Jul 27, 2016

துருக்கிய சதிப்புரட்சி - இவர் சொல்வது உண்மையானால்...?

- உஸ்தாத் சஈத் ரித்வான் !


தற்போது அஷ்ஷாமினுடைய நிலத்தில் நடந்தேறி வருகின்ற நிகழ்வுகள் சர்வதேச சக்திகளினதும், பிராந்திய சக்திகளினதும் அதிமுக்கிய கவனத்தை ஈர்த்துள்ள விடங்களாகும். ஏனெனில் அஷ்ஷாமிலே தொடருகின்ற போராட்டம் முதலில் முஸ்லிம்களுக்கும், இரண்டாவது ஐரோப்பாவுக்கும். மூன்றாவது அமெரிக்காவுக்கும், பின்பு ஏனைய தரப்பினர்களுக்கும் வாழ்வா சாவா போராட்டம் எனக்கருதும் அளவிற்கு கனதியானதாகும். அந்தப் போராட்டத்தின் முடிவிலே வெற்றியோடும், இலாபத்தோடும் திரும்புபவரே தோன்றவிருக்கும் அடுத்த யுகத்தின் அதிபதியாக வெளியேறுவதுடன், அதிலே தோற்கடிக்கப்படுவர் சர்வதேச அரங்கில் மதிப்பிழந்த செல்லாக்காசாகி விடும் சூழல் தோன்றிவிடும்.


சிரியாவில் புரட்சி வெடித்த சந்தர்ப்பத்திலிருந்து இன்றுவரை ஏனைய சர்வதேச சக்திகள் சிரிய விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை தடுப்பதற்காக அமெரிக்கா கடுமையான பிரயத்தனத்தை எடுத்து வருகிறது. இதுவரை காலமும் எவரேனும் அதற்குள் தலையிட்டு இருப்பார்களேயானால் அது அமெரிக்காவின் அனுமதியுடனோ அல்லது கடைசியாக ரஸ்யா தலையிட்டதைப்போல அமெரிக்காவில் வேண்டுதலின் பேரிலோதான் அவை இடம்பெறுகின்றன.


பேச்சுவார்த்தைகள் போன்ற அரசியல் வழிமுறைகளினூடாக, அல்லது ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டிப் படுகொலைகளினூடாக சிரியப் புரட்சியில் பாரிய அலுத்தத்தை பிரயோகித்து அமெரிக்கா வழங்குகின்ற தீர்வுக்கு இணங்கச் செய்யும் அமெரிக்காவின் அனைத்து முயற்சிகளும் படு தோல்வியில் முடிந்துள்ளன.


சிரியப்புரட்சி அனைத்து பிரதான தரப்புக்களையும் கதிகலங்கும் ஓர் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக யாருடைய கையில் களத்தின் கயிறுகள் இருக்கின்றனவோ அந்த அமெரிக்காவையே அது விழிபிதுங்கச் செய்துள்ளது.


பாவித்த அனைத்து துரும்புகளும் கை கொடுக்காத நிலையில் இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெறியேறும் பாதையாக துருக்கியை பயன்படுத்த அமெரிக்கா கண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அதன்படி அதனது நாசத்திட்டத்தை தனது முக்கிய முகவரான அர்துகானின் கரங்களால் அமூல்படுத்த அது காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய பிரபல்யத்தை தன்னகப்படுத்தியிருக்கும் அர்துகானுக்கு சிரியாவுக்குள் இயங்கும் சில குழுக்களிடையே காணப்படும் ஏற்பு நிலையை அது பயன்படுத்த நினைத்திருக்கிறது. குறிப்பாக சிரியாவுக்குள் ஈரானிய வகிபாகம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயமாக தோற்றம் பெற்றுள்ள நிலையிலும், சிரியாவுக்குள் ரஸ்ய - ஈரானிய கூட்டணி முயற்சி இனி பலிக்க போவதில்லை என்ற நிலை உருவாகியிருக்கின்ற நிலையிலும் அமெரிக்காவின் கவனம் துருக்கி மீது குவிந்துள்ளமை தவிர்க்கப்பட முடியாததே.


எனவே அது வரவிருக்கின்ற அரங்கிற்கு ஏற்றவாறு அனைத்தையும் தயார்படுத்த களத்திற்குள் குதித்துள்ளது. அவற்றில் முக்கியமானவை,


1. எதிர்கால சிரியா இஸ்ரேலுடன் விரோதத்தைப் பேண மாட்டாது என்பதற்கான உத்தரவாத்தை வழங்குவதற்காக துருக்கியின் சியோனிச யூதர்களுடனான உறவை சுமூகப்படுத்துவது.



2. “அஷ்ஷாமின் கொடுங்கோலன் பஷாரின் முழுமையான வெளியேற்றமே சிரியாவின் தீர்வுக்கான நிபந்தனை” என இதுவரை காலமும் பேரளவுக்காவது முன்வைத்து வந்த அர்துகானின் உறவை பஷாருடன் சுமூகப்படுத்தி பலப்படுத்துவது.



3 சிரியாவில் துருக்கியின் தலையீட்டால் ஈரானுக்கும் அதன் நலன்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தி ஈரானுடனான உறவை மேம்மடுத்துவது.



4. துருக்கியின் தலையீட்டால் ஈராக்கின் உள்ளரங்கில்; ஏற்படக்கூடிய பாதிப்பை விளக்கி ஈராக்குடனான உறவை மேம்படுத்துவது.



5. திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் அதனுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படவும், ஐரோப்பியத் தலையீட்டை தொடர்ந்து தள்ளி வைத்துக் கொள்வதற்கும் ரஸ்யாவுடனான உறவை சுமூகப்படுத்துவது



6. அண்மையில் இஸ்ரேலுடன் சமூகமான நல்லுறவை ஏற்படுத்திய கேவலமான செயலினால் அர்துகானின் பிரபல்யம் துருக்கிக்குள் சரிவடைந்து செல்வதை தடுத்து நிறுத்துவது. துருக்கிய இராணுவத்திற்குள் அர்துகானுக்கு எதிராக உருவாகி வரும் எதிர் சக்திகளின் விவகாரத்தை தீர்;த்து வைப்பது...


தமது அரசியல் தீர்மானப் பொறிமுறைக்கு வெளியே இடம்பெற்றதாக அர்துகானே ஏற்றுக்கொண்ட சம்பவமான ரஸ்ய தாக்குதல் விமானத்தை துருக்கிய விமானப்படை சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்த எதிர் சக்திகளின் வளர்ச்சியை தெளிவாகக் காட்டியது துருக்கிய நிகழ்வுகளை அவதானிப்போர் அறிந்த விடயமே.


