Apr 14, 2013

குர்ஆனியக் குணாதிசயங்களை உருவாக்குதல் Part-2


நியாயத் தீர்ப்பு நாளில் இத்திருமறை பரிந்துரை செய்யக் கூடியதாகும்றசூல் (ஸல்)அவர்கள் கூறினார்கள் ‘ அல்குர்ஆன் ஒரு பரிந்துரையாளன்அது (அல்லாஹ்வின்அனுமதியுடன்பரிந்துரை செய்யும்மேலும் அது ஒரு உண்மையான்எதிராலியுமாகும்யார் அதனைத் தன் வழி காட்டியாக ஆக்கிக் கொள்கிறாரோ அதுஅவரைச் சுவனத்துக்கு இட்டுச் செல்லும்யார் அதைப் புறந்தள்ளி விடுகிறாரோஅவரை அது நரகுக்கு இட்டுச் சென்று விடும்.’ (பைஹகி)
இவ்விதம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு மறுமைக்காக வாழ முயற்சிசெய்வதின் அடிப்படையிலேயே இஸ்லாமிய உம்மத் தன் வரலாற்றில் பலமேன்மக்களைக் கண்டு கொண்டது. அவர்கள் அல்குர்ஆனைத் தம் வாழ்வின்மையமாக ஆக்கிக் கொண்டு இத்திரு வேதத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் அதன்தூதைத் தூய வடிவில் விளங்கிக் கொள்வதற்காகவும் அரபு மொழியிலும் ஏனையகுர்ஆனியக் கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றார்கள். இவர்களே அறிவின் வழியில்பயணித்து ஷரீ’ஆவின் அடிப்படையில் தம் ஆளுமைகளை வடிவமைத்துக் கொண்டுதீனுக்காக உண்மையாக் வாழ்ந்தவர்கள்.

அல்லாஹ் (சுப்கூறுகின்றான்,


كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُوْلُوا الْأَلْبَابِ

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன்வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும்அறிவுடையோர் நல்லுணர்வுபெறுவதற்காகவும். (38:29)


துரதிஷ்ட வசமாக இன்று நாம் குர்ஆனைத் திலாவத் செய்யக்கூடியவர்கள் பலர்இருந்தும் அதிலிருந்து வாழ்வின் வழிகாட்டுதலைத் தேடக்கூடியஅதன்சட்டதிட்டங்களைத் தம் வாழ்வில் அமுல் நடத்தக்கூடிய வெகு சிலரேஇருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்அல்குர்ஆனின்கருத்துக்களையும் அதன் கட்டளைகளையும் ஆழ்ந்துணர்ந்து அதனைப்பிரதிபலிப்பதன் முக்கியத்துவத்தை உணரக் கடப்பட்டவர்களாய் நாம் இருப்பதோடுநம் உள்ளங்களை ஊடுறுவிச் சென்று நிரந்தரமான தடயங்களை விட்டுச் செல்லும்விதத்தில் அது ஓதப்படவும் வேண்டும்இவ்வாறான ஓதலின் விளைவாகஆக்கத்திறனுள்ள இஸ்லாமிய ஆளுமைகள் உருவாதல் ஏதுவாகும்.இவ்வாழுமையுள்ள முஸ்லிம்கள் இஸ்லாமிய அகீதாவை இருகப்பற்றி ஷரீஆவைத் தம்வாழ்வின் விதிமுறையாக ஒழுகுவதுடன் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை இராசாங்கஅளவில் மறுமலர்ச்சியடையச் செய்வதற்கான தஃவாவிலும் ஈடுபடுவார்கள். 

அல்குர்ஆனை ஆழ்ந்துணர்ந்து பிரதிபலிப்பது தொடர்பில் றசூல் (ஸல்அவர்களின்கீழ்வரும் ஹதீஸ் காணப்படுகிறது.

எனது உம்மத்திலிருந்து ஒரு கூட்டம் உருவாகுவார்கள்அவர்கள் குர்ஆனைப் பால்அருந்துவது போல் அருந்துவார்கள்.’ (தபரானி)


இந்த ஹதீஸுக்கான விளக்கம் எழுதுகையில் அல்-முனாவி ஃபயத் அல் கதிர் நூலில்சொல்கின்றார்; “....அதாவது அவர்கள் தங்கள் நாவைக்கொண்டு குரலைஉயர்த்துவார்கள்ஆனால் அதன் கருத்துகளைச் சிந்தித்துணர மாட்டார்கள்.மாற்றமாகபால் எவ்வாறு விரைவாக அவர்களின் நாவைக் கடந்து செல்லுமோ(குர்ஆனானதுஅதுபோல் கடந்து செல்லும்.




