Jan 31, 2013

‎'புரோபிட் அண்ட் பெனிபிட் பேசில் ' நடக்கும் பக்கா 'கபிடலிச பொலிடிக்ஸ் ' நீதியும் கலீபா உமர் (ரலி ) காட்டிய ரியல் நீதியும் .

‎'புரோபிட் அண்ட் பெனிபிட் பேசில் ' நடக்கும் பக்கா 'கபிடலிச பொலிடிக்ஸ் ' நீதியும் கலீபா உமர் (ரலி ) காட்டிய ரியல் நீதியும் .

விஸ்வரூபம் திரைப்பட விடயத்தில் நடிகர் கமலுக்கோ கோடிக்கணக்கில் இழப்பாம் .
தமிழ் நாட்டு அரசுக்கு அத் திரைப்படத்தை வெளியிடுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டும் தானாம் ! மொத்தத்தில் நடப்பு நிலவரம் எல்லாம் 'புரோபிட் அண்ட் பெனிபிட் 
பேசில் ' நடக்கும் பக்கா 'கபிடலிச பொலிடிக்ஸ் '

இலட்சக் கணக்கான மனித உள்ளங்களின் நியாயங்களை விட இலாபாங்கள் தான் முன்னுரிமை பெரும் . இந்த கிரிமினல் பொலிடிக்ஸ் தான் இன்று உலகெங்கும் புகுந்து விளையாடுகின்றது . அநீதிகளில் நீதி காண்கிறது . ஆள்வோரைக் காக்கவே இங்கு சட்டமும் ஒழுங்கும் . கீழே வரும் விடயத்தையும் கொஞ்சம் படியுங்கள்
ஒரு ஆட்சியாளனின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்

அது கலீபா உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக்காலம் .ஒரு வழக்கில் அவரே பிரதிவாதி . நீதிபதியாக ஸைத் இப்னு தாபித் (ரலி ) இருக்கிறார்கள் .வழக்கின் ஒரு கட்டத்திலே ஸைத் இப்னு தாபித் (ரலி ) வாதியை பார்த்து இவர் கலீபா என்பதை மறக்க வேண்டாம் என்ற வார்த்தையை பிரயோகித்தார்கள் .

உமர் (ரலி ) கண்கள் சிவந்தவராக எழுந்து " தங்கள் கண்களில் நானும்
ஒரு சாதாரண மனிதனும் சமமாகாத வரை தங்களிடமிருந்து இந்த வழக்கில் ஒரு சரியான நீதியை எதிர் பார்க்க முடியாது " என்று கூறி விட்டு சென்று விட்டார்கள் . நீதியின் பார்வை பற்றியும் , ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இந்த சம்பவம் சிறந்த எடுத்துக் காட்டு . இதுதான் இஸ்லாத்தின் நீதி . இன்னும் நிறைய ஒப்பிட உள்ளது .நீங்களும் தேடுங்கள் நானும் இன்ஷா அல்லாஹ் தருகிறேன் .

Jan 29, 2013

எமது போராட்டம் எது? ( நாம் சந்தித்த வரலாறும் அனுபவிக்கும் வரலாறும் )

எமது போராட்டம் எது? ( நாம் சந்தித்த வரலாறும் அனுபவிக்கும் வரலாறும் )

ஹிஜ்ரி 656 ஆம் ஆண்டு சபர் மாதம் பிறை 4 அன்று மங்கோலியர்கள் (தாத்தாரியர் ) பக்தாத்தில் இருந்த இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிராக படை எடுத்தனர் .ஒரு இலட்சத்துக்கும் அதிகமான 
முஸ்லீம்களை படுகொலை செய்தனர் பக்தாதை பிணக்காடாக மாற்றினர் . முஸ்லீம்களின் அறிவுப் பொக்கிசமான நூல் நிலையத்தை சின்னா பின்னமாக்கினர் . அந்த 'பைத்துல் ஹிக்மா ' விலுள்ள நூல்களை 'யூப்பிரடீஸ் ' நதியில் வீசியபோது அந்த நதியே சில மாதங்கள் கருப்பாக ஓடியதாக வரலாறு கண்ணீரோடு சொல்கிறது . இந்த வெறியாட்டத்தின் பின் கூட இஸ்லாத்தை துடைத்தெறிய முடியவில்லை .

முஜ்தஹித்களின் பிரச்சார தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது .தடுக்க முடியாது எனக்கருதிய தாத்தாரிய வாட்பலம் 'ஜைன் ஜலூத்தில் ' ஒரு ரமலானில் முஸ்லீம்களால் தவிடு பொடியாக்கப் பட்டது .

அதே நேரம் சிந்தனா தரத்தில் தாத்தாரியர் இஸ்லாத்தினால் கவரவும் பட்டார்கள் .காலம் மலர்ந்தது மீண்டும் கிலாபாவின் கீழ் இஸ்லாமிய உம்மத் அணிதிரண்டது .

ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (1924 மார்ச் 3) அதேபோல முதலாளித்துவமும் கிலாபா அரசு மீது தமது காலனித்துவ ஆதிக்க ஆட்சியை நிறுவியது . ஆனால் இம்முறை வன்முறை இராணுவத்தை மறைத்து சிந்தனை இராணுவத்தை முன் அனுப்பியது . இப்போது தேசிய சிறைகளில் இந்த முஸ்லீம் உம்மத்தை சிறைவைத்து , ஏறத்தாள ஒரு நூற்றாண்டை நெருங்கிய நிலையில் தம் இஷ்டம் போல் எதிரிகள் முஸ்லீம் உம்மத்தின் மீது அத்துமீறினார்கள் ,(கம்பியூநிசமும் தமது சிந்தனை, இராணுவத்தோடு இதில் பங்களிப்பு செய்தது )

இப்போதும் முஜ்தஹித்களின் தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது . இந்த எதிர் தாக்குதலை சந்திக்க வன்முறை இராணுவத்தை முதலாளித்துவ தாகூத்கள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் அனுப்பினார்கள் . அத்தோடு ஜனநாயகம் எனும் சிந்தனைக் கிருமி யுத்தத்தையும் மேட்கொண்டார்கள் .(அந்தக்கிருமியின் சிறப்பான பணி என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமின் முன்னும் தன்னை இஸ்லாமாக காட்டும் .
இந்த ஆபத்தான கிருமி யுத்தம் இந்த உம்மத்தின் அதிகமானோரை 'சமரசம் 'எனும் தொற்று நோயோடு
அலைய விட்டது .) இருந்தும் மறுமலர்ச்சிக்கான சரியான போராட்டமும் தொடர்கின்றது .

( இன்னும் தொடரும் ....)

பெரும்பான்மையின் 'அம்மாதான் ' ரியல் அம்மா !? சிறுபான்மையின் 'அம்மாவோ ' வெறும் சும்மா !? (திமோகிரசி பேசில் கருத்துச் சுதந்திரம் ஒரு குறும் பார்வை)


கருத்துச் சுதந்திரம் அதன் வீச்செல்லை என்ன ? இந்த வினாவிற்கு விடைதேடினால் சிலநேரம் பதிவுகளுக்கு பக்கங்கள் போதாமல் போகலாம் ! எப்போதும் தாமும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்புவதே இன்று ஆதிக்கத்தில் இருக்கும் மேற்கின் சிந்தனை வாதத்தின் பிழைப்பாக போய் விட்டது. மனிதன் சட்டம் இயற்றினால் நிகழும் தவிர்க்க முடியாத நோய் இதுதான் .
இவர்களது வரைவிலக்கணங்கள் யாவும் பொதுவாகவே 'கொள்கை' எனும் 'சிலபஸ்ஸில் '
ஏற்றி 'விதி' எனும் முடிவிற்கு வரும் வரை சமூகத்தின் முன் குறைப் பிரசவங்களாக அவைகளை ஏறத்தாள பரீட்சாத்தமாக வெளியிட்டு தம்மை காலத்தின் பிடியில் ('அவசரக் குடுக்கை ' நிலையில்) தாம் வகுத்தது தமக்கே வினையாக வரும்போது சீர்திருத்தம் எனும் பெயரில் அதன் அடிப்படையே மாறும் நிலையானாலும் புதிய கொள்கை வகுப்பதே இவர்களது அன்றாடப் பணியாகும் .
அப்படிப் பார்த்தால் இவர்களது கொள்கை வடிவம் அத்திவாரத்தில் இருந்து கூரை முகடுவரை " இருக்கும் ஆனால் இருக்காது " , "நடக்கும் ஆனால் நடக்காது " , அந்தவகையில் சமூகத்தில் அதைப் பின்பற்றுபவனின் நிலை !? " சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது "! என்பதேயாகும் .
(லிபர்ட்டி ) விடுதலை என்ற வார்த்தையின் கீழே வரையறுக்கப் பட்ட முதலாளித்துவத்தின் (கருத்துச் சுதந்திரம் உட்பட) எல்லா சுதந்திரமும் ஜனநாயகம் எனும் மாயா ஜாலத்தின் கீழ் பின்வருமாறு பொதுவாக குறிப்பிடப்படும் . " ஒருவன் தனது கைத்தடியை விரும்பியவாறு சுழட்டிச் செல்லலாம் ஆனால் அடுத்தவனின் மூக்கு நுனிவரைதான் " என்று அந்த எல்லையை கூறி நிற்கும் .
ஆனால் (ரைட் இஸ் மைட் )' பலமுள்ளவன் சரியானவன்' எனும் யாப்பில் இல்லாத இரகசிய விதி ,முன்னால் நிற்கும் மூக்கை அடிக்கடி இடம் மாற்றச் சொல்லும் !? தேவைப்பட்டால் தனது கைத்தடியை முன்னால் இருக்கும் மூக்கின் உள் விட்டு ஆட்டி ஜனநாயக விரோதி என்ற 'சுவரில்லா சித்திரத்தை வரைந்து ' புறந்தள்ளும் !? தனக்கு மட்டும் அம்மா அடுத்தவனின் அம்மா சும்மா !? என்பது தான் இன்றைய ஜனநாயக 'பொலிடிகல் டிப்லோமடிக்' !?
இந்த விதியை (நம்பாமல்) நம்பி இஸ்லாத்திற்கு எதிரான குப்பார்களின் சதிகளுக்கெதிராக அந்த( எல்லை தெரியாத ) பக்கச்சார்பு கருத்துச் சுதந்திரத்தை நம்பி போராடுவதில் எந்தப் பயனும் இருக்காது . இன்று எமக்கு சாதகம் போல் இருக்கும் ஆனால் நாளை எமது எதிரியின் சாதகத்தால் எமது உணர்வுகள் ஏறி மிதிக்கப் பட சட்ட மூலம் கொண்டு வரப்படலாம் . அதுவும் ஜனநாயக இயங்கு விதியில் எம்மை சமரசம் செய்யக் கேட்கும் .
நேற்று தலைப்பாகையை கேட்டது நாளை தலையை கூட கேட்கலாம் ! முண்டமாக வாழ்ந்தாலும் நானும் ஜனநாயக வாதி எனும் வார்த்தைகள் எமது சமூகத்தில் இருந்து ஒலிப்பது கேட்கின்றது . உங்களுக்கும் கேட்கிறதா !!??

எமது போராட்டம் எது ?


