Mar 10, 2014

பெண்களை இஸ்லாம் மிகவும் பொக்கிசமாக கருதுகிறது…!

பெண்களை இஸ்லாம் மிகவும் பொக்கிசமாக கருதுகிறது. அவர்களை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பர்க்கிறது. நபி(ஸல்) கூறினார்கள். உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடம் சிறந்தவராவார். நான் எனது மனைவி மார்களிடம் சிறந்தவனாக இருக்கிறேன்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு சகலவிதமான உரிமைகளையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கிவிட்டது. பெண்ணின் இயற்கைத்தன்மை மற்றும் அவளது பலம் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு படைப்பாளனால் வழங்கப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி அவர்களது வாழ்கையை ஒழுங்குபடுத்தி இல்லறம் சிறக்க, ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் உருவாக வித்திட் டு வாழ்வின் சகல துறைகளுக்குமான வழிகாட்டலைக் கொண்ட மார்க்கமே இஸ்லாமாகும்.

அதே நேரம் பெண்ணியம் கதைக்கும் மேற்கு பெண்களை வெறும் போகப்பொருளாக நடத்துவதுடன் இயற்கைத் தன்மைக்கு முறணான ஒரு செய்தியை (ஆணும் பெண்ணும் சமம்) கூறி பெண்களை உசுப்பேற்றி அவர்களது நிம்மதியை பறித்து அவர்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி இருப்பதனைக் காணலாம்.
மேற்கத்தைய இந்த தாராண்மைவாதக் கோட்பாடு மற்றும் எல்லையற்ற தனிமனித சுதந்திரத்தினடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட வாழ்கை முறையினால் சமூகத்தில் தனிமனிதன் சீரழிந்து கிடப்பது மாத்திரமன்றி குடும்பவாழ்வும் சீர் குலைந்து கணவன் மனைவி உறவு மற்றும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான பிணைப்பு பலவீனமுற்றுக் காணப்படுகிறது. இது குடும்பவாழ்வில் நிம்மதியில்லாத நிலையை தோற்றுவிப்பதுடன் பல்வேறுவகையான துஸ்பிரயோகங்கள் மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகள் மலிந்துவிடக் காரணமாகிறது.

இத்தகைய மேற்கினது மொடலாக இன்று பெண்ணியம் கீழைத்தேய நாடுகளிலும் பேசப்பபடுகிறது.

மதத்தினது தலையீட்டை பொதுவாழ்வில் ஒதுக்கி மனித சிந்தனையடிப்படையில் கட்டியெழுப்பப் படும் மேற்குலகம் ஆத்மீக வறுமையால் சீரழிந்து காணப்படும் இந்நிலையில் இஸ்லாம் அழகிய வாழ்கை முன்மாதிகளை சுமார் 1300 ஆண்டுகாலம் உலகிற்கு வழங்கியுள்ளதுடன் அதுவே மனிதனின் இயற்கைத் தன்மைக்கு ஏற்றதாகவும் மனிதனை திருப்திப்படுத்துவதாகவும் அமையும். இவ்வுண்மையை உணர்வோம்! இஸ்லாமிய வாழ்வின் முன்மாதிரியை எடுத்தியம்புவோம்!

இஸ்லாத்தில் பெண்களது கண்ணியம் எவ்வாறு பேணப்படவேண்டும்...?

நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் மக்களை நோக்கி ஆற்றிய உரையின் ஒரு பகுதி இஸ்லாத்தில் பெண்கள் எவ்வாறு கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பேருரையில் இன்றைய பெண்ணியம் கதைக்கும் மேற்குலகிற்கு மிகச்சிறந்த படிப்பினைகள் உள்ளது. இவற்றை ஒவ்வொரு முஸ்லிமான ஆண்களும் பெண்களும் மிகவும் அக்கறையுடன் தமது வாழ்வில் ஒழுகிட கடமைப்பட்டுள்ளனர்.

“ஓ மக்களே! உங்கள் பெண்கள் குறித்து குறிப்பிட்ட உரிமைகள் உங்களுக்கு உண்டு என்பது உண்மை. ஆனால் அவர்களுக்கும் உங்கள் மீதான உரிமை உள்ளது. அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அவனை நம்பியநிலையில் அவர்களை உங்கள் மனைவியர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள் என்பதனை நினைவு கூறுங்கள்! அவர்கள் உங்களுக்கு உரிமையானவர்களாக உள்ள நிலையில் அவர்கள் கருணையுடன் உணவூட்டப்படவும் ஆடையணிவிக்கப்படவும் உரிமைபெற்றவர்கள். நீங்கள் அவசியம் உங்கள் பெண்களை நல்லமுறையில் நடத்தவேண்டும். மேலும் அவர்கள் அர்பணிப்புள்ள உங்கள் பங்காளிகளாகவும் உதவியாளர்களாகவும் இருப்பதால் நீங்கள் அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும். மேலும் நீங்கள் அனுமதிக்காத எவருடனும் அவர்கள் சகவாசம் கொள்ள உரிமை பெற்றவர்கள் அல்ல. அத்துடன் அவர்கள் தங்கள் கற்பை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.”

ஆண்-பெண் வேறுபாடு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்..?

இஸ்லாம் ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி இரு பாலாருக்குமிடையே சமத்துவத்தைப் பேண விரும்புகிறது. சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர பொதுவாக இஸ்லாம் ஆண் -பெண் இரு பாலாருக்குமிடையே அனைத்து விவகாரங்களிலும் சமத்துவத்தைப் பேணுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“பெண்கள் ஆண்களின் சரிபாதி, சமபாதி.” (அஹ்மத், அபூதாவூத்)
“ஆணோ பெண்ணோ உங்களில் ஒருவருடைய செயலையும் நான் வீணாக்க மாட்டேன். நீங்கள் ஒரு சாரார் மற்றைய சாராரைச் சார்ந்தவர்களாக இருக்கின்றீர்கள்.” (ஆலு இம்ரான்: 195)

ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் அவர் செய்கின்ற எந்த ஒரு செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக அல்லாஹ் மனிதர்களுடைய செயற்பாடுகளையே பார்க்கிறான் எண்ணங்களுக்கேற்ப அவர்களது செயற்பாடுகளுக்கு கூலி வழங்குகின்றான். இதில் எத்தகைய வேறுபாட்டையும் அவன் காண்பிப்பதில்லை.

“ஆணோ பெண்ணோ முஃமினாக இருக்கும் நிலையில் எவர் நற்காரியங்கள் செய்கிறாரோ நிச்சயமாக நாம் அவருக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவோம். மேலும் அத்தகையவர்கள் செய்து கொண்டிருந்த நற்காரியங்களுக்கு நிறைவான கூலியையும் நாம் கொடுப்போம்.” (அந்நஹ்ல்: 97)

ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி யாராக இருந்தாலும் ஈமான் கொண்ட நிலையில் நற்காரியங்கள் செய்கிறாரோ அவருக்கு நல்ல வாழ்க்கையையும் அவர் செய்து கொண்டிருந்த செயல்களுக்கு உரிய கூலியையும் நிச்சயமாக நாம் வழங்குவோம் என்று அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.

“ஆணோ பெண்ணோ யார் முஃமினாக இருக்கும் நிலையில் நற்காரியங்கள் செய்கின்றாரோ நிச்சயமாக அவர்கள் சுவனம் நுழைவார்கள்.” (அந்நிஸா: 124)

ஆண் என்ற காரணத்தினாலோ அல்லது பெண் என்ற காரணத்தினாலோ எவருக்கும் அணுவளவு அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அவர்களது செயற்பாடுகளுக்கான கூலி கூட்டியோ குறைத்தோ வழங்கப்பட மாட்டாது. அனைவரது செயலுக்கும் நிறைவான கூலி கிடைக்கும். இதில் ஆண்-பெண் என்ற வேறுபாடு கிடையவே கிடையாது என்று இந்த வசனம் தெளிவாகச் சொல்கிறது.

இம் மூன்று ஸூராக்களில் வரும் முப்பெரும் வசனங்கள் இஸ்லாம் எவ்வாறு பால் வேறுபாட்டைக் கவனத்திற் கொள்ளாமல் ஆணையும் பெண்ணையும் ஒரே தரத்தில் வைத்து நோக்குகிறது என்பதனை மிகத் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துரைக்கின்றன.

பெண்கள் தொழில் செய்தல் இஸ்லாம் கூறும் அடிப்படைகள்

1. பெண்களின் இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும்

பெண்கள் எந்த விவகாரத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கே உரிய இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும் பெண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது. மட்டுமல்ல அவர்களுக்கே உரிய இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கே உரிய தனியான இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் முதலாவது அடிப்படை.

2. வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது

இஸ்லாம் வலியுறுத்தும் மற்றுமொரு மிக முக்கியமான விடயம்தான், வீடு என்பது பெண்களின் ராஜ்ஜியம் என்பதாகும். அந்த ராஜ்ஜியத்தின் தலைவியாக இருப்பவள் பெண். ஆணின் துணைவியாக, குழந்தைகளின் தாயாக, வீடு என்ற சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரியாக, நிருவாகியாக இருப்பது பெண்ணே. எனவே, வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம், பரிபாலனம் பாதிக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீண்ட ஒரு ஹதீஸிலே சொன்னார்கள்:

'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புக்கள் பற்றியும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்...”
தொடர்ந்து கூறினார்கள்,

'ஒரு பெண் தன்னுடைய கணவனது வீட்டில் பொறுப்புதாரியாக இருக்கிறாள். அவளுடைய பொறுப்புகள் பற்றி நிச்சயமாக அவள் விசாரிக்கப்படுவாள்.' (அல்புகாரி, முஸ்லிம்)

எனவே, மறுமையில் வீட்டு விவகாரம், வீட்டின் நிர்வாகம், அதன் பரிபாலனம் பற்றி ஆணை விட பெண் விசாரிக்கப்படுவாள் என்பது மிக முக்கியமானது.

3. மார்க்கம், குடும்பம், சமூகம் பாதிக்கப்படக் கூடாது

இஸ்லாத்தை குடும்பம் சார்ந்த மார்க்கம் என்பார்கள். இஸ்லாம் குதூகலமான, சந்தோஷமான, மனநிம்மதிமிக்க குடும்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்ட ஒரு மார்க்கம். அதனை அடுத்ததாக இஸ்லாத்தை சமூகம் சார்ந்த மார்க்கம் என்றும் வர்ணிப்பார்கள். உண்மையில் இவ்விரண்டும் இணைந்த ஒரு பரிபூரணமான மார்க்கம்தான் இஸ்லாம். இந்த இரண்டையும் முறையாகக் கையாள்வது ஒரு பெண்ணின் பொறுப்பாகும்.

பெண்ணியம் பேசும் கூட்டத்திற்கு அல்லாஹ் கூறும் செய்தி...?

இரவு பகலும் எவ்வாறு அதன் தன்மையில் கடமையில் வேறுபட்டு அதற்குரிய தன்மையை கொண்டுள்ளதோ அதேபோன்று ஆணையும் பெண்ணையும் வேறுபட்ட தன்மையில் அவரவர்களுக்கு தனித்துவமான பணிகளுடனும் பொறுப்புக்களுடனும் படைத்துள்ளான் என்பதனை மிக அழகாக தனது திருமறையில் விளக்குகிறான்.

ஆனால் அவர்கள்கள் விடயத்தில் பொதுப்படையாக இருப்பது அவர்கள் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் பாவங்களை விட்டும் தவிர்ந்து அவனது கோபத்தை விட்டும் பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதும் தங்களிடம் உள்ளவற்றை அல்லாஹ்விற்கான வாரி வழங்குவதுமாகும்.

அத்துடன் அவர்கள் அனைத்து நன்மைகளும் நலவுகளும் அல்லாஹ்விடம் இருந்துதான் வருகிறது என்று உண்மைப்படுத்தியபடி வாழ்வதுமாகும்.

அவ்வாறு வாழும் அவர்களுக்கே அல்லாஹ் அவர்களது ஈருலக வழிகளையும் இலகுபடுத்துவான் எனும் கருப்பொருளை மிக அழகிய முறையில் தனது திருமறையில் சூறதுல் லைல்லில் முதல் 7 வசனங்களில் கூறுவதாக ஷெய்ஹ் அபூதல்ஹா அழகான தப்ஸீர் விளக்கத்தை வழங்குகிறார்.