7. சிரியக் களத்துக்குள் அர்துகான் முழுமையான நுழைவதாக இருந்தால் உள்நாட்டுக்குள் அவரை புறமுகுகில் குத்துகின்ற எந்தவொரு உறைவாளையும்; விட்டு வைக்க முடியாத நிலை உருவாகும். இத்தகைய உறைவாட்கள் இராணுவத்துக்குள் அவரை எதிர்க்கின்ற அணிகளில் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்ததால் அவற்றை முற்றாக அகற்றுவது.



மேலும் முக்கிய சில அவதானங்கள்...


முறியடிக்கப்பட்ட சதிப்புரட்சி, மக்கள் ஆதரவைத் திரட்டக்கூடிய விதத்தில் மக்களை விழித்து ஆற்றப்பட்ட எத்தகைய உரையையும் தாங்கி வராமலும், அர்துகானுக்கு எதிராக மக்களை தூண்டிவிடக்கூடிய விதத்தில் அவரது கொள்கைகளை அம்பலப்படுத்தாமலும், இன்னும் சொல்லப்போனால் சதியினை மேற்கொண்டவர்களின் இலக்குகளை சுட்டிக்காட்டக்கூடிய அல்லது சதிப்புரட்சியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நலனை சுட்டிக்காட்டக்கூடிய எத்தகைய சைக்கினையைக் கொண்டிராத வெறுமையாக ஒன்றாகவே காட்சியளிக்கிறது.


அதற்கும் மேலாக சதிப்புரட்சியின் இரு மருங்கிலுள்ளவர்களும் ஒரே திசையை பின்பற்றுபவர்கள். அர்துகானும், அவரது எதிராளிகளான பத்ஹ}ல்லாஹ் குலனும் அமெரிக்காவை பின்பற்றுவர்கள்!


மேலும் சதிப்புரட்சியினால் இராணுவத்துக்குள் தமக்கு இருக்கின்ற செல்வாக்கிற்கு என்னவாகும் என்பது பற்றி பிரித்தானியர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சதிப்புரட்சி தொடர்பாக பேசிய அமெரிக்க பேச்சாளர்களின் பேச்சுக்களில் சஞ்சலமற்ற நிலை தெரிகிறது.


மேலும்...

இந்த சதிப்புரட்சி அர்துகானினதும், அவரது அரசாங்கத்தினதும் பிரபல்யத்தை அதிகரிக்கும்.
மேலும் இராணுவத்தின் மீதான அவரது இறுங்குப்பிடியை உறுதிப்படுத்தும்.
அத்துடன் அவரது அரசியல் எதிராளிகளை மென்மேலும் பலகீனப்படுத்தும்.


இவை அனைத்தும் அர்துகானுக்கு கைகூடி வருமானால், சிரியாவில் அமெரிக்காவுக்காக சேவகம் செய்யும் துருக்கியின் வகிபாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வலிமையை அது அர்துகானுக்கு வழங்கும்.

முடிவாக,



சிரியா மீது துருக்கி செய்ய இருக்கின்ற தலையீடு சிரியப்புரட்சி தொடர்பான அமெரிக்காவின் அதிமுக்கியமானதும் ஆபத்தானதுமான செயற்திட்டங்களில் ஒன்றாகவே இருக்கப் போகிறது.


இந்தப் புரட்சிக்கு பலியாகிய துருக்கிய இராணுவம் அமெரிக்காவின் பலிக்கடாக்களாகியிருக்கின்ற அதேவேளை அரங்கேற்றப்பட்ட துருக்கிய சதிப்புரட்சியானது கொடியதொரு எதிர்காலத்திட்டத்திற்காக, காணப்படும் நிலைமைகளை கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வாகவே தெரிகிறது. மாறாக அது ஏற்கனவே நடந்துகொண்டிருந்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாக தென்படவில்லை.


எனவே நிகழ்வுகள் எதை நோக்கி? எந்தளவு தூரத்திற்கு? எவ்வளவு காலத்திற்கு? நீளப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Source : Darulaman.net

Jul 23, 2016

துருக்கிய சதிப்புரட்சியை அரங்கேற்றியது பத்ஹுல்லாஹ் குலனா? தைய்யிப் அர்துகானா? அல்லது மூன்றாவது சக்தியா?




 பல முஸ்லிம்களின் உயிரைக் குடித்த மக்களின் இயல்பு வாழ்வில் வீணான குழப்பத்தை ஏற்படுத்திய அண்மைய துருக்கிய இராணுவ புரட்சி முயற்சியை முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். புரட்சியின் வீரர்களாக மேற்குலக கைக்கூலி ஜெனரல்களால் களத்தில் இறக்கி விடப்பட்டு இன்று குற்றவாளிகளாக களங்கப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவச் சிப்பாய்களுக்காகவும் ஒரு கணம் எமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்களும் எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று மேற்குலக அடிவருடிகளின் காய் நகர்த்தல்களுக்காக அடிக்கடி பலிக்காடாவாக்கப்படும் எமது உம்மத்தின் இளைஞர்களே!

கமாலிச, பிரத்தானிய விசுவாச அணிகளுக்கும், தற்போது இராணுவத்திற்குள் மிகப்பெரும்பான்மை செல்வாக்கிலுள்ள அமெரிக்க சார்பு – அர்துகான் அணிகளுக்கும் இடையான முறுகல் நிலை தொடர்ந்து இருந்து வருவது நாம் அறித்ததே. அதேபோல இன்று பத்ஹுல்லாஹ் குலன் சார்பினரே சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என அர்துகான் அணியினரால் அரசியல் நோக்கத்துடன் பரப்புரை செய்யப்படும் விடயம் அனேகமாக யதார்த்ததுடன் முரண்பட்டாலும், அமெரிக்க முகவரான பத்ஹ}ல்லாஹ் குலனின் ஆதரவு இராணுவ உளவுத்துறைக்குள்ளும், பொலிஸ்துறைக்குள்ளும், நீதித்துறைக்குள்ளும் கணிசமான அளவில் காணப்படுவதும் மறுப்பதற்கில்லை. இதற்கிடையே சிரியாவில், அமெரிக்காவும், ரஸ்யாவும், துருக்கியும் ஒரே இலக்குடன் ஒருக்கிணைக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் நி;லையில் நவம்பர் 2015 இல், சிரியா மீது தாக்குதல் நடாத்திய ரஸ்ய தாக்குதல் விமானம் ஒன்றை துருக்கிய விமானப்படை தன்னிச்சையாக சுட்டு வீழ்த்திய சம்பவத்தை நாம் அறிந்திருப்போம். அதிபர் அர்துகானினதும், அவருக்கு விசுவாசமான இராணுவ உயர் தலைமையினதும் அனுமதியில்லாமல் இடம்பெற்ற இதுபோன்ற நிகழ்வுகள் இராணுவத்திற்குள் அர்துகானுக்கு பதிலாக வேறேங்கோ தமது விசுவாசத்தை வைத்திருக்கும் சக்திகளும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காட்டி நிற்கின்றன.