எமது போராட்டம் எது ?
"தன் இறந்த கால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறியாத சமூகத்திற்கு எதிர்காலமே கிடையாது " (வரலாற்றாய்வாளர் இப்னு கல்தூன் )
உங்கள் மூதாதையர்களோ (கடவுள்களாக வணங்கப்பட்ட ) சிலைகளை உடைத்த 'இப்ராஹீம்களாக 'இருந்தார்கள் .நீங்களோ (இப்ராஹிம் (அலை ) அவர்களின் தந்தையாராகிய ) சிலையை விற்று வாழ்க்கை நடத்திய 'ஆசர்களாக ' உள்ளீர்கள் ! நீங்கள் தானா முஸ்லீம்கள் ?
(கவிஞர் இக்பால் )
முஸ்லீம்களாகிய எமது போராட்டம் என்பது இன்று மிகத் தெளிவாக புரியப்பட வேண்டும் . எமது தவறுகள் , அறியாமைகள் , உள்வீட்டு சண்டைகள் இவை அனைத்தையும் தாண்டி குப்ரியத்தின் மிக மோசமான ஒரு ஒடுக்கு முறை வடிவம் முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும் நிலங்களில் இன்று முஸ்லீம்களுக்கு எதிராக புலப்படத் தொடங்கியுள்ளது .
இலங்கையின் முஸ்லீம் எதிர்ப்பாளர்களின் நகைப்புக்கிடமான நடவடிக்கையாக அண்மையில் மேற்கொண்டது 'ஹலால் ' எதிர்ப்பு போராட்டமாகும் . அதாவது தாம் சார்ந்த சமூகத்தை" 'ஹலால் ' என்ற சின்னம் பொறிக்கப் பட்ட உணவு வகைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் " என்ற கோரிக்கையை முன்வைத்தும் , உற்பத்தியாளர்களை" 'ஹலால் ' சான்றிதல் பெறவேண்டாம்" என்ற கோரிக்கையை முன்வைத்துமே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது , மேற்கொள்ளப் படுகின்றது .
ஆனால் இங்கு நடந்த நிகழ்வு என்னவென்றால் 'ஹலால் ' என்றால் என்ன? என்ற வினாவைச் சுற்றி பெரும்பான்மை சமூக மட்டங்கள் மெது மெதுவாக இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளது .
சந்தர்ப்பங்களை நாம் தேடிச் செல்லாத போதும் , எம்மைத்தேடி இப்போது சந்தர்ப்பங்கள் வரத் தொடங்கியுள்ளன ! என்றுதான் இன்றைய நிலையை சொல்ல முடியும் . முஸ்லீம் என்பவன் ஒரு இனம் என்ற பார்வையை விட்டும் சற்று மேலதிகமாக சென்று அவனுள் ஒரு கொள்கை இருக்கின்றது .என்ற உண்மை அந்நிய சமூகங்கள் மத்தியில் இனி வெளிச்சமாகும் சந்தர்ப்பங்கள் மிக அதிகமாகியுள்ளன .
ஆனால் 'ஹலால் ,ஹராம் ' என்ற வட்டத்தைச் சுற்றியே ஒரு முஸ்லிமின் வாழ்வு அமைந்துள்ளது என்ற உண்மையையும் , வெறும் உணவுப் பொருட்களை மட்டும் கருத்தில் கொண்டு 'ஹலால் ' என்ற வரையறை பேணப் படவில்லை எனும் உண்மையை சொல்வதன் ஊடாக இஸ்லாத்தின் இறைக் கொள்கையை தெளிவு படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது .
'கொள்கைக்கான வாழ்வுமுறை எப்போது பின்தள்ளப் படுகின்றதோ ,அப்போதே அந்த சமூகம் கொள்கைவாத சமூகம் என்ற வரையறையில் இருந்து பின்தள்ளப் படும்.' என்ற உண்மையை முஸ்லீம் சமூகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் . இப்போது நாம் எதிர்கொண்டிருப்பது எமது வாழ்வுக்கான போராட்டமா? எமது கொள்கைக்கான போராட்டமா ? என்ற வினாவில், நாம் வாழ்வதில் தான் எமது கொள்கை வாழும் என்ற நொண்டிச் சாட்டை முன்வைத்து ' சபூர் 'கோட்பாடு 'அட்ஜஸ்ட் மெண்ட் ' பெகேஜாக ' இன்று பொதுவாக முன்வைக்கப் படுகின்றது .
இஸ்லாம் கொச்சைப் படுத்தப் பட நாம் வாழ்தல் என்ற கோட்பாடு முன்வைக்கப் படுமாக இருந்தால் அதுதான் (ஹுப்புத் துன்யா ) உலகாசை . மௌனமோ, வன்முறையோ தான் இங்கு தவறானது; தவிர துன்பங்களை அனுபவித்த நிலையிலும் சத்தியத்தை தெளிவாக சொல்லுதல் என்பதில் தவறு இருப்பதாக நான் உணரவில்லை . இப்போது முஸ்லீம் எதிர்ப்பு எனும் போர்வையில் ஆட்டத்தை யார் ஆரம்பித்து வைத்தார்களோ அவர்களே வினாக்களோடு வருவார்கள் என்பதுதான் உண்மை . அதற்கான விடைகளில் இறைக் கொள்கை (இலாஹ் , ரப் ) என்ற வட்டத்தை நோக்கி திருப்பும் பணியை நாம் செய்ய வேண்டிய கடமை தான் எமக்கு முன் உள்ளது .
( போராட்டம் தொடரும் ...)

Jan 27, 2013

அகிலத்தின் அருட்கொடையே !!!!

யா ரசூலுல்லாஹ் !!!!
யாஹபிபே !!!!!
யா அபுல் காசிமே !!!! 
உண்மையாளரே !!!! நம்பிக்கையாளரே !!! 
அகிலத்தின் அருட்கொடையே !!!! 
உங்கள் மீதும் உங்களது வாழ்க்கையின் மீதும் உங்களது வழிமுறையின் மீதும் நாங்கள் உண்மையாக நம்புகின்றோம் ..
ரசுலல்லாஹ் !!!
உங்கள் மீது இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விட உங்களை உண்மையாகவே நேசிக்கின்றோம் .
யா ஹபிபல்லாஹ் !!!! இருந்த போதிலும்...சமீபகாலமாக ....நமது கண்ணியம் பொருந்திய இஸ்லாத்தையும்....இஸ்லாமிய கொள்கையையும்...மார்க்கத்தையும்...உங்களையும் வரலாறு நெடுகில் தொன்றுதொட்டே களங்கப்படுத்தி வரும் அந்நிய யூத,நசார,குப்பார்களின் எண்ணம் தற்போது நவீன வடிவில் மீடியாக்களின் வாயிலாக தனது விசம பிரச்சாரத்தை பரப்பி வருகிறது ....இதை உங்கள் உம்மத் உன்னத உணர்வின் மூலமாக ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்ற வகையில் தட்டி கேட்டு தான் வருகிறது....இருந்த போதிலும் அந்த அந்நிய சக்திகள் மற்றும் சில த ங்களது துவேசத்தை தொடர்ந்து செய்துகொண்டுதான் உள்ளது ....சரியான வழிமுறையில் தட்டி கேட்க இஸ்லாமிய தலைமைத்துவம் இல்லை ..
யா ஹபிபல்லாஹ் !!! உங்களது கண்ணியத்தை காக்க நாங்கள் எங்களது வார்த்தைகளை கொண்டு தான் நாங்கள் தீர்வை தேடி கொண்டுள்ளோம்...இன்ஷா அல்லா உங்களது சொல் பிரகாரம் மீண்டும் இந்த இஸ்லாமிய தலைமைத்துவம் இவ்வுலகில் வரும்....அது இவ்வுலகை ஆளும் ...பதிலடி கொடுப்போம்....பதம் பார்ப்போம் ....கரம் பேசும்...அப்போது வார்த்தைகள் பேசாது..
யா யா ரசுலல்லாஹ் !!!.....எங்களை அல்ல்ஹுக்காக மன்னித்து விடுங்கள்
யா ஹபிபல்லாஹ்..!!!! உங்களது வசீலாவை பெறுவோம்
இன்ஷா அல்லாஹ் ...

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 11)

'மின்னலுக்குப் பயந்து இரும்புக் கூட்டில் ஒளித்தல்' என்றால் என்ன ?

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைக்கப்பட விபச்சாரத் தொழிலை சட்ட பூர்வமாக்கி பரவலாக்குங்கள் என்ற கருத்து இன்று இந்தியாவில் சிலரால் முன்வைக்கப் படுகின்றது .அண்மையில் டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறையுடன் கூடிய படுகொலை சம்பவம் தொடர்பில் கொதித் தெழுந்த மக்கள் கூட்டத்தின் முன் மேட்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆலோசனைகளில் இதுவும் ஒன்றாகும் .

இந்தக் கருத்து மிகத் தவறானது மட்டுமல்ல பெண்கள் சமூகத்தின் மீது மட்டுமல்ல மிகக் கொடூரமான சிந்தனா ரீதியான சமூக நோய்க்கு வித்திடுவதுமாகும் . 'மின்னலுக்கு பயந்து இரும்புக் கூண்டில் ஒழிப்பது ' போல் ஒரு செயல் தான் இதுவாகும்; என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

மேற்கின் சிந்தனா வாதத்தின் கீழ் படுதோல்வியடைந்த ஒரு வழிமுறையே திறந்த பாலியல் கொள்கையாகும் . அதன் ஒரு அம்சமே விபச்சாரத்தை 'லைசென்ஸ்' கொடுத்து பரவலாக்கினால் பாலியல் மூர்க்கத்தனம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பாகும் . ஆனால் இது நடந்ததா ? என்ற கேள்விக்கு பதிலை கீழே வரும் புள்ளி விபரத்தை பார்த்தாலே புரிந்து விடும் .

திறந்த பாலியல் பின்பற்றப் படும் நாடான அமெரிக்காவில் 1990 இல் இருந்து 2000 ம் ஆண்டு வரையான பத்து வருடங்களுக்குள் 2006093 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . அதே போல 2000ம் ஆண்டில் இருந்து 2010 வரையான பத்து வருடங்களுக்குள் 2871732 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . இவ்வளவிற்கும் தொழில் முறை விபச்சாரம் தாராளமாக கொடிகட்டிப் பறக்கும் நாடு ! மேற்கை 'காப்பி ' அடிக்கும் தவறான பாதை நல்ல விளைவை அல்ல இன்னும் பல சமூக நோய்களையே பெற்றுத்தரும் என்பதற்கு இது சிறந்த ஆதாரம் .

(அதே நேரம் அந்தக் கருத்துக் கணிப்பில் சவூதி அரேபியாவின் புள்ளி விபரங்கள் பின்வருமாறு இருந்தது . 1990 இல் இருந்து 2000 ம் ஆண்டு வரையான பத்து வருடங்களுக்குள் 25 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . அதே போல 2000ம் ஆண்டில் இருந்து 2010 வரையான பத்து வருடங்களுக்குள் 22 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . )

திறந்த பாலியல் கொள்கையின் கீழ் விபச்சாரத்தை மேற்கு சட்டபூர்வமாக்கியதன் அடுத்த விளைவு அது நேரடியாக தாக்கிய அடுத்த விடயம் குடும்பவியல். இன்றும் அங்கு தொழில் நுட்பத்தாலும் ,அறிவியலாலும் மேம்படுத்திக் காட்டப் படும் ஒரு போலியான நாகரீகத்தையே காட்ட முடிந்தது தவிர சிதைந்து சின்னா பின்னமான குடும்பக் கட்டமைப்பே அங்கு காணப்படுவது அவர்களே ஏற்றுக்கொண்ட விடயம் . இப்படியான நிலையை ஏற்படுத்தக் கூடிய திறந்த பாலியலின் விபச்சார 'லைசென்ஸ்' எமக்கு தேவையா ?

(தொடரும்...)

Jan 26, 2013

'வை திஸ்' கொலை வெறி !?


இது 'வைட் ஸ்கின் ' சியோனிஸ்ட் ' காவிப் போர்வையில் காட்ட நினைக்கும் காட்டு மிராண்டித் தனம் . 'அசோகனின்' வாளை 'இராம ஜென்ம பூமியின்' பக்தர்களின் வழிகாட்டுதலில் ஏந்தி நிற்கும் 'தீசனின் ' தீவிர வாதக் கதை !!! இவர்களது அஹிம்சையின் முன் முஸ்லீம்களுக்கு மட்டும் 'ஹிம்சை ' என்பதுதான் நடப்பு விதி !!! இந்த முதலாளித்துவ முதலைகள் முடுக்கி விட்டிருப்பது தமது ஆதிக்கக் கதிரைகளை கட்டிக் காக்க என ஆள் சேர்க்கும் அநீதமான அரசியல் .
ஜனநாயக அரசியல் பெரும்பான்மையுடன் தான் பக்கச் சார்பாக மாறும் . அதில் கொத்தடிமையாகி இந்த சிறுபான்மை வாழ்க்கை நிச்சயிக்கப்படுமென்றால் !!? நீதி என்று அதில் ஒன்றுமில்லையே !? பொதுவாகவே சிறுபான்மையை துரத்தும் பெரும்பான்மை அரசியலின் இந்தக் கொலைவெறி தெற்காசியாவில் இனவாதம் ,மதவாதம் என்ற பெயரில் தொடரும் கேவலமான வழிமுறை . அந்தத் தொடரில் ஒரு இன்றைய கதைதான் கீழே வருவது .
மதம் பிடித்த பேய்கள்
மமதை கொண்டு ஆடுது !
மனிதக் குருதியில் குளித்திட
தொடர் கொலையை நாடுது !
பர்மாவில் பற்றிய தீ இங்கும்
பாலம் போடப் பார்க்குது !
மாணிக்கத் தீவில் மீண்டும்
இரத்த ஆற்றை கேட்குது !
'சியோனிசக் ' கூலியில் சிலது
சிலுவை யுத்தம் செய்யிது !
'யெஸ் சேர் ' போட்டு அதை
காவி கட்டி தொடருது !

Jan 25, 2013

பெண் நிர்வாண சுகத்தில் நியாயம் காணும் உலகம்


(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு
என்ன ? (பகுதி 10))

பெண்ணை நிர்வாணப் படுத்தி பார்ப்பதில் பண்டைய ரோம் , கிரேக்கம் , அரேபியா , இந்த வரிசையில் நவீனத்தின் சொந்தக்காரர்களாக மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேற்கின் சிந்தனையை அடிப்படையாக கொண்ட உலகும் சற்றும் சளைத்தது அல்ல . அவளை காட்சிப் பொருளாக்கி காமக் கண்களால் ரசித்து ருசித்து பார்ப்பதில் இன்று முழு உலகும் ஒருமித்த கருத்திலேயே உள்ளது .