கலாச்சாரம் என்பது…?


வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமான அகீதாவில் இருந்து உருவாகும் அம்சமாக கலாச்சாரம் உள்ளது. இன்றுள்ள நவீன உலகில் ஒரு முஸ்லிம் நாகரீகம் எனும் பெயரில் மேற்கினதுகலாச்சாரத்தை சர்வசாதாரணமாக Copy யடித்து உள்வாங்கி பின்பற்றி வாழ்வதனை நாம்காணலாம்.
மேற்கினது கலாச்சாரம் வாழ்வியல் பற்றிய கண்ணோட்டத்தை பார்க்கும் பார்வை இஸ்லாத்தினதுவாழ்வியல் கண்ணோட்டத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாகும்.

மேற்கினது கலாச்சாரம் வாழ்வியலில் மதத்தின் தலையீட்டை நீக்கிவிடுதல் எனும் அடிப்படையில்மனோ இச்சையை பின்பற்றி வாழும் வழிமுறைகளில் உச்சகட்ட புலன் இன்பங்களை எந்தவிதமானவரையறைகளின்றி அனுபவிக்க வேண்டும் என்பதிலும் நிறுவப்பட்டுள்ளது. இந்த பார்வையில் ஒருமுஸ்லிம் தமது வாழ்வொழுங்கை அமைக்க முடியாது. அவன் அல்லாஹ் விதித்த வரம்புகளைமீறமுடியாது. அவ்வரம்புகளை பேணியபடி இறை திருப்பதியை நாடிய நிலையில்தான அவனதுபுலன் இன்பங்களை அவன் ஒழுங்குபடுத்தவேண்டும்..

ஆதலால் ஒரு முஸ்லிம் மேற்கினது காலாச்சாரத்தை பிரதிபலிக்கும் எந்த ஒன்றையும் பின்பற்றமுடியாது. அது அவனை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கும் தன்மையை அவனதுவாழ்வொழுங்கில் ஏற்படுத்தும்.

இன்று மேற்கினது காலாச்சாரம் ஒரு முஸ்லிமின் ஆடைமுதல் விளையாட்டுவரை வாழ்வின்அனைத்துத் துறையிலும் ஊடுறுவியுள்ளது. இதுபற்றி ஒவ்வொரு முஸ்லிமும் ஆழ்ந்து சிந்தித்துஎமது கலாச்சாரத்தை பண்பாட்டை வாழ்வில் ஒழுகிட முற்படவேண்டும். அதுவே எமது ஈருலகபாக்கியத்திற்கும் ஈடேற்றத்திற்கும் வழிவகுக்கும். இறை திருப்தியை பெற்ற மக்களாக வாழவழிவகுக்கும் என்பதனை உணரவேண்டும்.

அன்னிய கலாச்சாரங்களை எம்வாழ்வில் இருந்து களைந்திடுவோம்! அது பற்றிய சிந்தனைத்தெளிவைப் பெறுவோம்!

Mar 6, 2014

சிரியாவின் இஸ்லாமிய கூட்டணி கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்

கடந்த மாதம் சிரியாவில் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய குழுக்களிடமிருந்து சில முக்கிய அறிவிப்புகள் மிகுதியாக வந்தவண்ணம் இருந்தன.அலேப்போ நகரில் ஜபத் அந்நுஸ்ரா,அஹ்ரார், அஷ்ஷாம், லிவா-அத்-தௌஹீத் போன்ற முக்கியமான போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து மேற்கத்திய ஆதரவு பெற்ற எதிர்க்கட்சிகளை புறக்கணித்துவிட்டு ஓர் இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கி இருக்கின்றனர்.அமெரிக்கா ‘மிதவாத’ குழுக்களுக்கு ஆயுத உதவிகள் செய்வது அதிகரித்திருக்கும் சமயத்தில்தான் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.மேலும் சில நாட்களுக்குள்ளாகவே லிவா அல் இஸ்லாம் பிரிவின் முன்னால் ராணுவத் தளபதி முஹம்மத் ஸஹ்ரான் அள்ளூஷ் அவர்களின் தலைமையின் கீழ் ‘ஜெய்ஷ் அல் இஸ்லாம்’ என்ற பதாகையில் நாற்பத்து மூன்று குழுக்கள் ஒன்றிணைந்த செய்தி டமாஸ்கஸிலிருந்து வந்தது.கடந்த முப்பது மாதங்களாக நடக்கும் சிரிய புரட்சியில் மேற்கத்திய உலகம் மதச்சார்பற்ற மாற்று அணியை உருவாக்க குறிப்பிடத்தக்க காலத்தையும் பணத்தையும்  செலவிட்டுள்ளது.ஆனாலும் இதையும் மீறி இஸ்லாமிய சிந்தனை அடிப்படையில் இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இக்கூட்டணி இஸ்லாமிய கூட்டணியாக கருதப்படவேண்டுமானால் அது இஸ்லாத்தின் அடிப்படையிலான உம்மத்தின் (சர்வதேச முஸ்லிம் சமூகம்) ஒற்றுமையை நோக்கி அழைக்ககூடியதாகவும் தற்போதுள்ள அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் அத்தனை செயலாக்க அமைப்புகளும்(systems) இஸ்லாமாக மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.எந்தவொரு அரசியல் சார்ந்த கூட்டணியும் இஸ்லாமிய கூட்டணியாக கருதப்படவேண்டும் என்றால்,அது சில அடிப்படை விஷயங்களை கொண்டிருக்கவேண்டும்.
 
 
 அவையாவன:-
 
 
* இஸ்லாமிய அரசியலமைப்பு சட்டம் – சமூகம் மற்றும் அரசுக்கிடையிலான உறவுகளையும் அரசை கேள்வி கேட்கும் வரையறைகளையும் தெளிவாக இஸ்லாமிய ஆதார மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட ஓர்  அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று அமல்படுத்த(adoption)வேண்டும்.இந்த இஸ்லாமிய குழுக்கள் அரபு தேசியவாதம் என்ற வெற்று கோட்பாட்டின் அடிப்படையை தகர்த்து இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் சிரியாவை கட்டமைக்க வேண்டும்.
*குர்ஆனும் சுன்னாவும் இஸ்லாமிய ஆதார மூலங்களாக விளங்குவதால் இந்த மூல ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புது அரசியலமைப்பு சட்டத்தை வரைய வேண்டும்.அது பொருளாதாரம், சமூக அமைப்பு,கேள்வி கேட்டல்(accountability) மற்றும் நீதித்துறை குறித்த இஸ்லாமிய பார்வையையும் சட்டதிட்டங்களையும் தெளிவாக விளக்க வேண்டும்.மேலும் அதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் அரசையும், சமூகத்தையும், தனிநபரையும் கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்களை அறிந்து கொள்வான்.இது மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும், மக்கள் தங்களது தனிநபர், அரசியல் மற்றும் ஆன்மீக இலட்சியங்களை அடைவதற்கான வழிமுறை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி ஒரு சீறிய சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யும். மேலும் இது மக்கள் நடைமுறையில் இஸ்லாம் என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வழிவகுக்கும்.
 
 *தற்கால சிரிய அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியா எப்படி இருக்க வேண்டுமென்று போராளிக் குழுக்கள்தான் தீர்மானிக்கப் போகின்றன.ஆகவே இந்த இஸ்லாமிய போராளிக் குழுக்களின் கூட்டணி கீழ்க்கண்ட இஸ்லாமிய நிலைகளை எடுக்கவேண்டும்.
 
*சிரியா மற்றும் ஒட்டுமொத்த உம்மத்துடைய எதிர்காலம் என்பது, முஸ்லிம் உலகிற்குள் அமெரிக்காவின் தலையீட்டை ஒழிப்பதில்தான் இருக்கிறது. இஸ்லாமிய கூட்டணியின் முக்கியமான செயல் திட்டமாக இந்த விஷயம் இருக்க வேண்டும்.இல்லாவிடில் சிரியாவின் தற்போதைய அரசை வீழ்த்துவது வீணில் முடிந்துவிடும்.இதை சாதிப்பதற்கு முஸ்லிம் உலகில் தலையிடுவதற்கு அமெரிக்கா பயன்படுத்தும் சாதனங்களான பொம்மை ஆட்சியாளர்கள்,பொருளாதார உதவி, உள்கட்டமைப்புகளான முதலீடு மற்றும் இராணுவரீதியான வணிகம் போன்றவற்றை  முற்றாக ஒழிப்பதோடு அவற்றை  எக்காரணத்தை கொண்டும் இஸ்லாமிய சமூகத்திற்குள் அனுமதிக்கப்படக்கூடாது.
 
*பஷாருல் அஸாத் அரசை சேர்ந்த கோஷ்டிகள் உம்மத்திற்கெதிராக இழைத்த குற்றங்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். அவர்களின் கரங்களால் நசுக்கப்பட்டு வாழ்விழந்த இலட்சக்கணக்கானோருக்கு நீதி வழங்கப்படவேண்டும்.மேற்கத்திய அரசுகளின் கைப்பாவையான சிரிய தேசிய கூட்டமைப்பை ( Syrian National Council ) சிரியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்படகூடாது.மேலும் அவர்களது புதிய சிரியாவுக்கான விசுவாசம்(loyalty) என்பதை நம்பவும் கூடாது.
*கொள்கைசார் (policy) விஷயங்களில், அச்சமூட்டுவதற்கு தேவையான எந்த ஒரு ஆயுதத்தையும் வைத்துக் கொள்வதற்கு சட்டரீதியான வரம்புகளை ஏற்படுத்தக்கூடாது.பாகுபாடற்ற முறையில் மக்களை கூட்டுக்கொலை புரியும் ஆயுதங்களை பயன்படுத்துவதை இஸ்லாம் தடுத்தாலும்,எதிரிகளை அச்சமூட்டுவதற்காக அவைகளை வைத்துக்கொள்வதை அது அனுமதிக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து அரசை காக்க ஆயுத அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி முன்னெடுத்து செல்லவேண்டும்.
 *உம்மத்துடைய பலமான தற்காப்பு என்பது,முஸ்லிம் உலகத்தை மறுபடியும் ஒன்றுபடுத்துவதில்தான் இருக்கிறது. முஸ்லிம் உலகத்தை விரைவாக ஒன்றுபடுத்தி விரிவாக்கம் செய்யும் பொழுது அந்நிய ஏகாதிபத்தியங்கள் தங்களை எதிர்க்கக்கூடிய பாரிய மனிதவளம், இயற்கைவளம் மற்றும் இராணுவ வலிமை கொண்ட பரந்த நிலப்பரப்பை சந்திக்க நேரிடும்.மேலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்கா,முஸ்லிம் உலகில் அதன் ஆட்சியாளர்கள் தனக்கு ஏற்படுத்திக்கொடுத்த ராணுவத்தளங்களை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருக்கிறது. இத்தகைய போக்குவரத்து இணைப்புகளை (supply lines) துண்டித்து விடுவதன் மூலம் அமெரிக்க வலிமையை தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
 
*இந்த இஸ்லாமிய கூட்டணி, மற்ற குழுக்களையும் தன்னுள் கிரகித்துக்கொண்டு ஒரேயொரு எதிரணி என்ற அளவுக்கு விரிவடைய வேண்டும்.இந்த எதிரணி நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து,நாட்டின் கனரக தொழிற்சாலைகளையும் ஆயுதக்கிடங்களையும் கையகப்படுத்தவெண்டும்.இது அந்நிய சக்திகளின் போர் படையெடுப்பை முறியடிக்கவும், முஸ்லிம் உலகை ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடுத்தும் பரந்த இஸ்லாமிய நோக்கங்களுக்கும் உதவி புரியும்.
சிரியாவில் ஒரு முடிவின் தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது.மேலும் ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தத்தமது நோக்கங்களுக்கும் நலன்களுக்கும் தக்கவாறு சிரியாவில் இறுதி ஆட்டத்தை(end game) நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.மேற்குலகு தனக்கு விசுவாசமான எதிரணியை உருவாக்குவதில் தோல்வி கண்டுவிட்டது. உம்மத் தனது நிலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை தானே கையில் எடுத்துக்கொண்டுவிட்டது. இத்தருணத்தில் இஸ்லாமிய கூட்டணி, இஸ்லாத்திற்கு  எந்தவொரு களங்கம் ஏற்படுவதையும் அனுமதிக்காமல் செயல்படுமானால்,அல்லாஹ்سبحانه وتعالىவுடைய நாட்டத்தின்படி, சிரியாவினதும் மற்றும் ஒட்டுமொத்த உலகத்தை சேர்ந்த உம்மத்தினதும் புதிய விடியலைக் காணலாம்.உம்மத்தை கவ்வியிருக்கும் இருளை அகற்றி அதன் துயரங்களை நீக்கலாம்.
 