குர்ஆனை அதன் கருத்து விளங்காமல் ஓதினாலும் அதற்காக நன்மை உண்டென்பதுஉண்மையேயாயினும் இது எங்களை அதன் கருத்துகளை ஆய்ந்தறிந்து உணர்வுபெறுவதை விட்டும் பாராமுகமாக்கி விடக்கூடாது. இல்லையெனில் ஒரு சிலரேஇத்திருமறையைக் கற்று அமல் செய்யக் கூடியவர்களாயிருக்கபெரும்பான்மையானவர்கள் இதனை விளங்குவதை விட்டுவிட்டு வெறுமனே ஓதுகின்றஇபாதாவில் மட்டுமே ஈடுபடக் கூடிய நிலையே தொடரும்.



அல்லாஹ் (சுப்) கூறுகின்றான்,



أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا



மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லதுஅவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டுவிட்டனவா? (47:24)



முனாஃபிக்குகளின் நிலை இவ்வாறே இருந்தது. அவர்கள் குர்ஆனை ஓதியும் அதைஅல்லாஹ்வின் பேச்சு என்ற வகையில் உளச்சுத்தியுடன் விளங்கிக்கொள்ளமுயலவில்லை.. இதன் காரணமாகவே தங்கள் தாய் மொழியில் குர்ஆனைப்பாராயணம் செய்யக் கூடியவர்களாயிருந்தும் அதிலிருந்து படிப்பினை பெறவோஅதன்படி ஒழுகவோ இல்லை.
ஆகவே, ஒருவர் குர்ஆனை ஓதுவதானது அதை ஆழமாக விளங்கிக்கொண்டுஅதனைத் தங்கள் நடைமுறை வாழ்வில் செய்ல்படுத்தும் அவாவுடன் செய்யப்படல்வேண்டும். சரியாக விளங்கிப் பின்பற்றப் படும்போது இவ்வற்புதத் திருமறை தன்னைஅமுல் படுத்துபவர்களுக்கு

ஒரு உயிரோட்டமுள்ள வழிகாட்டியாக ஆகிவிடுகிறது.
وَهَٰذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ 
أَن تَقُولُوا إِنَّمَا أُنزِلَ الْكِتَابُ عَلَىٰ طَائِفَتَيْنِ مِن قَبْلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ

أَوْ تَقُولُوا لَوْ أَنَّا أُنزِلَ عَلَيْنَا الْكِتَابُ لَكُنَّا أَهْدَىٰ مِنْهُمْ ۚ فَقَدْ جَاءَكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَّبَ بِآيَاتِ اللَّهِ وَصَدَفَ عَنْهَا ۗ سَنَجْزِي الَّذِينَ يَصْدِفُونَ عَنْ آيَاتِنَا سُوءَ الْعَذَابِ بِمَا كَانُوا يَصْدِفُونَ 


(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது)மிக்க பாக்கியம் வாய்ந்தது ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை)அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபைசெய்யப்படுவீர்கள். நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம்இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல்பராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்; அல்லது மெய்யாகவேஎங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிடமிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும்(இவ்வேதத்தை அருளினோம்); ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும்மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன்அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோஅவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக்கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடியவேதனையைக் கூலியாகக் கொடுப்போம். (6:155-157)

குர்ஆனியக் குணாதிசயங்களை உருவாக்குதல் Part-1

நடத்தையில் அல்குர்ஆனைப் பிரதிபலிபோம், அதனை விளங்கிக் கொள்வோம், அதைமனனமிடுவோம், ஓதுவோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தளவில் அல்குர்ஆன் ஆனது இஸ்லாமிய மார்க்கத்தின்அடித்தளமாகும் என்பது ஐயத்துக்கிடமற்றதுஅதுவே அல்லாஹ் (சுப்தன்னுடையசெய்திகளை மனிதனுக்கு அறிவிப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டஊடகமாகும்இவ்வேதமே நம் தலைவர் முஹம்மத் (ஸல்அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் சரியையும் பிழையையும் பிறித்தறிவிக்கும் அளவுகோலாகவும்இறக்கியருளப்பட்டு அதை முழு மனித சமுதாயத்துக்கும் எடுத்தியம்பி மனித குலத்தைஇருளிலிருந்தும் விடுவித்து இஸ்லாத்தின் ஒளிக்குக் கொண்டு வருமாறும்பணிக்கப்பட்டது.

இதன் காரணமாகவே முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக அல்லாஹ்வின்திருமறையை ஈருளக வாழ்வுக்கும் வழிகாட்டியாக அதியுயர் ஸ்தானத்தில் வைத்துமதித்து வந்துள்ளார்கள்.

அல்குர்ஆனானது 23 வருட காலப்பகுதியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பஅருளப்பட்டமை ஸஹாபா சமூகம் அதன் கட்டளைகளைத் தம் வாழ்வில்செயல்முறையில் நடைமுறைப்படுத்தி அதனை அரேபிய சமூகத்துக்கு எத்திவைக்கவும் ஏதுவாக இருந்தமை நன்கறியப்பட்ட விடயம். ஒவ்வொரு வருடத்தின்ரமழான் மாதத்திலும் றசூல் (ஸல்) அவர்கள் அதுவரை இறக்கப்பட்டிருந்த குர்ஆன்வசனங்களை ஜிப்ரீல் (அலை) முன்னிலையில் ஓதிக் காண்பிப்பார்கள். இவ்விதம்நபியவர்களின் மனனமும் குர்ஆனை மனனமிட்டிருந்த ஏனையவர்களின் மனனமும்சரிபார்த்துக் கொள்ளப்பட முடிந்தது.