ஆணின் இயல்பான காமப் பசிக்கு முன் அவள் அரை ,முழு நிர்வாணமாக நடமாடுவது என்பதில்தான் பெண் விடுதலை எனும் முட்டாள் தனமான அழைப்பில் அவளும் மயங்கினால் , விளைவு உள ரீதியான விபச்சாரம் கம்பியூட்டர் தொடங்கி மொபைல் போன் வரை சாதாரணமானது . வீதியல் தெரியும் ஒவ்வொரு விளம்பரமும் விபச்சாரத்தின் அழைப்பாக புரியப்படாமல் ஒரு கலை அம்சமாக காட்டப்பட்டது .

ஆண்கள் சமூகம் முன் காமக் காட்சிச் சாலையாக பெண்ணை உத்தியோக பூர்வமாக மாற்றிய பெருமை முதலாளித்துவத்தையே சாரும் . உங்களுக்கு தெரியுமா
'கொக்கா கோலா ' போத்தல் ; அதை சற்று கூர்ந்து பாருங்கள் . அதன் அமைப்பு ஒரு பெண்ணின் உடல் அமைப்பை மையப்படுத்தி செய்யப் பட்டது . கலை என்ற பெயரில் காமத்தை தூண்டும் வகையில் ஒரு குளிர்பானம் !

சிக்மன் புரைட் என்ற யூதனின் சிந்தனை தான் 'எல்லாமே செக்ஸ் ' குழந்தை விரல் சூப்புவதும் செக்ஸ் ! தாயின் மார்பில் சுரக்கும் பாலை அது குடிப்பதும் செக்ஸ் !
தொட்டில் முதல் செக்ஸ் தொடங்கி விடுமாம் !!! இதை கெட்டியாக பிடித்த முதலாளித்துவம் பெண்ணை பண்டமாக்கி ஆணின் முன் அனுபவி ராஜா அனுபவி .... என இவர்களே தாலாட்டுப் பாடி வெறித்தனத்தை தொடங்கி விட்டு பாலியல் வல்லுறவு என்ற அதன் கொடிய விளைவை அனுபவிக்கும் போது மட்டும் சட்டம் ஒழுங்கு என கத்திக் கதறுவதில் என்ன பயன் ?

(தொடரும் ...)

முஸ்லிம் சமூகப் பிளவும், இஸ்லாம் சொல்லும் தீர்வும்


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்று முஸ்லீம்கள் தாங்கள் அறிவு தரவேறுபாட்டால் இஸ்லாத்திற்க்கு பல்வேறு வகையான விளக்கங்களை அளித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வழிகேடர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்று செல்லி திரிகிறார்கள். இப்படி அலைவது சரிதான ? இதற்க்கான தீர்வு தான் என்ன ? அல்லாஹ்வின் வேதமும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் தான் என்ன என்று பார்ப்போம்.
 
இறை நம்பிக்கை கொண்டவர்களே அல்லாஹ்விற்குக் கட்டுப்படுங்கள், இன்னும் (அவனுடைய) தூதருக்கு கட்டுப்படுங்கள், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கு கட்டுப்படுங்கள்.
(அல் குர்ஆன் 4:59)
 
இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.
 
நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள்...
(அல் குர்ஆன் 3:102,103)
 
நிச்சயமாக நீங்கள் ஒரே சமுதாயம் தான். நான் தான் உங்கள் இறைவன். எனக்கே அஞ்சுங்கள்.
(அல் குர்ஆன் 23:52)
 
ஈயத்தால் வார்க்கப்பட்ட கட்டிடத்தைப் போல் ஓரணியில் நின்று அல்லாஹ்வின் பாதையில் போரிடக்கூடியவர்களை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல் குர்ஆன் 61:4)
 
தம் மார்க்கத்தைப் பிளந்து பலபிரிவுகளாகிவிட்ட இணைவைப்பேரில் ஒருவராக ஆகிவிட வேண்டாம்.
(அல் குர்ஆன் 30:31)
 
சண்டையிடாதீர்கள். இதனால் கோழைகளாகிவிடுவீர்கள். அப்போது உங்கள் பலம் போய்விடும்.
(அல் குர்ஆன் 8:46)
 
தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்த பின்னரும் கருத்து முரண்பட்டு பிரிந்துவிட்டவர்கள் போல் ஆகிவிடாதீர்கள். அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு.
(அல் குர்ஆன் 3:105)
 
(தண்டணை வழங்கப்படும்) அந்த நேரத்தில் (இவ்வுலகில்) பின்பற்றப்பட்டு வந்த (வழிகாட்டிகள் மற்றும் தலை)வர்கள் தம்மை பின்பற்றி வந்தோரை விட்டு (அவர்களுக்கும் தமக்குமிடையில் எந்த தொடர்புமில்லை என்று கூறி) விலகி விடுவார்கள். ஆயினும் அவர்கள் தண்டணை பெற்றே தீர்வார்கள் மேலும் அவர்களுக் கிடையே இருந்த எல்லா உறவுகளும் முற்றிலும் அறுந்துவிடும்
(அல் குர்ஆன் 2:166)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என அபூ ஹீரைரா (ரலி) அறிவித்தார்கள்.
இமாம் ஒரு கேடயம் ஆவர். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாகவே பாதுகாப்புத் தேடிக் கொள்வார்கள். (முஸ்லிம்)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்.
 அல்லாஹ்வின் பாதையில் பைஆ செய்பவர் மறுமை நாளில் எந்த ஆதாரமும் தேவையின்றி இறைவன் முன் தோன்றுவார். ஆனால் பைஆ செய்யாத நிலையில் மரணிப்பவரோ ஜாஹிலியா மரணமடைபவராவர் (முஸ்லிம்)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
 எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள். (புகாரி)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
தம்(ஆட்சி) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை)வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுபடாமல்அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் ஜாஹிலிய மரணத்தை அடைவார். (புகாரி)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
தம்(ஆட்சி) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில் தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்பவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும் ஏனெனில், ஒருவர்(இஸ்லாமியக்)கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில்) இறந்துவிட்டால் அவர் ஜாஹிலிய மரணத்தை தழூவியவர் ஆவார். (புகாரி)
 
முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
இஸ்லாத்தின் வளங்கள் ஒவ்வொன்றாக அழிந்து போய்விடும் அவற்றில் ஒன்று அழியும்போது அடுத்துள்ளதை மக்கள் பற்றிப் பிடித்துக்கொள்வார்கள் அவ்விதம் தலைமைத்துவமே முதலில் அழிந்துபோகும் இறுதியாக அழிந்து போவது தொழூகையாகும். (அஹ்மத்)
 
உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள்,
நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை, தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை, அடிபணிதல் இன்றி தலைமைத்துவம் இல்லை. (தாரமி)
 
 ...அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டுள்ள ஐந்து விசயங்களை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறினார்கள். அவை 1.ஜமாத் - ஒன்றினைந்து வாழ்தல் 2. அஸ்ஸம்உ – தலைமையின் ஆணையைச் செவியேற்றல் 3. தாஅத் - தலைமைக்குக் கட்டுபடுதல் 4. ஹிஜ்ரத் - தியாகப்பயணம் மேற்க்கொள்தல் 5. ஜிஹாத் - அல்லாஹ்வின் பாதையில் போர் புரிதல். ஒருங்கினைந்து வாழூம் சமுதாய அமைப்பிலிருந்து ஒருவர் ஒரு சாண் அளவு வெளியே சென்றாலும் அவர் தனது கழூத்திலிருந்து இஸ்லாத்தின் கட்டை அவிழ்த்து விட்டார். மீண்டும் தீரும்பிவரும்வரை இதே நிலையில்தான் இருப்பார். யார் ஜாஹிலிய்யாவை செயல்படுத்திட அழைப்பு விடுகிறாரோ முழந்தாளிட்டவராக நரகத்தில் நுழையும் கூட்டத்திலிருப்பார். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதும் நபித்தோழர்கள் கேட்டனர். அவர் தொழூதாலும் நோன்பு நோற்றாலும் இதே நிலைதானா? அதற்கு ஆம் அவர் தொழூபவராக நோன்பு நோற்பவராக தன்னை முஸ்லிம் என்று கருதிக் கொள்பவராக இருப்பினும் சரிதான் என்று கூறிய நபி (ஸல்) தொடர்ந்து சொன்னார்கள். ஆனால் (உண்மையான)முஸ்லீம்களை அல்லாஹ் அவர்களுக்குச் சூட்டிய பெயரான முஸ்லிம்கள்இ முஃமின்கள் அல்லாஹ்வின் அடியார்கள் என்று அழையுங்கள். (அறிவிப்பாளர்: அல்ஹாரிஸ் அல் அஷ்அரீ (ரலி) (அஹ்மத் இப்னு கதீர்)
 
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்,
அல்லாஹ்வின் கரங்கள் கூட்டமைப்புடனேயே இருக்கும் யார் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுகிறாரோ அவர் தன்னை நரக நெருப்புக்குத் தனிமைப்படுத்திக் கொண்டவராவர் (திர்மதி)
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

முஸ்லிம்களே உங்களுக்கு பொருப்பாரை ஏற்படத்தி அதன் மூலம் இருலகிலும் வெற்றி பெற போகிறீர்களா ?

இல்லை நாளை மறுமையில் உங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று விரண்டோடும் தலைவர்கள் பின்னால் செல்லப் போகிறீர்களா ? 

முஸ்லீம்களே, உங்கள் ஈருலக வெற்றி உங்கள் கையில்!!!

sources http://quraanisfinalrevolution.blogspot.com

இஸ்லாமிய அறிஞர்களும் இஸ்லாத்தை பின்பற்றும் பாமர மக்களும்!!!


இன்று முன்பு எப்போதும் இல்லாத அளவு இஸ்லாமிய எழூச்சி உலக அளவில் இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. இதற்கான அடையாளமாக தான் இளைஞர்களின் மார்க்கப்பற்றையும், பள்ளி வாசல்களுடனான தொடர்பு, மார்க்க சம்மந்தமான தேடலையும் காண்கிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக தற்போது இந்த இளைஞர்கள் சரியான பாதையில் இட்டுச் செல்லப்படுகிறார்களா ? இவர்களின் பயணம் சரியான திசையில் செல்கிறதா ? இவர்களின் ஆசானாக திகழ்வது யார் ? இவர்களின் என்ன வோட்டம் எப்படி அமைகிறது என் என்று ஆராய்ந்தால். பின் அடைவான நிலையை யாவரும் அறிவார்கள்.
 
இன்றை உலகில் பெரும் இஸ்லாமிய அறிஞர்களாக அடையாளப்படுத்த படுபவர்கள் அமைப்பு ரீதியாகவும், அமைப்பு சார்ந்த செயல்பாடுகள் சார்ந்தும் அறியப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட அமைப்பு சார்ந்து கல்வி நிலையங்களில் பயின்று வெளியேரிய உடண் அந்த அமைப்பின் சிந்தனை பாங்கை பரப்பும் பரப்பாளர்களாக காட்சி தருகிறார்கள். இந்த நிலையில் அவர்களின் செயல் பாடுகள் குறிகிய வட்டத்துக்குள் அமைந்து விடுகிறது.அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தம் முறை மற்றும் பேச்சாற்றல் போன்றவற்றல் பெரியதோற்றத்தை அடைகிறார்கள். இதன் அடிப்படையில் ரசிகர் மன்றங்களைப் போல் காட்சியளிக்கிறது இன்றைய முஸ்லிம் இளைஞர் உலகம். இது ஆரோக்கியமான செயல்பாடுகள் அல்ல.
 
மேலும் இன்று ஆலிம்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பெரும்பாலும் அரபி பாடசாலைகளில் படித்து விட்டு வெளியேரியவுடன் தங்களை பெரிய குறியீடுகளுடன் மக்களிடம் வருகிறார்கள், அவர்கள் பின் தொடரும் அமைப்பு அதன் ஆதரவாளர்களும் அவரை தங்கள் ஆசானாக பயன் படுத்துகிறார்கள். அவர்கள் பயன் படுத்துவது தவரில்லை, என்றாலும். அவரின் கல்வி தகுதிக்கு மேல் அவரிடம் இவர்கள் எதிர்ப்பார்பதால் தங்களுக்கு தெரிந்த விசயங்களை சொல்லி இஸ்லாமாக காட்சி படுத்திவிடுகிறார்கள் தனக்கு தெரியாத விசயங்களில் இவர்களின் நிலை எப்படி இருக்கிறது என்றால் இதற்க்கும் இஸ்லாத்திற்க்கும் சம்மந்தமில்லை என்றும் கூறும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். இதை இந்த அமைப்பு சார்ந்த ஆதாரவாளர்களும். மூலதாரமாக கொண்டு விடுகிறார்கள். இந்த அறிஞர்கள் தங்கள் பின் தொடரும் அமைப்பையும் அதன் தலைவரையும், அடியேற்றிவருபவர்கள். இவர்கள் அரபி பாடசாலைகளில் அரபி இலக்கணம், சில ஹதீஸ் நூல்களில் சில பகுதிகள், மற்றும் பேச்சுக்கலை கற்றிருப்பார்கள். இவர்கள் நிறைய படிக்க வேண்டியது உள்ளது.
 
