பெனேட்டாவின் வார்த்தைகள் மூலம் அறிந்து கொள்ளலாம், “நான் முக்கியமானதாக கருதுவது அசாத் விடைபெறும் சமயம் – நிச்சயமாக அவர் விடைபெறிவார் – அந்நாட்டில் நிலைத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மேலும் அத்தகைய நிலைத்தன்மையை தொடர்ந்து நீடிக்க செய்ய பெருமளவு ராணுவத்தையும், காவல்துறையும் பாதுகாப்பு படையினருடன் சேர்த்து நிலை நிறுத்த வேண்டும், மேலும் அவர்கள் இப்போதுள்ள முறையிலான அரசாங்க முறையிலிருந்து  மாறி ஜனநாயக அடிப்படையிலான அரசாங்கம் அமைக்க முயற்சி செய்வர். இது தான் முக்கியம்” [1]
 
அமெரிக்கா பழைய அரசாங்கத்திலுள்ளவர்களை பொருமளவில் தக்கவைத்து கொள்ள விரும்புகிறது இதன்மூலம் அவர்களை அசாதிற்கு பின்னர் நிறுவப்பட இருக்கும் அரசாங்கம் தான் விரும்பக்கூடிய வகையில் தனது ஆதிக்கத்தை செலுத்தவும் மற்றும் எதிர்வரும் அரசு தனக்கு விசுவாசமாக இருப்பதை உறுதிபடுத்த விரும்புகிறது. சிரியா மக்களை பொறுத்தவரை, அவர்கள் அடக்குமுறை மற்றும் காலனியாதிக்கத்திலிருந்து உண்மையில் வெளியேற நாடினால்,  எதிர்கால சிரியாவில் முந்தைய அரசில் ஈடுபட்ட அனைவரையும் ஒரம்கட்ட வேண்டும் என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும்!
 
[1] http://security.blogs.cnn.com/2012/07/30/panetta-says-when-not-if-al-assad-falls-syrian-military-should-remain-intact/

No comments:

Post a Comment