றசூல் (ஸல்அவர்கள் தம் வாழ்வின் கடைசி வருடத்தின் ரமழானில் திருக் குர்ஆனைஇரண்டு முறை ஜிப்ரீல் (அலைஅவர்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்நபியவர்கள்வபாத்தாகும் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அல்குர்ஆனைமுழுவதுமாகவோ பகுதியாவோ மனனம் செய்திருந்ததுடன் அதனை எழுதிப்பாதுகாக்கவும் ஏற்பாடாகியிருந்ததுஇவ்வாறே அல்குர்ஆனானது கவனமாகச்சேகரிக்கப்பட்டு அதன் உள்ளடக்கத்திலோ ஓதும் முறையிலோ எவ்விதமாற்றமுமின்றிப் பாதுகாக்கப் படும் பொருட்டுத் தலைமுறை தலைமுறையாகக்கைமாற்றப்பட்டு இறைவனின் வேத வெளிப்பாடு அதன் தூய வடிவில் பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது.

நபியவர்கள் கூறியதாக உஸ்மான் (றழி) அவர்கள் அறிவிப்பதாவது:

‘உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனைக் கற்று அதனை அடுத்தவருக்கும் கற்பிப்பவரே’. –(புஹாரி)

இது போன்ற பல ஹதீஸ்களே அன்றும் இன்றும் முஸ்லிம்கள் அல்குர்ஆனைக் கற்றுக்கொள்ளவும் விளங்கிக் கொள்ளவும் மற்றவருக்குக் கற்பிக்கவும் பெரும் உந்துசக்தியாக இருந்துள்ளன.

குர்ஆன் வாசிக்கப் படுவது மட்டுமல்லாது அதை ஓதுதல் (திலாவத்ஒருவணக்கமாகவும் உள்ளதெனும் வகையில் குர்ஆன் மார்க்க நூல்களில்தனித்துவமானதாய்த் திகழ்கிறதுகுர்ஆனை ஓதுவதன் சிறப்புகளையும் அதற்கானகூலிகளையும் விளக்கும் ஏராளமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன.

நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹூத் (ரழி) அறிவிப்பதாவது: ‘எவரொருவர் அல்குர்ஆனின் ஒரு அட்சரத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒருஹஸனாத் (நன்மை) வழங்கப்படுகிறது. ஒரு ஹஸனாத் ஆனது அதைப்போல் பத்துமடங்கு நற்கூலிக்குச் சமனானது. நான் அலிஃப் லாம் மீம் ஒரு அட்சரம் என்றுசொல்ல வில்லை. மாறாக அலிஃப் ஒரு அட்சரம், லாம் ஒரு அட்சரம் மேலும் மீம் ஒருஅட்சரம்.’ (திர்மிதி)

வரலாற்று ஒளியில் தாய்ப் சம்பவம் (பகுதி04)


வரலாற்று ஒளியில் தாய்ப் சம்பவம். (பகுதி 03)


Hizb ut Tahrir Organises a Critical Women's Seminar: "Hasten to Establish the Khilafah to Protect the Honourable Women of Al-Sham"


H. 04 Jumada II 1434
M. 2013/04/14
No:1434 AH/ 43
Press Release
Hizb ut Tahrir Organises a Critical Women's Seminar:
"Hasten to Establish the Khilafah to Protect the Honourable Women of Al-Sham"