Source:- www.khilafah.com

பாலியல் உணர்வு பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்

டெல்லி உயர்நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ஓரினச்சேர்க்கை என்னும் அருவருக்கத்தக்க செயலை அங்கீகரித்தும், இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லுபடியாகாது என்றும் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சமூக அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன.இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து டிசம்பர் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான சிங்வி, முகோபாத்தியாய ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.ஒருபால் உறவிற்கு உளப்பூர்வ ஆதரவு அளிப்போர்களின் கண்டனக் குரல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தும் இவ்வேளையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதுபோன்ற  நீதிமன்ற தீர்ப்புகளை வரவேற்க வேண்டியதில்லை.ஏனெனில் இதே உச்சநீதிமன்றம் கடந்த மாதம்,திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று தீர்ப்பளித்திருந்தது.மனித சிந்தனையிலிருந்து தோன்றிய சட்டங்களை வைத்து இவர்கள் தீர்ப்பளித்துவருவதால் மனித சமூகத்தின் மாண்புகள் சீர்குலைந்துவருகிறது .ஒருபால் உறவு,திருமணம் செய்யாமல் உறவுகொள்ளல் போன்ற இழிசெயல்கள் தடுக்கப்பட்ட பெரும்பாவங்கள் என்பதை உரக்கக்கூறும் முஸ்லிம்கள், ஆண்-பெண் திருமண உறவு குறித்த இஸ்லாமிய கண்ணோட்டத்தை தெளிவாக சொல்வதும் அவசியமாகும்.
அல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்:-
 
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا
 
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம்.பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களை (பல்வேறு)சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.                                             (அல்ஹுஜுராத் : 13)
 
அல்லாஹ்سبحانه وتعالى மனித இனத்தை படைத்திருக்கிறான்;அவர்களை ஆண்களாகவும் பெண்களாகவும் படைத்து விலங்கினங்களிலிருந்து வேறுபட்ட குறிப்பிட்ட தனித்தன்மையை அவர்களுக்கு  வழங்கியுள்ளான்.மனிதர்கள் என்ற முறையில் அல்லாஹ் سبحانه وتعالى இவ்விரு பாலரையும் வாழ்க்கைப் பயணத்தில் ஈடுபடும்படியும் தவிர்க்க இயலாத வகையில் மனித சமுதாயம் என்ற ஒரே சமுதாயமாக வாழும்படியும் அவர்களை தயார்படுத்தியிருக்கிறான்.ஆண்-பெண் ஆகிய இருபாலரும் சமுதாயத்தில் இடம்பெற்றிருப்பதையும் அவர்களுக்கு மத்தியில் சந்திப்புகளும் உறவுகளும் ஏற்படுவதையும் மனித இனம் நிலைத்து உயிர் வாழ்ந்திருப்பதற்கு அடிப்படையாக ஆக்கியுள்ளான்.மனிதர்கள் என்ற முறையில் இவ்விருபாலரும் மனிதப்பண்புகளையும் வாழ்வியலுக்கு அவசியமான அம்சங்களையும் பெற்றிருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்سبحانه وتعالى ஜீவஆற்றலை(طاقة حيوية-vital energy)படைத்துள்ளான்.ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இத்தகைய ஜீவஆற்றலை அவர்களுக்குள் அமைத்துள்ளான்.எனவே  பசி,தாகம், இயற்கைத்தேவை போன்ற உயிரியல் தேவைகளை(الحاجات العضوية  - organic needs) அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அமைத்துள்ளான். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயிர்வாழும் உள்ளார்ந்த(غريزة البقاء – survival instinct),  இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு(غريزة النوع -procreation instinct), அடிபணியும் உள்ளார்ந்த உணர்வு அல்லது ஆன்மீக உள்ளார்ந்த உணர்வு (غريزة التدين -reverance instinct)ஆகிய உணர்வுகளை படைத்துள்ளான்.ஆண்-பெண் ஒவ்வொருவருக்கும் உயிரியல் தேவைகளையும்(الحاجات العضوية- organic needs)  உள்ளார்ந்த உணர்வுகளையும்(الغرائز-instincts) சிந்திக்கும் ஆற்றலையும்(العقل) அமைத்துள்ளான்.
 
இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வை(غريزة النوع -procreation instinct) ஓர் ஆண் மற்றொரு ஆணின் மூலமாகவோ அல்லது மிருகத்தின் மூலமாகவோ அல்லது பெண் மூலமாகவோ  நிறைவுசெய்துவிடுகிறார்கள்.அதுபோலவே ஒருபெண் தனது இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வை மற்றொரு பெண் மூலமாகவோ அல்லது மிருகத்தின் மூலமாகவோ அல்லது ஆன் மூலமாகவோ  நிறைவுசெய்து விடுகிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள உறவு என்பது அசலான உறவாகும்;எனவே திருமண பந்தத்தின்  மூலமாக மட்டுமே மனித இனம் இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வை நிறைவு செய்யவேண்டும். மனித இனத்தின் இருப்பிற்கும் அதன் உயிர்வாழ்தலுக்கும் இது அவசியமான விஷயமாக இருக்கிறது. எனினும் மனிதனிடம் இடம்பெற்றுள்ள உள்ளார்ந்த உணர்வுகளை(الغرائز -instincts) அதன் போக்கிற்கு கட்டுப்பாடில்லாமல் இயங்குவதற்கு அனுமதிக்கும் பட்சத்தில் அது மனித இனத்திற்கும் மனிதர்களின் சமூக வாழ்விற்கும் மிகுந்த தீங்குகளை ஏற்படுத்திவிடும். மனிதன் தனக்கு சந்ததிகளை உருவாக்கிக் கொள்வதின் மூலம் மனித இனத்தை தொடர்ந்து உயிர் வாழச்செய்வதுதான் இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு (غريزة النوع) கொடுக்கப்பட்டதின் உண்மையான நோக்கமாக இருக்கிறது. எனவே இந்த உணர்வு என்ன நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கத்தை நிறைவுசெய்யும் வகையில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இவ்வுணர்வைப் பொறுத்த மனித இனத்தின் கண்ணோட்டமாக இருக்கவேண்டும். இவ்விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய தனிப்பட்ட சிறப்பான படித்தரமும் கிடையாது. பாலியல் உள்ளார்ந்த உணர்வை(غريزة النوع) நிறைவுசெய்து கொள்வதின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் இன்பத்தை பொறுத்தவரை அதை மனித சமுதாயம் பொருட்டாக கருதினாலும் கருதாவிட்டாலும் அது இயல்பானதும் தவிர்க்க இயலாததுமாக இருக்கிறது.ஆண்–பெண் இருபாலருக்கு மத்தியில் பாலியல் ரீதியாக ஏற்படும் உறவு தொடர்பான தெளிவான கண்ணோட்டமாக இது மனிதனிடம் நிலைத்திருக்க வேண்டும்.அப்போதுதான் இந்த உணர்வு அமைக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் அதனை இயக்குவது சாத்தியமாகும்.
 
மானுட இனத்திலுள்ள எந்தவொரு சமுதாயமும் ஆண்-பெண் ஆகிய இருபாலருக்கு மத்தியிலுள்ள பாலியல் உறவிற்கு மகிழ்ச்சி மற்றும் உடலின்பம் ஆகியவைதான் பிரதானம் என்ற கருத்தாக்கத்தை கொண்டிருந்தால், அந்த கண்ணோட்டம் மாற்றி அமைக்கப்படவேண்டும்.மகிழ்ச்சியும் உடலின்பமும் இயல்பானதும் அவசியமானதும் என்றபோதும்,இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு (غريزة النوع -procreation instinct)எந்தநோக்கத்திற்காக வழங்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்திற்கு பிரதான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். இத்தகைய தெளிவான கண்ணோட்டம் பாலியல் உணர்வை அது ஏற்படுத்தப்பட்ட நோக்கத்திற்கு இணக்கமாக சரியான முறையில் வழிநடத்துவதோடு இதர செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் மகிழ்ச்சியளிக்கும் மற்ற விஷயங்களை தேடிக்கொள்வதற்கும் மனிதர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆண்-பெண் ஆகியவர்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு செயலாக்க அமைப்பை    (نظام-systems)மனித சமுதாயம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். இத்தகைய செயலாக்க அமைப்பின் வழிகாட்டுதல் மூலமாக பாலியல் வேட்கையின் விளைவாக ஏற்படும் அலைபாயும் சிந்தனைகளும் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் பாலியல் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தும் போக்கும் மக்களிடமிருந்து நீக்கப்படவேண்டும். ஏனெனில் ஆண்-பெண் ஆகிய இருபாலரும் பரஸ்பரம் அன்பும் நேசமும் கொண்டவர்களாக, ஒருவருக்கொருவர் ஆதரவாக  இருக்கும் இருசகாக்கள் என்ற முறையில் அவர்களுக்கு மத்தியில் ஒத்துழைப்பு இல்லையெனில் பிறகு அந்த சமுதாயம் எத்தகைய மதிப்பபையும் பெற்றிருக்காது. இக்காரணத்தை முன்னிட்டு ஆண்-பெண் ஆகிய இருபாலருக்கு மத்தியிலுள்ள உறவு குறித்து மனித சமுதாயத்தில் நிலவும் தற்போதைய கண்ணோட்டத்தை மாற்றவேண்டியதின் அவசியத்தை நாம் அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.அதன்மூலம் பாலியல் வேட்கை தொடர்பான சிந்தனைகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டவேண்டும்; அதன்மூலமாக பாலியல் நடவடிக்கையை இயல்பானதாகவும் இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வை(غريزة النوع) நிறைவுசெய்வதற்கு அவசியமானதாகவும் கருதும் சரியான சிந்தனையை நிறுவவேண்டும். மேலும் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கு மத்தியிலுள்ள உறவை உடலின்பம் பாலியல்சுகம் என்ற வரையறைக்குள் ஏகபோகமாக கட்டுப்படுத்தும் நிலையை மாற்றவேண்டும்.
இதற்குமாற்றமாக, சமுதாயத்தின் நன்மையை நாடுகின்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் பாலியல் நடவடிக்கைள் நெறிபடுத்தப்படவேண்டும். இத்தகைய சமுதாயம் இறையச்சம் கொண்டதாவும் காமத்தையும் காம உணர்வின் அடிப்படையிலுள்ள பாலியல் கேளிக்கைகளையும் இலட்சியமாக கொள்ளாத சமுதாயமாகவும் இருக்கும்.எனினும் பாலியல் தொடர்பான இத்தகைய கண்ணோட்டம் மகிழ்ச்சியையும் பாலியல் இன்பத்தையும் மனிதனுக்கு மறுக்காது;மாறாக அதை சட்டரீதியானதாக (legitmate)ஆக்குவதின் மூலம் மனித இனம் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்தி இப்பிரபஞ்சத்தில் அதன் இருப்பை பாதுகாக்கும்.அல்லாஹ்سبحانه وتعالىவின் உவப்பை பெறுதல் என்ற ஒரு மூஃமினின் இறுதி இலட்சியத்திற்கு இணக்கமாகவும் அதற்கு பொருத்தமாகவும் அவனை வாழ்வியலில் வழிநடத்தும்.
 