வாழ்ககைக்கு வாழிகாட்டல் தேவை தான் என்பதை ஒவ்வொருவனும் அறிவான். அப்படி அறியும்போது அவன் தனக்கு அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் காட்டப்பட்ட வழிமுறையை அறிய வேண்டும் அதன் படி செயல் பட முயற்ச்சிக்க வேண்டும். மாறாக நாம் செயல் படுவதற்க்கு அந்த வழிகாட்டலில் என்ன ஆதாரமாக பயன்படுத்தலாம் என்று தேடி அதை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது.
 
இப்போது மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடமும் குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது இது வரவேற்க்கப்படவேண்டியது தான் அதே நேரம் இந்த ஆவல் சரியான திசையில் கொண்டு செல்லப்பட வேண்டும். இல்லையேல் பின்பற்றிய மக்களையும், வழிகாட்டிய அமைப்புகளையும் தீய பாதையில் கொண்டுச் சென்றுவிடும். மேலும் இன்று இஸ்லாம் காட்டித்தந்த வழிகாட்டுதல், வழிமுறைக்கு மாற்றமாக அந்நியக் கொள்கைகளை துக்கி பிடிக்கவும், தன்னிலைப் பாட்டை நியாயப்படுத்தவும், தனது கீழ்தரமான செயல்பாடுகளுக்கும், தன் ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், அமைப்புக்களும் அதன் தலைமையும் அல் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸையும் பயன் படுத்துவது தவிர்க்க படவேண்டும். இது போன்ற நேரங்களில் மக்களும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும் ஏமார்ந்து விடக்கூடாது, அவர்கள் அல் குர்ஆன் மற்றும் ஹதீஸை பயன் படுத்தி இருந்தாலும் இது இஸ்லாமிய குறியீடுகளை அடையவா ? அந்நியக்குறியீடுகளை அடையவா? ஏன்பதை உண்ணிப்பாக கவணிக்க வேண்டும் அந்நியக் குறியீடுகளை அடைவதற்க்கு எனில், இது போன்ற நேரங்களில் இந்த அமைப்புக்களையும் அதன் தலைவர்களையும் தூக்கி எரிய வேண்டும். இதுவே சிறந்த செயலாகும்.

sources http://quraanisfinalrevolution.blogspot.com

இஸ்லாம் vs ஜனநாயகம்


            ,];yhk; vs  [dehafk;,];yhk;:cyifAk; cyfpy; cs;s midj;ijAk; gilj;jJ my;yh`; vd;Wk;> xt;nthU nghUSk; mtDila fl;lisg;gbNa nray; gLfpd;wd vd;gJ ,];yhkpa Nfhl;ghL. mjd; gb kdpjid gilj;J mtd; tho;Tf;F Njitahd midj;J trjpfisAk;> topfhl;liyAk; toq;fpa my;yh`; me;j topfhl;ly; gbNa kdpjdpd; gpwg;G Kjy; ,wg;G tiu midj;J nray; ghLfSk; mika Ntz;Lk; vd;gJ jhd; ,];yhkpa Nfhl;ghL. ,iwtNd rl;lkpaw;Wgtd; mtDila rl;lq;fis nfhz;L jhd; kdpjh;fs; eph;tfpf;f gl Ntz;Lk; ,q;F ngUk;ghd;ikf;F kjpg;G fpilahJ. ,q;F `yhy; `yhy; jhd;> `uhk; `uhk; jhd;. ,jd; nrayhf;f mikg;G jhd; fpyh/gj; kw;Wk; fyp/gh MFk;.
[dehafk;:Kjhshypj;Jtk; kw;Wk; fk;A+dp\k; Mfpa ,uz;L nfhs;is cila nrayhf;f mikg;G jhd; ,e;j [dehafk;. ,jpy; ngUghd;ikf;F jhd; kjpg;G. ,J tbfl;ba Vkhw;W thjk;. ,e;j nfhs;iffspy; Kjyhspj;Jtk; fpU];Jt kjthjpfspd; jtuhd nrhay; ghl;lhy; cUthdJ. Kjshypj;Jtj;jpd; rpe;jid gilg;G gw;wpAk; kw;witfs; gw;wpAk; ve;j epiyghLk; Njitapy;iy. flTs; rpe;jidAk; mtd; topfhl;lYk; vq;fSf;F Njitapy;iy. flTs; vd;gJ ,iw Myaq;fSf;Fs; ,Uf;f Ntz;Lk;. fk;A+dp]k; epy Rthe;jhh;fspd; Mjpf;fj;jpd; vjph;kiuahd epfo;Tjhd;. flTNs ,y;iy ehl;il Ms;tjw;f;F flTspd; topfhl;ly; Njitapy;iy. ,q;F `yhy; `uhk; vd;gJ cz;L kNdh ,r;irapd; gb(ftzpf;f ,];yhkpa mbg;gilapy; my;y). jhd; kdpjid nehpgLj;j kdpjNd rl;lkpaw;wp tho;Nthk; vd;gNj ,e;j ,uz;Lf; nfhs;ifapd; epiyghL.


sources http://quraanisfinalrevolution.blogspot.com

அல்லாஹ்வின் தீனை அனைத்து தீன்களுக்கும் மேலானதாக மிகைக்கச் செய்தல்


அல்லாஹ்வின் தீனை அனைத்து தீன்களுக்கும் மேலானதாக மிகைக்கச் செய்தல்

هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوْ كَرِهَ ٱلْمُشْرِكُونَ


அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
(9:33)

உலகில் உள்ள அனைத்து கொள்கைகள், கோட்பாடுகள், மார்க்கங்கள், மதங்கள், வழிமுறைகள் என்ன பெயர் வைத்தாலும் சரி, மக்களால் பின்பற்றப் படுபவை இவை அனைத்தையும் நீக்கி, வழித்து துடைத்து விட்டு, இஸ்லாம் எனும் அல்லாஹ் பொருந்திகொண்ட மார்க்கத்தை, வழிமுறையை நிலை நாட்டுவதே நபி (ஸல்) அவர்களின் பணி என்று அல்லாஹ் கூறுகிறான்.

இங்கு 'மார்க்கம்' - தீன் எனும் வார்த்தையை வெறும் வணக்கமாக, சாஷ்டாங்கம் செய்வதையும், பூஜிப்பதையும், வழிபடுவதையும் தான் குறிக்கும் என்று யாராவது அர்த்தப் படுத்தினால், ஒன்று அவருக்கு சரியான அரபு மொழி பற்றிய அறிவில்லை, அடுத்து, அல்லாஹ்வின் பரந்து விரிந்த சக்தியின் மீதும், அவனது தீன் (உலகின், மறுமையின்) அனைத்துக்கும் வழிகாட்டி என்பதிலும் நம்பிக்கையில்லை என்றுதான் பொருள்.
குர்ஆனுக்கு விளக்கம் தேடும் போது, அந்த குர்ஆனிலேயே விளக்கம் (வேறு இடத்தில்) இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். உதாரணமாக, வுழு முறிவது சம்பந்தமாக வரும் 'மஸ்ஸ' எனும் சொல்லுக்கு இரு கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று தொடுதல், மற்றது இச்சையோடு மனைவியை / ஒரு பெண்ணை தொடுதல். குர்ஆன் பெண்ணைத் தொட்டால் வுழு செய்யுமாறு சொல்கிறது. இங்குள்ள தொடுதல் என்பதை சில அறிஞர் வெறுமனே தொடுதல் என்று விளங்கினர். சிலர், அது இச்சையோடு (உறவு கொள்ளும் நோக்கோடு) தொடுதல் என்று விளங்கினார்கள்.

இரண்டாமவர்கள் சொன்ன விளக்கம், குர்ஆனின் பிறிதொரு இடத்தில், அதுவும் பெண்ணை தொடும் விடயமாக அல்லாஹ் பாவித்துள்ள அதே சொல், இச்சையோடு உறவு கொள்ளும் நோக்கோடு தொடுதல் எனும் கருத்திலேயே பாவிக்கப் பட்டுள்ளது என்பதாகும். அதே சொல், மர்யம் (அலை) அவர்கள் கேட்பதாக வருகிறது, " நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்" -(19:19)

இவ்வாறு வானவர் கூறிய போது, அவர்,
" அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார். " (10:20)
மேற்கண்ட வசனத்தில், பாவித்த சொல்லும் அதே சொல் தான். எனவே, ஒரு ஆடவன் இச்சையோடு தொடுவதையே இது தெளிவாக காட்டுகிறது. இதுவே ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தும் ஆகும். (நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை முத்தமிட்ட பின் தொழுகைக்கு சென்ற ஹதீஸ் பதியப் பட்டுள்ளது இந்த சட்டத் தீர்ப்புக்கு இன்னொரு ஆதாரம் ஆகும்)

இந்தவகையில், நாங்கள் ஆராய எடுத்துள்ள குர்ஆன் வசனத்தில், எல்லா விடயங்களும் தெளிவாக இருக்கின்றன. ஒரே ஒரு சொல் தான் அங்கும் சில மயக்கங்களை ஏற்படுத்துகிறது. அது 'தீன்' என்ற சொல். அதற்கு சிலர் மார்க்கம், மதம் என்று விளக்கம் கொடுப்பதால், இந்த மேலோங்கச்செய்யும் பணி வெறுமனே மார்க்கத்தை மற்ற மார்க்கங்கள், மதங்களை விட மேலோங்கச் செய்ய என்று சுருக்கி விட்டார்கள். எனவே தான் ஏகத்துவத்தை எத்தி வைத்து விட்டால் மட்டும் போதுமானது என்றும் வாதம் செய்கிறார்கள்.
இனி, நான் மேலே சொன்ன அடிப்படையில், அல்லாஹ் தனது குர்ஆனில் இந்த வார்த்தையை எந்த கருத்தில் பாவித்துள்ளான் என்று பார்த்தால், பிரச்சனை தீர்ந்து விடும்.
بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِ
அல் ஹுதா என்றால் நேர்வழி, 'தீனுல் ஹக்' என்றால் சத்திய தீன் - இதை சத்திய மார்க்கம் என்று சொல்லி தமிழில் மொழிபெயர்த்தாலும் அது, அந்த கருத்துச் செறிவு மிக்க வார்த்தையின் சரியான பொருளை ஒரு போதும் தரமாட்டாது. இந்த தீன் எனும் வார்த்தைக்கு அல்லாஹ் கொடுக்கும் கருத்து மிகவும் பரந்தது.
சூரா யுசுபில் அல்லாஹ் யூசுப் நபி (அலை) அவர்கள் தமது தம்பி புன்யாமீனை பிடித்து வைத்துக் கொண்ட சம்பவத்தை கூறுகிறான். அங்கே அங்குள்ள மன்னனது சட்டம் என்ற என்ற விடயத்தை விளக்க 'தீன்' என்ற சொல்லை பாவிக்கிறான். இங்கு தீன் = சட்டம் (அரச சட்டம்)
فِى دِينِ ٱلْمَلِكِ
"ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய கொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம்(சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!" (12:76)

இங்கு அல்லாஹ் அதே வார்த்தையை, அதையும் குறிப்பாக ஒரு நபியோடு சம்பந்தப் படுத்தி சொல்லியிருப்பது யாராலும் மறுக்க முடியாத அளவு இந்த சொல்லுக்கான கருத்தை வலுப்படுத்துகிறது.
இப்போது இந்த கருத்தை வைத்துக்கொண்டு இந்த வசனத்தை பாருங்கள்.
"அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் (வழிமுறை, சட்டங்கள் என்பனவற்றுடன்) அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் (வழிமுறைகளையும், சட்டங்களையும்) இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)(9:33)

அரபு மொழி புரிபவர்கள் இதை அழகாக விளங்க கூடியதாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். இன்னுமொரு வசனத்தை பாருங்கள்:

وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّـهِ ۖ فَإِنِ ٱنتَهَوْا۟ فَلَا عُدْوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّـٰلِمِينَ
" ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் (சட்டம், வழிமுறை) என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது." (2:193)

இன்னுமொரு வசனத்தில்,
وَلَا تُؤْمِنُوٓا۟ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ ٱلْهُدَىٰ هُدَى ٱللَّـهِ
""உங்கள் மார்க்கத்தைப் (வழிமுறையை, சட்டங்களை) பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;." (3:73)

எனிவே, 'தீன்' எனும் இந்த சொல் மார்க்கம், வழிமுறை, சட்டங்கள் என்ற மூன்று விடயத்தையும் பிரதானமாக உள்ளடக்கி இருப்பதை குர்ஆனிலேயே நாம் காணலாம். குர்ஆனை விட குர்ஆனுக்கு வேறு யார் விளக்கம் தரக்கூடியவர் இருக்கிறார்கள்?

