Sep 30, 2013

அரபா தினம்!!!

அரபாதினம் உலகிற்கு வழங்கும் மிகப்பெரிய செய்தி - சகோதரத்துவம்! 

இஸ்லாம் சாதி நிறம் குலம் கோத்திரம் தேசியவாதம் என்பவற்றின் எல்லைக்கு அப்பால் ஈமானிய பிணைப்பால் இணைக்கும் அருமையான வழிகாட்டி! 

இன்று உலக முஸ்லிம்கள் பெறவேண்டிய பாடமும் தேவையும் இந்த ஒற்றுமைதான்! 

இந்த பலம் எமக்கு நிரந்தரமாக வரவேண்டும்! அவ்வாறு வருவதற்கு 57 தலைமைகள் நபி வழியில் ஒரு உலகத்தலைமையாக மாறவேண்டும்! 

அப்போதுதான் அனைத்துலக முஸ்லிம்களது மீட்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் இஸ்லாம் முழுமையாக சகல துறைகளிலும் அமுலாக்கப்பட்டு உலகிற்கு தலைமைத்துவ மொடலை வழங்கி இஸ்லாம் தற்போது ஆட்டம் கண்டுள்ள முதலாளித்துவ தலைமையை மாற்றீடு செய்யும்!

முஸ்லிம்களை ஏன் "பயங்கரவாதிகளாக" சித்தரிக்க முற்படுகிறார்கள்?

அவர்களது பிழையான நம்பிக்கை மற்றும் வாழ்கை முறைக்கு தலைசாய்க்க மறுக்கும் முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரிகள், பயங்கரவாதிகள்! 

இன்று உலகினது வளங்களின் பெரும் பகுதியை கொண்ட நாடுகள் முஸ்லிம் நாடுகள். அதுவே இவர்களது ஏற்றுமதிச் சந்தைகளாகவும் உள்ளது. 

இஸ்லாம் எழுச்சிபெற்று அது ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுமானால் அவர்கள் அஞ்சும் விடயங்கள்:

1. “முஸ்லிம் நாடுகளது வளங்களை சூரையாட முடியாது”.

2. “முஸ்லிம் நாடுகளது நுகர்வுச் சந்தைகளை கட்டுப்படுத்த முடியாது”.

3. “அவர்களது வட்டிப் பொருளாதார ஒழுங்கை முஸ்லிம் நாடுகளில் அமுல்படுத் முடியாது”.

4. “அவர்களது பொருளியல் ஒழுங்கிற்கும் அவர்களது வாழ்க்கை முறைக்கும் அச்சுறுத்தலாக இஸ்லாம் மாறிவிடும்”.

இந்த அச்சம் அவர்களை நிம்மதியிழக்கச் செய்கிறது. அதனால் அந்த பயங்கரத்தை எண்ணி “பயங்கரவாதிகள்” என முஸ்லிம்களுக்கு பெயர்சூட்டுகிறார்கள்.

மேலும், மனித சட்டங்களை பின்பற்ற மறுத்து இறை சட்டங்களை அமுல்படுத்த முற்படும் முஸ்லிமகளை "காட்டுமிராண்டிகளாக" சித்தரிக்க முற்படுகிறார்கள்!

பெண்களை போகப்பொருளாக காட்சிப்படுத்தி அவர்களை உசுப்பேற்றி சுரண்டிவாழும் மேற்கத்தேய வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக முஸ்லிம்களது ஆடைக்கலாச்சாரத்தை பார்கிறார்கள்.

தனிமனித சுதந்திரம் எனும் பெயரில் சீரழித்துள்ள மேற்கினது சமூகவாழ்வினது அச்சுறுத்தலாக முஸ்லிம்களது வாழ்க்கைமுறையையும் அவர்களது பண்பாட்டு விழுமியங்களையும் கண்டு அதனை ஒரு அச்சுறுத்தலான மாற்றீட்டு வாழ்க்கை முறையாக உணர்கிறார்கள்.

இதனல் "அபாயாவிற்கு எதிரான" மற்றும் "சரீஆ வாழ்வுக்கு எதிரான" கருத்துக்களையும் பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டு முஸ்லிம்களது வாழ்வை கொச்சைப்படுத்த முற்படுகிறார்கள்.

இத்தகைய குற்றச்சாட்டுக்களைக் கொண்டு அனைத்து குப்ர் தேசங்களையும் ஒன்று திரட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்க துடிக்கிறது ஏகாதிபத்திய அமெரிக்கா.

ஆனால் இவர்கள் எவ்வளவுதான் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளியை பூரணப்படுத்தியே தீ ருவான்.

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.” (அல்குர்ஆன்- 61:8)

இவ்வாறான விஷமிகளைக் குறித்து அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கிறான்

“நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்” (அல்குர்ஆன்-21:18)

தன்னை ரப்பாக பிரகடன்ப்படுத்தி இஸ்லாத்தின் எழுச்சியை தடைசெய்ய முற்படும் Criminals பற்றி அல்குர்ஆன் இவ்வாறு அடையாளப்படுத்துகிறது.

அபரிமிதமான செல்வமும் அதிகாரமும் வழங்கப்படும் போது ஒரு மனிதன் தன்னை ரப்பாக பிரகடனப்படுத்த ஆரம்பித்துவிடுவான்.

அத்தகையவன் மனோ இச்சைகளை பின்பற்றுவதுடன் அல்லாஹ்வுடைய சட்டம் ஒழுங்கு நீதி நிலைத்திடாதிருக்க உழைப்பான்.

மனிதச் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தி மனித சமூகத்தை ஜாஹிலிய்ய சமூகமாக வாழவழிவகுப்பான்.

உண்மையை மறைத்து பொய்புரட்டுக்களை வாழவைப்பான்.

இத்தகையவன் சர்வாதிகாரியாக தொழிற்பட ஆரம்பிப்பான்.

அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாம் உலகில் நிலைபெறமால் தடுப்பான்.

அத்துடன் அவன் எல்லாவகையான குற்றங்களையும் செய்யும் ஒரு கிறிமினலாக தொழிற்படுவான்.

இஸ்லாம் எழுச்சிபெறக் கூடாது என்று தொழிற்படும் அத்தகையவர்களைப் பற்றி சூறா அல் கலமில் அல்லாஹ் 9 தன்மைகளைகொண்டு அடையாளப் படுத்துகிறான்.

சூறா அல்கலமின் வசனங்கள் (68: 9-13) இவற்றைத் தெளிவுபடுத்துகிறது. 


1. பொய்யர்கள் (வாக்குறுதியகள் அழிப்பான் ஆனால் மாறுசெய்வான்)
2. மிகவும் இழிந்தவனாக தொழிற்படுவான்.
3. அவதூறுகூறி இழிவுபடுத்துவான்
4. பிளவுகளைத் தூண்டுவான்.
5. இஸ்லாம் எழுச்சிபெறுவதனை சகலவழிகளிலும் தடைசெய்வான்.
6. அடக்குமுறையை கையாளுவான்
7. பாவியாக இருப்பான்.
8. துஷ்டனான இருப்பான்
9. பிறப்பில் இழிவடைந்திருப்பான்

Sep 28, 2013

கிலாஃபா குறித்த சில இந்திய உலமாக்களின் கருத்துக்கள்

ஏராளமான உலமாக்களும் பொதுமக்களும் கலந்துகொண்ட 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 5,6 ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற கிலாஃபத்திற்கான ஆதரவு மாநாட்டில் பல்வேறு உலமாக்கள் கலந்து கொண்டு அங்கே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில கீழ்வருமாறு:-

1. கிலாஃபா தொடர்பில் மக்கள் அபிப்பிராயத்தை ஏற்படுத்த உலமாக்கள் பாடுபட வேண்டும்.

2. கிலாஃபத்திற்கு எதிரான அறிஞர்கள் எனப்படுவோரும், முனாஃபிக்குகளும் புறக்கணிக்கப்படவேண்டும்.

3. கிலாஃபா பற்றி பேசவும் எழுதவும் தங்கள் உயிரை அர்ப்பணிக்குமாறும்இ தம்மை பின்பற்றுபவர்களிடம் உலமாக்கள் வாக்குறுதி வாங்க வேண்டும்.

4. அரசியலமைப்பு ரீதியிலான தேர்தல்களில் இருந்து முஸ்லிம்கள் விலகியிருக்க வேண்டும்.

---------------------------------

டெல்லியில் 1920 நவம்பர் 19, 20 ம் தேதிகளில் இடம்பெற்ற ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தினுடைய அகில இந்திய மாநாட்டில் கிலாஃபத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இயற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து சில வரிகள்:-

“ஆங்கிலேயர்களே முஸ்லிம்களின் பிரதான எதிரிகள், எனவே அவர்களை எதிர்ப்பது ஃபர்ளாகும்.

உம்மத்தையும் கிலாஃபத்தையும் பாதுகாப்பது மிகத்தெளிவான இஸ்லாமிய கடமையாகும்.

எனவே இந்த நாட்டிலுள்ள சகோதரர்கள் இதற்காக உதவிகளையும், ஒத்துழைப்பினையும் வழங்குவார்களேயானால் அதற்காக அவர்கள் நன்றிக்குரியவர்கள்”

------------------------------------------------

ஆங்கிலேயருக்கு எதிராக அழைப்பு விடுத்ததற்காகவும் உஸ்மானிய கிலாஃபத்திற்கு ஆதரவாக அழைப்புவிடுத்ததற்காகவும் 1911 லிருந்து 1915 வரை நான்கு வருடங்கள் சிறையில் கழித்தவரும் கிலாஃபத் இயக்கத்தை நிறுவியர்களில் ஒருவருமான மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் கூறுகிறார்கள்:-

“கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்டதால் இந்திய முஸ்லிம்கள் மனதில் என்னன்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது கணிக்க இயலாத ஒன்றாகும்.

அது இஸ்லாத்திற்கும் அதன் நாகரிகத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

இஸ்லாமிய ஒற்றுமைக்கு அடையாளமாக கருதப்பட்ட மதிப்புமிக்க அமைப்பை தகர்ப்பது இஸ்லாத்தில் பிரிவினையை உண்டாக்கும்.

தனித்துவமிக்க இந்த அமைப்பை தகர்ப்பது புரட்சிக்கும் ஒழுங்கின்மைக்கும் கொண்டு சென்றுவிடுமோ என்று அச்சப்படுகின்றேன்”

(முஹம்மது அலி ஜவ்ஹர் … டைம்ஸ், மார்ச் 4, 1924, துருக்கியில் கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்டதற்கு அடுத்த நாள்)

----------------------------------------------

மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1920-ல் எழுதிய மஸ்ல- ஏ -கிலாஃபத் என்னும் நூலில் கூறியிருப்பதாவது:-

“கிலாஃபா இல்லாமல் இஸ்லாத்தின் இருப்பு சாத்தியமில்லை.

இந்திய முஸ்லிம்கள் தங்களுடைய எல்லாவிதமான சக்திகளையும் முயற்சியும் கொண்டு இதற்காக பாடுபடவேண்டும்..

இஸ்லாத்தில் இரண்டு வகை அஹ்காம் ஷரிஆக்கள் இருக்கின்றன.

ஒன்று தனிப்பட்ட, ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய ஃபர்ளுகளும் வாஜிப்களுமாகும்.

மற்றையது நிலங்களின் விரிவாக்கம், அரசியல், பொருளாதார சட்டங்கள் போன்ற தனிமனித தொடர்பில்லாத ஒட்டுமொத்த உம்மத் தொடர்புடைய சட்டங்கள்”

-------------------------------------------------

ஷைகுல் ஹிந்த் மவுலானா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி (ரஹ்) அவர்கள் மால்டா சிறையில் சிறைவாசம் அனுபவித்துவிட்டு 1920 ம் ஆண்டு இந்தியா திரும்பிய காலகட்டத்தில் வெளியிட்ட ஃபத்வா இன்றைய நிலைக்குக்குக்கூட பொருத்தமாக காணப்படுகிறது. அந்த ஃபத்வாவின் சில வரிகள்:-

“இஸ்லாத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்க எதிரிகள் சகல வழிகளையும் கையாண்டுவிட்டனர்.
நபி(ஸல்)அவர்கள், ஸஹாபாக்கள் மற்றும் அதற்குப்பின் வந்தவர்களின் கடுமையான தியாகத்தின் விளைவாக வெற்றி கொள்ளப்பட்ட ஈராக், பலஸ்தீன், சிரியா போன்ற பிரதேசங்கள் மீண்டும் எதிரிகளின் இலக்காகியுள்ளன.

கிலாஃபத்தின் மரியாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. பூமியிலுள்ள முஸ்லிம் உம்மத்தை ஒன்றிணைக்கவேண்டிய, இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டிய, முஸ்லிம்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய அல்லாஹ்வின் வசனங்களை நிலைநாட்ட வேண்டிய கலீஃபா தற்போது எதிரிகளால் சூழப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இஸ்லாத்தின் கொடி கீழிறங்கி பறக்கிறது.