பாலியல் உணர்வை அல்லாஹ்سبحانه وتعالىதிருமணம் என்ற நோக்கத்திற்காகவே படைத்துள்ளான்.ஆண்-பெண் ஆகியவர்களுக்கு மத்தியிலுள்ள உறவு குறித்த சமுதாயத்தின் கண்ணோட்டம் திருமணம் என்ற நடவடிக்கையின் மீது கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையிலும் பாலியல் இன்பத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துவதை மறுக்கும் வகையிலும்  குர்ஆன் கூறுகின்றது.
 
 
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً
மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் அதிலிருந்து அவன் அதன் துணையை படைத்தான்; இன்னும் அவை இரண்டிலிருந்தும் எண்ணற்ற ஆண்களையும் பெண்களையும் (படைத்து பூமியில்) பரவச்செய்தான்.                                 (அந்நிஸா : 1)
 
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِ فَلَمَّا أَثْقَلَتْ دَعَوَا اللَّهَ رَبَّهُمَا لَئِنْ آَتَيْتَنَا صَالِحًا لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ
 
அவன்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான் மேலும் அதனிடம் அது அமைதி பெறுவதற்காக அதிலிருந்து அதன் துணையை படைத்தான். பின்னர் ஆண் பெண்ணுடன் கூடியபோது அவள் இலேசான கர்ப்பத்தைத் தரித்தாள், இன்னும் அதனை சுமந்தபடி அவள் நடமாடிக்கொண்டிருந்தாள்.பின்னர் (அக்கரு வளர்ச்சியுற்று) கனமானபோது அவ்விருவரும் தங்கள் இறைவனான அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்;(அல்லாஹ்வே!) நீ எங்களுக்கு (ஸாலிஹான) நற்குழந்தையை அளிப்பாயானால்,திண்ணமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்துவோராய்  இருப்போம்.
                                                                                                                                               (அல்அஃராஃப் : 189)
                                       وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
 
நிச்சயமாக! உமக்கு முன்பும் நாம் து£தர்கள் பலரை அனுப்பியுள்ளோம் மேலும் அவர்களை மனைவி-மக்கள் உள்ளவர்களாகவே நாம் ஆக்கியிருந்தோம்.                    (அர்ரஃது : 38)
 
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ لَكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَنِينَ وَحَفَدَةً
 
மேலும் உங்களிலிருந்து உங்களுக்கு அல்லாஹ் துணைவியரை ஆக்கினான், இன்னும் அத்துணைவியர் மூலமாக உங்களுக்கு புதல்வர்களையும் பேரர்களையும் ஆக்கினான்.        (அந்நஹ்ல் : 72)
 
وَمِنْ آَيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً
 
மேலும் அவர்களைக்கொண்டு நீங்கள் மனஅமைதி பெறவேண்டும் என்பதற்காக உங்களிலிருந்து உங்களுக்கு துணைவியரை ஆக்கியிருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாக இருக்கிறது. இன்னும் அவன் உங்கள் மத்தியில் நேசத்தையும் பரிவையும் உண்டாக்கினான்.  (அர்ரூம் : 21)
 
وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى  مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى
 
மேலும் நிச்சயமாக! குதித்து வெளியேரும் விந்துத் துளியிலிருந்து ஆண் மற்றும் பெண் ஜோடிகளை அவன் படைத்தான்.  (அந்நஜ்ம் : 45,46)
இவ்வாறாக, அல்லாஹ்سبحانه وتعالىஆண்-பெண் படைப்பை திருமண பந்தத்துடன் கட்டுப்படுத்தி இருக்கிறான்.ஆண்-பெண் பற்றிய கண்ணோட்டம் திருமண பந்தத்துடன் இணைந்திருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் இச்செய்தியை அல்லாஹ்سبحانه وتعالىமீண்டும் மீண்டும் அருள்மறை குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறியுள்ளான். மனித இனம் இப்பிரபஞ்சத்தில் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருக்கும் பொருட்டு மனிதன் தனக்கு சந்ததிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வாழ்க்கை துணையை பெற்றுக்கொண்டு மனஅமைதியுடன் வாழ்வியல் பயணத்தை மேற்கொள்வதற்கும்தான் அல்லாஹ்سبحانه وتعالىஆணையும் பெண்ணையும் படைத்துள்ளானே ஒழிய பாலியல் இன்பத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டல்ல என்பதை முஸ்லிம்களாகிய நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
 
 
[ஷேக் தகியுதீன் நபஹானி (ரஹ்) அவர்கள் எழுதிய இஸ்லாத்தின் சமூக அமைப்பு(النظام الاجتماعي في الإسلام) என்ற நூலிலிருந்து இந்த ஆக்கம் பெறப்பட்டது]

இன்று எனது நினைவு நாள்

عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ

திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின

وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ

உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது

كُفِّنتِ في لَيلِ الزَفافِ بِثَوبِه

திருமண இரவன்று அந்த ஆடையால் உனக்கு கஃபனிடப்பட்டது

وَدُفِنتِ عِندَ تَبَلُّجِ الإِصباحِ

அதிகாலைப் பொழுதில் நீ அடக்கம் செய்யப்பட்டாய்

شُيِّعتِ مِن هَلَعٍ بِعَبرَةِ ضاحِكٍ

ஆனந்தக்கண்ணீருடன் திகிலூட்டம் புடைசூழ உன் அடக்கம் நடந்தேறியது

    في كُلِّ ناحِيَةٍ وَسَكرَةِ صاح

ஒவ்வொரு நிலப்பகுதியும் மரண வேதனையால் அலறியது

ضَجَّت عَلَيكِ مَآذِنٌ وَمَنابِرٌ

மிம்பர்களும் மினாராக்களும் உனக்காக ஓலமிட்டன

وَبَكَت عَلَيكَ مَمالِكٌ وَنَواحِ

பேரரசுகளும் மாகாணங்களும் உனக்காக அழுதன

الهِندُ والِهَةٌ وَمِصرُ حَزينَةٌ

இந்தியா துக்கத்தால் தடுமாறியது; எகிப்து கவலையுற்றது

تَبكي عَلَيكِ بِمَدمَعٍ سَحّاحِ

இவை உனக்காக கண்ணீர் பெருக்கெடுக்க அழுதன

وَالشامُ تَسأَلُ وَالعِراقُ وَفارِسٌ

ஷாம்,ஈராக் மற்றும் பாரசீகம் வினவின

أَمَحا مِنَ الأَرضِ الخِلافَةَ ماحِ

 உங்களுடைய நிலத்திலிருந்து கிலாஃபத்தை யாராவது துடைத்தெறிந்து விட்டார்களா?

وَأَتَت لَكَ الجُمَعُ الجَلائِلُ مَأتَماً

மேன்மை பொருந்திய நன்மக்கள் உன்னுடைய அடக்கத்தில் பங்கெடுத்தனர்

فَقَعَدنَ فيهِ مَقاعِدَ الأَنواحِ

அவர்கள் ஒப்பாரி வைக்குமிடத்தில் அமர்ந்தார்கள்

يا لَلرِجالِ لَحُرَّةٍ مَوؤودَةٍ

ஓ ! மனிதா ! உயிருடன் புதைக்கப்பட்ட கண்ணியமிக்கவளை கவனி !

قُتِلَت بِغَيرِ جَريرَةٍ وَجُناحِ

இவள் எந்த குற்றமோ பாவமோ செய்யாமல் கொல்லப்பட்டிருக்கிறாள்

(“امير الشعراء – கவிஞர்களின் அமீர்” என்று போற்றப்படும் எகிப்திய கவி அஹ்மது ஷவ்கி அவர்கள் முஸ்லிம் உம்மத்தின் ஒரே தலைமையான கிலாஃபா வீழ்த்தப்பட்டபோது மனம் வருந்தி பாடிய அரபுக் கவிதைகளிருந்து சில வரிகள்)

உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம்  ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் இஸ்தான்புல் நகரில் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார். முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாஸானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை கீழ்க்கண்டவாறு உமிழ்ந்தார்.

“The situation now is that Turkey is dead and will never rise again because we have destroyed its moral strength, the Khilafah and Islam.”

  “துருக்கி இப்பொழுது வீழ்ந்துவிட்டது.. அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்ட சக்தியான கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் நாம் வீழ்த்திவிட்டோம்.”

நபி  صلى الله عليه وسلمஅவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உஸ்மானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3 ) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை, கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது.

கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் தகர்க்கும் முதல் முயற்சியாக பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாவது  சிலுவைப்போரை போப் இரண்டாம் உர்பன் துவக்கி வைத்தார்..எனினும் இவர்களின் இருநூறு ஆண்டுகால சிலுவை ஆக்கிரமிப்பை சலாஹுதீன் அய்யூபி(ரஹ்) அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.

கவுன்ட் ஹென்றி டெகாஸ்ட்ரி என்ற பிரஞ்சு எழுத்தாளர் 1896 ஆம் ஆண்டு எழுதிய “இஸ்லாம்” என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:-

“I cannot imagine what the Muslims would say if they heard the tales of the mediaeval ages and understood what the Christian orators used to say in their hymns; all our hymns even those which emerged before the 12th century emanated from one concept which was the cause of the crusades, these hymns were filled with hatred towards the Muslims due to the total ignorance of their religion. As a result of those hymns and songs, hatred against that religion became fixed in people’s minds, and the erroneous ideas deeply rooted, some of which are still carried nowadays. Everyone used to regard the Muslims as polytheists, disbelievers, idol worshippers and apostates.”

“மத்தியகால கற்பனை கதைகளைப்பற்றி கேள்விப்பட்டாலோ,அதைப்பற்றி கிறிஸ்தவ கதாசிரியர்களின் கடவுள் துதிபாடுதலில் கூறப்பட்டவற்றை கேள்விப் பட்டாலோ முஸ்லிம்கள் என்ன கூறுவார்கள் என்று  என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. நமது அனைத்து துதிபாடுகளும் 12-ம் நூற்றாண்டிற்கு முன்னர் கிளம்பிய ஒரு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டவைகள். அதுவே சிலுவைப் போர் ஏற்பட காரணமாக அமைந்தது. இப்புகழ் பாட்டுக்கள் அனைத்தும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உள்ளடக்கியதாக இருந்தது. இது முஸ்லிம்களின் மதத்தை பற்றிய அவர்களின் அறியாமையால் ஏற்பட்டது. இவ்வகையான துதிபாட்டுகள், இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான வெறுப்பை கிறிஸ்தவ மக்களின் மனதில் நிரந்தரமாக்கியது.இதன் மூலம் ஆழ்ந்து வேரூன்றிய சில தவறான எண்ணங்கள் இன்றளவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரும் முஸ்லிம்களை பல் தெய்வ கொள்கை உடையவர்கள் எனவும் இறைமறுப்பாளர்கள் எனவும் சிலை வழிபாட்டாளர்கள் எனவும் கிரிஸ்தவ சமயத்திலிருந்து வெளியானவர்கள் எனவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்”.

முஸ்லிம்களுடன் நீண்டகாலம் போராடி தோல்வி கண்ட சிலுவை ஆக்கிரமிப்பாளர்கள், ஆயதப்போராட்டத்தால் முஸ்லிம்ளை ஒருபோதும்  வீழ்த்தமுடியாது என்பதை விளங்கிக் கொண்டார்கள். எனவே முஸ்லிம்களை சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என்பதை  உணர்ந்து அதற்கான சதித் திட்டங்களைத் தீட்டினார்கள். எனவே இதற்காக 16 ஆம் நூற்றாண்டின் முடிவில்  மால்டாவில் ஒரு மையத்தை கிறிஸ்தவ மிஸனரியினர் நிறுவினார்கள்.மால்டாவை தலைமையிடமாக்க் கொண்டு முஸ்லிம்களின் உள்ளத்தில் மேற்கத்திய நச்சு சிந்தனைகளை பிரிட்டிஷ்-பிரஞ்சு-அமெரிக்க மிஸனரியினர் விதைக்கலாயினர்.இந்த காலகட்டத்தில்தான் முஸ்லிம்களிடையே மேற்கத்திய சிந்தனைகள் ஊடுருவத் துவங்கியது.

இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தைத் தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள். இதற்காக பெய்ரூட் மையம் துவக்கப்பட்டது.கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஸனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதின் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர்.அவர்கள் சமூகத்தில் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளைக் கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றிபெற முடியும் என்பதால், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும், துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.இதற்காக துருக்கிய இளைஞர் சங்கம் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.கிலாஃபத்தை அழித்த முஸ்தஃபா கமால் பாஷா இதில் உறுப்பினராக இருந்தான்.

எனவேதான் முஸ்தபா கமால் இவ்வாறு கூறினான்:-

“Was it not because of the Khilafah, Islam and the clergy that the Turkish peasants fought and died for five centuries? It is high time Turkey looked after her own interests and ignored the Indians and the Arabs. Turkey should rid itself of leading the Muslims.”

“துருக்கி குடியானவர்கள் கடந்த ஐந்து நூற்றாண்டு காலமாக கிலாஃபா, இஸ்லாம் மற்றும் திருச்சபைக்காக சண்டையிட்டு உயிர் நீத்துள்ளார்கள். இனி துருக்கி தன்னுடைய நலன்களை மட்டுமே கவனித்துக் கொண்டு இந்தியர்கள் மற்றும் அரபியர்களை புறக்கணிக்க வேண்டும். மேலும் முஸ்லிம்ளை தலைமை தாங்குவதிலிருந்து துருக்கி தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும்”

ஒரே அமீரின் கீழிருந்த கிலாஃபத்தின் நிலப்பரப்பை பல நாடுகளாக கூறுபோட்டு தங்களின் ஏஜண்டுகளை ஆட்சியில் அமர்த்துவதற்காக 1916 ஆம் ஆண்டு பிரிட்டனும் ஃபிரான்ஸும் ஒன்றிணைந்து Sykes-Picot  agreement என்று அறியப்படும் ரகசிய ஒப்பந்த்ததை ஏற்படுத்தினர்.    ஃபிரான்ஸ் தூதர்    Georges-Picot  மற்றும் பிரிட்டிஷ் அரசியல் ஆலோசகர் Mark Sykes மத்தியில் இந்த சதித்திட்டத்திற்கான பெசுவார்தை ப்ப்ப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்கிழக்கு துருக்கிய பகுதி, ஈராக்கின் வட பகுதி,சிரியா,லெபனான் போன்ற நிலப்பரப்புகளை ஃபிரான்ஸ் எடுத்துக் கொள்வது எனவும்,ஜோர்டான்,ஈராக்,ஹைஃபா போன்ற பகுதிகளை பிரிட்டன் எடுத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.இன்றைய மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைக்கோடுகள் Sykes-Picot  ஒப்பந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன.

கிலாஃபத்தை வீழ்த்துவதற்கு பிரிட்டன், ஃபிரான்ஸ்,ரஷ்யா போன்ற நாடுகள் திட்டம் தீட்டினர்.இதில் முஸ்தஃபா கமாலை முன்னிறுத்தி பிரிட்டன் சதிவலையை பின்னியிருந்தது.இதன் விளைவாகவே முஸ்தஃபா கமால் பாஷா உஸ்மானிய கிலாஃபத்தின் அதிகாரத்தில் நுழைய முடிந்தது.துருக்கியின் விடுதலைக் குறித்து விவாதிக்க 1922 ஆம் ஆண்டு லாஸான் மாநாட்டை பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் கர்ஸன் பிரபு கூட்டினார்.கிலாஃபத்திலிருந்து துருக்கியை விடுவிக்க  கீழ்க்கண்ட நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.

1.கிலாஃபத்தின் ஒட்டுமொத்த மறைவு

2. கிலாஃபத்தின் எல்லையிலிருந்து  கலீஃபாவை வெளியே துரத்துதல்

3.கிலாஃபத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்

4. துருக்கியை மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்தல்

இந்த நான்கு நிபந்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் மாநாடு  வெற்றியாக கருதப்பட்டது.எனினும் துருக்கியில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் கிலாஃபத்தை தங்களின் இதயத்தில் வைத்து போற்றியதால் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த முஸ்லிகளின் தலைமையை ஒரேயடியாக வீழ்த்த முடியவில்லை.இதனால் லாஸான் மாநாட்டு தீர்மானங்கள் தோல்வியை தழுவியது.ஆயினும் பிரிட்டன் தன்னுடைய தந்திர முயற்சியை விட்டுவிடவில்லை. எனவே தங்களின் கங்காணி முஸ்தஃபா கமாலை முழு பலத்தையும் பிரயோகித்து கிலாஃபத்தை வீழ்த்துமாறு கூறினர்.இறுதியாக கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் முழு பலத்தை வைத்து அச்சுறுத்தி கிலாஃபத்தை அகற்றுவதற்கான மசோதாவைக் கொண்டுவந்து கிலாஃபத்தை அழித்தான்.

முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற பிரிட்டனின் கங்காணி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட்தும் முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாமிய பூமி பல தேசங்களாக பிளவுபடுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்ஃபார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர். மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர். அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கிவருகின்றனர்

கிலாஃபத்தை அழித்தபின்னர் காலனியாதிக்க காஃபிர்கள் ஓய்ந்துவிடவில்ல. அந்த கிலாஃபா மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான் கர்ஸன் பிரபு இவ்வாறு கூறினார்:-

“We must put an end to anything which brings about any Islamic unity between the sons of the Muslims. As we have already succeeded in finishing off the Caliphate, so we must ensure that there will never arise again unity for the Muslims, whether it be intellectual or cultural unity”

“முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

எனவேதான் கிலாஃபத்தின் மீள்வருகை குறித்து அச்சமும் கவலையும் கொண்டிருந்த அமெரிக்க அதிபராயிருந்த  புஷ் இவ்வாறு கூறினார்:-

“…establish a violent political utopia across the Middle East, which they call Khilafah, where all would be ruled according to their hateful ideology… This Khilafah would be a totalitarian Islamic empire encompassing all current and former Muslim lands, stretching from Europe to North Africa, the Middle East and Southeast Asia”.                                                                                                                                                                                                                                           …………Washington Post

“ மத்திய கிழக்கில் கிலாஃபத்திற்காக அழைப்பு விடுப்பவர்கள் வெறுப்புமிக்க சித்தாந்தத்தின்(இஸ்லாம்) அடிப்படையில் ஆட்சி செய்ய முயல்வதாகவும், அந்த கிலாஃபா என்பது தற்போதைய மற்றும் முந்தைய இஸ்லாமிய நிலங்களை உள்ளடக்கிய …பரந்து விரிந்த ஐரோப்பாவிலிருந்து வடஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலான  பகுதிகளை உள்ளடக்கிய முழுமையான இஸ்லாமிய அரசாகும்”.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் சமீபத்தில் இரண்டாவது ஜெனீவா மாநாடு  முடிவுற்றதும்  NTV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“It is important that the political process is accompanied by combining the healthy forces, who are thinking about their homeland, and not about the establishment of the Khilafah in the Middle East and North Africa. To unite them and help them in many different ways to combat a terrorist threat. This is a goal for the whole region and for the world”.

“சிரியாவின் அரசியல் நிகழ்வானது தன் தாய்நாட்டின் சிந்தனை கொண்ட ஆரோக்கியமான சக்திகளுக்கிடையே ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டுமே தவிர, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் கிலாஃபத்தினை மீண்டும் நிறுவுவதற்காக  அமையக்கூடாது. தாய்நாட்டின் சிந்தனை கொண்ட சக்திகளை ஒருங்கிணைத்து பல வழிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். இதுவே அனைத்து பிராந்தியத்திற்கும்  அனைத்து உலகிற்குமான குறிக்கோளாகும்.

மேற்குலகினர் மீண்டும் கிலாஃபா ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான தடைக்கற்களை ஏற்படுத்தியுள்ளனர்.

*தேசியவாதம்,தேசப்பற்று,சோஷலிஸம்,மதச்சார்பின்மை போன்ற சிந்தனைகளை முஸ்லிம்களின் உள்ளத்தில் திணித்துவிட்டனர்.இதற்கான  அரசியல் குழுக்களையும் தன்னார்வ நிறுவனங்களையும் முஸ்லிம் உலகில்  ஏற்படுத்தியுள்ளனர்.

*இஸ்லாத்திற்கு முரணான பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை இதற்காகவே வடிவமைத்தனர்.இது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

*முஸ்லிம் உலகின் பொருளாதாரத்தை மேற்கத்திய காலனியாதிக்க அரசுகளும், அந்நாட்டின் தனியார் நிறுவனங்களும் தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.இதனால் முஸ்லிம் உம்மா தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

*முஸ்லிம் நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனைகளை ஊக்குவித்து அதில் மேற்குலகம் குளிர் காய்ந்து வருகிறது.

அரபு லீக்,இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC – Organisation of Islamic countries) போன்ற அமைப்புகளை மேற்குலகினர் தோற்றுவித்து முஸ்லிம்களின்  பிரச்சனைகளை இதன் மூலமாகவே தீர்த்துவைக்க முடியும் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

*முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்கத்தியர்களின் ஏஜண்டுகளாக இருப்பதால் இஸ்லாத்தை முற்றாக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ ஆட்சியமைப்பை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். மேலும் இஸ்லாத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநாட்ட பாடுபட்டுவரும் முஸ்லிம்களை தங்களின் மேற்கத்திய எஜமானர்களின் முழு ஆசீர்வாதத்துடன் ஒடுக்கி வருகின்றனர்.

எனினும் இவர்களின் சதிவலைகளையெல்லாம் அறுத்தெறிந்து  உலகளாவிய முஸ்லிம்கள் முன்னேறி வருகின்றனர்.எனவே இந்த மாபெரும் பணியில் பங்கெடுக்காத சகோதர சகோதரிகள் இனியும் காலந்தாழ்த்தாமல்  கிலாஃபத்தின் மீள்வருகைக்காக பாடுபடுபவர்களுடன் இணைந்து தோள் கொடுப்போமாக.

கிலாஃபத்தின் மீள் வருகையை தடுக்கும் ரஷியா மற்றும் உலக நாடுகள்

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் இரண்டாவது ஜெனீவா மாநாடு  முடிவுற்றதும்  NTV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
“சிரியாவின் அரசியல் நிகழ்வானது தன் தாய்நாட்டின் சிந்தனை கொண்ட ஆரோக்கியமான சக்திகளுக்கிடையே ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டுமே தவிர, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் கிலாஃபத்தினை மீண்டும் நிறுவுவதற்காக  அமையக்கூடாது. தாய்நாட்டின் சிந்தனை கொண்ட சக்திகளை ஒருங்கிணைத்து பல வழிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். இதுவே அனைத்து பிராந்தியத்திற்கும்  அனைத்து உலகிற்குமான குறிக்கோளாகும்”.
 
2014 ஆம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி லாவ்ரொவ் இவ்வாறு  கூறினார், ” பேச்சுவார்த்தையின் முதற்கட்டத்தில், அங்குள்ள குழுக்கள் ஒருங்கிணைந்து தற்போது நிலவும் பன்முக நம்பிக்கை மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கும்  சிரியாவை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்துவதே   முக்கியம் வாய்ந்த சமிக்ஞையாக அமையும் என கருதுகிறேன்.”
 
2013 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி VESTI 24க்கு அளித்த பேட்டியில் செர்ஜி லாவ்ரொவ் கூறியதாவது:-
 
 ”சிரிய தேசப்பற்றுடையவர்கள் எது மிகவும் முக்கியமானது என புரிந்து கொள்ளும் நிர்பந்தத்தில் உள்ளார்கள்! சிரியாவில் கிலாஃபா ஏற்பட போராடுபவர்களுடன் சேர்ந்து சண்டையிடுவதா?  அல்லது  நூற்றாண்டு காலமாக புகழ்பெற்ற பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முக நம்பிக்கை கொண்ட மதச்சார்பற்ற, அனைத்து மக்களும் சுகபோகமாக வாழும் நிலைக்காக ஒன்றினைந்து போராடுவதா?  என்பதாகும்.” இந்த விஷயமே இரண்டாவது  ஜெனீவா மாநாட்டின் முதன்மையானதாக இருக்கும் என்பதை பேட்டியில் இறுதியாக சுட்டிக்காட்டினார்.
 
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் இவ்வனைத்து கூற்றுகளும் பின் வருவனவற்றை சட்டிக்காட்டுகிறது.
 
