நூல் பெயர் : கலிஃபாக்கள் வரலாறு
ஆசிரியர் : மஹ்முத் அஹ்மத் கழன்ஃபர்
அஸ்ஸலாமு
அலைக்கும் (வரஹ்)!
பதிப்புரை: எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்... எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!! அவனுடைய சாந்தியும் சமாதானமும் அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களை பின்தொடர்ந்து நல்அமல் செய்யும் அனைவரின் மீதும் உண்டாவதாக!! இஸ்லாம் எனும் இறைமார்க்கம் உலக எங்கும் பரவி கிடக்கிறது. முஸ்லிம்கள் மட்டுமே வாழும் நாடுகளும், இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தி இஸ்லாமிய எமது கொள்கை என ஏற்று பிரகடனம் செய்த நாடுகளும் உண்டு. பாமரர்-படித்தவர்-விஞ்ஞானி என பலரும் இஸ்லாத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர். இப்படி வளர்ச்சி அடைந்துவரும் இஸ்லாத்தின் அடித்தளம் நபித்தோழர்கள் என்றால் அது மிகையாகாது. நபி (ஸல்)அவர்கள் தூய இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொன்ன போது, நபி (ஸல்)அவர்களுக்கு துணை நின்ற ஒரே காரணத்திற்காக சொந்த மண்ணிலிருத்து துரத்தப்பட்டரர்கல். கொலை செய்வதற்குத் துணித்து, நபி (ஸல்)அவர்கள் மீது வன்மம் கொண்டு அலைந்த கொடியவர்களுக்கு மந்
தியில் எந்த தயக்கமுமின்றி துணிவோடு நபி (ஸல்)அவர்களை ஆதரித்து தோள் கொடுத்தார்கள் அந்த தியாகச் சீலர்கள். இஸ்லாத்தை எல்லோருக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களின் சொத்து சுகங்களை தானம் செய்தார்கள். அதுமட்டுமல்ல உயிரையும் இழந்தார்கள். எனவே தான்,
“எனது தோழர்களை ஏசாதீர்கள்! “எனது தோழர்களை ஏசாதீர்கள்! எனது உயிரை தன் கைவசம் வைத்திருப்பான் மீது ஆணையாக! உங்களின் ஒருவர் உஹத் மலையைப் போன்ற அளவிற்கு தங்கமாக செலவு செய்தலும், எனது தோழர்களான அவர்களில் ஒருவர் இருகைக் கொள்ளளவு செய்த தர்மத்தையோ, அதில் பகுதியையோ பெற்றுக் கொள்ள முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி (3673)
இந்த நபிமொழி, நபித்தோழர்களின் சிறப்பை உச்சிக்கு கொண்டு செல்கிறது.இப்படி இஸ்லாத்திற்காக பாடுபட்டவர்களுக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்களின் உற்றத் தோழர்களாக, நபி (ஸல்) அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று உலக ஆட்சியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்த அபூபக்ர் சித்தீக் (ரழி), உமர் (ரழி), உதுமான் (ரழி மற்றும் அலி (ரழி) ஆகிய நான்கு கலிஃபாக்களின் வரலாற்றை இன்ஷா அல்லாஹ் வரும் பதிவுகளில் பாக்கலாம்.
No comments:
Post a Comment