ஹஸ்ரத் அபூ உபைதா(ரலி), சஅத் பின் அபிவக்காஸ்(ரலி), காலித் பின் வலீத்(ரலி), அபூஅய்யூப் அல்அன்சாரி(ரலி) போன்றோரின் ஆத்மாக்கள் இன்று அமைதியடையாமல் உள்ளன. முஸ்லிம்கள் தமது மதிப்பையும், கௌரவத்தையும்,சுயமரியாதையும் இழந்தமையே இதற்கு காரணமாகும். வீரமும், மார்க்கப்பற்றுமே அவர்களது விருப்பமாகவும் செல்வமாகவும் இருந்தது. கவனயீனத்தாலும், இலட்சியமின்மையாலும் முஸ்லிம்கள் இதனை இழந்துவிட்டார்கள்…

இஸ்லாத்தின் புதல்வர்களே! இஸ்லாமிய உலகை எரித்து கிலாஃபத்தை தீயிட்ட இடியும் நெருப்பும் அரபிகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் பெறப்பட்டது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

முஸ்லிம் தேசங்களை கட்டுப்படுத்த கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய அதிகாரத்தையும் வளத்தையும் உங்களின் கடும் உழைப்பிலிருந்தே
அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

மேற்கத்திய கிறிஸ்தவர்களுடன் ஒன்று சேர்ந்து செயல்படுவதன் விளைவுகளை அறியாத முட்டாள் முஸ்லீம்கள் யாரும் இருக்கிறார்களா?

” [ From Fatwa of Moulana Mahmood Hasan on 16th Safar 1339 Hijri, Corresponding to October 29th, 1920, Georgian year, The Prisoners of Malta, (Asira’h - e- Malta), Moulana Syed Muhammed Mian, Jamiat Ulama- e- Hind, English edition, page 78-79 ]

Sep 27, 2013

சிரியாவில் போராடும் பல படைப் பிரிவினர் ஒன்றிணைந்து ஒரு அறிவித்தலை விடுத்துள்ளனர்.

சிரியாவில் போராடும் பல படைப் பிரிவினர் ஒன்றிணைந்து ஒரு அறிவித்தலை விடுத்துள்ளனர்.

அதன் சாராம்சம் கீழ் வருமாறு :

1. சிரியாவில் போராடும் ராணுவ பிரிவினரும், சிவிலியன் பிரிவினரும் ஒரு இஸ்லாமிய கட்டமைபினுல்லேயே செயல்பட வேண்டும்.

2. ஷரியா சட்டம் மட்டுமே நாட்டு சட்டத்தின் மூலாதாரமாக கொள்ளப்படவேண்டும்.

3. சிரிய மண்ணுக்கு புரத்தேயிருந்து, மேற்கத்திய நாடுகளுடனும், அதன் வாள்களுடனும் இணைந்து சதி செய்யும் எந்த அமைப்பும் தம்மை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. அவ் வமைப்புகளை நாம் அங்கீகரிப்பதும் இல்லை.

முடிவாக, நமக்கு மத்தியில் மோதல்களையும் சச்சரவுகளையும் தடுக்க வேண்டும்


சிரியாவில் அமெரிக்காவின் நிலைப்பாடு

சிரியாவில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? 
இன் நிலைப்பாட்டை எது நிர்ணயிக்கின்றது ?

இது அமெரிக்காவின் பொதுவான மத்திய கிழக்கு நாடுகள் குறித்த நிலைப்பாட்டை விட எவ்வாறு வேறுபடுகின்றது ?

அஹ்மத் அல்-கஸ்ஸஸ் விளக்கம் அளிக்கின்றார்.

சிரிய குடும்பத்திற்கு கோழி கூண்டொன்றில் அடைக்களம் புக வேண்டிய அவல நிலை!!!!


ஓ முஸ்லிம் உம்மத்தே! 

லெபனானில் கோழி கூண்டொன்றில் அடைக்களம் புக வேண்டிய அவல நிலை இந்த சிரிய குடும்பத்திற்கு! 

ஜீரணிக்க முடிகிறதா ? உங்கள் உடன்பிறப்புகளின் இந்த அவலக்காட்சியை!

அல்லாஹ் (சு.த) வின் தீனை மேலோங்கச் செய்ய
தமது குஞ்சுக்குழந்தைகளை கோழிக்கூட்டில் அடைக்கக் கூட தயங்காத இம்மக்களின்
போராட்டத்துக்கு நாம் எவ்விதத்தில் பங்களித்தோம் என்று சிந்தித்தீர்களா ?

அவர்கள் படும் கஷ்டங்களில் எவ்விதத்திலும் பங்கேற்காது, இலகுவில் சுவனம் அடையலாம் என்று எண்ணுகிறீர்களா?


أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
(2 :214)

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 03)



'சோனி' ,காக்கா , முக்கால் , தொப்பி பிரட்டி ,என்ற காரண இடுகுறிப் பெயர்களால் அனேகமாக வடபகுதி தமிழர்களால் அழைக்கப்படும் முஸ்லீம்கள் அந்த 1990 அக்டோபர் மாதம் தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக விடுதலைப் புலிகளால் விரட்டப் பட்டனர் .

இந்த இனத்துடைப்புக்கு புலிகள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை காரணம் சொன்னார்கள் .முஸ்லீம்கள் துரோகிகள் ! காட்டிக் கொடுத்தார்கள் என்றார்கள் ! இந்தக் காரணங்கள் எனக்கு சரியானதாக புரியவில்லை . ஏதோ ஒன்று இடித்தது ?

வட தமிழ் ஈழ எல்லையையும் தென் தமிழ் ஈழ எல்லையையும் பற்றி புரியாமல் , மகசீன் , கொகிங்காண்டில் , பிஸ்டல் கிரிப் , ரிகர் ,எ ய் மின்மர் , பரல் என்ற எல்லைக்குள் நின்று கிளஸ் நிகோ ரைபிளை ஏதோ ஈழம் பெற்றுத்தரும் 'டூளாக' நம்பிக் கொண்டிருக்கும் அவர்களது போராளிக்கே தெரியாத விடயம் அது . எனக்கும் என் சமூகத்துக்கும் மட்டும் எப்படித் தெரியும் !?

ஆழ்ந்த சிந்தனையோடு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப பொழுதுகளை ,அதாவது விடுதலைப் புலிகளின் பாசையில் சொன்னால் முதலாம் கட்ட ஈழப் போருக்குள் நுழைந்தேன் ....

'தந்தனத்தோம் என்று சொல்லியே ... ' என்று ஆரம்பிக்கும் வில்லுப்பாட்டு அனேகமாக எல்லோருக்கும் தெரியும் . விடுதலைப் புலிகளும் ஒரு வில்லுப்பாட்டு ஒலி நாடாவை 1980களில் வெளியிட்டனர் .புராணங்களையும் ,இதிகாசங்களையும் ,ஆன்மீக விளக்கங்களையும் வில்லுப்பாட்டாக கேட்ட தமிழ் மக்களுக்கு இந்த புலிகளின் வில்லுப்பாட்டு சுவையாகவும் ,வித்தியாசமாகவும் இருந்தது .

தமிழ் ஈழம் சம்பந்தமாக சிந்தாந்த விளக்கம் அதில் இருக்கவில்லை . தாக்குதல் , வெறியூட்டல் சம்பந்தமாகவே அந்த அழைப்பு இருந்தது .இலங்கை இராணுவத்தின் மிக கீழ்த்தரமான வன்முறைகள் இத்தகு கள நிலவரத்தை விரும்பும் நிலையில் தமிழ் மக்களை ஆக்கியிருந்தது .

அந்த வில்லுப்பாட்டில் இருந்து வரும் ஒரு கட்டம் இப்படி இருந்தது .புலிகளின் ஒரு கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தை அது இவ்வாறு சொன்னது ..." பிரிகேடியர் ஆரிய பெருமா ஆருயிர் என்று அறியாத நிலையில் வாகனத்தோடு பதினைந்து அடி உயரம் வரை எழுந்து கீழே விழுந்து மாண்டு போனார் " என்ற வசன வரிகள் தமிழ் மக்களை புல்லறிக்க வைத்தது.

ஒரு சிங்கள இராணுவ பிரிகேடியரை சிதற அடிக்கும் தரத்தில் பொடியன் மார் வந்துள்ளனர்! என்ற பெருமிதம் மறுபக்கத்தில் இலங்கை அரசு' பபலோ' கவச வாகனங்களை கொள்வனவு செய்ய தென்னாபிரிக்காவோடு

ஒப்பந்தம் போடப்போகும் யுத்த அரசியல் பற்றி உணர மறுத்தது .இத்தகு பிரச்சார உத்திகளை கொண்டு ஆதரவு ,மற்றும் நிதி தேடும் பலத்த போட்டி அப்போது நிலவியது .

LTTE,TELO,PLOT,EPRLF, EROS, TELA, போன்ற பல இயக்கங்கள் இருந்த அந்த காலப்பகுதியில் TELO இயக்கம் பல படிகள் முன்னேறி சாவகச்சேரி போலீஸ் விசேட அதிரடிப்படை முகாம் மீதான தாக்குதலை வீடியோ பிரதியாக வெளியிட்டது .

ஆங்கில சினிமாவில் மட்டுமே யுத்தம் பார்த்த தமிழர்களுக்கு அதில் வரும் கதாநாயகர்கள் போல் போராளிகள் மாறிக்கொண்டிருந்தனர் . ஆனால் தாம் 'இரத்தக் காட்டேரிகளை , வளர்க்கிறோம் என்பது புரிய வெகுகாலம் எடுக்கவில்லை .

இந்த சூடான இரத்தத்தில் இலாப அறுவடைகளை ஏகாதிபத்திய முதலாளித்துவம் பக்குவமாக பெற்று வந்தது .எப்படி ? இந்த

ஈழத்தின் பெயரில் எழுந்த யுத்த பிரபுத்துவ சாம்ராஜியத்தில் முஸ்லீம் மட்டும் இவர்கள் குறிவைத்துப் பழகும் சராசரி இலக்காக எப்படி மாறினான் ! ?
அடுத்த பதிவில்
இன்ஷா அல்லாஹ் சொல்கிறேன். ( இன்னும் வளரும்...)

'தாகூத்தின் ' அதிகாரத்தின் கீழ் முஸ்லீம் இஸ்லாமிய சாயத்தோடு தங்கி வாழ இதோ ஓர் அறிய வாய்ப்பு !!!



வீரர்களின் மார்க்கத்தில் இருந்தோர் இனி கோழைகளின் புகழிடத்தை தாம் வாழும் இடங்களில் புதுப்புது அர்த்தங்களில் அமைத்துக் கொள்ளலாம் .

சத்தியம் சக்தியாக வாய்ப்பில்லை என்ற எம் ஏகோபித்த முடிவில் ! முஸ்லீம் உம்மத் காலத்தை வீணடித்து கவலைப்படும் நிலை கண்டு, எம் ஏற்பாட்டில் சாக்கடைக்கு சந்தனம் தெளித்து வலிந்தெடுத்து பூசிக்கொள்ளும் அபூர்வ நடவடிக்கை !

அது 'பிக்ஹுல் அகல்லியாத் '(சிறுபான்மை பிக்ஹ் ) ஏகோபித்த 'ஹுப்புத் துன்யாவுக்கு ' அமைய உம்மத்துக்கு உதவ அனுபவத்தோடு தயாரித்த எங்கள் விசேட கண்டுபிடிப்பு !

'இலட்சியம் வழிமுறைகளை நியாப்படுத்தும் ' என்ற மார்க்சிய தத்துவத்தை தழுவி 'குப்ரை குப்ரில் நுழைந்து குப்ரிய வழிமுறை மூலம் ஓரம் கட்ட வைக்கும் இஸ்லாமிய அரசியல் பகுதியும் இதில் உண்டு !

'செக்கியூலரிச' மார்க்கத்தின் கீழ் இஸ்லாத்தையும் ஒரு கௌரவ மதமாக்கி முதலாளித்துவம் புல்லரிக்க சடத்துவம் சுவைக்கும் புதிய முயற்சி !

நடப்பு சூழ்நிலையில் இஸ்லாத்தை சிறுபான்மையாக்கி 190கோடி முஸ்லிம்கள் வாழும் பெருநிலங்களிலும் சிந்திக்கப்படுவதால் ,சிறுபான்மையினர் தங்கள் பிரதிக்கு முந்துங்கள் .

நாட வேண்டிய இடம் :- 'குப்ரிய' கொடியின் கீழ் ஒன்றிய வாழ்வுக்கான அகில உலக உலமா சம்மேளனம் .



இஸ்லாத்தின் தூண்(களான முக்கியக் கடமை)கள் குறித்துக் கேட்டறிதல்.


10. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் குறித்துக் கேள்வி கேட்கக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) கிராமவாசிகளில் (புத்திசாலியான) ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து, அல்லாஹ் உங்களை (மனித இனம் முழுமைக்கும்) தூதராக அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உண்மைதான்" என்று கூறினார்கள்.
அந்தக் கிராமவாசி, வானத்தைப் படைத்தவன் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்று பதிலளித்தார்கள். பூமியைப் படைத்தவன் யார்?" என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்" என்றார்கள். இந்த மலைகளை நட்டுவைத்து அதிலுள்ளவற்றை உருவாக்கியவன் யார்?" என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்றார்கள். அவர், அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து. இந்த மலைகளை நட்டும்வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்று சொன்னார்கள்.
அவர் இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள்.
தொடர்ந்து அவர், நாங்கள் எங்கள் செல்வங்களில் இருந்து ஸகாத் வழங்குவது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று அந்தக் கிராமவாசி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள். அவர், ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்றார்கள். மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதிபடைத்தோர் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?" என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்"என்றார்கள்.
பிறகு அந்தக் கிராமவாசி, உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான் அதிகமாக்கவுமாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவும் மாட்டேன்" என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்" என்று கூறினார்கள்.

11. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) 

அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கக்கூடாதென நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப்பெற்றிருந்தோம்" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவித்தார்கள். 

ஸஹீஹ் முஸ்லிம்

Sep 26, 2013

சுன்னா – SUNNAH

மொழியியல் ரீதியாக சுன்னா என்றால் வழிமுறை என்று பொருள்படும். எனினும் ஷரியாவின்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டு இருக்கிற நஃபிலை அது குறிக்கிறது. உதாரணம் பரிந்துரைக்கப்பட்ட தொழுகை (சுன்னத் தொழுகை) இது ஃபர்து தொழுகையிலிருந்து வேறுபட்டது. சுன்னா என்பது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து உள்ளது என்றும் ஃபர்து என்பது அல்லாஹ்(சுபு)வுடமிருந்து உள்ளது என்றும் நாம் விளங்கிக் கொள்வது தவறு ஆகும். சுன்னா, ஃபர்து இவை இரண்டுமே அல்லாஹ்(சுபு)வுடமிருந்து தான் வந்துள்ளன. அவைகளை இறைத்தூதர்(ஸல்)தான் அல்லாஹ்(சுபு)வுடமிருந்து நமக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஏன் எனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்கள் மனவிருப்பப்படி எதையும் கூறுவது இல்லை மாறாக வஹீ முலம் அல்லாஹ்(சுபு)வுடமிருந்து அறிவிக்கப்படுவதை மட்டுமே அவர்கள் கூறுவார்கள். எனவே சுன்னா இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டபோதும் ஃபர்து என்பது கடமையான செயலாக அறிவிக்கப்பட்ட அதேவிதத்தில் அது மன்தூபாக அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது நஃபிலாக அறிவிக்கப்பட்டு சுன்னா என்று பெயரிடப்படுள்ளது. இவ்வாறாக ஃபஜ்ர் தொழுகைக்குரிய ஃபர்தான இரண்டு ரகாஅத்கள் திட்டவட்டமான முத்தவாத்திர் அறிவிப்பு முலமாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது போன்றே ஃபஜ்ர் தொழுகைக்குரிய பரிந்துரைக்கப்பட்ட இரண்டு ரகாஅத்கள் திட்டவட்டமான முத்தவாத்திர் அறிவிப்பு முலமாக சுன்னா (நஃபில்)வாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் அல்லாஹ்(சுபு)வுடமிருந்து வந்திருக்கிறதோ தவிர இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அல்ல. ஆகவே இபாதத் பற்றிய கட்டளை ஒன்று ஃபர்தாத இருக்கவேண்டும் அல்லது நஃபிலாக இருக்கவேண்டும். இபாதத் அல்லாத செயல்பாடுகள் ஃபர்தாதவோ மன்தூபாகவோ(நஃபிலாக) அல்லது முபாஹாகவோ இருக்கக்கூடும். வேறுவகையில் கூறுவது என்றால் மன்தூப்தான் நஃபிலாகும் அது நஃபில் என்று அறிவிக்கப்பட்டு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. மேலும் சுன்னா என்பதற்கு பொருள் குர்ஆனைத்தவிர இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து வந்த அனைத்து ஷரியா ஆதாரங்கள் என்பதாகும். இதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய பேச்சு, செயல், சம்மதம் (ஒரு செயல் அவர்கள் முன்பு செய்யப்பட்ட நிலையில் அதை அவர்கள் மெளனத்தின் ஏற்றுக் கொள்வது) ஆகியவை அடங்கியுள்ளன.

Sep 24, 2013

இஸ்லாமிய அரசு ஹஜ்ஜை எவ்வாறு வழிநடத்தும்?



ஹஜ் கடமையை ஹாஜிகள் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை நல்லமுறையில் செய்து கொடுக்க வேண்டியது முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசின்மீது கடமையாகும். இஸ்லாத்தை அழிக்கவும், முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கவும் தொடர்ந்து சூழ்ச்சி செய்த மேற்கத்தியர்கள், இறுதியில் கி.பி. 1924 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் ஒரே தலைமையை வீழ்த்தினார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் தோன்றின. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் ஒரே அமீரின் கீழ் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசே ஹஜ்ஜை சிறப்பாக வழிநடத்தியது. ஹஜ் கடமையை நிறைவேற்ற விசா இல்லாமல் மகிழ்ச்சியுடன் சென்றுவந்த அந்த காலகட்டங்களில், இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் ஆளுகைக்குட்படாத நிலங்களில் வாழ்ந்துவந்த முஸ்லிம்களுக்கும் கலீஃபாவையோ அல்லது கலீஃபாவின் பிரதிநிதியையோ சந்தித்து முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கிய பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.

இஸ்லாமிய அரசிலிருந்து துண்டாடப்பட்டு சவூதி அரேபியா என்ற நாடு பிரிட்டனின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பிறகு ஹஜ்ஜை சவூது குடும்பத்திலிருந்து முடிசூடும் சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதற்காக சவூதி ராஜா தன்னை இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர் என்று பெருமையாக கூறிக்கொள்கிறார். அமெரிக்காவின் ஏஜெண்டான சவூதி ராஜா வீழ்வது உறுதி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.மேலும் முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசு இந்த பூமியில் மீண்டும் வருவது உறுதி என்பதாக ஏராளமான நபிமொழிகள் சான்று பகர்கின்றன.எனவே ஹஜ்ஜை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாக இருந்தது போன்று மீண்டும் உலக முஸ்லிம்களின் அமீரின்கீழ் வந்துவிடும். இந்நிலையில் இஸ்லாமிய அரசு எவ்வாறு ஹஜ்ஜை வழிநடத்தும் என்பதை சுருக்கமாக காண்போம்.

இஸ்லாத்தின் ஐந்தாவது தூணான ஹஜ்ஜை அதிகமான மக்கள் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தரவேண்டியது இஸ்லாமிய அரசின் கடமையாகும். இப்போது சவூதி ஏற்படுத்தியுள்ள ஹாஜிகளிடமிருந்து வருமானம் சம்பாதிக்கும் வழிமுறைகள் மற்றும் விசா நடைமுறைகள் நீக்கப்பட்டு, ஹாஜிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துத்தந்து ஹஜ்ஜை எளிமைப்படுதுவதே இஸ்லாமிய அரசின் நோக்கமாகும்.

ஹரமில் தற்போது 35 - 40 லட்சம் மக்களை மட்டுமே கொள்ளும் அளவிற்கு இட வசதி உள்ளது. முஸ்லிம் உம்மத்தின் எண்ணிக்கையையும் வருங்கால எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளும்போது நிச்சயமாக இந்த இடவசதியை மேம்படுத்துவது இஸ்லாமிய அரசின் முதல் சவாலாக இருக்கும். எனவே அதற்கேற்றவாறு மஸ்ஜிதுல் ஹராமின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை மறுசீரமைப்பு செய்யவேண்டியது அவசியமாகும்.

சவூதி ராஜாவாக இருந்த ஃபஹத் 1982 ல் ஹரம் ஷெரீஃபை விரிவுபடுத்தினார்; அது மன்னர் ஃபஹதின் விரிவு என அறியப்படுகிறது. தற்போதுள்ள ராஜாவான அப்துல்லாஹ்வும் மற்றொரு விரிவாக்க திட்டத்தை அறிவித்துள்ளார். அது 2020 ஆம் ஆண்டில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னர் ஃபஹத் விரிவாக்கத் திட்டதின்போது மஸ்ஜிதுல் ஹராமை சுற்றி நிறைய நிலங்கள் தேவைப்பட்டது. எனவே ஆயிரக்கனக்கான வீடுகள் (சிறப்பு மிகுந்தவை உட்பட) அழிக்கப்பட்டன. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டவற்றில் பெரும்பகுதி முஸ்லிம் அல்லாத ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் ஹரம் ஷெரீஃபில் நுழைய அனுமதி இல்லாதவர்களுக்கு ஹரமை சுற்றி ஹோட்டல்களை அமைக்க சவூதி அரேபிய ராஜா வழி ஏற்படுத்திக் கொடுத்தார். ரேடிசன், ஷெரட்டன், இண்டர்காண்டிநென்டல் போன்ற நிறுவனங்களுக்கு ஹரமை சுற்றி பெரும் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. புனித நிலங்களை அசுத்தமானவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து சவூதி ராஜா புளகாங்கிதம் அடைந்தார். எனினும் ஹஜ் வகுப்புகளை தேர்ச்சியுடன் நடத்தும் சவூதி அறிஞர்கள் மவுனம் காத்தனர். சமீபத்தில் அமெரிக்காவின் பாரிஸ் ஹில்டன் தன்னுடைய கிளையை மஸ்ஜிதுல் ஹராமை சுற்றியுள்ள வணிக வளாகத்தில் திறந்துவைத்தபோது உலக முஸ்லிம்கள் வருந்தினர்..

இத்தகைய விரிவாக்கத் திட்டம் சவூதி அரேபிய ராஜாவிற்கு அரசியல் மைல்கல்லாகியது போன்றே அவருடைய குடும்பத்தினருக்கும் மக்காவில் ரியல் எஸ்டேட் மூலம் சொத்துக்கள் கொழிக்க உதவியது தற்போதைய சவூதி அரேபிய ராஜாவின் திட்டப்படி, உட்புற மற்றும் வெளிப்புற தொழுகை இடங்களை சேர்த்து 3,56,800 ச.மீ (88.2 ஏக்கர்) 40 லட்சம் ஹாஜிகளை உட்கொள்ளவே போதுமானது. மஸ்ஜிதுல் ஹராமின் வடமேற்கில் 15 லட்சம் ச.மீ அளவில் பிரம்மாண்டமான ஷாமியா திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அல் ஷாமியா, கரோல், அல் கரரா வ அல்கா போன்ற திட்டடங்களின் மூலம் 30 லட்சம் ச.மீ வரை நிலங்கள் நீட்டப்பட்டு பல உணவகங்கள், கடைவீதி , பணம் புழங்கும் சந்தை மற்றும் குடியிருப்புகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் வர இருக்கின்ற இஸ்லாமிய அரசு, அதிக எண்ணிக்கையில் வரும் ஹாஜிகளை உட்கொள்ளும் அளவிற்கு ஹரமை சுற்றி திறந்த வெளியை அதிகரிக்க முற்படும். கோடைக்கால வெயிலின் வெட்கையை தணிக்க மதீனாவில் அமைந்துள்ளதைப் போன்ற காற்று வசதி ஏற்பாடுகளையும் இயந்திர குடைகளையும் பயன்படுத்தலாம். இதுவே இஸ்லாமிய அரசின் முதற்திட்டமாக அமையும்; இதைத்தொடர்ந்து மற்ற வசதிகள் செய்துதரப்பட்டு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும். ஹரமிற்கு அருகிலுள்ள இடங்களை மட்டும் பளிங்கு தரை கொண்ட தொழுமிடமாக மாற்றினால் 45 லட்சம் முஸ்லிம்களை உட்கொள்ளும். இதையே இரண்டடுக்கு கொண்ட இடமாக மாற்றினால் இரட்டிப்பு எண்ணிக்கையில் மக்களை உட்கொள்ளும்.

ஆனால் தற்போது அல் ஷாமியா உருவாக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 2,50,000 மக்களுக்கு தேவையான உணவகங்கள், தங்குமிடம் மற்றும் 4 லட்சம் பேர் தொழுமிடம் மட்டுமே அமைக்க இயலும்.ஜபல் உமர் திட்டத்திற்காக ஹரமின் தென்மேற்கு பகுதியுலுள்ள 600க்கும் மேற்பட்ட நிலங்கள் கைப்பற்றப்பட்டு (24,480 ச.மீ) அதில் 935 அறைகள் கொண்ட 5 நட்சத்திர உணவகமும், 1255 அறைகளைக் கொண்ட 3 நட்சத்திர உணவகங்களாகவும் கட்டப்படவுள்ளது. மேலும் 1 லட்சம் பேர் உட்கொள்ளும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்களும், 520 உணவகங்களும், 4360 கடைகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது 1 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் வகையில் 6 மாடி கட்டிடம் கட்டும் திட்டமும் உள்ளது.