1. ரஷ்யாவும் மற்ற மேற்கு நாடுகளும் மத்திய கிழக்கில் உலகளாவிய அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான தருணம் வந்து விட்டதை உணர்ந்துள்ளனர். மேலும் சிரியாவில் கிலாஃபா  மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளையும் அவர்கள் மறைக்கவில்லை. மேற்குலகும் அதன் தோழமை நாடுகளும் தங்களால் இயன்ற அளவு முஸ்லிம்  நாடுகளில் இஸ்லாத்தின் அடிப்படியிலான நீதி மீண்டும் நிலைநாட்டப்படும் நாளை தள்ளிப்போட முயற்சி செய்கிறார்கள்.அந்நாளானது முஸ்லிம்களுக்கு தங்கள் மீது அடக்குமுறை செலுத்திவரும் பொய்யான  ஆட்சியாளர்களின் சகாப்தம், அநீதி மற்றும் அடக்குமுறைகளில் இருந்து முடிவு பெறும் நாளாக அமையும்.கிலாஃபத்தை மீண்டும் நிறுவி முஸ்லிம் உம்மத்தை ஒருங்கிணைத்து, முஸ்லிம்கள் தாங்கள் இழந்த பெருமையை மீண்டும் ஏற்படுத்தும் ஓர் அமீரை பெறுவார்கள் என்பதை இஸ்லாத்தின் எதிரிகளும் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து இரண்டாம் ஜெனீவா மாநாடு நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை அமைத்து, கிலாஃபா மீண்டும் வருவதை தடுக்க விரும்புகிறார்கள். மதச்சார்பற்ற குழுக்களை தங்கள் பால் வென்றெடுத்து போராட்டக்காரர்களை அவர்களிலிருந்து தனித்து வெளிப்படுத்தவும், கொலைகார பஷாருல் அசாதிற்கு மாற்றான ஒன்றை  கண்டெடுத்து சிரியாவில் மதச்சார்பற்ற அரசை தக்கவைத்துக்கொள்ளவும் முயல்கிறார்கள்.
2.  கிலாஃபா  மீண்டும் உருவாகுவதினால் ஏற்படும் புவியரசியல் மாற்றங்கள் குறித்து ரஷ்யா மிகவும் அச்சம் கொண்டுள்ளதை லாவ்ரொவின் வாக்குமூலம் சுட்டிக்காட்டுகிறது; ஏனெனில் அது எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக தொடர்புக்கு இடையூறாக இருக்கும்.அதைவிட தன் சித்தாந்தம் வரவிருக்கின்ற இஸ்லாமிய அரசிற்குமுன் பலவீனமாக உள்ளதாக ரஷ்யா கருதுகிறது, ஆகவே அது தன் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்தை மீடியாக்கள் மூலமாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாகவும் செய்து வருகிறது. இஸ்லாத்தை முழுவதுமாக நிலைநாட்டுவதன் மூலம் கிலாஃபத்தானது தன் சித்தாந்தத்தை வெற்றிகரமாக பரவச்செய்து மக்களையும் அவர்களது கலாச்சாரங்களையும் கரைத்து அவர்களை ஒரே  முஸ்லிம் உம்மத்தாக  மாற்றியமைப்பதை வரலாறு நமக்கு காட்டியுள்ளது. ரஷ்யாவின் உண்மை நிலையை எடுத்துக்கொள்வோமேயானால், தற்போது அங்கு 2 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள்  வசிக்கின்றனர். மேலும் முந்தைய சோவியத்தின் நாடுகளிடையேயும் இஸ்லாம் வேகமாக பரவி வருவதைக் கண்டு அரசு அதிகாரிகள் மிகவும் அச்சம் கொண்டுள்ளனர்.
 
3. ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய குறிக்கோளை மறைத்து வைக்கவில்லை. மேலும் சிரிய அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ரஷிய வெளியுறவு அமைச்சகம் தடுக்க விருப்பம் கொண்டுள்ளதாக அவர் கூறவில்லை. மாறாக  இரண்டாம்  ஜெனீவா மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக, மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பஷாருல்  அசாத் அரசுடன் இனைந்து இஸ்லாத்தினை நிலைநாட்ட போராடுபவர்களை எதிர்கொள்வதே தங்களின் குறிக்கோளாகும்  என்று  வெளிப்படையாக கூறினார். கொலைகாரன் பஷாருல் அசாத்  தொடர்ந்து அப்பாவி முதியோர்களையும், குழந்தைகளையும் கொல்வதற்கு  லாவ்ரொவ் ஆதரவு அளித்து வருகிறார்.மேலும்  சிரியாவின்  விஷயம்  ரஷ்யாவிற்கு கவலை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று  வெளிப்படையாக கூறினார்.
 
4. சிரியாவில் ஆயுத தாக்குதலை முதன் முதலில் பஷாருல்  அசாத்  ஆரம்பித்து குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களை கொன்றொழித்துக் கொண்டிருப்பதை ரஷிய வெளியுறவுத்துறை நன்கு அறிந்துள்ளது.தொடர்ச்சியான இந்த கொலைகள்தான், பஷாருல் அசாத்   அரசிற்கு எதிராக மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் தாங்கி போராட வைத்ததோடு  பிறநாடுகளை சார்ந்த முஜாஹிதீன்களும்  இதற்காக  சிரியா  சென்று அவர்களுடன் இணைந்து போராடி வருவதையும் லாவ்ரொவ் நன்கு அறிந்திருந்தார். மேலும் பஷாருல் அசாதின்  இத்தனை அட்டூழியங்களினாலும் மற்றும் அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் உயிர்களை காப்பாற்றுகிறோம் என்ற நயவஞ்சகத்தன்மை கொண்ட பேச்சுக்கள் மூலம் மேலும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாலும், சிரிய மக்கள் இது போன்ற மதச்சார்பற்ற அரசை அகற்றி கிலாஃபத்தை ஏற்படுத்த விரும்புவதை லாவ்ரொவ் புரிந்துள்ளார். அப்படி இருந்தும் லாவ்ரொவ் கிலாஃபத்தை ஏற்படுத்தி சிரியாவை பாதுகாக்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுகிறான். மாறாக பஷார் தான் சிரியாவில் மிக முக்கிய பயங்கரவாதியாக உள்ளான். அவன் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களையும் ரஷிய ஆயுதங்கள் மூலம்  கொன்று குவித்து வருகிறான். இவையனைத்தும் குஃப்ஃபார் நாடுகள் எப்படி தங்களது விருப்பங்கள் மீது கவலை கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. சிரிய மக்களின் நலனுக்காக பாடுபடுகிறோம் என்ற நயவஞ்சகத்தன்மை கொண்ட பேச்சு,அவர்கள் கிலாஃபத் மீண்டும் வராமல் தடுக்க ஒன்று சேர்ந்துள்ளதை காட்டுகிறது. சிரியா ஒரு நூற்றாண்டு காலமாகத்தான் மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதையும், இஸ்லாம் கடைப்பிடிக்கப்பட்டதற்கான ஒரு நெடிய வரலாறு இருப்பதையும் லாவ்ரொவ் தெரிந்து கொள்ள வேண்டும். ஷாம் தேசத்து முஸ்லிம்கள் தான் இந்த மண்ணை மகிமைப்படுத்தியுள்ளனர் மாறாக சாபத்திற்குரிய பஷாருல் அசாதின் குடும்பத்தினர் அல்ல, மேலும் வெகுவிரைவில் இறைவனின் நாட்டப்படி எதிரிகளின் அனைத்து சூழ்ச்சிகளையும் தாண்டி ஷாம் தேசமானது இரண்டாம் முறையாக தூய வடிவிலான கிலாஃபத்தின் தொட்டிலாக மாறும்.
அல்லாஹ்(சுப) கூறுகிறான்:-
 
يُرِيدُونَ أَن يُطْفِؤُواْ نُورَ اللّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللّهُ إِلاَّ أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
 
“அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!” (அத்தவ்பா 9:32)
 
இன்று ரஷியா மற்ற மேற்குலக நாடுகளுடன் சேர்ந்து அல்லாஹ்வின் சத்தியத்தை தடுக்க நாடுவதை நாம் கண் கூடாக காண்கிறோம்.தங்களுடைய விடிவுகாலம் என்பது, பஷாரை தூக்கி ஏறிவதன் மூலம் மட்டுமில்லை என்பதையும்  இஸ்லாத்தை  நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே என்பதையும் உணர்ந்தே  சிரிய முஸ்லிம்கள் தங்களின் பார்வைகளை மார்க்கத்தின் பால் நோக்கி இருக்கின்றார்கள்.  “இஸ்லாத்தின் மூலம் மட்டுமே உங்களது கவுரவம் மற்றும் சந்தோஷம்உறுதிப்படும் “ என்ற  உமர்(ரலி)அவர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தவாறு முஸ்லிம்கள் இந்த முதலாளித்துவ அமைப்பை பிடுங்கியெறிந்து இஸ்லாத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். ஷாம் தேசத்து மக்கள், மேற்குலகின்  கீழ்த்தரமான வாழ்வுமுறையும் கலாச்சாரத்தையும்  இறைத்தொடர்பற்ற மதச்சார்பற்ற அமைப்பையும் மேற்குலகு  தங்களின் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் தான் லாவ்ரொவும், கெர்ரியும் ஷாம் தேசத்து மக்களின் உண்மையான முன்னேற்றத்திலிருந்து அவர்களை திசைதிருப்ப முடியவில்லை.
 
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ “
 
 உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அந்நூர் 24:55)
 
நபி (ஸல்)அவர்கள் மீண்டும் கிலாஃபா வரும் என்று நற்செய்தி கூறியுள்ளார்கள்:-
 
تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللَّهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ نُبُوَّةٍ» ثُمَّ سَكَتَ
 
     “அல்லாஹ் நாடியவரையிலும் உங்களிடையே நபித்துவம் இருக்கும், அதன்பின் அவன் நாடும்போது அதை நீக்கிவிடுவான்..பிறகு நபித்துவத்தின் வழியிலான   கிலாஃபா அரசு அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும். அதன் பிறகு அல்லாஹ் நாடும்போது அதை உயர்த்திவிடுவான் அதன்பின் வம்சாவழி ஆட்சி அல்லாஹ் நாடியவரை இருக்கும். அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான்.அதன்பின் அடக்குமுறை ஆட்சி அல்லாஹ் நாடியவரையிலும் இருக்கும்.அதன்பின் அவன் நாடும்போது  அதை நீக்கிவிடுவான். அதன்பிறகு நபித்துவத்தின் வழியிலான  கிலாஃபா தோன்றும் என்றுகூறி அமைதிகாத்தார்கள்”                                                                   (முஸ்னத் அஹ்மத்)
 
வரவிருக்கின்ற கிலாபா ஆட்சி என்பது  மக்களை நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தின் அடிப்படையில் ஆட்சி புரியும். மேலும் இஸ்லாத்தை  அண்டை நாடுகளில் பரவச்செய்யும். சுவனம் மற்றும் பூமியில் உள்ள ஜீவராசிகள் இதனால் மகிழ்ச்சியடையும், சுவனம் அதிகமான தண்ணீரை கொட்டும், மற்றும் பூமி அதனுடைய பலன்கள் அனைத்தையும் காணச்செய்யும்.
யா அல்லாஹ்! உன்னிடமே வேண்டுகிறோம்!
 
கொலைகாரன் பஷாரும் அவனுக்கு ஷாமின் முஸ்லிம்களை கொல்ல உதவுபவர்களும் உன்னுடைய தண்டனைக்கு தகுதியானவர்களே… அவர்களை தண்டிப்பாயாக!  அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஏற்கெனவே உள்ள இவ்வுலகின் அழிவுகளை இறக்குவாயாக. உன்னிடமே கேட்கிறோம்! அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கு உதவுபவனே! உண்மையானவனே! ஞானம் மிக்கவனே! ஷாமில் நிலை பெற்றுவரும் புனித புரட்சிக்கு எதிராக மேற்குலகு செய்யும் சதிகளை அழித்து அருள் புரிவாயாக! எல்லாவற்றையும் கேட்கக்கூடியவனே! அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவனே! இந்த கொடுங்கோல் ஆட்சியை விரைவில் கவிழச்செய்து உம்மத்தின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டு வரும் இரண்டாவது தூய கிலாபத்தை ஏற்படுத்த அருள் புரியுமாறு உன்னிடமே உதவி  கேட்கிறோம்! ஆமீன்.