இந்த தீனை மேலோங்கச் செய்வது என்றால், மார்க்கத்தை (மதம் என்ற கருத்தில் மட்டும்) மேலோங்கசெய்வது மட்டும் தான் என்று நினைப்பது, அதை பரப்புவது, அல்லாஹ் நபிக்கு (ஸல்) கொடுத்த பாரிய பொறுப்பை தட்டிக்கழித்து தனக்கு சாதகமான விடயங்களுக்குள் மட்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தை சுருக்கிக் கொள்ள முயற்சிப்பதே ஆகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Jan 24, 2013

முதலாளித்துவ மேட்டுக்குடி மரபில் யுத்தம் எப்போதும் ஒரு 'வீடியோ கேம்' தான் !!


முதலாளித்துவ மேட்டுக்குடி மரபில் யுத்தம் எப்போதும் ஒரு 'வீடியோ கேம்' தான் !! என்பதை அவர்களது வாய்களினால் சிலநேரம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து விடுகிறார்கள் . அரசியல் ,பொருளாதாரம் , தமது குரூர உளத் திருப்தி இந்த மூன்றிலும் கொள்ளை இலாபம் என்பதே அவர்களது அடிப்படைக் கொள்கை . இந்த மாபியா சிந்தனையில் மனிதாபிமானம் அவர்கள் தரப்பில் இருந்து நியாயங்களை சொல்லவே பயன்படுகின்றது .
கீழே வரும் வாக்குமூலத்தை படியுங்கள் தலைப்பாகை கட்டியவன் எல்லாம் தாலிபான் எனும் நியாயத்தின் கீழும் , ஆர் .டீ .எக்ஸ் எழுத்துப் பதித்த 'டீ சேர்ட் ' போட்டவன் எல்லாம் 'அல் காயிதா ' எனும் கசாப்புச் சட்டத்தின் கீழும் தான் ஆப்கான் யுத்தம் தொடரப்படுகிறது .
என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் வேண்டுமா !? துப்பாக்கி 'சேம்பரில்' ஒரு தோட்டாவை சுட்டு வெளியேற்ற அதன் 'ரிகர் ' மீதான விரலின் அசைவுக்கு மூளையின் கட்டளையாக ஓரிரு செக்கண்டுகள் போதும் . அந்த அவகாசம் கூட' நேடோ ' தரப்புக்கு ஆப்கானில் தேவைப்படவில்லை
என்பதை சொல்லும் சம்பவமே இதுவாகும் .
மனிதாபிமானம் ,மனித உரிமை , U .N யுத்த விதிகள் எல்லாவற்றையும் மீறிய, மனித சமூகத்தின் மீதான தெளிவான முதலாளித்துவ ஏகாதிபத்திய பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதும் ; குறிப்பாக அந்தக் குறி முஸ்லீம்கள் மீது இடப்பட்டுள்ளது என்பதையும் ,நியாயமுள்ள ஒவ்வொரு மனிதப் பிறவியும் உணர்ந்து கொள்ள வேண்டும் .
ஆப்கானில் மட்டுமல்ல ('மாலி' உட்பட ) ஆக்கிரமிக்கப் பட்டுள்ள முழு முஸ்லீம் உலகிலும் இந்த குப்ரிய ஏகாதிபத்திய 'தாகூத்' களுக்கு பலியான போராளிகளை விட சிவிலியன்களின் எண்ணிக்கை தான் மிக அதிகமானது . அந்த வகையில் முழு முஸ்லீம் உம்மத்தையும் தீவிர வாதிகளாக ! பயங்கர வாதிகளாக தான் பார்க்கிறார்கள் என்பதற்கு பிரித்தானிய இளவரசர் ஹரி சாட்சி பகர்கிறார்.
“ஹெலிகாப்ரில் இருந்து தலிபான்களை வீடியோ கேம் போல சுட்டு கொன்றேன்!” இளவரசர் ஹரி
(viruvirupu.com) ஆப்கானிஸ்தானில் 20 வார ராணுவ சேவைக்கு பின் நாடு திரும்பிய பிரிட்டிஷ் இளவரசர் ஹரி, தலிபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் விமானப் படையின் அபாச்சி ஹெலிகாப்ட்டர் பைலட்டாக அவர் பணிபுரிந்தார்.
“தீவிரவாதிகளை அழிப்பதற்கும், தரையில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத்தினரை காப்பதற்கும், ஹெலிகாப்டரில் எனது கையில் ஒரு பட்டன் இருந்தது. அதை அழுத்தினால், ஏவுகணை பாய்ந்து செல்லும். எனது ஹெலிகாப்டரில் இருந்து சென்ற ஏவுகணை தாக்கியதில் தலிபான்கள் கொல்லப்பட்டனர்” என்றும், இளவரசர் ஹரி தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் விமானப்படை அபாச்சி ஹெலிகாப்டரில், நேர்த்தியாக ஆயுத சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பன் சிஸ்டத்தில், ராக்கெட்டுகள், ஹெல்ஃபயர் ஏவுகணைகள், 30mm கனொன் எந்திரத் துப்பாக்கி ஆகியவை உள்ளன. தரை துருப்புகள், ஆப்கான் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த செல்லும்போது, வான் பாதுகாப்பு கொடுக்க இந்த ஹெலிகாப்டர்கள் செல்வது வழக்கம்.
ஹெலிகாப்டர் விமானியாக யுத்த முனையில் பணிபுரிவது, எனக்கு ஜாலியான அனுபவம். காரணம் நான், PlayStation, Xbox வீடியோ கேம் விளையாட்டுப் பிரியன். அதில் விரல்களால் பட்டனை அழுத்தி விளையாடுவதுபோல, ராணுவ ஹெலிகாப்டரில் பட்டனை அழுத்தி நிஜ ஏவுகணைகளை ஏவியது, ஜாலியான அனுபவம்” என்று தடாலடியாக கூறியுள்ளார், இளவரசர்!
இந்த ‘ஜாலியான அனுபவத்தின்’ போதுதான், தலிபான்கள் கொல்லப்பட்டனர்!
ஆப்கானில் கேம்ப் பாஸ்டியனில் தங்கியிருந்த இளவரசர் ஹரி, இங்கிருந்தபோது சில மீடியாக்களுக்கு பேட்டிகள் கொடுத்திருந்தார். ஆனால், அந்தப் பேட்டிகள் வெளியாகாதவாறு, பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு செய்தித் தடை போட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இளவரசர் ஹரி ஆப்கானில் இருந்து புறப்பட்ட பின்னரே பேட்டிகள் வெளியிடப்படலாம் என்பது, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு.
நேற்றிரவு இளவரசர் ஆப்கானில் இருந்து கிளம்பி விட்டது உறுதி செய்யப்பட்ட பின்னரே, “எனது ஹெலிகாப்டரில் இருந்து சென்ற ஏவுகணை தாக்கியதில் தலிபான்கள் கொல்லப்பட்டனர்” என்ற பேட்டி ஹைலைட் தற்போது வெளியாகியுள்ளது.

எமது நெருப்பில் குளிர் காயும் எதிரி .'விஸ்வரூபம் '


இதுவரை நடந்தவை யாவும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடந்தது . இப்போது நடப்பவைகளும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடக்கின்றது . நேற்று 'துப்பாக்கியை ' தூக்கிப் பிடித்து இந்த உம்மத்தின் நியாயமான உணர்வுகளை விளம்பரமாக்கி இலாப கரமாக ஓட்டிய 'ரீல் ' இன்று 'விஸ்வரூபமாக ' தன்னை 'மெகா ஹிட் ' ரீலாக்க 'போஸ்டர்' ஓட்டத் தொடங்கியுள்ளது .
இஸ்லாத்தின் மீதான இறை நிராகரிப்பாளர்களின் காழ்ப்புணர்வுகள் இஸ்லாத்தின் வரலாற்றோடு தொடர்ந்தும் வந்துள்ளது . அந்த வகையில் முஹம்மத் (ஸல் ) அவர்களின் சந்ததியாகிய எம்மையும் அது தொடர்கின்றது . இந்த நிகழ்வுகளில் முஸ்லீம் உம்மாவின் எதிர் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு மீள் பரிசீலனை அவசியமானது . உண்மை என்னவென்றால் இந்த 'தாகூதிய ' சோழியர்கள் தமது துர்நாற்றமான குடுமியை ஆட்டுவதற்கு எமது கைகளையே எம்மை அறியாமல் பயன் படுத்துகின்றார்களா ? என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது .
இது தொடர்பில் வரலாற்றின் முன்னைய நிகழ்வுகளை நாம் எவ்வாறு எதிர் கொண்டோம் என்பதை வஹியின் வெளிச்சத்தில் சுன்னாவில் இருந்து வரையறுப்பது இந்த இடத்தில் மிக முக்கியமான பணி . ஆனால் இங்கு உணர்வுகளுக்கு அதி கூடிய முக்கியத்துவம் கொடுக்கும் போது
எதிரியின் கருத்துச் சுதந்திர 'சினைப்பர்' குறிக்கு நாமே நெற்றியை காட்டுவது போல் ஆகி விடாதா ?
'சாம் பாசில்' 'யூ டியூபில்' விட்ட அசிங்கமான குப்பை முஸ்லீம்களின் உள்ளங்களில் பயங்கரமான பூகம்பத்தை உண்டு பண்ண, ஒவ்வொரு முஸ்லிமும் கண்களில் கண்ணீரோடும் எதிர்க்கும் உணர்வோடும் வீதிக்கு இறங்கினார்கள் . அந்த மறக்க, மன்னிக்க முடியாத வலி மீது பிரான்சின் 'சார்லி ஹெப்டோ ' கார்டூன் தாக்குதல் நடத்தியது ! பின் 'பெல்ஜியம் , பின் பிரான்ஸ் என இந்த மீடியா தாக்குதல் தொடரும் வரிசையில் இந்தியாவும் 'துப்பாக்கியோடு ' தனது மீடியா 'பிஸ்டல் ' குழுவை களமிறக்கியது . உண்மையில் இந்தியாவின் சோசியல் மீடியா இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அவமானப் படுத்துவது இதுதான் முதற் தடவையல்ல . அந்த வரிசையில் இப்போது விடயம் 'விஸ்வரூபம் 'எடுத்துள்ளது .
காஸ்மீரையும் , பாகிஸ்தானையும் காட்டி தேசப்பற்று ரீல் விடும் இவர்களது வழமையான பணியை நாம் மறந்து விடக்கூடாது . 'இரத்தம் சொட்டும் கத்தி ' ,கீறிக் கிழிக்கப் பட்ட உடல்,இப்படிக்காட்டி சமூகப் பார்வையை திருப்புவதை விட முஸ்லிமின் உணர்வு என்ற 'செப்டரில்' , நிறைய இலாபம் இருப்பது முதலாளித்துவம் அனுபவித்த உண்மை . அது தொடர்கிறது .
எண்ணத்திலும் வழிமுரையிலும் சிலுவை சுமந்து உடையில் காவி உடுத்திய இந்த சண்டாளர்கள் கருத்துச் சுதந்திரம் எனும் போலித் தனத்தில் அரசியல் இராஜ தந்திர வலிமை அற்றிருக்கும் முஸ்லீம் உம்மத்தை சீண்டிப்பார்க்க நினைக்கிறார்கள் ! நாம் சாத் வீகமாக சென்றால் ஆர்ப்பாட்டம் , ஊர்வலம் ,மகஜர் ,மனு என சட்டத்தில் உள்ளிருந்தே 'போலிஸ்' பாதுகாப்போடு எமது எதிர்ப்பை ஜனநாயக முறையில் சொல்ல முடியுமாம் (எமது கருத்துச் சுதந்திரம் ) ! வன்முறையை செய்தால் அதே 'போலிஸ் ' 'என்கவுண்டர் ' பண்ணுமாம் ! சபாஸ் சரியான போட்டி என முதலாளித்துவ மேட்டுக்குடி பார்த்து ரசிக்குமாம் . இது அதிகாரம் கையில் இருக்கின்றது ; என்ற ஆணவம் தவிர வேறில்லை . அமெரிக்கா முதல் இந்தியா வரை இதுதான் நிலை .
சரி கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது என ? அவர்களிடம் கேட்டால் அதிலும் அவர்களது அப்பட்டமான செயல்களைச் ஆதாரத்தோடு சொல்லி அடிமடியில் யாராவது கைவைத்தால் ,பாவம் அவன் தனது கருத்துச் சுதந்திரத்தை சிறைச் சுவர்களுக்கு முன்னால் தான் சொல்ல முடியும் .
மேற்குக்கு ஒரு தாரிக் பின் சியாதும் , சிந்துவுக்கு ஒரு முஹம்மது பின் காசிமும் மீண்டும் வரவேண்டிய நியாயத்தை இந்த முஸ்லீம் உம்மா உணர்ந்து உழைக்காத வரை எமது போராட்டங்கள் எதிரியின் கட்டுப்பாட்டில் அவனது நியாயங்கள் சகிதம் தான் தொடரப் போகின்றது .
எமது நெருப்பில் எதிரி குளிர் காய்வான்
அவ்வளவுதான் .