ஜபல் உமர் திட்டம் முன்னர் குறிபிட்டது போல் நிழற்குடைகளையும், காற்று வசதிகளையும் கொண்ட தரை அமைக்கும் திட்டமெனில், அது 7.5 லட்சம் ஹாஜிகளை தொழுகைக்கு உட்கொள்ளும் இடமாக அமையும். மற்றொரு திட்டமான ஜமல் கந்தமாவின்படி 6 லட்சம் ச.மீ நில பரப்பு கலப்பு இடங்களான உணவகங்கள் , கட்டிடங்கள் மற்றும் சந்தைகளாக உருவாகிக்கொண்டிருக்கிறது.இதை தொழுகை இடமாக மாற்றினால் 20 லட்சம் முஸ்லிம்களுக்கு இடமளிக்கும். மேற்கூறிய அணைத்து திட்டங்களும் ஹரமை சுற்றியுள்ள இடங்களைக்கொண்டு உருவாக்கப்படுகிறது, எனவே இவை அனைத்தையும் ஹரமுடன் எளிமையாக இணைத்துவிடலாம்.

ஏறக்குறைய அனைத்து திட்டங்களுக்கும் பெறப்பப்பட்ட இடங்கள் சிறு ஈட்டுத் தொகைக்கு அல்லது நஷ்ட ஈடு கூட இல்லாமல் சவூதி அரசால் பெறப்பட்டவையாகும். இன்னும் சில இடங்கள் உரிமையாளர்களுக்கு ஒரு வாரத்திற்கும் குறைந்த கால அவகாசம் கொடுத்து காலி செய்யப்பட்டன.

46,000 ச.மீ கொண்ட மற்றொரு திட்டமான ஜபல் காபா. அப்ரஜ் அல் பய்த் கோபுரம் கட்ட புல்புல் மலையிலுள்ள அஜ்யத் கோட்டை அழிக்கப்பட்டது. இந்த கோபுரமும் மற்ற கோபுர வடிவங்களும் கஃபாவின் புனிதத்தை மீறிய செயலாகும். ஒருபுறம் விமானங்கள் ஹரமிற்கு மேல் பறந்து செல்லக்ககூடது என்பதும் மறுபுறம் ஹரமை விட கோபுரங்கள் உயர்ந்து நிற்பதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது.

மார்க்க சிறப்பு வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஏழு மஸ்ஜிதுகளில் அபுபக்கர்(ரலி), சல்மான் பார்சி(ரலி), உமர்(ரலி), அலி(ரலி), பாத்திமா(ரலி) ஆகியோர் பெயரிலிருந்த ஐந்து மஸ்ஜிதுகள் சவுதி அரேபிய அரசால் அழிக்கப்பட்டுள்ளன. நபி صلى الله عليه وسلم அவர்களின் மனைவியர்களில் ஒருவரான கதிஜா(ரலி) அவர்களின் வீடு பொது கழிப்பிட வசதிக்காகவும், நபி صلى الله عليه وسلم அவர்களின் உற்ற தோழரான அபூபக்கர்(ரலி) அவர்களின் வீடு தற்போது ஹில்டன் உணவகத்திற்காகாகவும், அலி உரைத்தின் வீடும் அபு குபைஸ் பள்ளியும் தற்போதுள்ள அரசு மாளிகைக்காகவும், நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறந்த இடம் நூலகத்திற்காகவும் இடிக்கப்பட்டது. தற்போதுள்ள அப்ரஜ் அல் பைத் கோபுரம் உதுமானிய கிலாஃபா காலத்தை சார்ந்த அஜ்யத் கோட்டையை இடித்தும் கட்டப்பட்டவையாகும்.

இன்னும் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சவூதி மன்னர்களால் காரணமின்றி அழிக்கப்பட்டுள்ளன. தற்போது நபி صلى الله عليه وسلمஅவர்களின் காலத்து வரலாற்று இடங்களில் இருபதிற்கும் குறைவானவையே மிஞ்சியுள்ளன.

தற்போது மஸ்ஜிதுல் ஹராமை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் விடுவிக்கப்பட்டு மார்பிள் கல் பொறிக்கப்பட்ட திறந்த வெளியாக மாற்றப்பட்டால் குறைந்தது ஒரு கோடி நபர்களுக்கு இடமளிக்கும்.அபு குபைஸ் மலையில் 1 லட்சம் ச.மீ பரப்பளவில் உள்ள சவூதி ராஜ மாளிகையை இடித்தால் இன்னும் இடவசதி கிடைக்கும்.

மஸ்ஜிதுல் ஹராமிற்கும் சில அமைப்பு மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக , மதாஃப் (தவாஃப் பகுதி ) விரிவாக்கப்படவேண்டும் வேண்டும். உதுமானிய கிலாஃபா காலத்தை சார்ந்த தடுப்பை அகற்றுவதன் மூலமாக தவாஃப் பகுதி மேலும் விரிவடையும்.

குழைந்தகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் நகரும் நடைபாதைகளை மேல் மாடிகளில் இஸ்லாமிய அரசு அமைத்துக்கொடுக்கும். இது ஹாஜிகளுக்கு உதவுவது மட்டுமல்லாது சக்கர நாற்காலியின் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றுப்பெறும்.நகரும் நடைபாதையை பயன்படுத்துவதற்கு ஆதாரம் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியப்படுகிறது.

طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ

நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்துகஃபாவை தவாஃப் செய்தார்கள்.. அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.

(இப்னு அப்பாஸ்(ரலி) , புகாரி)

அதைப்போலவே நகரும் நடைபாதையை சஃப்வா மர்வாவிற்கு மத்தியிலும் அமைக்கலாம்.இஸ்லாமிய அரசு எதிர்கொள்ளும் இரண்டாவது சவால், மக்கவாசிகளுக்கும் ஹாஜிகளுக்கும் தங்குவதற்கு வீடு அமைத்து தருவதாகும். மக்காவைச்சுற்றி பல மலைகள் உள்ளன. இந்த மலைகளை அகற்றுவதின் மூலம் பெரும் பிரச்சனை தீரும்.முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இஸ்லாமிய அரசுடைய நவீன திட்டங்களை மென்மேலும் அதிகரிக்கவேண்டியிருக்கும்.. அத்தருணத்தில் அரசு மக்காவை சுற்றி செயற்கை நகரங்களை உருவாக்கி ஹாஜிகளையும் ஊர்வாசிகளையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். எனினும் அது விரைவில் நடக்க கூடிய நிகழ்வு அன்று; மாறாக முழு உலகமும் இஸ்லாத்தை தழுவும் போது இந்நிகழ்வு நடைபெறும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக தமீம் அத்தாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :-

لَيَبْلُغَنَّ هَذَا الْأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللَّهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ هَذَا الدِّينَ، بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ، عِزًّا يُعِزُّ اللَّهُ بِهِ الْإِسْلَامَ، وَذُلًّا يُذِلُّ اللَّهُ بِهِ الْكُفْرَ

“ இரவு பகல் சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம் சென்றடையும். மதர், வபர் ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன் விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ் நுழைவிப்பான். கண்ணியமுடையவன் கண்ணியம் பெறுவான். இழிவானவன் இழிவடைவான். இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்தவதன் மூலம் ஒருவனுக்குக் கண்ணியமும் குஃப்ரை இழிவடையச் செய்வதன் மூலம் அடுத்தவனுக்கு இழிவும் ஏற்படும்.” (முஸ்னத் அஹ்மத், ஹாகிம்)

இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின்படி இந்த ஹதீஸ் ஸஹீஹானது என இமாம் ஹாகிம் குறிப்பிடுகிறார்கள. இரவு பகல் சென்றடையும் பிரதேசங்கள் என்பது முழு உலகிலும் இஸ்லாம் பரவுவதைக் குறிக்கும்.

இஸ்லாமிய அரசுக்கு மூன்றாவது பெரிய சவாலாக அமைவது போக்குவரத்தாகும். தற்போதுள்ள அனைத்து போக்குவரத்து அமைப்பும், பொது போக்குவரத்து அமைப்பும் (MRTS ) அவசியம் மேம்படுத்தப்படவேண்டும். MRTS புனித பகுதிகளில் (மக்கா, மினா , முஸ்தலிஃபா, அரஃபா ) போன்ற இடங்களில் முதலாவதாக அமைக்கப்பட்டு பின்பு பிற புனித ஸ்தலங்களுக்கும் விரிவாக்கப்படும்.

MRTS ன் வடிவம் மற்றும் கட்டமைப்பு பூமியின் அடியில் பல இணைப்புக்களைக் கொண்டதாக அமையும். இவை கூட்ட நெரிசல்களைக் குறைத்து இலகுவாக செல்ல கட்டப்படுவதாக அமையும். மலேசியா, டெல்லி, லண்டன் போன்ற இடங்களில் உள்ள MRTS இயங்கும் முறையை அறிந்து நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு சந்திப்பிலும் மக்கள் இரயிலில் ஏறும் எண்ணிக்கையை பொறுத்து, பெரும் அசம்பாவிதங்களும், கூட்ட நெரிசல்களால் ஏற்படும் விபத்துகளும் இல்லாத வகையில் இரயில்களின் எண்ணிக்கை அமைய வேண்டும்,

கடந்த வருடம் அரஃபாவில் மெட்ரோ இரயில் நிலையங்களில் பல மக்கள் இறந்தனர். அதற்கு காரணம் அங்கு 4000 நபர்கள் ஏறிச்செல்லக்கூடிய 21 ரயில்கள் மட்டுமே உள்ளது. அதனால் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் கூட்ட நெரிசல் அதிகரித்து மூச்சு திணறலிலும் மிதிப்பட்டும் ஹாஜிகள் உயிரிழந்தனர். இஸ்லாமிய அரசு முஸ்லிம்களின் உயிர்களை சோதனைக்கு உள்ளாக்கும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்தாது. எனவே ஹாஜிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திட்டங்களை மேற்கொள்ளும் பொதுபோக்குவரத்தைப் பொறுத்தவரையில் நகரத்திற்குள் மிகவும் பிரச்சனைக்குரியதாகும். தற்போது தெருக்கள் குறுகியதாகவும் சரியான பராமரிப்பின்றியும் இருக்கின்றது. தனி நபர் வாகனங்கள் ஹரம் மற்றும் அரஃபா போன்ற இடங்களில் அனுமதிக்கப்படமாட்டாது, மாறாக இத்தகைய இடங்களில் அரசு வாகனங்கள் மூலம் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் .

மினா, முஜ்தலிஃபா மற்றும் அரஃபாவில் உள்ள சவால்களை பொறுத்தவரையில் இந்நகரங்கள் மக்காவை விட சிறியதாகவும் மலைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. மலைகள் தகர்க்கப்பட்டு பெரும் கட்டிடங்கள் உருவாக்கப்பட வேண்டும், ஏனெனில் மினாவில் தங்குவது தான் சுன்னத்தாகும். அதற்காக திறந்த வெளி கூடாரங்களில்தான் தங்கவேண்டும் என்றில்லை. சவுதி அரசு இந்நடவடிக்கையை மேற்கொள்ளாததற்கு காரணம் முதலீட்டிற்கு ஏற்ற வருமானம் வராது என்பதாகும். இஸ்லாமிய அரசின் வரவு என்பது முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜை இலகுவாக்குதலால் கிடைக்கும் நற்கூலியாகும்.

தற்போது இம்மூன்று நகரங்களில் உள்ள பிரச்சனை போக்குவரத்தும் இடவசதியுமாகும் . MRTS சேவை போக்குவரத்து பிரச்சனையையும், அடுக்கு மாடி கட்டிடங்கள் இடப்பற்றாக் குறையையும் தீர்க்கும். தற்போதுள்ள ஜமராத் திட்டம் சிறப்பாகவும் நிறைய ஹாஜிகளை உட்கொள்ளும் வகையில் உள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் வசதியை ஹாஜிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தல் இஸ்லாமிய அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். உப்புத் தண்ணீர் சுத்தகரிக்கும் ஆலை ஜித்தாவில் நிறுவப்பட்டும், நகரத்தை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மற்ற புனித ஸ்தலங்களிலும் ஜம் ஜம் நீர் கிடைத்திட வழி வகையை அரசு மேற்கொள்ளும். உணவு தரத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவில் கலப்படம் மற்றும் அதிக பணம் வசூலித்தல் போன்றவை தடுக்கப்படும்.

மக்காவில் ஹாஜிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதுபோன்றே மதீனாவிலும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய இஸ்லாமிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இஸ்லாமிய அரசான கிலாஃபா நபிصلى الله عليه وسلم அவர்களின் வழியில் ஏற்பட அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்.

ஷிர்க் பற்றிய புரிதலும் தாவா முன்னெடுப்புக்களும்...!