 இந்தப் பின்னணியில் எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி அதியுயர் இராணுவ சபையில் வருடாந்தக் கூட்டம் இடம்பெற இருந்த சூழலில் அர்துகானுக்கும், இராணுவத்துக்குள் சில அணிகளுக்கும் இடையேயான முறுகல் நிலை வலுவடைந்து இருந்தது. இதன் விளைவாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல இராணுவ அதிகாரிகள் தமது பதவியை கட்டாயமாக கைவிட வேண்டிய அல்லது சிக்கலான விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அதற்கு அஞ்சிய இராணுவ அதிகாரிகளின் அவசரத் தீர்மானமே இந்த சதிப்புரட்சி முயற்சியாக இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

அர்துகானின் நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி (AKP) யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கானி டொரனும் இதுபோன்ற ஒரு கருத்தை அல்ஜெஸீராவுக்கு தெரிவித்திருந்தார்,

“ தற்போது சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டவர்கள் சதிப்புரட்சி முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு சற்று முன்னர் சதிப்புரட்சியினூடாக ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரால் வழக்கறிஞர்களால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட இருந்தவர்கள்...” இதே கருத்தை இன்னுமொரு AKP அதிகாரி,


“ கடந்த சில மாதங்களாக இராணுவத்திற்குள் சதி புரட்சியொன்றை நடத்த முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலுள்ளவர்களை துருக்கிய அதிகாரிகள் அவதானித்து வந்தார்கள், எங்களுடைய கணிப்பின்படி சதி முயற்சியில் ஈடுபட்ட இந்தக்குழு, தாம் விசாரணைக்கு உட்படுத்தப்படப்போகிறோம் என்பதை உணர்ந்ததன் விளைவால் தோன்றிய பதற்றத்தாலேயே இவ்வாறு செயற்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.


இராணுவத்தின் அதியுயர் பீடத்தினதும், அதன் சிரேஷ்ட தலைமையினதும் ஆசிர்வாதம் இல்லாத நிலையிலும், சமூக மட்டத்தில் மக்கள் ஆதரவும், ஆணையும் தமக்கு சாதகமாக இருக்க முடியாத சூழலில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் அரசியல் முதிர்ச்சியற்றது. எனினும் காலணித்துவ அரசுகளின் போலியான நம்பிக்கையூட்டல்கள் சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை மறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. எனவே காலணித்துவ சக்திகளுக்கு விலைபோய் தமது சொந்த மக்களுக்கு எதிராகவே துப்பாக்கியை நீட்டும் குறைப்பிரவசப் புரட்சிகள் இவ்வாறு தோல்வியிலேயே முடியும் என்பது வியப்புக்குரியது அல்ல. இதேபோல காலணித்துவ சக்திகளின் தூண்டுதலின் பேரில் பல சதிப்புரட்சி முயற்சிகள் நவீன துருக்கிக்குள் இதற்கு முன்னரும் இடம்பெற்றிக்கின்றமை நாம் அறிந்த விடயமே.


துருக்கிய அரசு குற்றம் சாட்டுவதைபோல இந்த சதிப்புரட்சி முயற்சி துருக்கிய அரசுக்கு சமாந்தரமான கட்டமைப்பு என மிகைப்படுத்தி அழைக்கப்படும் குலன் இயக்கத்தின் (இது கிஷ்மத் இயக்கம் எனவும் அழைக்கபடுவதுண்டு) வேலையாக இருக்க சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகும். 1999 இலிருந்து அமெரிக்கா, பென்சில்வேனியாவில் அடைக்களம் புகுந்திருக்கும் பத்ஹுல்லாஹ் குலனின் தலைமையில் இயங்கும் இந்த இயக்கத்தின் ஆளுமையை விட இந்த புரட்சி முன்னெடுப்பு பாரியது என்பதே அதற்கான காரணமாகும்.


“பென்சில்வேனியாவிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துருக்கியை இயக்க முடியாது” என்று கடந்த சனிக்கிழமை பத்ஹுல்லாஹ் குலனை புரட்சியுடன் தொடர்புபடுத்திச் சாடிய அர்துகான், அமெரிக்கா அவரை தம்மிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


மேலும் துருக்கிய பிரதமர் பின்னலி யில்டிரிம் குலனுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு நாட்டையும், துருக்கியுடன் போர் பிரகடனம் செய்த நாடாகவே துருக்கி கருதும் என்றும் எச்சரித்திருந்தார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை பத்ஹுல்லாஹ் குல்லன் திட்டவட்டமாக நிராகரித்து “கடந்த ஐந்து தசாப்த்தங்களாக பல இராணுவப்புரட்சிகளால் பாதிக்கப்பட்டவனாக இருக்கின்ற என்னை இந்த புரட்சி முன்னெடுப்புடன் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்துவது என்னை விசேடமாக கேவலப்படுத்தும் ஒரு செயலாகும். நான் அதனை திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த சதிப்புரட்சி சிவில் சக்திகளின் சுதந்திரத்தை முடக்கவும், நீதித்துறையையும், இராணுவத்தையும் தனக்கு சார்பாக ஒடுக்கவும், அர்துகான் கனவு காணுகின்ற நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கான நியாயாதிக்கத்தை உருவாக்கவும் அர்துகானே ஏற்பாடு செய்த நாடகமென பழியை அர்துகான் பக்கமே திருப்பியிருந்தார். அமெரிக்காவும் சதிப்புரட்சியின் பின்னணி எதுவும் தெரியாததுபோல நீழிக்கண்ணீர் வடித்த வண்ணம் குலனுக்கு இந்த சதிவேலையில் சம்பந்தம் இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆதாரத்தை முன்வைக்குமாறு துருக்கியிடம் கேட்டிருந்தது. ஒரு வாதத்திற்கு குலனுக்கு இச்சதியுடன் சம்பந்தம் இருந்தாலும் கூட குலனும் ஒரு அமெரிக்க முகவர் என்ற அடிப்படையில் அது அமெரிக்காவுக்கு தெரியாதிருக்க எந்தச் சாத்தியமும் இல்லை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

பத்ஹுல்லாஹ் குலன் குற்றம் சாட்டுவதைப்போல அர்துகானே அமெரிக்க ஒத்துழைப்புடன் இந்த சதி நாடகத்தை நடாத்தியிருப்பதற்கான சாத்தியப்படுகளும் இல்லாமல் இல்லை.