Jan 23, 2013

விபச்சார அழைப்பாக பெண் விடுதலை வாதம் .


விபச்சார அழைப்பாக பெண் விடுதலை வாதம் .
(தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 09) )

இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியாவில் நான்கு முறையான ஆண் , பெண் உடலுறவுக்கான உறவு முறைகள் இருந்தன முதலாவது முறை இன்று இருப்பதைப் போல ஒருவன் தான் விரும்பும் பெண்ணின் தந்தையிடம் முறையாக பெண் கேட்பார் . அவரின் சம்மதத்துடன் அந்தப் பெண்ணால் நிர்ணயிக்கப் பட்ட ஒப்பந்தத் தொகையை கொடுத்து திருமணம் செய்து (தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக் ) கொள்வார் .

இரண்டாவது முறை கணவன் தன் மனைவியின் மாதவிடாய் காலம் முடிந்த பின் , ஒரு குறிப்பிட்ட உயர்ந்த குல ஆணை தன் மனைவியுடன் கூடச் செய்வான் . அவள் அதன் மூலம் கருவுறும் வரை அந்தக் கணவன் அவளை நெருங்க மாட்டான் . இங்கே இந்தக் கணவனின் நோக்கம் உயர்ந்த குலத்தில் இருந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும் .

மூன்றாவது முறை பத்து அல்லது அதற்கு குறைவான ஆண்கள் கூட்டம் , ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்ளுவார்கள் . அவள் கருவுற்று பிள்ளை பெற்றபின் அந்த ஆண்களை அழைப்பாள் .அந்த ஆண்களில் யாரும் அந்த அழைப்பை மறுக்கக் கூடாது . அவர்களிடம் அந்தப் பெண் பின் வருமாறு கூறுவாள் .

" நீங்கள் ,உங்கள் உறவால் விளைந்ததைக் கண்டீர்கள் . அது இந்தக் குழந்தைதான் " என்பாள் பின் அவர்களில் ஒருவனைக் காட்டி "இது உங்கள் குழந்தைதான் " என்று கூறுவாள் அதை அவன் மறுக்க முடியாது .

நான்காவது முறை ஒரு பெண் தன் வீட்டுக்கு முன்னாள் ஓர் கொடியை நாட்டி வைப்பாள் .அதன் அர்த்தம் உடல் சுகம் வேண்டுபவர்கள் தாராளமாக வாருங்கள். என்ற பகிரங்க அழைப்பே ஆகும் .பலரும் வருவார்கள் கூடுவார்கள் ,செல்வார்கள் . அவள் கருவுற்று குழந்தை பெற்ற பின் உறவு கொண்ட ஆண்கள் எல்லோரும் அழைக்கப் படுவர் .

பின்னர் குழந்தையின் சாயலைக் கொண்டு தந்தையை அடையாளம் காணும் திறமை உள்ளவள் என கருதப் படும் ஒரு குறிசொல்லும் பெண் அழைத்து வரப்படுவாள் . அவள் அந்த ஆண்களில் இருந்து ஒருவரை இனம் காட்டுவாள் அதுதான் அந்தக் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் .அதை அவன் மறுக்க முடியாது .

ஆதாரம் :- புஹாரி

மேலே கூறியது நாம் கண் காணாதது .இதில் முதல் முறையை தவிர மற்றைய அனைத்தும் அப்பட்டமான விபச்சாரம் என்பதில் சந்தேகமில்லை . இதில் ஆணாதிக்கத்திற்கான வாசலை ஒரு பெண் சாதாரணமாகவே திறக்கிறாள் . அதே நேரம் அவமதிப்புக்கான மகுடத்தையும் அவளே சூடிக் கொள்கிறாள் . ஆனால் துரதிஷ்ட வசமாக இன்றைய நிகழ்காலமும் பெண்ணுரிமை என்ற பெயரில் வேண்டுவது இத்தகு தவறான பாதையினைத்தான் . பின்வரும் சம்பவத்தை படியுங்கள் .

இது நடந்தது 1990 களில் , திருமணமான முதலிரவிலேயே தன் கணவனை வெளியே இருத்தி விட்டு , இன்னொரு ஆணோடு சல்லாபித்தாள் ஒரு பங்களாதேச பெண் . அவள் உலகு அறிந்த 'செக்ஸ் ' எழுத்தாளர் . அவளது பெயர் 'தஸ்லிமா நஸ்ரின் '. பெண்ணுரிமையின் கீழ் அவள் கேட்டது ' ஒரு பெண் தனது கருப்பைக்குள் தாங்கள் விரும்பும் ஆணின் விந்துவை செலுத்தும் உரிமை ! (FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரம் .

இந்த விபச்சார அழைப்புக்கு மேற்கின் பெண் விடுதலை வாதிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது . ஒரு பெண்ணை ஆண் எப்படி ரசிக்க ,அனுபவிக்க , பயன்படுத்த முடியுமோ அதற்கான வாயிலை அவளே திறக்கிறாள் . இவர்களும் பரிசோடும் ,மாலையோடும் படையெடுத்தார்கள் . புனிதமான் உறவை
கழிவரையாக்கும் இந்த நா(ய் )கரீகத்தின் பார்வையில் எப்படி ஒரு பெண் பாதுகாப்பாய் வாழ முடியும் ? மேலே தந்த அரேபிய ஆண் ,பெண் உடலுறவு முறையோடு இந்த (FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரத்தை ஒப்பிட்டுப் பாருங்கள் நிறைய உண்மைகள் புலப்படும் .
(தொடரும் ...)

ஜனநாயகம் ஒரு குப்ர்!!


இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தெளிவானதும் உறுதியானதுமான வழிகாட்டலை வழங்கியுள்ளது .என்பது முஸ்லீம்களாகிய
எமது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும் . அந்த வகையில் தான் இஸ்லாத்தின்
அகீதா விற்கும் அது காட்டிநிற்கும் நடைமுறை வாழ்விற்கும் மாற்றமாக சிந்திப்பது,
செயற்படுவது (ஹராம் )முற்றாகவே தடைசெய்யப்பட்டுள்ளது .
இதன் அடிப்படையில்தான் ' குப்ர், சிர்க்,ரித்தத் .பித்அத்,என்ற பதங்களின் பயன்பாடும்
பிரயோகமும் இஸ்லாமிய 'ஷரீஆவின் ' அளவுகோலாக குர்ஆன்,சுன்னாவால்
வரையறை செய்யப்பட்டுள்ளது .
ஆனால் தெளிவாக ஆராயாத காரணத்தாலும் எமது பொடுபோக்கின் காரணமாகவும் நரகப் படுகுழிக்கு எம்மை ஆரத்தழுவி அழைத்துச்செல்லும் மிகப்பயங்கரமான ஒரு
குப்ரின் நிழலில் எம்மில் அதிகமானோர் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர் என்றால்
அது மிகையாகாது அதுதான் "ஜனநாயகம்" (Democracy )

மக்களால் , மக்களுக்கு ,மக்களுக்காக எனும் பசப்பு வார்த்தைகளின் பின்னால் உள்ள போளித்தன்மையும், பயங்கரமும் உணரப்படாது சர்வ சாதாரணமாக முஸ்லிம் உலகத்தை அதன் கீழ் அணி திரட்ட முயல்வது சில இஸ்லாமிய அறிஞ்சர்களும் ,இஸ்லாமிய இயக்கங்களும் எனும்போது...... 'பிரச்சாரகர்கள் நரகத்தின் வாயில்களில் இருந்து அழைப்பு விடுவார்கள் யார் அந்த அழைப்பை ஏற்பார்களோ அவர்கள் நரகில் தூக்கி வீசப்படுவார்கள் '..
என்ற'ஸஹிஹ் முஸ்லிமில் ' வரக்கூடிய ஒரு நீண்ட நபிமொழியின் முன்னறிவிப்பு தான் எம்முன் வருகின்றது !!
ஜனநாயகம் என்பது மனிதர்கள் மனிதர்களை அடிமைப்பட்டு வாழத்தூண்டும் கிரேக்கர்களின் ஆட்சி முறையாகும் உண்மையில் இதன் தோற்றம் தெளிவான ஓர் ஏமாற்றாகும் ; பண்டைய கிரேக்க ஆளும் வர்க்கம் தமது குடிமக்களை திருப்திப்படுத்தவும் தமது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டவும் மேற்கொண்ட ஓர் தந்திரமாகும் எனும் விடையம் ஒருபுறமிருக்க இந்த கோட்பாட்டின் பிரதான அம்சமே மனிதர்களே தமது வாழ்வின் சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம் என்பதோடு பெரும்பான்மையின் முடிவுதான் இறுதி தீர்வாகவும் அமைந்துவிடும் . இது அல்லாஹ்(சுபு) வின் சட்டமியற்றும் அதிகாரம் எனும் விடயத்தோடு மோதி அல்லாஹ் (சுபு ) வை நேரடியாகவே சவாளுக்களைக்கின்றது !!!!
இதுவரை காலமும் சிலையை இணைவைப்பது 'சிர்க்' எனத்தெளிவாக கூறினோம் .ஆனால் இந்த சிந்தனை இணைவைப்பை ஏன் 'சிர்க்காக ' இனம்காணத்தவரினோம் !
ஆட்சி ஆளர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமை ,தட்டிக் கேட்கும் உரிமை ,போன்ற சில
பண்புகளை அது சுமந்திருப்பதால் அது சத்தியமாகிவிடாது!! அதன் தோற்றம் ,நோக்கம்
என்பன இஸ்லாத்தின் அரசியலான மக்களுக்கு நன்மை செய்தல் என்ற விடையத்தை
அடிப்படையாககொண்டதுமல்ல .மாறாக 'குப்ரிய'ஆளும் வர்க்கத்தின் ஒரு எமாற்றுக்கருவி ; அதை இஸ்லாத்திற்கு எடுக்கும் தேவை ஏன்?
ஆன்மீக வாழ்வையும் ,உலக வாழ்வையும் பிரிப்பது ! எனும் அடிப்படையில் கிறிஸ்தவ உலகம் இந்த ஜனநாயகத்தை தனது கட்டாயத்தேவையாக பண்டைய கிரேக்கரின் பின் மத்திய ஐரோப்பாவின் மதகுரு சர்வாதிகாரத்தை எதிர்க்க பயன்படுத்தி கடவுளுக்குரியதை கடவுளுக்கும் ,அரசருக்குறியதை அரசருக்கும். எனும் விதியின்
கீழ் மதச்சார்பின்மை கோட்பாட்டை நோக்கியதாக திசை மாற்றி ஜனநாயகத்தின் நவீன பயண்பாடு ஆரம்பிக்கின்றது என்பதுதான் வரலாறு.
முஸ்லிம் சமூகம் இதன்பக்கம் வழிகாட்டப்படும் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் . இஸ்லாத்த்தினில் பிரத்தியோகமானதும் நிலையானதுமான ஒரு அரசியல்
வழிகாட்டல் இல்லையா ?!! 'வஹி' இந்தவிடையத்தில் குறைபாடு செய்துவிட்டதா ?!!
அல்லாஹ் (சுபு ) எம்மை பாதுகாக்க வேண்டும் .
அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் நிராகரிப்பாளர்கள் ! (TMQ 5:44)
அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் அநியாயக்காரர்கள் ! (TMQ 5:45)
அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ
அவர்கள் பாவிகள் ! (TMQ 5:47)
(நபியே !)"நிச்சயமாக அல்லாஹ்விற்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி
உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? ... (TMQ 5:40)
போன்ற அல்குர் ஆன் வசனங்களும் இன்னும் பல ஏராளமான அல்குர் ஆன் வசனங்களும்
தெளிவாக இருக்க முஸ்லிம்' உம்மாவை ' தவறான ஒரு படு பாவத்தை நோக்கி இந்த ஜனநாயகம் இட்டுச்செல்கின்றது என்பது ஒரு வெளிப்படையுண்மை.
இதோ உதாரணம் துருக்கி ,எகிப்து ,பாகிஸ்தான் ,போன்ற முஸ்லிம் நிலங்களில் கூட இஸ்லாமிய 'ஷரியாவை ' அமுல் படுத்த 51% வாக்குகளை எதிர் பார்த்து நிற்கின்றது !!
ஒரு முஸ்லிமின் முன் இஸ்லாமிய 'ஷரியா' வும் ஒரு தெரிவு !!!??? அவ்வளவுதான்.
சில மாதங்களுக்கு முன் துருக்கிய ஜனாதிபதி தையுப் அர்தூர்கான் அவர்கள் எகிப்து விஜயத்தின்போது குறிப்பிட்ட கருத்துதான் எகிப்தும் துருக்கி போல் மதச்சார்பற்ற அரசியல் வழிமுறையினை பின்பற்றவேண்டும் !!! என்ற கருத்து .
உண்மையில் எகிப்திய மக்கள் அவரை ஓர் சலாகுதீன் ஜயூபி போல் நோக்கி பலஸ்தீனை மீட்டுத்தருவார் என கருதிக்கொண்டிருந்தனர்! மேலும் துருக்கியோடு எகிப்தை இணைக்கும் நிலைப்பாடு பற்றி கனவு கண்டுகொண்டிருன்தனர் !!
உண்மையில் அவரது கருத்து தான் வீரம்மிக்க சலாகுதீன் ஜயூபி அல்ல மாறாக மேற்கத்தேய ஜனநாயக ஒலி பெருக்கிகட்டிய வெள்ளை மாளிகையின் செல்லப் பூணை என்பதை எடுத்துக்காடுவதாய் அமைந்திருந்தது .! இந்த ஜனநாயகம் ஒரு மிகப்பெரிய தீமை என்பதை உணர்த்த இதை விடவேறு ஆதாரங்கள் வேண்டுமா??
இந்த ஜனநாயகத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைக்கமுடியும்
எனும் வாதமே நகைப்புக்கிடமானது ! ஏனெனில் இதனோடு இணைவு என்பதே முதலாளித்துவத்தை தலுவச்சொல்லும் 'கலிமா ' தான் ஏனெனில் அது தனக்கென பிரத்தியோகமான ஓர் அரசியல் ,பொருளாதார, சமூகவியல் வழிமுறைகளை
கொண்டது . அதனூடாக பயணிக்க நிணைப்பவர்களுக்கு தனது சிந்தனைகளோடும் , வழிமுறைகளோடும் முரண்படாத வரை ஒரு செயல் சுதந்திரத்தை தாராளமாக அள்ளிவழங்கும் அமெரிக்காவின் வாசிங்க்டன் முதல் இஸ்ரேலின் டெல்அவிவ் வரை இதில் தடையே இருக்காது ! அதன் கொள்கை சார் சுயரூபத்தை புலப்படுத்துமிடம்
என்று அவர்கள் தனிமனித சுதந்திரமாக கருதுமிடங்களில் இஸ்லாம் தனது சட்டங்களை சொல்லவரும்போதுதான் ஆட்கள் தொகையே வாழ்வின் சட்டங்களையும்
, அரசியலையும் ,அதிகாரத்தையும் தீர்மானிப்பதாக அது கூறும் !
இன ,மத, குல, நிற ,வர்க்க, பிரிவுகளை மறைமுகமாகவோ ,வெளிப்படையாகவோ அங்கீகரித்து அது மனித உரிமையாகவும் ,தனி மனித சுதந்திரமாகவும் வரையறுக்கும் !
தேச, தேசிய எல்லைகளை இயல்பாக்கி கீழ்த்தரமான எல்லை மோதல்களை தூண்டிவிடும் .இதுதான் ஜனநாயகத்தின் சுயரூபம் !!!!
மேலே தந்த சுருக்கமான ஜனநாயகத்தின் விளைவுப்பொருட்கள் எந்த அடிப்படையில் இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் ! சற்று இது பற்றி சிந்திப்போமா?
(தொடரும்.. )
அபு ருக்சான் ..
23/07/2012