இன்று தாவா அமைப்புக்கள் தனிநபர் களை ஷிர்கில் இருந்து விடுவிப்பதற்கான தாவா முன்னெடுப்புக்களை பாரியளவில் மேற்கொள்ளும் அதேவேளை மனிதன் மனிதனை வணங்கும் ஆட்சிமுறை பற்றிய ஷிர்க்பற்றி தாவா முன்னெடுப்புக்களையும் நாம் காணமுடியாதுள்ளது.

ஒரு ஆட்சியாளன் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சிசெய்யாத நிலையையும் மனித சட்டங்களை நடைமுறைப்படுத்துவதனையும் காணும் அதேவேளைஆட்சியாளர்களை கேள்விக்குட்படுத்தி ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்கான எந்த முனைப்பையும் காணமுடியாதுள்ளதுடன் அத்தகைய ஆட்சியாளர்களது கட்டளைகளை செவிசாய்த்தபடி தனிமனித ஷிர்க் விடயத்தில் அதீத அக்கறை எடுக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்ட அதேவேளை அந்த ஜாஹிலிய்ய சமூகத்தில் காணப்பட்ட சமூக அமைப்பு அவர்களது அரசியல், மற்றும் பொருளில் ஒழுங்கு பற்றி கண்டித்ததுடன் அதற்கான மாற்றீட்டு வாழ்க்கைத் திட்டத்தை முன்மொழிந்து மக்களை தூய இஸ்லாமிய வாழ்கைமுறையின் பக்கம் அழைத்தார்கள்.

இதன் விளைவான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சஹாபிய சமூகம் வாழ்வினது அனைத்துத் செயலாக்க அமைப்பினுள்ளும் (Life System) ஏகத்துவ நடைமுறை பிரதிபலிக்க பாடுபட்டார்கள்.

இன்று நாம் வாழும் முதலாளித்துவ மதஒதுக்கல் சிந்தனையை அடிப்படையாக கொண்ட ஆட்சி முறையின் கீழ் நவீன ஜாஹிலிய சூழலில் வாழும் மக்களை குப்ரிய வாழ்வில் இருந்து அழைப்பதுடன் ஜாஹிலிய வாழ்க்கைமுறையில் எமது முஸ்லிம்கள் கொண்டுள்ள மோகம் மற்றும் பற்றினால் ஏற்படும் ஆபத்து பற்றி விழிப்பூட்ட வேண்டியுள்ளது.

இத்தகைய மேலைத்தேய வாழ்க்கை முறையை கருத்தியல் அடிப்படையில் கேள்விக்குட்படுத்தி இஸ்லாத்தை மாற்றீட்டு வாழ்க்கை முறையாக முன்மொழிந்து அவற்றை முழுமையாக அமுல்படுத்தத் தேவையான இஸ்லாமிய அரசினை ஒரே தலைமையின் கீழ் நிறுவிட பாடுபடசெய்வது அனைத்து தாவா அமைப்புக்களதும் பாரிய பொறுப்பும் கடமையும் என உணரவேண்டும்.

அத்தகைய இஸ்லாமிய அரசினால் மாத்திரமே ஷிர்க்கை தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் முற்று முழுக்க ஒழித்திட முடியும். அதுவே குர்ஆன் சுன்னா வாழ்வின் சகல துறைகளில் நபி வழியில் அமுல்படுத்தப்பட வழிவகுக்கும்! ஷிர்க் பித்அத்துக்களை நிரந்தரமாக முஸ்லிம் உம்மத்திடம் இருந்து களைவதற்கு வழிவகுக்கும்!

சிந்திப்போம்! இவ்வுண்மையை உணர்வோம்! ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்!

'பிக்ஹுல் அகல்லியாத்' (சிறுபான்மை 'பிக்ஹ் ) சொல்வது என்ன ?




இது இஸ்லாமிய அகீதாவை
'கபுரில் ' போட்டு மூடி எஞ்சிய
சாமானை பாதுகாக்கும் சடத்துவ முயற்சி !
'குப்ரோடு ' ஒன்றிய வாழ்விற்காய்
'ஸுன்னாவை' புறக்கணித்து அரங்கேற்றும்
'வஹி'த்தோல் போர்த்திய 'ஜாஹிலீயத் '!

சிறுபான்மை வாழ்விற்காய் 'எமர்ஜென்சி சொல்யூசனா '!?
சத்திய உறுதியை அழிக்க 'பத்துவா' எனும் 'பாயிசனா '!?
நல்ல' பாத்தில் ' கெட்ட 'பாத்தில் 'என
சாக்கடைக்கு ' அத்தர் ' பூசி' தாகூதில்' ஒன்றை
தரம் என்று தேர்ந்தெடுத்து பேய்க்கு பேண்
பார்க்கச் சொல்லும் பயங்கர முயற்சி !!!

இங்கு நாளை அதற்கும் மதம் பிடிக்காது என்பதற்கு
என்றும் உத்தரவாதமில்லை !! எனவே இது
மருந்தென்ற பெயரில் வழங்கப்படும் கொடிய 'வைரஸ் '!!!

சிந்திக்க ஒரு சில உண்மைகள்.




கடந்த கால வரலாற்றில் நாம் எதிர்கொண்ட நிகழ்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் நிகழ் காலத்தின் சில சம்பவங்கள் பற்றிய சரியான கோணத்தை ஊகிக்கக் கூடியதாக இருக்கும் .

விடுதலைப் புலிகளின் முஸ்லீம் எதிர்ப்பு தொடர்பில் இப்போது பேசி என்ன பயன் ? என்பது சிலர் என்முன் வைக்கும் கேள்வியாகும் .நான் இங்கு பேச வருவது ஒரு அடிப்படையான பொதுக் குணகம் பற்றியதே . அதன் ஆதார வடிவமாக விடுதலைப் புலிகள் வருகிறார்கள் .ஆனால் விடயம் அவர்களோடு மட்டும் மட்டுப் படுத்தப் பட்டதல்ல .

முஸ்லீம் எதிர்ப்பு என்பது முழு உலகின் பொது விதி ஆக வடிக்கப்பட்டு விட்டது . அவன் தன் சுய வடிவம் சுயநிலை மறந்து உலகின் போக்கில் தன்னை இணைத்துக் கொள்ள நினைத்தாலும் ஒரு பிரிகோட்டு அடையாளம் அவனை எப்படியாவது வேறுபடுத்துகிறது ! அது ஏன் ? என்ற கேள்வியை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் கேட்கவேண்டும் .

தனக்கான வாழ்வியலை தான் விரும்பியவாறு தானே தீர்மானிக்கும் உரிமையை முஸ்லீம் முற்றாகவே இழந்தவன் . அவனின் நடத்தைகளை 100% இறை வஹியே அமைத்துத் தரவேண்டும். என்ற பிரதான நிபந்தனையின் பேரிலேயே அவன் முஸ்லிம் ஆகிறான் . இந்த உண்மை முஸ்லீம்களால் உணரப்படாத வரை மனித அடிமை ஆதிக்க அரசியலை விட்டும் அவனுக்கு விடுதலை இல்லை . தாகூத்களின் கெடுபுடிகளும் ஓயப்போவதில்லை .

இனவாதம் ,மதவாதம் ,நிறவாதம் ,வர்க்க வாதம் ...இப்படி தான்தோன்றித் தனமான வழியிலேயே அதிகாரங்கள் சுயநலமிக்க இழிவான அரசியலை உலகில் செய்துகொண்டிருக்கிறார்கள் .அந்த வகையில் மனித நடத்தைக்கான இயங்கு விதி என்பது மனித ரூபத்தில் ஒரு கொடூரமான பேசும் விலங்குகளின் கையில் ஒப்படைக்க்கப் பட்டுள்ளது . அவை தீர்வு தரும் என்ற தவறான பார்வை முஸ்லிமையும் விட்டுவைக்கவில்லை .

குப்ர் தனது சுய நலத்திற்காகவே சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் வரையறுத்துள்ளது .சுதந்திரம் என்ற போலி நாடகத்தின் பெயரில் ஏகாதிபத்தியங்ளின் நவ காலணிகளை, தேசியம் என்ற கௌரவ சிறைச்சாலை வடிவில் திறந்து விட்டபோது, அதன் பொது இயல்பான பிரித்தாளும் கொள்கையின் கீழான இன, மத , குல ,கோத்திர ரீதியான மோதல்களும் அதில் உள்ளடக்கப் பட்டு விட்டது .

ஏகாதிபத்தியங்களின் இந்த பிரித்தாளும் விதிக்குள் இருந்து மனித சமூகம் தனது தீர்வுகளை தேடுவது நிச்சயமாக ஒரு தெளிவான தற்கொலை அரசியலே ஆகும் .அனேகமாக இங்கு அவர்களின் உச்ச பயன்பாட்டு அடிப்படையில் இயங்க விடப்படல் என்ற பிடி கயிறு சிலபோது சிலரை தனிப்பெரும் 'சண்டியர்களாக' காட்டி நிற்கும் .

அழித்தல் ,ஒடுக்குதல் , வரம்பு மீறுதல் , என்ற கோரமான ஒரு தற்காளிக பாத்திரத்தை ஏற்படுத்துவதன் மூலம் இவர்கள் சில காலம் விட்டு வைக்கப் படலாம் .விடுதலைப் புலிகளுக்கும் நடந்தது இதுதான் .இன்னும் சிலருக்கு நடக்கப் போவதும் இதுதான் .

பிராந்திய ஆதிக்கத்திற்கான வளம் மிக்க ஒரு தேசிய சிறைச்சாலை இலங்கை .பாத்திரங்களையும் ,சூழ்நிலைகளையும் காலத்துக்கு காலம் மாற்றுவதன் ஊடாக முதலாளித்துவ மேலாதிக்கங்கள் ஒரு போட்டிச் சந்தையாக இலங்கையை பயன் படுத்திப் போகிறார்கள் . இதை குறிப்பாக முஸ்லீம்கள் உணர வேண்டும் .

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .....(PART 02)




அந்த அக்டோபர் 1990 இலங்கையின் வடபுலத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 120000 முஸ்லீம்களுக்கு ஒரு கசப்பான அத்தியாயத்தை தொடக்கி வைத்தது . தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த முஸ்லீம்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றியது இந்த அக்டோபர் மாதத்திலே தானாகும் .ஒரு தெளிவான இனத்துடைப்பின் வடிவம் பக்குவமாக அரங்கேற்றப் பட்டது .

யாழ்ப்பாணம் ,மன்னார் ,முல்லைத்தீவு ,சாவகச்சேரி போன்ற முக்கியமான முஸ்லீம் குடிசன செறிவுமிக்க பகுதிகள் முதல் பட்டி தொட்டி எங்கும் தேடித்தேடி முஸ்லீம்கள் விரட்டப் பட்டனர் ! சில நாள் அவகாசத்திலும் , ஒரு நாள் அவகாசத்திலும் , இரண்டு மணிநேர அவகாசத்திலும் முஸ்லீம்கள் ஆயுத முனையில் வெளியேறப் பணிக்கப் பட்டனர் .

விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கை எதேச்சையான ஒன்றாக எனக்குப் படவில்லை .ஏறத்தாழ 65000 முஸ்லீம்கள் வாழ்ந்த மன்னாருக்கு 5 மணிநேர அவகாசம் கொடுக்கப் பட்டது . அத்தோடு எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவு வரையறுக்கப் படவில்லை . அதே நேரம் 15000 முஸ்லீம்கள் வாழ்ந்த யாழ்பாணத்துக்கு 2 மணிநேரம் மட்டுமே கொடுக்கப் பட்டது ! அத்தோடு 'சொப்பிங் பாக்கில் ' சில உடுப்புகளும் 200 அல்லது 300 ரூபாய் பணமும் தவிர கலட்ட முடியாத மோதிரம் கூட வெட்டி எடுக்கப் பட்டது ! யூதப் பாணியிலான இந்த நடவடிக்கை ஏன் !? இத்தகு கேள்விகளோடு கடந்து போன அந்தக் காலத்தினுள் எனது நினைவுக் குதிரையை தட்டிவிட்டேன் .....

இறுகிய முகத்தோடும் 'துப்பாக்கி சேம்பரில் ' ஏற்றிய 'தோட்டாவை எம்மீது துப்ப ஒரு சந்தர்ப்பம் வராதா ? என்ற ஏக்கத்தோடும் அந்த பாசிசக் கும்பல் நாம் வெளியேறக்கூடிய அணைத்து சந்திகளிலும் காவலரண் போட்டு எம்மை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது . குழந்தையின் பால் போத்தல் முதல் , வயதானவர்களின் வெத்திலைப் பெட்டிவரை ஒரே கண்ணோட்டமே அவர்களுக்கு இருந்தது .