காலணித்துவ சக்திகளின் தீய அரசியல் நோக்கங்களுக்காக துருக்கியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களும், அதனை அடிப்படையாக வைத்து இன்று பிரான்ஸிலும், ஏனைய மேற்குலக நாடுகளிலும் செய்யப்படுவதைப்போல “தீவிரவாதத்திற்கு எதிராக(அரசியல் இஸ்லாத்திற்கு) முழு உலகுமே அணி திரள வேண்டும”; என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தமது மதச்சார்பற்ற மிதவாதப்போக்கை தூக்கிப்பிடித்து, பிராந்தியத்தில் தீவிரவாத்திற்கு எதிரான போராட்டத்தில் தாம் முன்னணி வீரர்கள் என்பதை நிறுவ நினைக்கும் துருக்கிய அரசின் பரப்புரைகளும் இனிவரும் காலங்களில் துருக்கிய அரசியலின் திசையையும், அது பிராந்தியத்தில் வகிக்க இருக்கும் வகிபாகத்தையும் துல்லியமாகக் காட்டி வந்தன.

மேலும் அரைத் தசாப்பதங்களையும் தாண்டி தொடர்கின்ற சிரிய மக்கள் புரட்சியில் அமெரிக்க நலன்களை பாதுகாப்பதற்கு பஷாருக்கு பின் தனக்கு விசுவாசமான ஒரு முகவரை இன்று வரை இனம்காண முடியாது பதறிப்போயிருக்கும் அமெரிக்கா, தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டது. சவூதி, ஜோர்தான், ஈரான், துருக்கி என அனைவரும் அமெரிக்காவுக்காக முண்டியடித்து முயன்று பார்த்தாகி விட்டது. ரஸ்யாவும் அமெரிக்காவுக்கு ஊழியம் செய்ய மூக்கை நுழைத்தும் பார்த்து விட்டது. எனினும் அல்லாஹ்(சுபு) புரட்சியின் தூய்மையை காலணித்துவ சதிவலையில் அகப்படாது இன்று வரை பாதுகாத்து வருகிறான். இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சிரிய புரட்சியின் திசையும், அதனால் விரியும் அரசியல் களமும் முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் தங்குவதற்கு துருக்கியின் வகிபாகமும் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால் ஏனையோர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது துருக்கிக்கு சிரிய புரட்சியாளர்களுக்குள்ளும், முஜாஹிதீன்களுக்குள்ளும் ஆதரவைத் திரட்டும் ஆற்றல் அதிகமாகவே உள்ளதால் அதன் பகிவாகம் எதிர்காலத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

எனவே அமெரிக்கா சொல்கின்ற திசையில் துருக்கி இயங்குவதற்கு வழிவிடுவதற்கு அர்துகானுக்கு இரு முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவது, உள்நாட்டுக்குள் கணிசமான ஆதரவை அவர் தன்வசப்படுத்த வேண்டும். அது துருக்கியின் அரசியலைப் பொருத்த மட்டில் துருக்கிய இராணுவத்தின் பூரண ஆதரவு இல்லாது சாத்தியமேயில்லை. எனவே அந்த ஆதரவுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய எதனையும் அர்துகான் விட்டு வைக்க முடியாது. மேலும் மக்கள் ஆதரவை தன் பக்கம் வளைத்து வைத்திருப்பதற்கு அரசியல் களத்தில் தனது எதிர் சக்திகளை நசுக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கின்றது. அதற்கு என்றோ ஒருநாள் தானும் துருக்கிய அதிபர் கதிரையில் அமரலாம் என நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பத்ஹ}ல்லாஹ் குலனின் கட்டமைப்பின் செல்வாக்கை நாட்டில் தரைமட்டமாக்குவது அர்துகானுக்கு மிகவும் அவசியமாகும். அதனையே இந்த சதிபுரட்சியுடன் பத்ஹுல்லாஹ் குலனை வலிந்து முடிச்சுப்போடுவதன் மூலமாக அர்துகான் செய்து வருவதையும் நாம் காண்கிறோம்.

இரண்டாவது பிராந்தியத்திலும், அண்டை நாடுகளிலும் அர்துகானின் இயக்கத்திற்கு பாரிய தடைகள் எதுவும் இருக்கக் கூடாது. அந்த வகையில் அமெரிக்கா சைக்கினை செய்தால் ஈரானோ, ஈராக்கோ, சவூதியோ அதற்கு தடையாக இருக்கப்போவதில்லை. எனினும் இஸ்ரேலுடனான உறவை மாத்திரம் மீள் புதுப்பித்துக் கொள்வது இந்தக்கட்டத்தில் தவிர்க்க முடியாதது. அர்துகானின் ஆட்சிக்காலங்களில் அர்துகான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சிற்சில சர்ச்சைகள் தவிர்க்க முடியாது தோன்றினாலும் கூட பொதுவாகப் பார்த்தால் தேசிய நலன் கருதிய பரஸ்பர நல்லுறவே அவர்களிடையே இருந்து வந்துள்ளது. எனினும் இம்முறை சிரிய புரட்சினால் உருவாகியிருக்கும் அமெரிக்க நலன் சார்ந்த களவேலையை, துருக்கி இடைஞ்சல்கள் எதுவுமில்லாது செய்வதற்கு இஸ்ரேலுடனான உறவு மீள் சீரமைக்கப்பட்டு மென்மேலும் உறுதிப்படுத்தப்படுவதன் தேவை உள்ளது. அதன் வெளிப்பாடுதான் இஸ்ரேலுடனான நல்லுறவை புதுப்பொலிவுடன் புதுப்பித்து அதனை வெளிப்படையாகவே அறிவித்து, அமெரிக்க நலன்களுக்காக அவர்களுடன் பிராந்தியக் கூட்டாளிகளாக இயங்கும் முடிவினை அர்துகான் அண்மையில் எடுத்திருந்தார். அவரின் சியோனிஸத்தினுடனான உறவு உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் அவர் மீதான ஆதரவை கேள்விக்குறியாக்கியிருந்தது.