Under the support of the eminent scholar of Usool, skilled politician and prominent thinker Ata Ibnu Khalil Abu Arrashtah, Amir of Hizb ut Tahrir, the Hizb will hold a vital women's seminar on the 27th of April 2013 in Amman, Jordan to speak of the heart-breaking plight that the women and children of Syria live and to present effective solutions to bring an urgent end to the massacres executed by the tyrants of Ash-Sham. This unique, unprecedented event, entitled "Hasten to Establish the Khilafah to Protect the Honourable Women of Al-Sham" is the first high-profile women's only gathering aimed at focussing world attention specifically on the horrendous scale of suffering and brutality endured by Syria's women and children at the hand of the mass-murderer Bashar Al-Assad and his Kufr Ba'athist regime. The seminar will host a large audience of journalists, distinguished influential women, representatives of organisations, and will also invite Syrian women from Jordan, including some from the Zaatari refugee camp to attend. It will also consist of 3 main talks, a video containing testimonies from Syrian women regarding the tribulations and ordeals they have suffered, a panel discussion with high-profile women from Hizb ut Tahrir, and a press-conference.
The opening speech will be from the Women's Section of the Central Media Office of Hizb ut Tahrir that will highlight the failure to date of the Muslim governments and international community to offer any credible solution to bring an end to the living-hell that the women of Syria have been subjected to under Assad. As well as their initiatives and missions have simply bought the Syrian regime time to pursue its campaign of terror and slaughter and violate the honour of the noble women of Al-Sham. The talk will emphasize that it is the Khilafah system alone, based purely upon Islam, it is the only system that views the life and dignity of women as priceless, places the protection of their blood and honour as a priority, and appreciates the heavy obligation of the state to guard their safety without hesitation or delay. The second talk will be delivered by a Muslim sister from Syria who will provide detailed, graphic eye-witness accounts of the abduction, torture, rape, and murder of women and children at the hands of the merciless Syrian regime as well as highlight the desperate situation in the Syrian refugee camps where women and children battle for survival, living in inhumane, appalling conditions. She will also emphasize how the women of Al-Sham have been abandoned by the heartless rulers of the Muslim world who have sat as idle spectators to the killing fields next door without mobilizing a single soldier in her defence. The final talk will be delivered by a female member of Hizb ut Tahrir Jordan who will raise a call to Muslims globally to increase their efforts to establish the Khilafah urgently as well as deliver a heartfelt appeal to the sons of the Muslim armies to fulfil their great Islamic responsibility of defending their sisters in Al-Sham without delay and to give the Nusrah (material support) to Hizb ut Tahrir for the establishment of this noble state that will bring the shade of guardianship to the region under the Rule of Allah (swt).
We call the media to attend this important and most pressing of seminars that will not only provide a platform for the heart-breaking stories, hopes and dreams of some of the most vulnerable victims of this brutal conflict to be heard but will present a sound vision to bring their suffering to an end. The event will be streamed through the live broadcast of The Central Media Office of Hizb ut Tahrir.


Dr. Nazreen Nawaz
Member of the Central Media Office
of Hizb ut Tahrir

Apr 13, 2013

ஹிஜாப் அல்லது ஹிஜாப் மற்றும் ஹிமார்(முக்காடு) என்பது இஸ்லாமிய கடமை

ஹிஜாப் அல்லது ஹிஜாப் மற்றும் ஹிமார்(முக்காடு) என்பது இஸ்லாமிய கடமை அல்ல, மாறாக சுயவிருப்பின் பேரில் அணியும் உடையென முஸ்லிம்களில் சிலர் வாதிக்கின்றனர். பெண் கண்ணியத்தை பேணும் வகையில் இருக்குமேயானால்எவ்வித உடையையும் அணியலாம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உதாரணமாக இஸ்லாம் குறித்த பல புத்தகங்களின் ஆசிரியரும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் (அல் இஹ்வானுல் முஸ்லிமூன்) ஸ்தாபகரின் சகோதரருமான எகிப்திய நாட்டைச் சார்ந்த கம்மல் பன்னா ''தலையை மறைத்தல் ஒரு கடமை அல்ல. இது குர்ஆன் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதன் விளைவாகும். ஹிஜாப் அணிவதோ அல்லது சிறு பாவாடை அணிவதோ தன் சுயவிருப்பத்திற்கேற்ப எடுக்கும் சுயமான முடிவே"" எனக் கூறுகிறார். மேலும் தனது விருப்பிற்கேற்ப உடை அணியும் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாலேயே அத்தகைய ஹிஜாப்-எதிர்ப்புச் சட்டங்களை நான் ஆதரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.

அண்மைக் காலங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் பாதிப்பிற்கு உள்ளானோரால் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய வழிதவறிய கருத்துக்கள் கடந்த கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்திருக்கவில்லை. இஸ்லாமிய கட்டளைகளும், விலக்கல்களும், குர்ஆனிலும் சுன்னாவிலும் பதியப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே நாம் பெற முடியும். இவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு)வின் கட்டளை யாதென அறியலாம். மகரம் அல்லாத வேறு ஆடவர் முன்னிலையில் 'ஹிஜாப்" அல்லது 'ஹிமார்" உதவியுடன் தலைமுடியை மறைப்பது கட்டாயம் என்பது இஸ்லாத்தில் விளக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
அவர்கள் தங்கள் முந்தானையால்(குமுர்) தங்கள் கழுத்தையும் மார்பையும் மறைத்துக்கொள்ளட்டும்.(24-31)


குமுர் என்பது முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தைய குறைஷியப் பெண்களால் அணியப்பட்டது. இது தலையை மறைத்து, கழுத்தையும் மார்புப் பகுதியையும் வெளிக்காட்டியவாறு உடலின் பின்புறமாக கீழ்நோக்கி விழுந்து காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் அருளப்பட்ட இவ்வசனம் வெளிக்காட்டப்படும் கழுத்தையும் மார்பையும் தலையுடன் சேர்த்து மறைக்குமாறு கட்டளையிடுகிறது.
ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள


அஸ்மா-பின்-அபுபக்கர் அவர்கள் மெல்லிய ஆடை அணிந்தவராக நபிகளார்(ஸல்) அவர்கள் முன் வந்தபோது, நபிகளார்(ஸல்) முகத்தை அப்பாற் திருப்பியவாறு 'ஏ அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் இதையும் இதையும் தவிர ஏனையவற்றை காண்பித்தல் ஆகுமானதல்ல" எனக்கூறி முகத்தையும் மணிக்கட்டையும் காண்பித்தார்கள்.