சாதீயம் தலைக்கேறிய அந்த தமிழ் சமூகத்தில் சிற்சில நடவடிக்கைகள் தவிர வாழ்வியல் ஒழுங்கில் பெரிய மாற்றம் அவர்களோடு எமக்கு இருக்கவில்லை. 'அல்ஹம்துலில்லாஹ் ' எதோ ஒரு ஓரத்தால் ஒரு வேற்றுமை எம்மில் இருந்து எட்டிப்பார்த்தது ! அது எம்மில் இருந்த ஈமான் என்றால் மிகையான கருத்தல்ல .

இந்த நிகழ்வுகளுக்கு சில காலங்களுக்கு முன் இந்த பாசிசப் புலிகள் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சாதீய அடையாளத்தை எம்மீது திணிக்க வந்தபோது எதிர்த்தோம் . நாம் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்ற விடயத்தை அழுத்திச் சொல்லி விடாப்பிடியாக நின்றோம் .

அப்போது சரணடைந்து இருந்தால் சிலவேலை புலி நகத்துக்கு 'பாலிஸ் 'போடும் வேலையும் ,மனித சதை படிந்த அந்த கொடிய பற்களை துலக்கிவிடும் வேலையும் , இன்னும் சிலநேரம் அந்தப் புலிகளின் அதை .. கழுவிவிடும் வேலையும் அந்த காட்டுத் தர்பாரில் சிலகாலம் கிடைத்திருக்கலாம் .நாங்கள் எங்களை சத்தியத்தால் மட்டுமே அடையாளப்படுத்த இடம் கொடுத்தோம் .

அந்த இரண்டு மணிநேரம் பல ஆச்சரிய சம்பவங்களை சொல்லிப் போனது . தமிழ் 'யோனிக்காக ' போய் கலப்புக் குடும்பம் கட்டிவாழ்ந்த சோனகனுக்கும் ஈமான் வந்தது ! கள்ளுத் தவறணையில் தமிழனோடு 'பாட்னர் சிப் ' போட்டு பருகினவனுக்கும் ஈமான் வந்தது !

" நல்லூரில் முஸ்லீம் உம்மத்து வாழ்ந்தபோது குடிநீர் கிணற்றில் பன்றி வெட்டிப்போட்டு துரத்தினான் " என பழைய வரலாற்றை பாட்டன் சொன்ன போது நம்ப முடியவில்லை . ஆனால் முல்லிய வாய்க்காலில் மூளை சிதறி மாண்ட வேங்கையின் கட்டளையில் பல விடயங்கள் தெளிவாகப் புரிந்தது .

எம்மில் யாரும் பொட்டு வைத்து வீபூதி பூச தயாராக இருக்கவில்லை ! பிள்ளையாரை ,முருகனை , இயேசுவை கும்பிட தயாராக இருக்கவில்லை ! பல அழுக்குகள் படிந்திருந்தும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்ற தெளிவான முடிவோடு எஞ்சியிருந்த ஈமானுக்காகவே அகதியானோம் .

(இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் )

Sep 23, 2013

சிரிய களத்தில் எடுக்கப்பட்ட உயிர்ப்புமிகு காட்சிகள்...

காட்சிகள் ஒழுங்கில் இல்லாமல் மாற்றப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றை உங்கள் மன்திரையில் ஒழுங்கு படுத்தி பாருங்கள். ஒரு சில நிமிட சண்டைக்காட்சி உங்கள் முன் எழுந்து நிற்கும்


சிரிய படையினரின் சினைப்பர் தாக்குதலில் ஒரு போராளி காணம் அடைந்த கணத்தில்....


இரண்டு போராளிகள் டமாரா சண்டை களத்தில் கவர் எடுத்து மூவ் பண்ண காத்திருக்கின்றனர்



சிரிய படையினரின் டாங்கியில் இருந்து வந்து வெடிக்கும் செல்லின் கணப்பொழுதில்.....



மரணித்த சகாவை இழுத்துச் செல்கையில்.....



தாக்குதல் நடத்திய டாங்கி மீது ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் நடாத்தப்படும் கணப்பொழுதில்....



டாங்கியின் தாக்குதலின் பின்னர் தப்பியோடும் போராளிகள்


டாங்கியை அழிக்கப்பட்டுவிட்டது என சகாக்களிற்கு அழைப்பு விடுக்கும் போராளி...



எதிரிகள் தாக்கியழிக்கப்பட்டு மீண்டும் களத்தில் உயிருடன் மீதமுள்ள சகாக்களை கண்டு ஆனந்த கண்ணீர்மல்கும் போராளிகள்


Thanks kabarthalam

ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து .......(PART 01)




ஒரு ஆறாத காயமாய் ஆகிவிட்ட அந்த அக்டோபர் 1990 களின் நினைவுகள் எப்போதும் என் விழி ஓரத்தில் ஒரு துளி கண்ணீரை விட்டுச் செல்வது தவிர்க்க முடியாதது .கலீல் ஜிப்ரான் போல் அந்த ஆழமான சோகத்தை ஒரு கவிதையில் வடித்து விடும் புலமை எனக்கில்லை . அந்த இரண்டு மணிநேரம் ..... பிறந்து வளர்ந்து உணர்வுகளோடு உறவாடிய அந்த பூமியை விட்டும் சென்று விட வேண்டுமாம் ....

அந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவங்கள் என்னை விட்டு விலக மறுத்தன .நிர்ப்பந்த வெளியேற்றம் மூலம் கிடைத்த அகதி அந்தஸ்து போல விடாப்பிடியாக இருந்தது ! ஒரு தேசிய விடுதலை என்ற சுய அழிவு வன்முறை அரசியல் பலரது அர்த்தமற்ற தியாகங்களில் சிலரது சுயநலத்துக்காக பயன்பாட்டுப் போனது .இந்த விடயத்தை ஒரு சராசரி மனிதனாக இருந்து என்னால் பார்க்க முடியாது ஏனென்றால் நான் முஸ்லிம் .

"தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும் பூவின் விரல்கள் குதிரை மீட்ட பயணம் தொடங்கி விடும் .... ஏங்கிடும் துவக்கு வீழ்ந்திடும் முன்னே புதுக்கரங்கள் அதை ஏற்கும் ..." என்ற விடுதலைப் புலிகளின் பாடல் போலவே 'ஹிட் அண்ட் ரன்னில் ' தொடங்கிய சிறுபிள்ளைதனமான இராணுவக் கலாச்சாரம் பக்தி பூர்வமாக அவர்களால் கட்டி வளர்க்கப் பட்டது .காட்டும் இலக்கை நோக்கி கண் மண் தெரியாமல் சுட்டால் ஈழம் கிடைத்துவிடும் ! என்ற அர்த்தமற்ற நம்பிக்கையில் சிறுவர் போராளிகள் முதல் பலர் களமிறக்கப் பட்டிருந்தனர் .

அலறி மாளிகை முதல் செங்கோட்டை வரை மட்டுமல்ல பாகிஸ்தான் முதல் வாசிங்டன் வரை இந்த சூடான இரத்தத்தில் சுகம் கண்டனர் ! இஸ்ரேல் முதல் சீனாவரை இந்த படுகொலை வியாபாரத்துக்கு பங்காளி ஆகினர். எதிலும் இலாபம் என்ற முதலாளித்துவ 'மாபியா ' அரசியலில் மனித உயிர்கள் முழு உலகத்தைப் போலவே இலங்கையிலும் மதிப்பிழந்து போனது ஆச்சரியமில்லைதான் .அர்த்தமற்ற இந்த அயோக்கியத் தனத்தில் வலுக்கட்டாயமாக முஸ்லீம் உம்மத்தும் முடிச்சுப் போடப்பட்டது .

'துவக்கு துவக்கு துவக்குப் போரை துவக்கு துவக்கு ..' என அரசியல் மேடைகளில் தூபமிட்டவர்கள் 'பார்லிமென்ட் பொலிடிக்ஸில் ' பக்குவமாய் 'பொசிசன் ' எடுத்துக் கொண்டனர் ! இந்த ஏமாற்றம் கண்டு நீண்டு வளர்ந்த துரோகிகள் 'லிஸ்டோடு' கொலைக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறந்தது . 'இவர்களை மண்டையில் போடுவதால் தமிழீழத் தாய் புன்சிரிப்பாள் ' என்ற புது மொழியோடு 'சோனியை '(முஸ்லிமை ) GUN பொயிண்டில் இம்சிப்பதால் தமிழீழத் தாய் பேரானந்தம் அடைவாள் !? என்ற வரிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டது மிகப் புதுமையானது !

'கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது ஜப்பான் JEEP ! ' என துரையப்பாவுக்கு சொன்ன தமிழ் போராளிகளும் ,அந்த முதலாளித்துவ சதுரங்கத்தில் 'சோசலிசத்' தமிழ் ஈழம் ! என பொய்க்கால் குதிரை ஓட்டிய தோழர்களும் , நேற்று இவர்களால் ' கிளைமோர் ' வைக்கப் பட்ட ஆமிக்காரன் 'டிபென்டரில் ' வந்து SCOT கொடுக்க இன்று ஜப்பான் கார்களில் போவதும் ,போதாக் குறைக்கு ஆட்சிக் கதிரைக்காக அடிபுடிப் படுவதும் . துரோகத்தின் வரைவிலக்கணம் பற்றி மீண்டும் இவர்களுக்கு சந்ததியாரும் , உரும்பிராய் சிவகுமாரனும் வந்து வகுப்பெடுக்க வேண்டும் போல்தான் இருக்கிறது .ஆனால் இவர்களால் பலவந்தமாக சொந்தமண்ணில் இருந்து விரட்டப்பட்ட நான் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை விடாப்பிடியாக முஸ்லிமாகவே இருக்கிறேன்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்...)

http://khandaqkalam.blogspot.ae/2013/09/part-01.html?spref=fb

Sep 21, 2013

அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை ஒரு பார்வை .

ஒரு அகீதாவின் நிலைப்பிற்கும் அதன் வாழ்வியல் பிரயோகத்திற்கும் ,அதன் கட்டமைபின் பாதுகாப்பிற்கும் அதிகாரம் பொருந்திய நிலை என்பது மிகப் பிரதானமானது .எனவேதான் உலகின் ஒவ்வொரு அகீதாவும் தனது செயற்பாடுகளில் அதிகாரத்தை நோக்கிய நகர்வுகளை பிரதானப் படுத்தியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது .அதிகாரத்தை வெளிப்படையாக புறக்கணிக்கக் கூடிய வெறுக்கக் கூடிய மதங்களை பொறுத்த மட்டிலும் தனது நிலைப்பிட்காகவும் வளர்ச்சிக்காகவும் புறநடையாக அதிகாரம் நோக்கிய நகர்வுகளை அல்லது ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள சக்தியின் மீது சார்பு நிலைக் கோட்பாட்டையும் கொண்டனவாக இருக்கின்றது . அல்லது சமரசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு உடன்பாட்டையாவது ஏற்படுத்தி விடுகின்றன .

கிறிஸ்தவம் துறவறம் பற்றியும் உலகை சம்பூர்ணமாக வெறுக்கும் மனப்பாங்கையும் கொண்ட ஒரு மதமாக இருந்தாலும் இத்தகு அடிப்படைக்கு மாற்றமாக 'சர்ச்சுகளின்' அதிகார ஆளுமையின் கீழ் மனித சமூகத்தை ஒரு நீண்ட நெடிய காலம் ஆதிக்கம் செய்தது . பின்னர் அறிவியல் ரீதியான அதன் தவறான பார்வை காரணமாக அதன் அதிகார ஆதிக்கம் அரசியல் வேறு மதம் வேறு என்ற அடிப்படையில் பிரிக்கப் பட்டது .

இந்த சமரசம் 'சர்சுகளோடு' தனிமனித விருப்புகளோடு மதத்தை மட்டுப் படுத்தினாலும் அதிகார அரசியலின் கீழ் தங்கிவாழும் நிலை மட்டும் அரசியலில் அதன் உள்ளார்ந்த செல்வாக்கு என்பன சற்றும் குறையவில்லை .இன்று கூட அரச சார்பற்ற எனற பெயரோடு அரசுக்குள் ஒரு அரசாக நிறுவனங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்தி உலகளாவிய ரீதியில் இன்று கூட அமெரிக்க ஐரோப்பிய கூட்டுத் தலைமையில் 'முனிவர் நண்டும் கடல் அணிமணியும் போல ' தொழில் பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது .

இதே போல பௌத்த சிந்தனையை பொறுத்தவரை உலகில் அருகி வரக்கூடிய ஒரு மதமாக காணப்படுவதனால் பேரினவாத அரசை சார்ந்து தன்னை தக்க வைக்கும் பாதுகாப்பு வேலியாகவும் அதற்கு பிரதி உபகாரமாக முதலாளித்துவ கவர்ச்சி அரசியலின் விளம்பர சாதனமாகவும் மாறி நிற்பதை இன்று எம்மால் அவதானிக்க முடியும் .

வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் பௌத்த மத வரலாற்றில் இந்தியாவின் அசோக மன்னன் பௌத்த மதத்தை தழுவியதன் பின்னர் தான் மிக வேகமாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டதை அவதானிக்க முடியும் .இலங்கையை பொருத்தமட்டில் அனுராதபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் எனும் அரசன் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டதில் இருந்துதான் அம்மதத்தின் பொற்காலம் இலங்கையில் ஆரம்பமானது . ஆனால் அடிப்படையில் பௌத்த மதம் துறவறத்தையே வாழ்வியலாக பணிக்கிறது .

மேலும் அண்மைய உதாரணமாக ஆள் வளத்தில் குறைந்த யூத சமூகம் தனது சியோனிஸ தேசத்தை நிறுவுவதற்கும் ,பாதுகாப்பதற்கும் ,விஸ்தரிப்பதட்கும் கிறிஸ்தவ ஐரோப்பிய ,அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திட்டமிட்டு பயன்படுத்தியதையும் , இன்றும் பயன் படுத்தி வருவதையும் அவதானிக்கும் போது அரசியல் அதிகாரம் என்பது மனித சமூகத்தின் இராஜ தந்திர இலக்காகவும் ,இலக்கு நோக்கிய இராஜ தந்திரமாகவும் மனித வாழ்வியலோடு பிரிக்க முடியாமல்( வடிவத்தால் சரியாக அல்லது பிழையாக இருப்பினும் )அமைந்துள்ளது . அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை பற்றிய தெளிவு மிக அவசியமாகும் .

அதிகாரம் ,இறையாண்மை பற்றிய தெளிவின்மையில் இருந்து அரசு ,அரசியல் பிறக்கும் போது அனேகமாக அது சுயநலம் மிக்க சர்வாதிகாரமாக மாறிவிடும் .இன்று உலகில் ஏற்பட்டுள்ளது அத்தகு நிலைதான் ஆகும் .வாழ்வியலுக்கான வழிகாட்டலை ,சட்ட திட்டங்களை ,வரையறைகளை யார் தீர்மானிப்பது? என்பதே இங்கு இறையாண்மையாகும் .அந்த வகையில் அதிகாரத்துக்கான எல்லையையும் இறையாண்மை வரைவிலக்கணப் படுத்தும் .அதாவது அதிகாரத்தால் இறையாண்மையை கட்டுப்படுத்த முடியாது ஆனால் இறையாண்மை அதிகாரத்தை எல்லைப்படுத்தி கட்டுப்படுத்தும் .

இறையாண்மை என்பது உண்மையில் இறைவவனின் பண்புக்கூருகளில் சிலதையோ பலதையோ ஒரு மனிதனுக்கோ ,ஒரு சடத்துவ பொருளுக்கோ ,வேறு எதற்கோ இருப்பதாக கருதுவதே ஆகும் . அந்த வகையில் ஒரு தேசத்தின் தேசியத்தின் விசுவாசியாக மாறுவதென்பது கூட இறைவனின் இயற்கையான ஒரு படைப்பினை வழிபடுவதாகும் .

இயற்கையை கட்டுப்படுத்தும் வலிமை யாரிடம் உள்ளது ? என்ற கேள்வியின் பதிலில் இருந்தே இறைமைக்கான உரிமை புரிந்து கொள்ளப்பட வேண்டும் . அது மனிதனால் முடியாது என்ற தெளிவான விடை மனித மனித மனங்களில் தெளிவான பதிவில் உள்ளதால் அதை மறைத்து மூடவே இறையாண்மை என்ற சொற்பதம் பயன் படுத்தப் படுகின்றது . இன்னும் சற்று தெளிவாக சொன்னால் இறைவனின் உரிமையில் (ஒன்றிலோ ,பலதிலோ )உரிமை கொண்டாடுவது ஆகும் .
இத்தகு தவறான அதிகார அரசியலே இன்று முழு உலகிலும் இருக்கின்றது .

இன்று எந்த ஒரு ஜனாதிபதியோ ,பாராளுமன்றமோ , மன்னனோ' பிர் அவ்னைப்போல ' நானே இறைவனை விட பெரிய இறைவன் என்று சொல்லப்போவதில்லை .மாறாக இறைவனின் அதிகார ஆதிக்க எல்லையை சில சொல்லாடல்கள் ,பதங்களை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்துவார்கள் . அத்தகு வடிவத்தில் ஒன்றே மக்களால் ,மக்களுக்கு, மக்களுக்காக எனும் ஜனநாயக சிந்தனையாகும். இது ஒரு தவறான அரசியல் வடிவமாக இருந்தாலும் இன்று மனிதன் தனது மேற்போக்கான பார்வையில் அதை ஒரு உயர்ந்த சிந்தனையாக கருதுகிறான் .

இங்கு இறையாண்மை ,அதிகாரம் என்பன முற்று முழுதாக மனிதக் கரங்களில் வந்தடைகிறது . எனவே முஸ்லிமே ! உனது அரசியல் பார்வை இந்த 'ரித்தத் 'நோக்கிய அழைப்பில் இருந்து தொடங்கி விடக் கூடாது . இஸ்லாத்தின் அரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை பற்றிய பார்வை முற்றிலும் வித்தியாசமானது . (அது பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .) இந்த நரக நெருப்பில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் .


Sep 20, 2013

ஹிஸ்புத் தஹ்ரீர் வெளியிட்ட உள்ளங்களை பிரட்டிப்போடும் விவரணப்படம் - (சிறப்பு பதிவு)

உலகில் இஸ்லாமிய ஆட்சி பற்றி கிலாபாவின் உருவாக்கம் பற்றி பேசும் இரண்டு அமைப்புக்களில் Hizb ut Tahrir முதன்மையானது. ஒரு மெய் சிலிர்க்கும் சிரியா பற்றிய விவரணப்படத்தை “ஹிஸ்புத் தஹ்ரீர்”அமைப்பின் மீடியா பிரிவினர் உருவாக்கியுள்ளனர். சிரியா பற்றி உலகலாவிய முஸ்லிம்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அந்த விவரணப்படம் வெளியாகியுள்ளது.

'சியோனிச மிஷனில் 'வெள்ளைக் காக்கா சிரியாவில் மல்லாக்காய் பறக்குது !

ஏகாதிபத்திய நாடக பாணி அரசியலின் அடுத்த கட்டமும் சிரிய விவகாரத்தில் அரங்கேறி விட்டது . அது ஐநாவின் பங்கி மூன் அவரது திரு வாயால் மொழிந்து அறிக்கையாக வெளியிட்டு விட்டார் . அது குறித்த இரசாயன தாக்குதலை செய்தது சிரியப் போராளிகளாம் .

முன்பு பசர் அல் அசாத் இரசாயன தாக்குதல் நடத்தியதற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அமெரிக்க வெளி விவகார அமைச்சர் அறிக்கை விட்டது அவர்களுக்கே மறந்து போனதுதான் இன்று ஆச்சரியம் !

உண்மையில் இந்த சிரியப் போர் முஸ்லீம் உம்மத்திற்கு பல உண்மைகளை விளக்கி நிற்கிறது .ஈரான் மற்றும் அவர்களின் 'ஹிஸ்புஸ் சைத்தான்களது ' உருவத்தை தெளிவாக தோலுரித்து காட்டியது உட்பட இஸ்லாத்திற்கு எதிரான அணைத்து தரப்பையும் ஒன்றாகவே முஸ்லீம் உம்மாவின் முன் வெளிக்கொண்டு வந்துள்ளது .

இஸ்லாத்திற்கு மத அந்தஸ்து கொடுத்து 'மஸ்ஜித்தோடு' முடக்கிப் போட்டு ,முஸ்லீம் உம்மாவை பல்வேறு பிரிவினைகளில் வாழ வைத்தது வரை இந்த சண்டியர்கள் பாடு கொண்டாட்டமாய் இருந்தது .இப்போது இஸ்லாத்தின் மீள் அதிகார வருகை பற்றி ஒற்றுமையோடு தெளிவோடு சிரியாவில் இருந்து வரும் குரல்கள் தான் இவர்களின் திண்டாட்டத்துக்கு காரணமாகும் .

http://khandaqkalam.blogspot.ae/2013/09/blog-post_5850.html#more

நீங்களும் கப்பல் பார்க்கப் போனீர்களா !?



கொழும்புத் துறைமுகத்தை 'லோகோஸ் ஹோப் ' எனும் கப்பல் புத்தகங்களை சுமந்து ஆல் கடலில் ஒரு அறிவுச் சுரங்க வடிவில் வந்திருக்கின்றது. இக்கப்பல் வருவது இதுதான் முதற் தடவையல்ல .இலவசமாக சென்று ரசித்து புத்தகங்கள் உட்பட பல பொருட்களை கொள்வனவு செய்துவர மக்கள் வெள்ளமும் அலை மோதுகிறது . இந்த முஸ்லீம் உம்மத்தும் நிறையவே செல்கிறது .

முதலில் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் .புத்தகங்களை விற்கும் இலாபத்தை நோக்கமாக வைத்து இந்தக் கப்பல் வரவில்லை அந்த விடயமே ஒரு பக்குவமான முகமூடி ! அது ஒரு அகீதாவின் உருவத்தை நாகரீகம் ,நடத்தை , அபிமானம்,சமூக உதவி என்ற போர்வைக்குள் புகுத்தி பொதுநலன் என்ற வெளிப்பார்வையோடு வந்துள்ளது .

"அவர்கள் வந்தபோது அவர்கள் கையில் 'பைபிள்' இருந்தது . எமது கையில் தேசம் இருந்தது .எம்மை கண்ணை மூடி ஜெபிக்கச் சொன்னார்கள் . பின் கண்ணை திறந்து பார்த்த போது எம் கையில் பைபிள் இருந்தது அவர்கள் கையில் தேசம் இருந்தது ! இந்த ஆபிரிக்கக் கவி வடிவம் ஒரு தெளிவான விடயத்தை குறித்து நிற்கிறது .

முதலாளித்துவ சித்தாந்தம் 'செக்கியூலரிச ' வடிவில் மதத்தையும்
வாழ்வையும் பிரித்து வைத்தாலும் கிறிஸ்தவ மதத்தோடு அதன் பற்றுள்ள பார்வை ,விசுவாசம் மாறவே மாறாது . பரலோகத்தில் இறைவனின் எல்லையை வைத்து விட்டு பூலோகத்தில் எத்தகு வாழ்வையும் வாழலாம் . சர்ச்சுக்குள் சென்று பாவமன்னிப்பு கேட்டால் போதுமானது . பாவச் சுமையை இன்னொருவர் சுமப்பார் !

அற்புதமான இந்த கொள்கை சுயநலம் பிடித்த குள்ள நரிகளின் கழுத்திலும் சிலுவையை தொங்கப் போட்டதில் ஆச்சரியம் இல்லைதான் .இவர்கள் செல்லுமிடமெல்லாம் இந்த கிறிஸ்தவத்தையும் கொண்டு செல்வார்கள் . இந்த மதம் இவர்களது சுயநல வாழ்வில் தலையிடாது .மாறாக தேவைக்கு உதவும். இவர்கள் அடித்தாலும் மறுபக்கம் அணைக்கும் கரமாக இந்த முதலாளிகளுக்கு மதம் 'சப்போர்ட்' ஆகியது .

அரசியல் அற்ற அரசியலும் ,சிலபோது அரசுக்குள் ஒரு அரசாகவும் ! கிறிஸ்தவம் இருக்கும் .உதாரணமாக பண்டைய சிலுவைப்போருக்கும் நவீன 'போஸ்னியா ' WAR இற்கும் இடையில் அரசியலாக அது கிறிஸ்தவர்களை இயக்க வில்லையா !?

இன்னொரு புறம் அரச சார்பற்ற குழுக்கள் மூலம் SOFT HAND வேதங்களாக இந்த கிறிஸ்தவ மதத்தை பயன் படுத்தியே சிந்தனை யுத்தத்தை முழு உலகிலும் ,இஸ்லாத்தின் பூமியிலும் இந்த முதலாளித்துவ வாதிகள் சிறப்பாக முன்வைத்தனர் வென்றனர் . எனவேதான் இவர்களது 'மிசனரிகளுக்கு' இராஜ தந்திர பாதுகாப்பு முழு உலகிலும் சாதாரணமாகவே கிடைத்து விடுகிறது .' ஜெனரல் சீசி ' யும் பரக் ஒபாமாவும் இத்தகு சிந்தனா வடிவத்தில் தான் ஒன்றானவர்கள் .

அப்படி ஒரு கப்பல் தான் நீங்கள் பார்த்து ரசித்து, சிந்தனை வயப்பட கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது . அதாவது 'மிசனறிக் கப்பல் ! சிந்தனை மாற்றத்துக்கான புதிய விதைகளை விநியோகிப்பார்கள். நாம் வீசிவிட்டு சென்றாலும் எங்காவது சிலது முளைக்கும் . முதலாளித்துவ வாழ்வியலுக்கு சாதகமாக . பள்ளி வாசலில் தேசியக்கொடி ஏற்றியது வரை அவர்கள் தந்து நாம் ஜீரணித்த சிந்தனை தானே !



http://khandaqkalam.blogspot.ae/2013/09/blog-post_18.html#more




Sep 17, 2013

அவர் சரியாகத்தான் சொன்னார் !