அமெரிக்க காலணித்துவ நலனையும், பிராந்தியத்தில் துருக்கியின் இராஜ தந்திர வெற்றியையும், அர்துகானின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு முக்கியமான சந்தியில்தான் இந்த சதி முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதால் அர்துகான் மீதும் சந்தேகம் எழுவதில் தவறில்லை. இராணுவ கட்டமைப்புக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்த அணி முரண்பாடுகளும், சிரியா உட்பட பிராந்தியத்தில் காணப்படும் களநிலை மாற்றங்களால் இராணுவத்திற்குள் அரசியற் தலைமையை மீறி இயங்க நினைக்கும் போக்கின் வளர்ச்சியும், இராணுவ கட்டமைப்புக்குள் களையெடுப்பு ஒன்றிற்கான அல்லது இராணுவ உயர் நிலைகளில் அதிபர் அர்துகான் சார்பான மேலதிக சுத்தப்படுத்தல் ஒன்றின் அவசியத்திற்கான காலநிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே இந்த சதி முயற்சி நடந்தேரியிருப்பதையும், சதிப்புரட்சி முறியடிப்புடன் அர்துகான் இராணுவ உயர் பீடங்கள் உட்பட, நீதித்துறை உட்பட சிவில் சேவை அதிகாரிகளில் ஆயிரக்கணக்கானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவரும் பின்னணியையும் வைத்துப்பார்த்தால் குலன் சொன்னதில் உண்மையேதும் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கே முஸ்லிம்கள் சில முக்கிய விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும். இராணுவ புரட்சி ஒன்றின் ஊடாக அல்லது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளின் புரட்சிகர தீர்மானம் ஒன்றின் ஊடாக நடைமுறையில் இருக்கின்ற ஆட்சியை மாற்ற நினைக்கும் முயற்சி அடிப்படையில் தவறானது அல்ல. அல்லது ஜனநாயம் என்ற தீய குப்ரிய அரசியல் வழிமுறையினூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சடவாத ஆட்சியை பலத்தை பயன்படுத்தி மாற்ற நினைப்பதும் தவறானது அல்ல. அதேபோல தொடர்ந்து தமது சுயநல அரசியலுக்காக காலணித்துவ சக்திகளின் கால்களில் மண்டியிட்டு தமது தீனையும், நாட்டையும், மக்களின் வாழ்வையும் அற்ப கிரயத்திற்கு விற்றுவரும் தலைமைகளுக்கு எதிராக முதுகெழும்புள்ள வீரர்களாக எழுந்து நிற்பதிலும் தவறில்லை. அந்தவகையில் அர்துகானின் அரசை தூக்கி எறிய யாரேனும் முயன்றிருந்தால் அதனை நாம் வரவேற்க வேண்டும். எனினும் இன்று துருக்கியில் நடந்து முடிந்திருப்பது அர்துகானின் காலணித்துவ நலன் பேணுகின்ற ஒரு குப்ரிய சடவாத அரசைக் கவிழ்த்து “துருக்கியின் சடவாத அரசியலமைப்பையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கப் போகிறோம்” என்ற போலி வாக்குறுதியுடன் இடம்பெற்ற இன்னுமொரு காலணித்துவ சடவாத முன்னெடுப்பு. எனவே இந்த இழி இலக்கிற்காக எமது உம்மத்தின் தூய இரத்தம் சிந்தப்படுவது எவ்வகையிலும் அனுமதிக்கப்பட முடியாதது. 1924ஆம் ஆண்டில் கிலாஃபத்திற்கு எதிராக சதிப்புரட்சியை மேற்கொண்ட முஸ்தபா கமாலின் காலத்திலிருந்து இன்று வரை துருக்கியில் இடம்பெறுவது இத்தகைய இழிப்புரட்சிகள்தான். எனவே அவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நாம் எதிர்த்தாக வேண்டும்.

மாறாக அல்லாஹ்(சுபு)வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் விரும்பக்கூடிய தூயதொரு இஸ்லாமிய புரட்சியே துருக்கி போன்ற உயர்ந்த வரலாற்று தேசத்திற்கு பொருத்தமானது. காலணித்துவ தலையீடுகளை வேரடி மண்ணோடு பிடுங்கியெறிந்து ஷரீஆவை முழுமையாக நிலைநாட்டும் தன்மானம் உள்ள ஓர் தலைமையே அதற்கு தேவையானது. எவ்வாறு முஹம்மத்(ஸல்) அவர்களின் மதீனத்துப் புரட்சிக்கு அவ்ஸ், ஹஸ்ரஜ் கோத்திரத்தலைமைகள் தமது கழுத்தை பணயம் வைத்து ஆதரவு தந்தனரோ அதேபோன்றதொரு இஸ்லாமிய புரட்சிக்கு ஆதரவு தருவதே துருக்கிய இராணுவம் போன்றதொரு புகழ்பெற்ற முஸ்லிம் இராணுவத்திற்கு தகுதியானது.

மக்கள் ஆணைக்கு முன்னால் பீரேங்கிகள் ஒரு பொருட்டே இல்லை என சதிப்புரட்சியை முறியடிக்க வீதிக்கிறங்கிய துருக்கிய முஸ்லிம்கள் ஜனநாயகத்தையோ, சடவாதத்தையோ பாதுகாக்கவல்ல களத்தில் வந்து நின்றனர்;. மாறாக மஸ்ஜித்களிலே அதான் ஒலி முழங்கி நாட்டைக் காக்க புறப்பட்டு வாருங்கள் என அர்துகான் அழைப்பு விடுத்ததும் அவர்கள் “யா அல்லாஹ்! யா அல்லாஹ்! அல்லாஹஹு அக்பர்” எனக் கோஷமிட்டபடி வெற்று மார்புடன் டாங்கிகளுக்கு முன்வந்து நின்றது காலணித்துவ சதிகளுக்கு எதிராக இஸ்லாத்தை பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. அர்துகானையும் AKP கட்சியையும் இஸ்லாத்தின் காலர்களாக நினைப்பது குருட்டுத்தனமானது என்றாலும் மக்களின் நோக்கம் உயரியது, அவர்களது குறிக்கோள் தெய்வீகமானது.