அதிர்ஷ்ட வசமாக பல முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஒரு கடமை என அறிந்திருந்தாலும்கூட அடிக்கடி குழப்பத்திற்கும் தவறான கருத்திற்கும் உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய உடைநெறி யாதென விளங்காத நிலையில் காணப்படுகின்றனர். ‘துப்பட்டா’ என அழைக்கப்படும் மிக மெல்லிய துணி மூலம் தலைமுடியையும் கழுத்தையும் மறைப்பதே போதும் என எண்ணுகின்றனர். அத்துணியின் ஊடாக அப்பகுதிகள் தெறிந்தாலும் தவறல்ல எனக் கருதுகின்றனர். வேறு சிலர் தலைமுடியின் ஒருபகுதி தெரியுமாறு தலைமுக்காடை தளர்த்தி அணிவது போதுமென எண்ணுகின்றனர். சிலரோ தலைமுடி, காது, கழுத்துப்பகுதி தெரியுமாறு 'பந்தனா" அணிகிறார்கள். ஒருசாரரோ தலைப்பகுதியை சரியாக மறைத்துப் பின்னர் உடலின் வடிவம் தெரியுமாறு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அல்லது கணுக்காலுக்கு மேலான பாவாடையை கை கால் தெரியுமாறு அணிகின்றனர்.


பொது இடமானாலும் சரி தனிமையானாலும் சரி உடை சம்மந்தமான இஸ்லாமிய கட்டளைகள் சுயவிருப்பு, சுயகருத்து அல்லது கண்ணியம்பேணல் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. மாறாக அது அல்லாஹ்(சுபு)வின் கட்டளையாகும். அல்லாஹ்(சுபு) தொழுகையை கடைமையாக்கிய பின்னர் தொழும் முறையை அவரவர் விருப்பிற்கேற்பவிட்டுவைக்கவில்லை. தொழும் முறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதைப்போன்றே உடலை மறைக்கும் உடை விசயத்திலும் அதைப்பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொழுகையைப் போன்றே உடை விவகாரத்திலும் இறைவனின் கட்டளைப்படி நடப்பது அவசியமாகும். சுயசிந்தனையோ அல்லது சுயவிருப்போ எவ்வாறு தொழுகையில் ஆதிக்கம் செலுத்தவில்லையோஅதைப்போல உடை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவது கூடாது.
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.


“ஆனால் உம் இறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை தீர்ப்பளிப்பவராக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்புச்செய்தது பற்றி எவ்வித அதிருப்தியையும் தங்கள் மனதில் கொள்ளாது முழுமையாக ஏற்றுக்கொள்ளும்வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகள் ஆகமாட்டார்கள்.”(4:65)

அல்குர்ஆன் வசனங்கள் மூலமும் நபிகளார்(ஸல்) அவர்களின் வாக்குகளாலும் தெளிவாக கூறப்பட்டிருப்பதற்கேற்ப ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை மகரமற்ற ஆண்கள் முன்னிலையில் மறைத்தல் கடமையாகும். ஆடையானது தோல் தெரியும் அளவிற்கு மெல்லியதாகவோ உடற்கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையிலோ இருத்தலாகாது. மணிக்கட்டு வரையிலான கை, முகம்; தவிர்த்து, கழுத்து, முடி உட்பட பெண்ணின் முழு உடம்பும் 'அவ்ரா" ஆகும் (யுறசயா) (மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும்).


சூரா அந்நு}ரில் அல்லாஹ்(சுபு) விவரிக்கின்றான்
“இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (24:31)


இப்ன் அப்பாஸ் அவர்கள் 'வெளியில் தெரியக்கூடியவை" என்பதற்கு மணிக்கட்டு வரையிலான கைப் பகுதி மற்றும் முகம் என விளக்கமளித்துள்ளார்கள்.
மேலும் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கிமாரையும் (தலை, கழுத்து, மார்புப் பகுதிகளை மறைக்கும் துணி) ஜில்பாபையும் (கழுத்திற்கு கீழ் உடலின் மற்ற அனைத்து பகுதிகளையும் மறைத்து மேலிருந்து நிலத்தை நோக்கி தொங்கும் ஒரு தனி ஆடை) அணியுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அதாவது கிமாருடன் சட்டையும் பாவாடையுமோ அல்லது முழுக்கால் சட்டையுமோ அணிவது ஆகுமானதல்ல. அல்லமா இப்ன்-அல்-ஹசாம்எழுதுகிறார்கள் ''நபி அவர்கள் காலத்திலிருந்த அரபிமொழியில் ஜில்பாப் என்பது முழு உடம்பையும் மறைக்குமாறு அமைந்திருக்கும் தனி உடையாகும். முழு உடம்பையும் மறைக்க முடியாத உடையை ஜில்பாப் எனக் கூறமுடியாது."" (அல்-முஹல்லா தொகுதி 3)