அவர் சரியாகத்தான் சொன்னார் !
அவருக்கு பொன்னாடை போர்த்தி 
கொடிபிடித்து பட்டாசு வெடித்து 
நாம் தான் பிழையாக விளங்கிக் கொண்டோம் !

தாருல் குப்ருக்கு இவர்கள் விசுவாசம் 
இல்லாதவர்களாம் . அல்லாஹ்வுக்கும் 
அவன் 'வஹி' வழி அமைந்த தாருல் இஸ்லாத்துக்கும் 
தான் நாம் விசுவாசமானவர்கள்.
தேசிய அழுக்குப் படிந்திருந்தாலும் 
எதோ ஒரு ஓரத்தால் உண்மை உருவம் புரிந்ததால் 
சொன்ன 'சொலிட்டான ' வார்த்தை !

மறுமையை மறந்து இம்மைக்குள் 'டென்ட் ' அடித்து 
'ஹுப்புத்துன்யா' இயக்கத்தில் நிர்பந்த நியாயத்தில் 
குப்ருக்கு சரண்டராகி மரணத்தை வெறுத்த 
போதும் அவர் சரியாகத்தான் சொன்னார் !

சந்தர்ப்ப பல் இளிப்பு ! வாக்குறுதி 'லிஸ்ட்' தூக்கி 
அவர் வந்தபோது 'போலின்' போட்டு 
'தாகூத்துக்கு' நாம் பையத் கொடுத்தது அவர் தப்பில்லையே !
பிழையை சரியாக்கி 
இலுப்பம் பூக்களை
சர்க்கரை ஆக்கியது எம் தப்புதான் ! 

ஆனாலும் அவர் இன்னும் சரியாகவே சொன்னார் !
சர்வதேசத்தோடு எமக்கு 'லிங்க்' உண்டாம் !
நல்ல கணிப்பு . நாம் சிறுபான்மை இல்லை என்பதை 
புரிந்து சொன்ன வார்த்தை அது !
' வன் 'உம்மாஹ் கென்செப்டை 'யார் சொன்னால் என்ன ?
'இப்லீஸ்' கற்றுத் தந்த 'ஆயதுல் குர்ஷி 'போல !

ஜாஹிலீய சக்தியை பஞ்சு மெத்தையாக்கி வாழ்ந்த 
எம் கடந்த காலம் !அதில் இனவாத முட்கம்பி 
முளைத்த போதும் ,மிச்ச சொச்சத்துக்காக 'அகீதாவையும்'
அடகு வைக்கும் அற்பப் பிறவிகளாக மாறியது 
எம் தப்புதான் . அவர் சரியாகத்தான் 
சொன்னார் . நாம் தான் எம் மார்க்கத்தை மதமாக 
பிழையாக விளங்கிக் கொண்டோம் !!!
சொன்னவன் காவியத் தலைவனல்ல 
காவிகளின் தலைவன் !

http://khandaqkalam.blogspot.ae/2013/09/blog-post_17.html?spref=fb

“வைட் பொஸ்பரஸ் குண்டுகள்”

'மூஜாஹிடீன்கள்' காத்திருக்கின்றனர் !!! சிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை ! (ஒரு பார்வை ) PART 02





சிரிய விவகாரத்தில் மேற்கின் நுழைவுக்குப் பின் இப்போது இன்னொரு 'ரீலும்' பக்குவமாக விடப்படுகிறது . அது ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து விடயங்களை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது . இங்கு ஒரு விடயத்தை நாம் தெளிவாக உணர வேண்டும் . அது இன்று உலகில் தனிப்பெரும் அதிகார அந்தஸ்தில் இருப்பது முதலாளித்துவம் மட்டுமே ஆகும் .அந்த வகையில் ரஷ்யாவோ , சீனாவோ சித்தாந்த எதிர்நிலை என்ற நிலையை பறிகொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது .

எனவே புதிய சந்தை பிடிப்பு ,வளக்கொல்லை தொடர்பான போட்டி அரசியல் மட்டுமே இன்று இவைகளுக்கு மத்தியில் இருக்கின்றது . அதிலும் ரஷ்யா தனது MIC 29 ரக அதிவேக தாக்குதல் விமானங்களை கூட உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் தேடும் அளவுக்கு பஞ்சத்தில் அடிபட்டுள்ளது என்பதை நாம் சொன்னால் சிலருக்கு ஒரு 'ஜோக்' போல இருக்கும் . ஆனால் அதுதான் உண்மையாகும் .

ஆனால் இந்த போட்டி ஏகாதிபத்திய வாதிகளுக்கு இடையில் சிரிய விவகாரத்தில் கூட்டு என்பது ஏன் ?அதாவது ஒட்டு மொத்தமாக U .N ,NATO ,ரஷ்யா என உலகச் சண்டியர்கள் இணைவது ஏன் ? அதன் ஒரே காரணம் தமது கேவலமான சுரண்டல் பிழைப்பு மீது ஒட்டு மொத்தமாக ஒரு பயங்கர அடி விழப்போகிறது என்ற அச்சமே ஆகும் . இந்த அச்சத்தின் காரணம் உணர சிரியப் போராளிகள் தரப்பில் இருந்து வந்துள்ள கூட்டு அறிக்கையின் சுருக்கத்தை கீழே தருகிறோம் .

"சிரியாவில் பெரும்பகுதி தற்போது எமது கட்டுப்பாட்டிலேயே உள்ளது . இன்னும் குறிப்பிட்ட சில சதுர கிலோமீட்டர்களே பசர் அல் அசாத் வசம் இருக்கின்றது . மற்றும் இந்த NATO ,U .N , தலையீடானது எமது எதிர்கால இஸ்லாமிய அரசிற்கான அடித்தளத்தை அழித்து 'திமோகிரசி' எனும் குப்ரிய தேசிய அரசியலை சிரியாவில் புகுத்துவதற்கான நடவடிக்கையே ஆகும் . அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் .

மேலும் சிரியாவின் அணைத்து தரைமார்க்கப் பாதைகளும் எமது பூரண கட்டுப்பாட்டிலேயே உள்ளது .சிரிய மக்களும் எம்மோடு இருக்கிறார்கள் . பசர் அல் அசாதோ , அமெரிக்காவோ ,ரஷ்யாவோ , NATO வோ , ஐநாவோ எவர்களாக இருந்தாலும் எமது பார்வையில் ஒரே தரத்தை உடையவர்கள் . இஸ்லாத்தை நிலைநாட்டும் பணியில் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் நாம் எதையும் சந்திக்க தயாராகவே உள்ளோம் ! அல்லாஹ் எங்களோடு இருக்கின்றான் ". என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது .

எனவே எம்மால் கணிக்கக் கூடிய விடயம் என்னவென்றால் , முதலாளித்துவம் தனது சித்தாந்த ஆதிக்கத்தின் அழிவுப்புள்ளியை தெளிவாகவே சிரியாவில் இனம் கண்டுள்ளது . அந்தப் பதற்றம் அடிவயிற்றை கலக்க U .N ,NATO ,ரஷ்ய கூட்டு என சகல இராஜதந்திர , இராணுவ சைணியங்களையும் களமிறக்கி ஏதாவது ஒன்றை செய்யப் பார்க்கிறது .

அத்தோடு இஸ்லாம் சுற்றிச் சுழன்று தனது பூர்வீக நிலப்பரப்பின் மீது இருந்தே தனது மீள் மேலாதிக்க வரலாற்றை தொடரப் போகிறது ! என்ற அச்சம் இன்று யகூதி ,நசாராக்களுக்கு மட்டுமல்ல ,குறுநில குபேரர்களாய் சுக போகத்தில் திளைக்கும் அராபிய மன்னர்களுக்கும் ஏற்பட்டுள்ளது .பல பில்லியன்களை வீசி முஸ்லீம்களின் இரத்தத்தை அவர்கள் பருகும் PEPSI போல குடித்தாவது இந்த நெருக்கடியில் இருந்து தப்ப சிலுவை நிழலில் தஞ்சம் புகுந்துள்ளனர் .

இன்று இருக்கும் நிலையில் NATO விற்கு ஒரு உள்ளார்ந்த உதவித்தளம் ,மற்றும் சப்போர்ட் படைகள் அங்கு அவசியமாகும். அந்தப் பணியை பசர் அல் அசாதே செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை .ஈரானின் 'ஹிஸ்புஸ் சைத்தான்கள் ' தாம் அவர்களோடு உள்ளார்களே ! இருந்தாலும் மற்றக் களங்கள் போல் அல்லாமல் NATO தனது தரைப்படை அனுப்பும் நிலை வந்தால் .... அந்தப் படை பட்டப் பகலில் கூட 'நைட் விசனோடு' தான். செல்லவேண்டி இருக்கும். காரணம் தமது எதிர்காலம் தொடர்பில் ஒரு இருண்ட சூனியத்தில் தான் இறக்கி விடப்பட்டிருப்பார்.

சிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை ! (ஒரு பார்வை )




சிரிய விவகாரத்தில் U .N தனது அறிக்கையை இப்போது வெளியிட்டுள்ளது .அதன்படி சிரியாவில் நிகழ்ந்துள்ள யுத்தக் குற்றங்களில் பசர் அல் அசாத் தரப்பு மற்றும் சிரியப் போராளிகள் தரப்பு ஆகிய இருபக்கமும் குற்றமிழைத்துள்ளது என்றும் ,சிவிலியன்கள் படுகொலை விவகாரத்தில் இரு தரப்பும் தாராளமாக ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது .

அதே நேரம் பசர் அல் அசாத் இரசாயன மற்றும் அழிவுதரும் ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பில் NATO வின் நிபந்தனைகளுக்கு தாம் கட்டுப்படுவதை உறுதிப்படுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்வந்துள்ளார் .

இந்த வகையில் U .N அறிக்கையானது சிரிய விகாரத்தில் மேற்குலகு தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது .அதாவது பசர் அல் அசாத்தோடு விடயங்கள் முடியப் போவதில்லை ! அது ஒரு உப்புச் சப்பற்ற தொடக்கம் மட்டுமே என்பதையும் ,தாம் உண்மையிலேயே எதிர்பார்க்கும் எதிரியை நோக்கி விடும் யுத்தப் பிரகடனமாகவும் விடயத்தை கருத முடியும் .

இந்த U .N (ஐக்கிய நாடுகள் சபை ) என்பது எப்படியான நிறுவனம் என நாம் முன்னர் ஒரு பதிவில் தெளிவாக விளக்கியுள்ளோம் . அதனால் இப்போது சுருக்கமாக விடயத்தை பார்த்தால் இப்படிக் கூறலாம் . மகாபாரத இதிகாசத்தில் பஞ்சபாண்டவர்களின் மனைவி திரெளபதி பற்றி அறிவீர்களா ? அதாவது ஐந்து கணவன் மாருக்கு ஒரு மனைவி போல அதை விட' அட்வான்சாக ' இன்று ஏகாதிபத்தியங்களின் மனைவியாகவும் அதே நேரத்தில் இஸ்ரேலின் வைப்பாட்டியாகவும் தொழிற்படும் அமைப்பே இந்த U .N ஆகும் .

'வீட்டோ ' என்ற 'சுப்பர் பவர்' சர்வாதிகாரத்தில் அடிக்கடி சோரம் போனாலும் அறிக்கை விடுவதில் மட்டும் ஒரு சுத்தமான கற்புக்கரசி ! நீதிக்காக ,நியாயத்துக்காக இந்த அமைப்பு சாதித்தது என்பதை விட ஏகாதிபத்தியங்களுக்கு இலாபங்களை நிறையவே சம்பாதித்து கொடுத்துள்ளது . அவர்களின் அரசியல் ,பொருளாதார ,இராணுவ நிர்ணய செயற்பாடுகளுக்கு இந்த U .N நிறையவே தோள் கொடுத்துள்ளது .

அதுவும் குறிப்பாக முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுடன் நெருக்கமும் விசுவாசமும் அதிகம் .ஜெனீவா இதன் வசிப்பிடமாக இருப்பதால் புகுந்த வீட்டு கலாசாரத்தை பின்பற்றி தன் கணவர்மார்களின் நிகழ்கால ,எதிர்கால 'அக்சன் பிளான்களை ' அறிக்கையாக வெளியிட்டு விடுவதில் இந்த U .N ஒரு PERFECT ஆன பொண்டாட்டி .

அந்த வகையில் மேற்குலகு சிரிய விவகாரத்தில் எத்தகு நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது !? என்பது தொடர்பில் இந்த U .N அறிக்கை ஒரு தெளிவான முன்னறிவிப்பை செய்துள்ளது என்று தான் எம்மால் கருத முடிகிறது . அந்த இலக்கு சிரியப் போராளிகள் தாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . சரி இனி இதுவிடயத்தில் சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர் ? இன்ஷா அல்லாஹ் மறுபதிவில் தருகிறேன்.