இதனடி அந்த நிலத்தின் பொருளாதாரக் கொள்கை , கல்வி கலாச்சாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்ற சகல துறைகளும் #வஹியின் கட்டளைக்கு ஏற்ப பிரகடனப்படுத்தப்பட்டு அமுல் நடாத்தப்படுவதாகும்; அதுவரை அந்த நிலம் முஸ்லீம்களை அதிகமாக கொண்டும் ஒரு முஸ்லிமை கொண்டும் ஆளப்பட்டாலும் அது #தாருல் குப்ர் என்ற அந்தஸ்த்தை விட்டும் மாறிவிடாது!
முன்னால் சோவியத் யூனியனின் உடைவிற்கு பிறகும் அமெரிக்காவை அதன் பாலிசியை எதிர்க்கும் பல அதிகார வலயங்களை எம்மால் இனங்காட்ட முடியும். கியூபா, வடகொரியா, பிரேசில், கொலம்பியா, வெனிசுலா.... இப்படி இந்த லிஸ்ட் நீண்டது! ஒருவகையில் முஸ்லீம் உலகுக்கான சாதக அரசியலாக இதை கருத முடியுமே தவிர இஸ்லாமிய அரசியலின் வடிவமாக இதை கருத முடியாது! மேலும் அமெரிக்காவுக்கு உள்ளேயே அமெரிக்க எதிர்ப்பாளர்களை ஏராளமாக காணலாம்.
ஒரு நிலம் முதலாளித்துவ, கம்யூனிச அரசியல் பொருளாதார சமூக கல்வி கலாச்சார நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விடுபட்டு அந்நிலத்தின் இராணுவம், மக்கள் நிபந்தனையற்ற முறையில் இஸ்லாத்தை அமுலாக்கம் செய்ய உடன்படும் நிலையிலேயே அது #தாருல் இஸ்லாமாக மாறுகிறது. அங்கு பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இல்லாதிருப்பினும் சரியே! இத்தகு கோட்பாட்டு உண்மையை கருத்தில் கொண்டே நாம் துருக்கியை மட்டுமல்ல முஸ்லிம் உலகின் சகல அதிகார நிலங்களையும் நோக்க வேண்டியுள்ளது! கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.
இப்போது அமெரிக்க எதிர்ப்பு முகத்தை எர்தூகான் அரசு காட்டினாலும் கமால் பாட்சாவின் துரோக அரசியலை கைவிட்டு அதன் மேல் காறி உமிழ்ந்துவிட்டு அந்த எதிர்ப்பை காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முஸ்லீம் உலகின் மனோபாவத்தை தன் பக்கம் ஈர்க்கும் ஒருவகை மொஸ்மரிச பாலிசியை அவர் கையால்வதாகவே கருத முடிகிறது! இந்தப் பதிவின் மீது ஏகப்பட்ட முரண் விமர்சனங்கள் வரும் என்பதை நான் அறிவேன். அதற்கெல்லாம் பதில் சொல்லப் போவதில்லை காலம் இன்ஷா அல்லாஹ் பல உண்மைகளை புரியவைக்கும்.
No comments:
Post a Comment