பெண்கள் இவ்விரு உடையையும் அல்லாமல் வேறு உடையணிந்து வெளியில் நடமாடுவார்களாயின் அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு மாறிழைத்து பாவத்திற்கு ஆளாவார்கள். ஜில்பாபுக்கான ஆதாரங்களை அல்லாஹ்(சுபு) சூரா "அல்-அஹ்சாப்" யில் கூறுகிறான்.


“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் வெளி ஆடைகளால்(ஜிலாபீப்) முழு உடலையும் பாதுகாக்குமாறு கூறுவீராக.”(33:59)


மேலும் உம்மு அதியா(ரலி) கூறுகிறார்கள்
“அல்லாஹ்வின் து}தர் ஈத் பெருநாள் தினத்தன்று, இளம் பெண்கள், மாதவிடாய் பெண்கள், மற்றும் மறைப்பு அணிந்த பெண்கள் ஆகியோரை அழைத்து வர ஆணையிட்டார்கள். மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்திற்கு அப்பாலிருந்து பிரசங்கத்தை கேட்குமாறு அமரவைக்கப்பட்டார்கள். 'அல்லாஹ்வின் து}தரே ஜில்பாப் இல்லாத பெண்களின் நிலை என்ன" என வினவியதற்கு அவர்கள் கூறுகிறார்கள் 'ஏனைய சகோதரியிடம் ஒரு ஜில்பாபை இரவல் வாங்கி அணியட்டும்." என பதிலளித்தார்கள்.


ஆகவே நபி அவர்கள் ஜில்பாப் இல்லாவிட்டால் இரவல் வாங்கியேனும் அணியுமாறு கூறியுள்ளார்கள் என்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதல்லவா.
ஒரு முஸ்லிம் பெண் மேற்கத்திய பெண்களை ஒப்பாக்கி தாம் எதை அணியவேண்டும் என சுயமாக முடிவெடுத்தல் கூடாது. பனி-தமீம் இனத்தைச் சார்ந்த சில பெண்கள் மெல்லிய துணிகளை அணிந்து அவர்களை சந்தித்தபோது 'இது முஃமீனான பெண்ணிற்கு தகுந்த உடையல்ல. நீங்கள் முஃமீன்கள் இல்லாவிடில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்." என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.


இன்றைய முஸ்லிம் பெண்கள் நபி (ஸல்) அவர்களின் மதிப்பிற்கும் அல்லாஹ்(சுபு)வின் பொருத்தத்திற்கும் ஆளான அன்றைய முஸ்லிம் பெண்களின் முன்மாதிரியை பின்பற்றி நடத்தல் அவசியம். அன்றைய நாளில் உடை சம்பந்தமான குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட போது அப்பெண்கள் ஒரு நிமிடமேனும் தாமதிக்காது கிடைத்தவற்றைக் கொண்டு அவ்ராவை மறைத்துக் கொண்டார்கள். சய்பாவின் மகளான சஃபீயா கூறியதாவது,“ஆயிஷா(ரலி) அவர்கள் அன்சார் பெண்களை புகழ்ந்து நல்வார்த்தை கூறினார்கள். பின்னர் 'சூரா அந்நு}ர் வசனங்கள் இறங்கிய பொழுது அவர்கள் வீட்டிலுள்ள திரைகளை கிழித்து அதனை தலைமறைப்பாக்கிக் கொண்டார்கள்" எனக் கூறினார்கள். (சுனன் அபுதாவூத்)


ஆகவே ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!

http://www.facebook.com/DarulAmanForHumanity

http://www.darulaman.net/

உலகின் குழப்பங்களுக்கான மூலகாரணம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்களே - இப்னு கைய்யும் (ரஹ்)

ப்னு கைய்யும் (ரஹ்) தனது "வியாதிகளும் மருந்துகளும்” (The ailments and the medicines) எனும் நூலில் பின்வரும் குர் ஆன் வசனத்தை மேற்கோள் காட்டிபின்வருமாறு விளக்கமளிக்கிறார் :

21:22


(வானம், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள்இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்,அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய)தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன். (அல்-குர்ஆன் 21:22)

படைப்புகளின் சீரான நிர்வாகத்தையும், ஒழுங்கமைப்பையையும் அவற்றின்குறையற்ற தன்மையையும் பற்றி ஆராயும் போது, படைத்தவன் ஒருவனாகஇருப்பதே இதற்கு மூல காரணமாகும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இப்னு கைய்யும் (ரஹ்) இந்த யதார்த்தத்தை மேற்கோள்காட்டி, உலகில்முஸ்லிம்கள் பல ஆட்சியாளர்களின் கீழ் இருப்பதை விட முஹம்மது (ஸல்)சுன்னாஹ்வின்படி ஒரு தலைவரின் கீழ் ஒன்றிணைவதின் முக்கியத்துவத்தைவலியுறுத்துகிறார்.

முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் இருந்து கொண்டு,அந்த ஆட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் கருத்திலும் கொள்கையிலும்வேறுபட்டு, நிலத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் போட்டியிட்டு மோதும்சந்தர்ப்பத்தில்தான் இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் உம்மாஹ்வின்வளங்களைச் சுரண்டி ஏப்பமிட சந்தர்ப்பம் உருவாகிறது.

இதுவே இன்று உலகில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அனைத்துகுழப்பங்களுக்குமான மூல காரணமாகும். வரலாறும் இதற்கு சான்று பகர்கிறது.சிலுவைப் போர், தாதாரியர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அண்டலூசியாவின்(இன்றைய இஸ்பெயின் பிரதேசம்) இழப்பு போன்ற வரலாற்று நிகழ்வுகளின்பின்னணிகளை எடுத்து ஆராய்ந்தாலும் இந்த உண்மை பலப்படும். எனவேமுஸ்லிம் உம்மாஹ் இன்று ஒரு இஸ்லாமிய அரசின் கீழ் ஒன்றினையாமல்,அதிகாரத்துக்காகவும், சுய லாபத்துக்காகவும் போட்டியிடும் ஆட்சியாளர்களின்கீழ் பந்தாடப்படுவது இஸ்லாத்தின் எதிரிகள் எம் முதுகில் ஏறி சவாரி செய்வதற்குவழிவகுத்துள்ளது.

அமெரிக்காவின் நலன் கறுதி கயானியும் சர்தாரியும்

ஹிஸ்ப் உத் தஹ்ரிர் கராச்சியில் இடம்பெற்ற இரட்டைக் குண்டு வெடிப்பு குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த 45 பேருக்காகவும் மற்றும் காயமடைந்த நூற்றுக் கணக்கானோருக்காகவும் அல்லாஹ்(swt)விடத்தில் பிரார்த்தனை செய்கிறது. ஆழ்ந்த துன்பத்தில் இருக்கும் அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு இந்த அட்டூலியமான சம்பவத்தை முகம் கொடுக்கக்கூடிய வலிமையை அல்லாஹ்(swt) அவர்களுக்குக் கொடுப்பானாக, ஆமீன்.

அமெரிக்காவின் நலன் கறுதி கயானியும் சர்தாரியும் முஸ்லிம் இரத்தத்தால் ஹோலி வன்னப்பூச்சு பூசிக் கொண்டு பிரிவினை வாதத்தை தூண்டுகிறார்கள். ஜெனெரல் கயானியும் ஜனாதிபதி சர்தாரியும், அரசியல் மற்றும் இராணுவ தலைமைத்துவத்தில் உள்ள துரோகிகளுமே, கராச்சி குவெட்டா மற்றும் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வரும் குண்டு வெடிப்பு, கொலை மற்றும் கலவரங்களுக்கான பொறுப்பாளிகள். இவர்கள் அமெரிக்காவால் வேண்டப்படும் முஸ்லிம்களை கைது செய்து பின், மக்கள் தமது உயிரையும் உடமைகளையும் பாதுகாத்து குற்றவாளிகளை நீதி முன் கொண்டுவரச் சொல்லி கோரிக்கை விடுக்கும் போது, இந்தத் துரோகிகள் ஒருவர் மீது மற்றவர் பலி சுமத்துகிறார்கள்.

கயானியின் கையாட்கள் ஹிஸ்ப் உத் தஹ்ரிரின் பேச்சாளர் நவீத் பட் ஐ பாகிஸ்தானின் 2வது பெரிய நகரத்தில் வைத்து, வன்முறை இல்லாத அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்தனர்; ஆனால் உண்மையான குற்றவாளியையோ, தீவிரவாதியையோ, கொலைகாரனையோ கைது செய்யாமல் எதுவும் தெரியாதது போல் நாடகமாடுகின்றனர். பாகிஸ்தானின் முக்கிய இரு நகரங்களில் மத்திய அரசினதும் மாகான சபையினதும் இராணுவம், போலிஸ், நீதிமன்றம், அமைப்புகள், அதிகாரிகள் மற்றும் அரசின் சகல இராணுவ இயந்திரங்களும் இருக்குமிடத்து இவ்வாறு அடிக்கடி குண்டு வெடிப்புகளும் கொலைகளும் இத்தகைய அளவில் இடம்பெறுவது அரசாங்கத்தின் ஆதரவுடனே சாத்தியமாகும்.