எனவே துருக்கிய இராணுவத் தளபதிகளும், வீரமிக்க துருக்கிய பொதுமக்களும் எவ்வாறு சதிப்புரட்சிக்கு எதிராக துணிகரமாக செயற்பட்டார்களோ அதைவிட பல மடங்கு தூய்மையுடனும், தியாகத்துடனும் அல்லாஹ்(சுபு)வின் ஷரீயத்தை தமது மண்ணில் நிலைநாட்டும் புரட்சிக்கு வித்திட வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய காலணித்துவ சக்திகளின் பிடியிலிருந்து தமது இராணுவத்தையும், நாட்டையும் பாதுகாக்க களத்தில் குதிக்க வேண்டும். அவர்களின் கைக்கூலிகளாக இயங்கும் கட்சிகளையும், தலைமைகளையும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். 'துருக்கிய தேசம்' என்ற குறுகிய குப்ரிய தேசிய சிந்தனையிலிருந்து விடுபட்டு 'ஓர் உம்மத்' என்ற அகீதா வழியமைந்த கோட்பாட்டில் நின்று அஷ்ஷாமையும், முழு முஸ்லிம் உலகையும் விடுதலை செய்யப்; புறப்பட வேண்டும்.

அப்போது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையில் வீதிக்கிறக்கிய முஸ்லிம்கள் இரு நாட்கள் கழித்து இவை போன்ற செய்திகளை வாசிக்க மாட்டார்கள்.

அப்போது சதிப்புரட்சியை அடக்கிய சூடு தணிய முன்னரே எமது தலைமைகள் எம்மை ஏலமிடும் இவைபோன்ற அவலமும், அவமானமும் எமக்கு ஏற்படாது.

வெள்ளியன்று சதிப்புரட்சி முயற்சிக்கப்படுகிறது...

ஞாயிறன்று...


“இன்சேர்லிக் இராணுவ விமானத்தளத்திலிருந்து அமெரிக்க யுத்த விமானங்கள் சிரியாவுக்குள்ளும், ஈராக்குக்குள்ளும் தாக்குதல் நடாத்தும் அனுமதியை அர்துகானின் அரசு மீள வழங்கியுள்ளது.”

(17-07-2016 பென்டகன் அறிவிக்கிறது)


இருநாள் கழித்து செவ்வாய் அன்று...


“செவ்வாய்க்கிழமை ISIL போராளிகள் என நினைத்து தவறுதலாக நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க விமானத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்...”

...தோற்கடிக்கப்பட்ட சதிப்புரட்சியுடன் மூடப்பட்ட இன்சேர்லிக் இராணுவ விமானத்தளம் மீளத்திறக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக பறந்த விமானங்களைக் கொண்டே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது... (19-07-2016 டெலிகிராஃப் செய்தி வெளியிடுகிறது)



அர்துகானின் துருக்கி எங்கு பயணிக்கிறது புரிகிறதா?


Sources
http://darulaman.net/

Jul 22, 2016

வெடிகுண்டுத் தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 40 பேர் பலி

AFP

அலெப்போ நகரில் வெடி குண்டு தாக்குதல் நடத்தி, சிரியா கிளர்ச்சிக்காரர்கள், சுமார் 40 அரசு ஆதரவு சிப்பாய்கள் மற்றும் போராளிகளை கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


படையினர் பெருமளவு பயன்படுத்தும் கட்டடத்துக்குக் கீழே தோண்டப்பட்ட சுரங்கப் பாதைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக பிரிட்டன் ஆதரவு பெற்ற மனித உரிமைக்கான சிரியா அவதானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் வியாழக்கிழமையன்று நடத்தப்பட்டது ஆனால் அதன் விளைவுகள் தற்போதுதான் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


BBC

நீங்கள் எப்படி!?


முஸ்லீம் உம்மத் எப்படியான சிக்களில் சிக்கியுள்ளது? அதன் மீட்சிக்கான சிந்தனை எவ்வாறு அமைய வேண்டும்? முரண் சிந்தனை கவர்ச்சியை ஏற்பதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் இப்படி பல விடயங்களை சொல்ல வரும்போது...

‪#‎சிலருக்கு‬ புரிகிறது.
#சிலருக்கு கடுப்பு!
#சிலருக்கு பிரச்சினையே தெரியாது!
#சிலருக்கு பிரச்சினை புரிந்தாலும் நாம் சொல்லும் அரசியல் தீர்வில் நம்பிக்கையில்லை!
‪#‎சிலர்‬ பிரச்சினையின் கோணங்களை மாற்றிப் புரிந்ததால் தொலைந்த தீர்வு அர்த்தமற்றது என்பர்!
#சிலருக்கு பிரச்சினையும் புரியும் தீர்வும் புரியும் ஆனால் அதை அடையும் பாதையில் குழப்பங்கள் இருக்கும்!.......

இப்படி பல்வேறு முரண் நியதிகள் கொண்டு முஸ்லீம் உம்மா இயங்கும் நிலையில் முதற்கட்டம் தீர்வு இதுதான் என ஒரு மையப் புள்ளியில் முஸ்லீம் உம்மத்தை ஒன்று குவிப்பதற்கான பணியே இன்று எமக்கு பிரதானமாகிறது! அந்த வகையில் இஸ்லாத்தின் வலுமிக்க இராஜதந்திர பின்புலம் கிலாபா அரசியலின் மீள்கட்டுமானத்தில் இருந்தே தீர்வு இருக்கும் என்பதும், இஸ்லாத்தின் செயல் கட்டமைப்பு ரீதியான பல வெற்றிகளை கிலாபா அரசின் கீழ் இருந்துதான் அல்லாஹ்(சுப) அளித்துள்ளான் என்பதும் எமது ஆழ்ந்த புரிதல். எனவே முஸ்லீம் உம்மா எதிர் கொள்ளும் சிக்கல்களின் தீர்வு என்ற விடயத்தில் கிலாபா அரசு அவசியமாக இருக்கிறது. எனவே கிலாபா அரசியல் எனும் இபாதத்துக்காக உடல் உள உணர்வு ரீதியாக நாம் ஒரு பொது நிலைப்பாட்டை நோக்கி உம்மத் உடன்படுவதே முதல் நிலை தீர்வாக நாம் முன் மொழிகிறோம்! இதை 1.அகீதா ரீதியாகவும் 2.சகோதரத்துவ ரீதியாகவும் 3.இடம் நில பொருள் வள பலத்தின் மூலமும் கட்டமைத்து சுண்ணாவின் வழியில் அமுல் படுத்த வேண்டும் என்ற மக்கள் எழுச்சியை அடுத்த தீர்வியல் இலக்காக குறிப்பிடுகிறோம்!