முஸ்அப் இப்னு உமைர் (ரலி)

முஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி .ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனாவை இஸ்லாத்தின் அரசியல் இராஜ தந்திர செயல் நிலமாக மாற்றிய மிக நுணுக்கமான இஸ்லாமிய பிரச்சாரத்தை வெற்றிகரமாக செய்த ஒரு சித்தாந்தப் போராளி இவர் உண்மையில் இவரின் மனோநிலையில் இருந்து நாம் சிந்தித்துப் பார்க்கும் போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களின் ஆச்சரியமான ஆட்தெரிவு பற்றி நாம் அதிசயிக்க வேண்டியுள்ளது .

ஒரு இலட்சிய வாத போராட்டம் தனது இலக்கின் செயட்கட்ட வடிவத்தை அடையாத வரை
அது கற்பனா வாதமே . இந்த கற்பனா வாதம் நகைக்கப்படும் ,பரிகாசிக்கப்படும் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களுக்கும் இந்நிலை ஏற்பட்டது .
உண்மையில் சித்தாந்தப்போர் என்பது ஆயுதப் போர் போன்றதல்ல . இங்கு இரு தரப்பு இரத்தம் சிந்தல் இருக்காது .
பலமான எதிரியின் மத்தியிலும் பலவீனமான குரலாகவேனும் சித்தாந்தப்போர் தொடுக்கப் பட்டுக்கொண்டே இருக்கும் . தனது குரல்வளையை எதிரியின் கால்கள் நசிக்கும் போதும் தனது இலட்சிய வாதத்தின் முனகலாகத்தான் சித்தாந்தப்போராளியின் வலி கூட வெளிப்படும் .

சமரச முற்றுகையும் , துரோகத்தை வேண்டிய விலை பேசலும் இங்கு சர்வ சாதாரணம் . சிலநேரம் இவை மரணத்தை விட கொடியது .
விரும்பி துரோகியாவதும் , சூழ்நிலையால் துரோகி ஆவதும் என துரோக நுளைவிட்கு இருவழி இருந்தாலும் விளைவு ஒன்றுதான் ஒருவன் தானே தூக்கில் தொங்குவதும் , பலாத்காரமாக தொங்கவிடப்படுவதும் மரணம் எனும் ஒரே விளைவைத்தான் தரும் !

ஒரு சித்தந்தப்போராளியின் உண்மையான மரணம் அவனது கழுத்து துண்டாடப்படுவதல்ல ! மாறாக அவனது கருத்து துண்டாடப்படுவது ! முஸ் அப் இப்னு உமைர் (ரலி ) உஹுதில் சஹீதாக்கப்பட்டது நாம் அறிந்த விடயம் ஆனால் அதற்கு
முன்னே அவர் தனது கருத்து வலிமையால் விதையாகிவிட்ட உண்மை உணரப் பட்டது மிக சொற்பமே !

இப்போது இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் ! வீரர்களின் புகழிடமல்ல !

இப்போது இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !
.............................................................
ஜனநாயக விலாசத்தில் முதலாளித்துவ இஸ்லாம் !
மூக்கை நுழைத்து நவ காலனித்துவத்திட்கு 
'வெல் கம் 'சொன்னபோதே !
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !
சிலுவை நிழலில் 'பெப்சி ' பருகி 
'ஷரீஆ ' வழியில் 'டிபென்ஸ் லைன் 'போட்டு 
பரம்பரை முடி காக்க 'சலப்' பெயர் சொன்னபோதே !
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !
சண்டாளன் யூதனிடம் சமரசம் பேசி
'சரண்டர் ' பொலிசியில் வாழச்சொன்னபோதே !
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !
பாலஸ்தீன் முதல் பர்மா வரை
சிரியா முதல் சீனா வரை
கொலைக்களம் தொடர்ந்த போதும் !
காஸ்மீரின் கண்ணீரில் இந்துத்துவம்
பெருமிதம் கொண்ட போதும்
வளம் பலம் இருந்தும் என் உம்மாவே !
இஸ்லாத்தில் தீர்வை தேடாமல்
யூ .என் .இடம் காது சொறியும் உன்போன்றோர்
இருக்கும் வரை
இஸ்லாம் கோழைகளின் மார்க்கம் !
வீரர்களின் புகழிடமல்ல !

'குப்ரிய' ஏகாதிபத்தியத்தின் ஆபத்தான எதிர்பார்ப்பும் அதில் வீழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லீம் உம்மாவும் !

காகம் இருக்க பனம்பழம் விழுந்ததா ? பனம்பழத்தை வீழ்த்துவதற்காகவே காகம் இருந்ததா ? எனும் வினாவிற்கு இங்கு விடை தெரியாதது தான் ஆனால் இந்தத்தடவையும் வழமைபோலவே குறிதவறாமல் முஸ்லீம்களின் தலையிலேயே விழுந்துள்ளது ! எனும் அடிப்படையில் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் இந்த விடயத்தை உற்று நோக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது .

நான் சொல்ல வருவது 'அப்பாவி முஸ்லீம்கள் ' எனும் அந்த திரைப்படம் பற்றியதுதான் . 'நேடோ ' கூட்டு என்பது' யுனைடட் ஸ்டேட் 'இன் இராணுவ ஆதிக்கத்தின் ஒரு வல்லமையாகத்தான் இதுவரை புரிந்துகொண்டது . ஆனால் இத்தகு கீழ்த்தர திரைப்பட விவகாரத்திலும் இந்த கூட்டின் ஆதிக்கம் அவர்களின் செயல்கள் மூலம் உணர்த்தப்படுகின்றது . கடந்த 19/௦09/2012 அன்று பிரான்சின் 'சார்லி ஹெப்டோ ' எனும் பத்திரிகை சுமார் இருபது கேலிச்சித்திரங்களை சர்வ சாதாரணமாக எமது தூய நபி (ஸல் ) அவர்களையும் , தமது எதிப்புணர்வை அந்த திரைப்படம் தொடர்பில் வெளிக்காட்டும் முஸ்லீம் உம்மாவை நோக்கியும் ஏவி தமது பங்கை கச்சிதமாக செய்துள்ளது.

அதாவது இங்கு முஸ்லீம்களின் ஆழமான அகீதா மட்டத்தை தவிடு பொடியாக்கும் அமெரிக்க மீடியா ஏவுகணைக்கு உதவியாக பிரான்சின் ஊடகத்துறை குறிதவறாமல் 'ஆட்டிலறி' தாக்குதலை
நடாத்தியுள்ளது . வழமையிலேயே ஒரு 'விசன் , மிசன் ' அற்று இத்தகு குறிகளை இவர்கள் இடுவதில்லை எனும் அடிப்படையில் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன ? என்பது பற்றி விடை தேடுவது முஸ்லீம்களாகிய எமது
கடமையாகின்றது .

சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன் "The davincy code" எனும் 'ஹோலிவூட்' திரைப்படம் ஓன்று வெளியானதை நீங்கள்
அறிந்திருப்பீர்கள் . மரியமின் மகன் ஈசா (அலை ) தொடர்பில் கிறிஸ்தவ உலகத்தின் நம்பிக்கை கோட்பாட்டின் மீது பேரடியாக அது வெளிவந்திருந்தது . அதாவது "லியனாடோ டாவின்சி' வரைந்த இயேசுவின்
இறுதி இராப்போசனம் எனும் ஓவியத்தை ஆதாரமாக்கி அதில் வரக்கூடிய
'மரகதலோனா மரியாள் ' எனும் முன்னாள் விபச்சாரியும் பின் ஈசா(அலை) இன் சீடராகவும் மாறிய பெண்ணுக்கும் ஈசா(அலை)க்கும் இடையில் பாலியல் ரீதியான காதல் உறவு இருந்ததாகவும் (அல்லாஹ் (சுப) எம்மை பாதுகாக்க வேண்டும் ) அதன் விளைவாக ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும் அதன் மூலம் ஈசா (அலை ) அவர்களின் சந்ததி தற்போதும்
பூமியில் வாழ்வதாகவும் அந்த திரைப்படம் குறிப்பிட்டது ! கிறிஸ்தவ உலகின் அதியுயர் மதகுரு குழு ஓன்று வரலாற்று நெடுகிலும் இத்தடயங்களை எத்தகு விலை கொடுத்தும் அழிப்பதாகவும். அந்த வடிகட்டளிலும் தப்பிப்பிழைத்து ஈசா (அலை ) அவர்களின் சந்ததி தற்போதும் வாழ்வதாகவும் அது காட்டி நின்றது .
இங்கு விடயம் என்னவென்றால் அத்திரைப்படம் வெளியான காலப்பகுதியில் கிறிஸ்தவ உலகம் கொந்தளித்தது . அதற்கு எதிராக பல போராட்ட முன்னெடுப்புகளை செய்தது .இருந்தும் கருத்துச்சுதந்திரம் , ஊடகச்சுதந்திரம் எனும் சிந்தனா தரத்தின் கீழ் அவர்கள் தமது வழமையான பாணியில் சமரசமானார்கள் ! இங்கு நான் பேச வருவது முஸ்லீம் உலகும் இத்தகு சிந்தனா வாதத்தின் தரத்தில் இயலாமை எனும் அழுத்தத்தின் மூலம் வீழ்த்தப்படும் அபாயம் தெரிகின்றது . அதாவது இங்கு
அவ்வாறு வெளியிடுவது அவர்கள் சுதந்திரம் ,நீங்கள் போராடுவது உங்கள் உரிமை ஆனாலும் அந்த போராட்டத்திற்கான விதிமுறை இதுதான் என
ஒரு "அஜெண்டா" விற்குள் முஸ்லீம் உம்மாவை சிக்கவைப்பதன் மூலம் இதுதான் தற்போதைய உலகம் எனும் கருத்துமாயையில் சுழல விடுவது !