பாகிஸ்தானின் அரசியல் பற்றியும் , அதன் அதிகாரிகளினதும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பலத்தைப் பற்றியும் தெரிந்த எந்தவொரு சுய அறிவுள்ள பிரஜையாவது, இவர்கள் கூறும் பொய்யை நம்புவாரா? இல்லவே இல்லை!

http://www.darulaman.net/

நிகழ்கால சூழ்நிலைக்கு இலங்கை முஸ்லீம் எவ்வாறு முகம் கொடுப்பது?

தற்போது இலங்கையில் நிகழும் முஸ்லீம்களுக்கெதிரான மதப் பேரின வாதத்தின் சூடான நெருக்கடிகள் பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் நிகழ்கால சூழ்நிலைக்கு இலங்கை முஸ்லீம் எவ்வாறு முகம் கொடுப்பது? என்ற வினாவைச் சுற்றி விடயம் வரும்போது, தவக்குலுக்கும் நடத்தைக்கும் இடையிலான நியாயமான சுன்னாஹ்வின் முன்னால் சிறுபான்மை என்ற அச்சத்தை ஒரு ஆபத்தான கிளைமோர் வெடிகுண்டாக்கி பொருத்தி விட்டு 'தாண்டினால் வெடிக்கும்!' என கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றனர்.அவர்கள் தமது கருத்துக்கு சான்றாக எடுக்கும் உதாரணங்களில் ஒன்று,

அப்துல் முத்தலிப்பின் ஆட்டு மந்தைகளை கஹ்பாவை இடிக்க வந்த ஆப்ரஹாவின் யானைப்படை கைப்பற்றியபோது, அதை மீட்க வந்த அப்துல் முத்தலிப் தன்னுடைய ஆட்டுமந்தையை தனக்கு கொடுத்து விடுமாறு கீழ்ப்படிந்த நிலையில் கோரிக்கை விடுக்க, ஏளனத்தோடு ஆப்ரஹா "கஹ்பாவையே இடிக்க வந்துள்ளோம் ! அதைப் பற்றி பேசாமல் உன்னுடைய ஆட்டு மந்தையை பற்றி பேசுகிறாயே?" என்ற வினாவுக்கு அப்துல் முத்தலிப் சொன்ன பதிலான "ஆட்டு மந்தை என்னுடையது கஹ்பா அல்லாஹ்வுடையது அதை அவன் பார்த்துக் கொள்வான் " என்ற பதில் ஒரு சிறந்த நடத்தையாக இலங்கையின் நிகழ்கால சூழ்நிலைக்கு தீர்வாக பேசுகிறார்கள்; தவக்குல் தொழுகை ,நோன்பு , அஹ்லாக் போன்றவற்றை மட்டுமே முஸ்லீம் உம்மாஹ் கைக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கிறார்கள்.

ஜாஹிலிய காலத்தில் நடந்த அப்துல் முத்தலிப் -ஆப்ரஹா சந்திப்பு சம்பவம் எப்படி எமக்கு சுன்னாஹ்வாக முடியும்? நிகழ்காலத்தையும் சுன்னாஹ்வையும் ஒப்பிட்டு ஒரு முஸ்லிமின் வாழ்வியலை எவ்வாறு தீர்மானிப்பது என்ற அடிப்படையில் இன்றைய முஸ்லீம் உம்மாவின் நிலை 'ஆப்ரஹாவின்' காலத்துக்கு பின்தள்ளிப் போய் விட்டது!. சுன்னாஹ்வை வாழ்வியல் ஆக்குவது ஒரு நுணுக்கமான அரசியல்; அதை சரியாக செய்யாவிட்டால் இஸ்லாம் ‘மார்க்கம்’ என்ற நிலையில் இருந்து 'மதம் ' என்ற குறுகிய வாதத்துக்குள் முடக்கப்பட்டு விடும் .

உண்மையில் எமக்கு நடந்துள்ளது என்ன ?

ஏற்கனவே மதச்சார்பின்மை என்ற வாழ்வியலின் கீழ் ஒரு மதமாகவே தான் இஸ்லாம் நோக்க வைக்கப்பட்டுள்ளது . முதலாளித்துவத்தின் சமரசமே உலகின்அரசியலாக்கப்பட்டுள்ளது . ஜனநாயகத்தின் பெரும்பான்மையின் கீழ் சலுகை அடிப்படையில் சிறுபான்மை வாழ்வே விதியாக சித்தரிக்கப்பட்டுள்ளது . இவை எல்லாவற்றோடும் சேர்ந்து 'வஹ்ன் ' எனப்படும் ‘உலகத்தை நேசித்து மரணத்தை வெறுக்கும் மனப் பாங்கின் கீழ் வாழு, வாழ விடு 'எனும் நடத்தையின் கீழ், சத்திய இஸ்லாத்தை அதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதுதான் சிறுபான்மை வாழ்வுக்கு இவர்கள் தரும் தீர்வா?