அடுத்து ரசூல்(ஸல்) காட்டித்தந்த அமைப்பில் அதற்கான தகுதி மிக்கவர்களிடம் நிபந்தனையற்ற உதவியை வேண்டி இந்த வேண்டுதலை முன்வைக்கிறோம். அதில் ஒடுக்கப்படுகிறோம் கைது செய்யப்படுகிறோம் சித்திர வதைகளுக்கு முகங் கொடுக்கிறோம் தடை செய்யப்படுகிறோம்!!!

எமது முடிவின் யதார்த்தத்தை உணர பின்வரும் வரலாற்று பேருண்மை மீது அவதானம் செலுத்த வேண்டியுள்ளது! அதாவது இஸ்லாத்தின் எதிரிகளிடம் இருந்து முஸ்லீம் உம்மா எப்போதிருந்து அரசியல், இராணுவ ,பொருளாதார, சிந்தனா ரீதியான சவால்களை எதிர்கொள்ள தொடங்கியது!? என்று கேட்டால் உடனேயே ரசூல்(ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கை தொடங்கி அப்படியே தாத்தாரியர் சிலுவைப் யுத்தம் என நகர்ந்து இன்றைய காஸ்மீர் விவகாரம் வரை அடுக்கிக் கொண்டே போகலாம்! இந்த வரலாற்று ஆய்வின் தீர்விடமாக நாம் குறிப்பிடும் கிலாபா அரசு என்ற இராஜதந்திரம் தொழிட்பட்டு நிற்பதை இஸ்லாத்தை புரிந்த எவராலும் மறுக்க முடியாது.

ஆனால் இப்படியான சிக்கல்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன என்ற தீர்வு விடயத்தை ஆராயும் போது அல்லாஹ்வின் தூதரது(ஸல்) செயல் ரீதியான இராஜதந்திரத்தை கருது கோளாக எடுத்து தீர்வு விடயங்கள் பகுப்பாய்வு செய்யப் படுவதில்லை! உதாரணமாக விட்டுக் கொடுப்பு என்றதும் ஹுதைபியா விவகாரத்தை பாய்ந்தடித்து ஆதாரம் காட்டும் பலர்! ஆனால் அத்தகு சூழலின் ஒப்பீட்டு சமவலு ,தள ஒற்றுமை பற்றி பகுப்பாய்வு அற்றே இவர்கள் பேசுகின்றனர்! இவர்களுக்கு தமது செயல் இஸ்லாத்தின் அங்கீகாரமாக இருப்பதாக அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் மட்டுமே இருக்கிறது! இது போல ஏறாளமான சிந்தனை ஒப்பீட்டு பிழைகள் உம்மாவிடம் இருக்கிறது!

இவ்வாறு அவர்கள் பிழையான வியூகத்தில் தொழிற்படுவதை விமர்சித்து சுட்டிக்காட்ட முயலும் போது எம்மை அவர்கள் வாயடைக்க நினைக்கின்றனர் 1.இவர்கள் வாய் வீச்சாளர்கள் இவர்களிடம் தீர்வில்லை! 2.இவர்களை இஸ்லாத்தின் எதிரிகளே உருவாக்கியுள்ளனர்! 3.இவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய வழிகேடர்கள்! என்ற எதிர்ப் பிரச்சாரங்களை பரவலாக முடுக்கிவிடுகின்றனர்! எமது விமர்சனங்களின் மீது உறுதியான ஆதாரங்களை சமர்பித்து பதில் கூற முடியாத நேரத்தில் இத்தகு திசைதிருப்பும் உத்திகளுக்குள் புகுந்து தம்மை பலப்படுத்த நினைக்கின்றனர்! ஆனால் இத்தகயவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றனர் என்பதே உண்மை!

இத்தகய இயக்க வாதம்சார் அச்சுருத்தலுக்காக அவர்கள் விடும் தவறுகளையும் அரசியல் வங்குரோத்து தனத்தையும் விமர்சனப்படுத்தக் கூடாது என அவர்கள் நினைத்தால் அதுவே கருத்தியல் சர்வாதிகாரமாகும்! மேலும் ஒருவன் வந்து குப்ருக்கும் அது சார் சிந்தனை கொண்டவனுக்கும் பைஆ பண்ணுவது இஸ்லாம் கூறும் பைஆவுக்கு நிகரானது ஜனநாயக அரசு கிலாபா அரசுக்கு நிகரானது எனக்கூறும்போது அதை ஆதரிக்க செக்கியூலரிச தீனை ஏற்ற பலர் வரலாம்! இன்று அதுதான் நடக்கிறது! எமது குறைந்தபட்ச எதிர்ப்பையாவது இவர்களுக்கு காட்டாதுவிடின் இத்தகு காலக் கபோதிகள் தமது குருட்டுத் தனத்தை சிந்திக்க சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு கூட இஸ்லாம் எனும் தீனை ஒரு டிப்லோமடிக் தரத்துக்கு கொண்டுவர பல வருடங்கள் தேவைப்பட்டது! இவ்வளவுக்கும் வஹி அவருக்கு நேரடியாகவே தன் வழிகாட்டலை வழங்கியது! எமக்கும் மாற்று வழிகள் இல்லை அதே பாதை அதே வழிமுறைதான் அது 60 வருடங்களாக இருந்தாலும் 600 வருடங்களாக ஆனாலும் சரியே! ‪#‎சிந்தனைமாற்றம்‬‪#‎நிபந்தனையற்ற‬ உதவி கிடைக்கும்வரை எமது முயற்சிகளை வேகப்படுத்துவது தவிர மாற்றுவழி எதுவுமில்லை!

ஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.!


சமூகப் புணரமைப்பில் மச்ஜிதுகளின் வகிபாகம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுதலும் குத்பாப் பேருரைகள் தரம் வாய்ந்தவையாக அமைவதனை உறுதிசெய்வதும் காலத்தின் கட்டாயமாகும்.

அடிப்படையான சன்மார்க்கக் கடமைகளான தொழுகை ஸகாத்து ஹஜ்ஜு என்பவற்றை கூட்டாக செய்யுமாறு வலியுறுத்தி சமூக வாழ்வின் ஆன்மீக அடித்தளங்களை ஆழமாக இட்டுள்ளது.


நோன்பு தனக்கும் அடியானுக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அதற்கு நானே கூலி வழங்குவேன் என்று எல்லாம் வல்ல அல்லாஹ் குறிப்பிட்டிருந்தாலும் அதன் கால நேர வரையறைகள் இப்தார் சஹர் பித்ரா தொடர்பான சட்டதிட்டங்கள் ஆர்வமூட்டல்கள் கூட்டு சமூக வாழ்வின் ஆன்மீக அடித்தளங்களை பலப்படுத்துவதனையே நாம் காண்கின்றோம்.