இங்கு சமரசம் எனும் அரசியல் இஸ்லாமிய மயமாக்கப்பட்டு "ஷரீயா முதல் அகீதா" வரை ஒரு விவாதப்பொருள்தான் எனும் வாழ்வு
ஏற்கனவே சிதைந்துள்ள முஸ்லீம் உலகிலும் திணிக்க எத்தனிக்கப்படுகின்றது! அல்லது அவர்கள் அவ்வாறுதான் பேசுவார்கள் ,செய்வார்கள் நாம் எமது நம்பிக்கையின்படி சரியாக இருப்போம் எனும் "டோன்ட் கேயார் லைப் செட்டப் " நோக்கி முஸ்லீம் உம்மாவை இழுத்து வருவது . அல்லாஹ்(சுப ) எம்மை பாதுகாக்க வேண்டும்.

சுவர்க்கம் = நரகமா ?!!!

#மனித சிந்தனை + ஜனநாயக அரசியல் கொள்கை + மனித வளம் + இராணுவ + தொழில்நுட்ப + பொருளாதார வளம் = முதலாளித்துவ ஏகாதிபத்திய அதிகாரம் 

#வஹி வழிகாட்டல் + வஹிவழி கிலாபா அரசற்ற நிலை + (சிதறிய) மனிதவளம் +( சிதறிய) இராணுவ வலிமை +( சிதறிய) பொருளாதார வளம் + (வசதி இருந்தும் கட்டமைக்கப்படாத) தொழில் நுட்பவளம் = இன்றைய முஸ்லீம் உம்மா 
இதுதான் இன்றைய உலகில் மோதிக்கொள்ளும் இரண்டுஎன்றுமே இணையமுடியாத சமாந்திரக்கோடுகள். நிரந்தர எதிர்நிலையும் தவிர்க்கமுடியாத மோதலும் இங்கு தொடரும் விதிகள் ! இப்போது சற்று வித்தியாசமாக ஒரு குருக்கோடியை வைத்து
சிலர் அதை இணைக்கப்பார்க்கிறார்கள்! அது ஜனநாயக அரசியல் ! இந்த கணித சூத்திரத்தின் படி
# ஒத்த கோணங்கள் சமன்!
# ஓன்று விட்ட கோணங்கள் சமன்!
*** ஆகவே இஸ்லாமிய அரசியல் = ஜனநாயக அரசியல் !!!!
*** கிலாபா அரசற்ற நிலையில் இந்த முஸ்லீம் அனாதைகளுக்கு முதலாளித்துவத்தின்
பெருந்தன்மையான நிவாரணம் ! எதற்காக ?!
*** முஸ்லீம்களாகிய நாங்கள் அவர்களாகவா ??!!
*** ஆகவே சுவர்க்கம் = நரகமா ?!!!

வெற்றியாக வர்ணிக்கப் படும் வரலாற்றுப் படுகொலைகளில் இதோ ஒரு துளி!

'கிலேட்டின் 'எனும் தலையை வெட்டி வேறாக்கும் கொலைக்கருவிகள் அந்த அந்தலூசிய (ஸ்பெயின் ) முஸ்லீம்கள் முன் வைக்கப் பட்டுள்ளன .இந்த சம்பவம் நடப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் வரலாற்றின் ஒரு காலப்பகுதியில் முஸ்லீம்களால் அந்தப் பகுதி வெற்றி கொள்ளப்பட்ட போது தங்களது வீடுகளுக்குள் இருந்து தங்கள் பெண்களோடும் குழந்தைகளோடும் அடுத்து என்ன நடக்கும் என அஞ்சியவர்களாக இருந்தனர் ,தங்கள் மரணத்தில் இருந்து தப்புவதற்கு எதையும் விலைகொடுக்கவும் அவர்கள் தயாராய் இருந்தார்கள் .
அதே போல அதே கிறிஸ்தவ மேலாதிக்கத்தில் அந்தலூஸ் மீண்டும்
வந்தபோது முஸ்லீம்கள் மரணத்தின் முன் விலை பேசப் பட்டார்கள் . அந்த விலை இஸ்லாத்தை விடுவது அல்லது
தலை வெட்டி வேறாக்கப் பட்டகொடூர மரணம் ! இவ்வளவிற்கும் அவர்கள் அரேபியாவில் இருந்து வந்த அரபிகளாக
இருக்க வில்லை .அதே நிலத்தில் இஸ்லாத்தை தழுவிய முன்னாள் கிறிஸ்தவர்கள் .
இந்த நிலையில் இருந்து வரலாற்றை சற்று பின்னோக்கிச் சென்றால் இஸ்லாம் இந்த ஸ்பெயினில் நுழைந்ததே சற்று விசித்திரமான சம்பவம் தான் கிலாபா ஆட்சியின் தொடு தூரத்தில் ஸ்பெயின் இருக்கவில்லை .அவசரமாக அங்கு நுழையும் தேவையும் இருக்கவில்லை . அத்தோடு ஸ்பெயினை பிடித்து பாதுகாப்பதென்பதே அந்த சூழ்நிலையில்' ஹை ரிஸ்க் '' டிபென்ஸ் லைன் கட்டவுட் ' என்பதே அங்கு போடமுடியாது !
அப்படி அவசரமாக நுழையும் தேவை என்ன ?
சம்பவம் கிறிஸ்தவத்தின் இரண்டு பிரிவுகளுக்கிடையே நடந்த சச்சரவில்
ஒரு பிரிவு இன்னொரு பிரிவின் மீது அத்துமீறி அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டது . நசுக்கப் பட்டவர்கள் இஸ்லாமிய கிலாபா அரசிடம் உதவி கேட்டனர் . அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் விளைவே அந்த அவசர
படையெடுப்பு ; அதாவது மனித நேயம் .சரி பிடித்தபின் அநியாயம் செய்தவர்களை தண்டித்தார்களா ? அதுவும் இல்லை
ஒரு சிறந்த அமைதி காப்பு நடவடிக்கையாகவே அது அமைந்தது . இன்றைய U .N ஒரு குப்பை என தனது செயலின் மூலம் இஸ்லாம் என்றோ செயலில் காட்டிவிட்டது .கட்டாய ,நிர்ப்பந்த மத மாற்றங்கள் அங்கு நடக்கவே இல்லை .
இஸ்லாமிய படை அந்தலூசியாவில் (ஸ்பெயினில் ) நுழைந்தபோது எதிர் தரப்பின் குடும்பங்கள் அஞ்சி நடுங்கியவர்களாக இருந்தார்கள் குறிப்பாக பெண்கள் . . காரணம் வழமையான இராணுவங்கள் போல் இஸ்லாமிய இராணுவமும் தம் மீது அத்து மீறும் என்ற அச்சமே .ஆனால் நடந்த கதை வேறு
அந்த சத்தியத்தின் காவல் படை ஒழுக்கத்தின் உருவமாகவே அங்கு நுழைந்தது .அந்த கவர்ச்சியின் ஈர்ப்பே வகை தொகை இன்றி பலரை இஸ்லாத்தின் மீது பார்வை ஏற்படுத்த வைத்தது .
அவ்வாறு இஸ்லாத்தில் நுழைந்தவர்களின் சந்ததியே 'கிலட்டின்' கொலை
கருவி முன் இஸ்லாத்தை விடுவதா ? மரணத்தை தேர்வதா ? என்ற இரு தேர்வுகளுக்கு மத்தியில் கிறிஸ்தவ திருச் சபை நீதி மன்றத்தால் தீர்பளிக்கப் பட்டிருந்தார்கள் . அந்த உறுதி மிக்க முஸ்லீம்கள் தேர்வு செய்தது இஸ்லாத்தோடு
மரணத்தையே . அந்த சம்பவம் ஒரு படுகொலையாக கிறிஸ்தவ உலகம் இன்று வரை ஏற்றுக்கொள்ள வில்லை .
அப்படி இருக்க இந்த' சீசனல் ' யூதப் படுகொலைகளை மட்டும் ஏற்றுக்கொள்ளுமா என்ன .

பாலஸ்தீன் தீன் நாட்டவர்கள்!!!

பாலஸ்தீன்
காசாவை சேர்ந்தவர் நாம் 
தீன்மீது உறுதி உள்ளவர்கள் 

எங்கள் உயிர்களை கொண்டு குவித்தாலும் சரி 
ஒன்றும் அறியா பாலகர்களை 
அழித்தாலும் சரி
கொடுமையிலும் கொடுமைசெய்தாலும் சரி
துண்டு துண்டாக வெட்டி
அங்கம் அங்கமாகப் போட்டாலும் சரி
நாம் பயப்பட மாட்டோம்

இஸ்ரவேலர்களே
யூத ஷைத்தாங்களே
நீங்கள் எங்கள் உயிர்களின் குருதிகளை
உறிஞ்சிக் குடிக்கலாம்
சதைகளை
ருசி பார்க்கலாம்

ஆனால்
எங்கள் .பாலஸ்தீன் மக்களின்
உள்ளங்களில்
ஆழமாய் ஊன்றி இருக்கும்
தீனை மட்டும்
உங்களால்
அழித்து நொறுக்கவே முடியாது

நாம்
பாலஸ்தீன் நாட்டவர்கள்
தீன் நாட்டவர்கள்

எங்கள் தீன் வாழையடி வாழையாய்
இன்மையிலும் மறுமையிலும்
வளரும் தொடரும்

எங்களுக்காக யாரும் அழவேண்டாம்
படைத்தவனை நாடிப் போகின்றோம்

மரணத்துக்கு அஞ்சி வாழும் சமூகம் அல்ல நாம்
அல்லாஹு அக்பர்

இது சத்தியத்தின் முகவரியில் இருந்து .....

இது சத்தியத்தின் முகவரியில் இருந்து .....

அநியாயக்காரர்கள் இட நினைக்கும் 
அராஜக வாய்ப் பூட்டுகள் - இனியும் 
கொந்தளித்துள்ள சத்தியப் 
புறப்பாடுகளை முடக்கி விடாது .

மனித அடிமை சாசனத்தின் நிழலில் - நீ
நேசக்கரமாய் நீட்டி இணைக்க நினைக்கும்
நாசகார சுயநல பாலத்தில் - இனியும்
பயணித்திட நான் குருட்டுப் பயணியல்ல .

நீ யதார்த்தமாய் காட்டும 'மெகா சீரியலில் '
நேற்றைய பாத்திரம் - நான் உனக்கு 'எனமி '
இன்று என்னையே 'ஹீரோவாக்கி ' - நீ தரும்
'திமோ கிரசி' டைட்டிலில் ' உனக்கு கௌரவ வேடமா ?

சரி இந்தக் கதையில் யார் வில்லன் ?
சுத்தி வளைத்து எம் அடி மடியில் வருடுவது
பழமை வாத 'பேனரில் ' நீ இஸ்லாத்தை
இந்த முஸ்லிமிற்கே எதிரியாக்கவா ? 

வீழ்ந்தால் 'அட்வான்ஸ்' சுவனத்தில் நாமும் பச்சைக் கிளிகள்



கவனில் சுமந்த சிறு கல்லுக்கே அஞ்சி 

கவச உடை தரித்த யகூதிப் படையே ? - 

இறை சாபம் சுமந்த து(ர்)ப்பாக்கியம் நீ !

தர்மத்தை அநீதத்தால் கௌவும் அநாகரீக சூதே நீ 

மறுமை வரை ஜிஹாதை உயிர்பிக்கவே நாம் 

ஜன்னத்தின் ஒரு துளி நிழலின் சுகத்திற்காய் 

சஹாதத்தின் தீராத வேட்கையோடு மரணத்தை

வெல்ல துடிப்பவர்கள் நாம் !


இந்த உறுதி தளரா யுத்தத்தில் எம் ரப்புவின்


திருப்திக்காய் எம் மீதான தாகூதிய வேட்டுக்களால்


ஆத் மார்த்தமாய் அவனை சந்திப்பதற்காய்


என்றுமே ஆவலோடுள்ளோம் !


வாழ்ந்தால் இஸ்லாத்தின் நிழலில் கண்ணியத்தோடு வாழ்வு


வீழ்ந்தால் 'அட்வான்ஸ்' சுவனத்தில் நாமும்


பச்சைக் கிளிகள் . ' இன்ஷா அல்லாஹ்


அல்லாஹு அக்பர் '