உதிரம் சிந்தும் மக்களுக்காக நிதி வசூலிப்பது மட்டும் போதாது !

சவுதி அரேபியாவின் முஃப்தியான ஷேக் அப்துல் அஜீஸ் ஆலு ஷேக் அவர்கள்,சவுதியின் குடிமக்கள், அதனுள் வசிப்பவர்கள், குறிப்பாக பெரும் வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் செல்வந்தர்களிடம் அதி விரைவில் சிரிய சகோதரர்களுக்கு உதவிட நன்கொடையை “சவுதி அரேபியாவின் தேசிய பிரச்சாரக் குழுவி ற்கு(National Campaign of Saudi Arabia)” அளிக்க வேண்டினார். மேலும் சிரிய மக்களுக்கு உதவி செய்வதற்காகவும்  நிதியுதவி பெற்றுக்கொள்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இக்குழு சவுதி அரேபியாவின் “ஒரே அதிகாரப்பூர்வ குழுவாக” இருப்பதால் இதில் எளிதாகவும் தங்கள் விருப்பப்படியும் நன்கொடைகளை செலுத்தும்படி  கேட்டுக்கொண்டார்.சிரியாவிலுள்ள நம் சகோதரர்களின் வேதனைகளிலிருந்து விடுவிக்குமாறும்  கொடுங்கோலர்களின் அடக்குமுறையிலிருந்து பாதுகாக்குமாறும் ஆலு ஷேக் அவர்கள் அல்லாஹ் سبحانه وتعال விடம்  வேண்டினார். மேலும் அவர், சிரிய மக்களுக்கு உதவுவதற்கான இந்த தேசிய பிரச்சாரக்குழுவின் பங்கு குறித்தும், குறிப்பாக சிரிய மக்களின் வேதனையை நீக்கவும் அவர்களின் பிரச்சினையை தீர்க்கவும், உள்துறை அமைச்சர் இளவரசர் முஹம்மது பின் நாயிஃப்  மேற்கொண்டுள்ள நிதிவசூல்  குறித்தும் பாராட்டுக்களை தெரிவித்ததோடு,இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறும் வேண்டிக் கொண்டார்
 
இச்செய்தியில் பின்வரும் விளக்கத்தை காணலாம்
1. கொன்று குவிக்கப்பட்ட, புனித்தன்மை மீறப்பட்ட, வெளியேற்றப்பட்ட, நாடு அழிக்கப்பட்டு  மிகவும் மோசமான குற்றவியல் தாக்குதலுக்கு உள்ளாகி  பசியை போக்கவும் தங்கள் மானத்தை மறைக்கவும் பணமின்றி – வேறு வழியின்றி தவிக்கும் சிரிய மக்களுக்கு உதவுவது ஒவ்வொரு இஸ்லாமிய உம்மத்தின் மீது கட்டாயமாக இருக்கிறது.
2. ஷாம் தேச மக்களுக்கு பணம் மட்டுமே தேவை என்று  யார் கூறியது? வணக்கத்துக்குரியவன்  அல்லாஹ் ஒருவனே என்றும்  முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் அவனின் திருத்தூதர் என்றும்  சாட்சி கூறி  அல்லாஹ் سبحانه وتعال ஒருவனையே  வணங்கும்  மக்களை, ஈரானிய – ரஷ்ய ஆயுத உதவியுடன்  அமெரிக்காவின் துணைகொண்டு வேரறுத்துக் கொண்டிருக்கும் பஷாருல் அசாதிற்கெதிராக  ராணுவத்தை அனுப்பி  உதவி செய்வதே சிரிய மக்களுக்கான  மிகப்பெரிய அவசர தேவையாகும்.
3. அறிவாற்றல் பெற்றவர்களிலுள்ள உண்மையாளர்கள், முஸ்லிம்நாடுகளின்  ராணுவத்தினர், ஹிஜாஸ் மற்றும் முஸ்லிம்  நாடுகளிலுள்ள அதிகார செல்வாக்கு கொண்ட அனைவர்களுக்கும்  நாங்கள்  தெரிவித்து கொள்வது:-
முஸ்லிம் நாடுகளில் உள்ள அரசுகள் நூற்றுக்கணக்கான பில்லியன்  டாலர்களைவிட அதிக அளவில் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளிடம் ஆயுதம் வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றன. 2013-ம் ஆண்டு மட்டும் சவுதி அரேபியா ஆயுதம் வாங்க 60 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.இது உலகளவில்  ஆயுதத்திற்கு செலவிடும் பெரிய நாடுகளின் பட்டியலில் 4வது இடத்தை சவுதி அரேபியாவிற்கு தந்தது.19/02/2014 அன்று முஃப்தி அறிவித்த அதே நாளில் ஏற்பட்ட சலாம் ஒப்பந்தம் சவுதியின் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய   தனது பங்கின் விலையை அதிகரிப்பதாக அறிவித்ததன் மூலம் பிரித்தானிய நிறுவனமான BAE ன் படி மதிப்பை பெற்றுக் கொண்டது. இது வாளியில் நமக்கு தெரிந்த ஒரு சொட்டு நீர் ஆகும்….ஆகவே எதற்காக இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும்? கிடங்கில்  இவ்வளவு ஆயுதம் இருப்பதற்கான காரணம் என்ன? இந்த ஆயுதங்கள் உம்மத்தினை பாதுகாக்கவும், திருத்தலங்கள் மற்றும்  அவர்களின் நிலங்களை பாதுகாப்பதற்கானது அல்லவா?
4. அல்லாஹ் سبحانه وتعال அவனிடம் உதவி கோரும் முஸ்லிம் ராணுவத்திற்கு உதவுவதாக வாக்களித்து இருக்கிறான். அல்லாஹ் سبحانه وتعال கூறுகிறான்:-
وَإِنِ اسْتَنْصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ
” எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும்”
                                                                                                        (அல்அன்ஃபால், 8:72)
ஆகவே, நபி  صلى الله عليه وسلم அவர்களை பின்பற்றுபவர்களிலிருந்து வந்த சிப்பாய்களே,  மேற்கின் கைக்கூலிகலான உங்கள்  ஆட்சியாளர்களால் உங்களுக்கு இடப்பட்ட சங்கிலிகளை உடைத்தெறிவீவீர்களாக! அச்சங்கிலியானது  அல்லாஹ் سبحانه وتعال உங்கள் மீது கட்டளையிடப்பட்ட காரியத்திலிருந்து உங்களை தடுத்துக்கொண்டிருக்கிறது.
நாங்கள் இஸ்லாமிய உம்மத்தின் உண்மையாளர்களை அழைக்கிறோம், குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்களை, ஹிஸ்புத்தஹ்ரீரூடன் இணைந்து கிலாஃபத்தை உருவாக்க உழைக்குமாறு அழைக்கிறோம்.. அந்த கிலாஃபா  இஸ்லாத்தை  தன்னகத்தே நடைமுறைப்படுத்தி இஸ்லாத்தை வெளியுறவு  கொள்கையாகக் கொண்டு உலகிற்கு வழிகாட்டும். அதன் மூலம் இஸ்லாத்தை ஒளிகாட்டும் செய்தியாகவும் கொண்டு செல்லும். கிலாஃபா என்பது உம்மத்தின்  வலிமையான கேடயமாகும். அது உம்மத்தின் மீதும், அதன் திருத்தலங்கள் மற்றும் புனிதமானவை மீதும் எந்தவொரு அத்துமீறலையும் அனுமதிக்காது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَجِيبُواْ لِلّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُم لِمَا يُحْيِيكُمْ
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்”
(அல் அன்ஃபால், 8:24)
Osman Bakhash
Director of the Central Media Office of Hizb ut Tahrir
source:- www.khilafah.com

Mar 3, 2014

கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 90 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை

முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா (இஸ்லாமிய அரசு) ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம்3) ம் தேதியில் முஸ்தபா கமால் அதா துர்க்கினால் துருக்கிய தலைநகரான இஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு ஹிஜ்ரி 1431 ரஜப் 28 உடன் 90 வருடங்கள் கடந்துவிட்டன. 1924 மார்ச் 3 ம் தேதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாஃபத் உலகை விட்டும் அழிக்கபட்டது.  இறுதியாக துருக்கியில் இஸ்லாமியசாம் ராஜியதின் கலீஃபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீஃபா அப்துல் மஜீத். இவர் கிலாஃபா அழிக்கபட்டு ஒரு மணி அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் .இந்த அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற துரோகி.முஸ்லிம் உம்மா அனாதையானது; மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது; முஸ்லிம் உம்மா துடி துடித்தது .அரசியல் அனாதையானது .ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்கவில்லை. மறுகணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறப்பட்டது. பயணம் மிகவும் நீண்டது. இன்றும் தொடர்கின்றது .
கிலாஃபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும்,முஸ்லிம் உலகிலே அவர்களின் கைப்பாவையான ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரிய அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டு மொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உலகம் பொருளாதார பலமற்றதாக, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிறுசிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மா இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும்,கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல்,பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசங்களாக மாறிவிட்டது.
 
 முஸ்லிம்களும், அவர்களின் நிலங்களும் குஃப்பார்களின் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு இலக்காகியது. யூதர்கள்,பிரான்ஸியர்கள், பிரித்தானியர்கள், இந்துக்கள், இத்தாலியர்கள்,அமெரிக்கர்கள், செர்பியர்கள், ரஸ்யர்கள், சீனர்கள் என அனைவர்களும் முஸ்லிம்களின் அவலத்திற்கும், கண்ணீருக்கும் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர். ஸ்திரமற்ற பொருளாதார நிலையினையும், உணவுக்கும், வாழ்விடத்திற்கும் அகதி முகாம்களில் தஞ்சம் புகும் அவலத்தையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டும்,படுகாயமடைந்தும் இருக்கின்றனர். இந்த அவலத்தினை விளங்கிக்கொள்ள உங்கள் மனக்கண் முன் பலஸ்தீனம்,ஈராக்,ஆப்கானிஸ்தான், செச்னியா, காஷ்மீர், கொசோவா,பொஸ்னியா,அரிட்ரியா போன்ற பூமிகளின் கொடூரமான நிலவரத்தி னைநிலைநிறுத்திப் பாருங்கள். இந்த அகோர நிலை அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகள் பின்பற்றும் மிகக்கொடூரமான உலக ஒழுங்கினால் மென்மேலும் மோசமடைந்துள்ளது. உம்மத்தின் வளங்கள் அனைத்தும், குறிப்பாக எண்ணெய் வளம் முழுவதும் இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் போர் இயந்திரத்தினை பலப்படுத்த பயன்பட்டு வருகிறது. முழு முஸ்லிம் உம்மத்தினையும் தமது இரும்புச்சப்பாத்திற்குள் அடக்குவதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தேசியவாதம் மிகவும் நுட்பமாக புகுத்தபட்டது. தேசியவாதத்தை பயன்படுத்தி மேற்கு பயங்கரவாதம் முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்தி முஸ்லிம் உம்மத்தின் முதுகில் ஏறி ருத்ரதாண்டவம் ஆடுகிறது. அழிக்கபட்ட கிலாஃபா உலகில் மீண்டும் தலைமை கொண்டு எழும் என்பதை முஸ்லிம் உம்மா கட்டியம் கூறுகிறது.

‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ ‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” ஆல இம்றான்: 193

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய அரசு எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3) முஸ்தபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாஃபா வீழ்த்தப்பட்ட இந்த காலகட்டத்தில் கிலாஃபா அரசு பலகீனமடைந்திருந்ததுடன் சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப் போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிஃர்கள் இனிமேலும் இவர்களுடன் போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத்தொடங்கியிருந்தபோது முஸ்லிம்களின் அடிப்படையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் கிலாஃபத்தில் காணப்பட்ட பலகீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
 
அவர்கள் தமது சிந்தனைகளையும் தமது கலாச்சாரங்ளையும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரப்டுத்தி இஸ்லாமிய அரசின் அடிப்படை பலமான இஸ்லாமிய சிந்தனையினை ஆட்டங்காண வைப்பதன் மூலம் அதனது அத்திவாரத்தினையே தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள்.
இதனை சாத்தியப்படுத்துவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பவதன் ஊடாகவும், தமது பாடசாலைகள்,வைத்தியசாலைகள் அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதன் ஊடாகவும் தமது கருத்துக்களை பிரச்சாரப்படுத்தியதுடன் சில இரகசிய ஸ்தாபனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தின் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள்ளும் ஊடுருவினர். இவற்றுள் அவர்கள் தந்திரமாக கல்வியியல் விடயங்களிலேயே தமது கவனத்தை அதிகமாகசெலுத்தினர். இத்தகைய முயற்சிகளினூடாக அவர்கள் பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் புத்திஜீவிகள் போன்றோரை கவர்ந்தனர்.

வளர்ந்து வந்த இந்த சிந்தனைப்போக்கு மேற்குலகின் கலாச்சாரத்தையும், நீதிபரிபாலனத்தையும் தமக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கு முஸ்லிம்களை தூண்டியது. இவர்கள் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கிளப்பியதுடன் அது தற்கால நவீன உலகிற்கு எந்தளவில் பொருத்தமுடையது என்பன போன்ற வினாக்களைத் தொடுத்தனர். இவர்கள் தாம் இஸ்லாத்தை பின்பற்றவதாக காட்டிக்கொண்டு மேற்குலகின் கவர்ச்சியை நோக்கியே இழுத்துச் செல்லப்பட்டனர். இதன் விளைவாக கிலாஃபத்தின் கட்டமைப்பும் அதன் அஸ்திவாரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. இதனால் உலகில் இஸ்லாத்தின் தஃவா தடைபட்டது. காபிர்களுக்கு தமது சிந்தனைகளை இஸ்லாமிய தேசத்தினுள் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.

கிலாஃபத்தின் இந்த வீழ்ச்சியில் குஃப்ர் அரசுகள் குறிப்பாக பிரித்தானியா,பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராஜதந்திர மற்றும் ஏனைய உயர்மட்டங்கள் அதிகளவிலான பங்களிப்பினை செய்தன. கிலாஃபத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பலகீனமான நிலையை மிகவும் கச்சிதமாக அவதானித்த குஃப்ர் அரசுகள் கிலாஃபத்தின் எல்லைகளை பகுதி பகுதியாக ஆக்கிரமித்தனர்.

அனைத்து மேற்குலக நாடுகளும் பேராசையில் மிதக்க ஆரம்பதித்தனர்.பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் சேர்ந்து தமது பங்கினையும் பெற்றுக்கொள்வதில் ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் முனைப்புடன் செயற்பட்டன. தமக்குள் காணப்பட்ட முரண்பாடுகளை கடந்து இஸ்லாத்தினையும், கிலாஃபத் ஆட்சினையும் அழிப்பதிலும் அவர்கள்ஒன்று திரண்டார்கள். அவர்கள் ஆட்சியிலும், அரசியல், சமூக விவகாரங்களிலும் இருந்து இஸ்லாத்தினை நீக்கி அதற்கு பகரமாக மேற்குலகின் நீதிபரிபாலனம், முதலாளித்துவம், ஜனநாயகம் போன்ற சிந்தனைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை செலுத்த யோசித்தனர்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் பெரியதொரு விடயமாக உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் வீழ்ச்சியும் நடந்தேறியது. இதனால் இந்த அழிவுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. முஸ்தபா கமால் அதாதுர்க் அதிகாரப் பூர்வமாக கிலாஃபத்தினை வீழ்த்தியபோது உம்மத்திலிருந்து வெளிவந்த எதிர்ப்பலைகளின் பலகீனம் இதனை மிகத்தெளிவாக காட்டுகிறது. அவன் இங்கிலாந்தின் அடிவருடி என்பதை சமூகம் அறிந்திருந்தபோதிலும் அவனது இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தி,மீண்டும் இஸ்லாத்தின் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. இதை விடக்கேவலமான விடயம் என்னவெனில் பிரித்தானியாவின் கிலாஃபத்திற்கெதிரான இந்த சதி முயற்சிக்கு அன்றைய ஹிஜாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஷரிஃப் ஹசைன்-( நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச்சேர்ந்தவன் என்று பொய்யாகக் கூறப்படுபவன்) என்பவன் உறுதுணையாக இருந்தான்
இவ்வாறு கிலாஃபத் வீழ்த்தப்பட்டு இஸ்லாம், முஸ்லிம் உம்மத்தின் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் அதனுள் திணிக்கப்பட்டு, இஸ்லாத்தின் பூமி பல பலகீனமான தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்பார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களையே இந்த தேசங்களின் தலைவர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தினை அழிக்கின்ற முயற்சியில் வெற்றிகண்டது. அவர்கள் உண்மையில் காஃபிர்களையே பிரதிநிதித்துவப்படுத்தினர். முஸ்லிம்களையல்ல. அவர்கள் கிலாஃபத்தினை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று செயற்பட்ட முஸ்லிம்களை கடுமையாக தண்டித்தனர்.

இவ்வாறாக காஃபிர்கள் முஸ்லிம்களை கட்டுப்படுத்தியதுடன் முஸ்லிம்கள் மேற்கத்திய சிந்தனைகளின் ஆளுகைக்குள் உட்பட்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களும் அவர்களின் நிலங்களும் மேற்குலகின் சிந்தனைகளையும் பொருட்களையும் உள்வாங்கிக் கொள்ளும் சிறந்த சந்தைகளாக மாற்றமடைந்தன. இந்த அவல நிலையை தொடர்ந்து பேணுவதற்காகவும் முஸ்லிம்கள் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் தடைக்கல்லாகவும் இஸ்ரேலை அரபுலகின் மையத்தில் இவர்கள் ஏற்படுத்தினார்கள்.

முஸ்லிம் உம்மத் பிறரின் ஆளுகைக்குட்பட்டிருப்பதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. எனவே இஸ்லாம் அனைத்து மேலாதிக்கங்களுக்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொள்ளவதை வலியுறுத்தவதால் இதனை நாம் மீண்டும் கிலாஃபத்தை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

விசுவாசிகளுக்கு மேலான எந்தவொரு (அதிகாரத்தையும்) வழியையும் அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான் . (4:141)

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமதுபாதுகாவலர்களாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். (3:28)


விசுவாசிகளே! ஏன்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் உங்களுடைய உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டாம். (60:1)

விசுவாசிகளே! உங்களையன்றி இறைநிராகரிப்போரை உங்களுடைய அந்தரங்க செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்கிக்கொள்ளவேண்டாம். (ஏனெனில்) அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. மேலும்,நீங்கள் துன்புறவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்ச்சொற்களிலிருந்தே (அவர்களுடைய கடுமையான வெறுப்பு திடமாக வெளிப்பட்டு விட்டது.) எனினும் அவர்களின் மனதில் மறைந்திருப்பது இதைவிட மிகவும் மோசமானதாகும். (3:118)

Feb 23, 2014

ஷேக் தகியுதீன் நபஹானி(ரஹ்) அவர்கள் ஃபலஸ்தீனில் இருந்தபோது நடைபெற்ற முக்கிய சம்பவம்

 
காலனி ஆதிக்க பிரிட்டிஷ் தளபதியாக இருந்த க்ளப் பாஷா என்பவர் தன்னுடைய தூதர் ஒருவரை  ஷேக் தகியுதீன் நபஹானி (ரஹ்) அவர்களை வென்றெடுக்க அனுப்பிவைத்தான்.அப்போது நடைபெற்ற உரையாடலை அந்த தூதர் தன்னுடைய நண்பர் அபு காஜி(ஃபத்ஹி  சலீம்)அவர்களிடம் கூறியதை இங்கு தருகிறோம்.
 ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்களின் ஆபத்தை உணர்ந்த ஆங்கில தளபதி க்ளப் பாஷா என்னை ஒரு செய்தியுடன் அவர்களிடம் அனுப்பி வைத்தான்.அந்த செய்தியில், ஷேக் தகியுதின்(ரஹ்) அவர்களை புகழ்ந்தும், தங்களுடன் ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.மேலும் அவ்வாறு ஒத்துழைத்தால்  பிரிட்டிஷ் அரசு  மூலம் அவர் பெறக்கூடிய உலக ஆதாயங்களை குறித்தும் கூறப்பட்டிருந்தது.
அந்த தூதர் மேலும் கூறியதாவது:-ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள், அனைத்தும் உள்ளடங்குமா என்று என்னிடம் கேட்டார் …. ஆம்! என்று நான் பதிலளித்தேன்.
 
அப்போது ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள்  இவ்வாறு  கூறினார்கள்:-
 
“ஆங்கிலேயர்கள்தான் நாங்கள் இந்த நிலைக்கு கீழிறங்க  காரணமானவர்கள்; அவர்கள்தான் ஒன்றாக இருந்த எங்கள் நிலப்பகுதியை  கூறுபோட்டு  தங்களின் ஏஜெண்டுகளை ஆட்சியாளர்களாக அமர்த்தியவர்கள்.”
 
அந்த தூதர் மேலும் கூறியதாவது:- ஷேக் அவர்கள் நீண்ட நேரம் என்னிடம் உரையாடினார்கள். அவை, என் வாழ்நாளில் இதுவரை கேட்காதவை. ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள் கூறிய விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
ஷேக் தகியுதின் நபஹானி (ரஹ்) அவர்கள் தன்னுடைய பேச்சை  இவ்வாறு முடித்தார்கள்..
 
“சகோதரரே! உம்மை  அனுப்பியவரிடம் இவ்வாறு கூறுங்கள்:- எனக்கு (வாழ்வதற்கு) ஆரஞ்சு பழத்தின் விதைகளும் ரொட்டித்துண்டின் துகள்களும் போதுமானது; இவை ஆங்கிலேயர்கள் கொடுக்கும் அனைத்து பொருட்களைவிட எனக்கு மேலானது.”
 
அந்த தூதர் மேலும் கூறினார்:-  இந்த உரை என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஷேக் அவர்களின் மகத்துவத்தையும், அறிவையும் உம்மத்தின் மீது கொண்டுள்ள விசுவாசத்தையும் நேரில் கண்டு வியந்தேன்.
நான் க்ளப் பாஷாவிடம் திரும்பிசென்று  ஷேக் கூறியதை அப்படியே தெரிவித்தேன்.
 
ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்)அவர்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட க்ளப் பாஷா, அவர்களை தீர்த்துக்  கட்டுவதற்காக ஒரு விருந்தை ஏற்பாடு செய்தான். அதற்கு அழைப்புவிடுக்க  என்னை ஏவினான்.. நான் இந்த சதித்திட்டத்தை ஷேக் அவர்களிடம் கூறினேன். அவர் அந்த விருந்தை புறக்கணித்தார். அதை நான் க்ளப் பாஷாவிடம் கூறியபோது, ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள்  அல்குத்ஸில் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டிலேயே வீட்டுக் காவலில் வைக்குமாறு  உத்தரவிட்டான். நான் ஷேக் அவர்களிடம்  கொண்ட நெருக்கத்தினால், ரகசியமாக தகவல்  கூறி வெளியேறுமாறு  பரிந்துரைத்தேன். மேலும் ஷேக் தகியுதின் நபஹானி (ரஹ்) அவர்களை சிரிய  எல்லையில் எனது காரில் கொண்டு  விட்டு வந்தேன்.
 
அபு காஜியிடம்  அந்த தூதர் தனது பெயரை மற்றவர்களிடம் கூற வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.எனக்கு அவர் கூறியதில் எந்த சந்தேகமும் கிடையாது என்று அபு காஜி என்னிடம் கூறினார்.
 
அல்லாஹ்வின் கருணை ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்கள் மீது உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீது எந்த அளவிற்கு  பயபக்தியுடன் வாழ்ந்துள்ளார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாகும்.
 
    By Abdul Khaaliq ‘Abdoun