தினமும் ஐவேளை தொழுகையில் ஜமாத்தாக ஒன்றுபடுகின்ற ஒரு சமூகம் வாரம் ஒருமுறை கண்டிப்பான ஒரு தலைமைத்துவக் கட்டுக்கோப்பின் வழி காட்டல்களிற்கும் நெறிப் படுத்தலிற்கும் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


ஒவ்வொரு அடிமட்ட மஹல்லாவிலும் சமூகத்தை வழி நாட்த்துகின்ற அன்றாட சமூகவியல் வாழ்வியல் வழிகாட்டல்களை வழங்குகின்ற உத்தியோகபூர்வமான மேடையாக மிம்பர் மேடை முக்கியத்துவம் பெறுகின்றது.


"விசுவாசிகளே.! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்." (ஸுரத்துல் ஜும்ஆ 62:9)


பருவமடைந்த ஒவ்வோறு ஆண் மீதும் ஜும்ஆ வுடைய குளிப்பு கடமையாகும். அன்றி அவர் மிஸ்வாக்கும் செய்யவும், நறுமண பொருள் இருப்பின் அதையும் பூசிக்கொள்ளவும்.என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் அபூஸஈதுல்குத்ரீ (ரலி) புஹாரி, முஸ்லீம்)


வெள்ளிக்கிழமை அன்று உங்களில் எவரும் வீட்டில் அமர்ந்துவிட்டு இமாம் மிம்பரின் மீது ஏறி நின்று குத்பா பேருரை நடத்தும் போது மக்களின் பிடரியை பதற்றத்துடன் தாண்டி தொழச்செல்வதைவிட அவர் பின்னிருந்து சுடுகின்ற தரையில் தொழுவது அவருக்கு மேலாக இருக்கும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம் முஅத்தா)


வெள்ளிக்கிழமை சொற்பொழிவின் போது மௌனமாக இரு(ந்து காது தாழ்)த்தல்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரை யாற்றிக் கொண்டிருக்கும் போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ "மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10


முஸ்லிம் சமூகத்திற்கு ஒவ்வொரு வாரமும் அழகிய உபதேசங்களையும், காலத்திற்கு தேவையான வழிகாட்டல்களையும் வழங்குவதற்காக வெள்ளிமேடைகளாக ஜும்மாப் பேருரைகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது.


குறித்த ஒரு மணி நேரமும் முஸ்லிம்கள் குளித்து சிறந்த ஆடைகள் அணிந்து ஜும்மாவுக்கு வருகை தந்து வாய்மூடி மௌனமாக இருந்து கேட்கின்ற குத்பாப் பேருரைகள் ஒவ்வொரு தனி மனித மணித்தியாலங்களுக்கும் வலுவை சேர்க்கின்ற கால சூழ்நிலைகளுக்கு ஏற்ற தராதரங்களில் இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.


அந்த வகையில் ஒவ்வொரு ஜும்மா தினத்திலும் நிகழத்தப்பட வேண்டிய குத்பாக்களை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அழகாக அர்த்தமுள்ளவையாக நிகழ்த்தப்படுவதனை அந்ததந்த மஹல்லாவில் உள்ள புத்திஜீவிகளும் உலமாக்களும் கூட்டுப் பொறுப்பாக உணர்ந்து உறுதி செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.


கருத்து வேறுபாடுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உரிய விடயங்களுக்கு அப்பால் சகலரும் உடன்படுகின்ற பொதுவான விவகாரங்களை அடிப்படையாக வைத்து காலோசிதமாக குத்பாக்களை தயாரித்துக் கொள்வதில் உலமாக்களுக்கு உதவுவதும், அவ்வாறான குத்பாப் பேருரைகள் இருந்தால் பெற்றுக் கொடுப்பதும், அல்லது முடியுமான ஏனைய உலமாக்கள் தயாரித்து அவர்களிடம் கொடுப்பதும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்பி வைப்பதும் ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்பட்ட கடமையாகும்.


குத்பாப்ப் பேருரைகளை சுமார் ஏழு இலட்சம் பேர்கள் கேட்கின்றார்கள் என்றால் ஏழு இலட்சம் மனித மணித்தியாலங்கள் செலவிடப்படுகின்றன அந்த பெறுமதியான கால அவகாசத்தை சுமார் 1200 பேசும் இமாம்களின் தெரிவுகளுக்கும், சௌகரியங்களுக்கும் சிலவேளை விருப்பு வெறுப்பு கருத்து வேறுபாடுகளுக்கும் விட்டு விடுவது மிகப் பெறும் தவறாகும்.

Jul 20, 2016

கண்டியர் தீ விபத்திலில் பாதிக்கப்பட்ட மக்களின் அழு குரல்...!!!!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!!!

இன்ஷா அல்லாஹ் தூய வடிவில்  உண்மையான செய்திகளை மக்களுக்கு தர இருக்கும் ஹலால் மீடியா...இந்த  முகநூல் பக்கத்திலில் இணைவீர்..

Halal Media Facebook

Sources From Halal Media

Jul 19, 2016

கிலாஃபத் பற்றிய 100 கேள்விகள்


முன்னுரை



ஜனவரி 2012 ல் முதல் வருடத்தில் அடி எடுத்து வைத்த அரபு புரட்சிக்கு பின் அரபுலகில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது அதோடு மட்டுமல்லாமல் அதனுடைய அதிர்வுகள் இன்னும் உலகை குலுக்கி கொண்டிருக்கிறது. இவ்வேளையில் முஸ்லிம் உலகில் நடைபெற்று வரும் இந்த புரட்சி பற்றிய கண்ணோட்டங்கள் உள்ளேயும் வெளியேயும் சதா மாறிய வண்ணம் இருக்கின்றது.

முஸ்லிம் உலகில் நடைபெற்ற தேர்தல்களில் மதசார்பற்ற கட்சிகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து மேற்குலகம் தன்னுடைய நிலைப்பாடு பற்றி மறு பரிசீலனை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. தொடக்கத்தில் இஸ்லாமிய வாக்கியங்களை உபயோகித்து வெற்றி பெற்ற இஸ்லாமிய கட்சிகள் பின்னாளில் யதார்த்தத்தில் நிலைபெற்று இருக்கும் ஆட்சி முறைக்கு வழி கொடுத்துள்ளன மேலும் இந்த பிராந்தியத்தில் இஸ்லாத்திற்கான குறள் ஓங்கி வருவதன் காரணத்தால் இஸ்லாம் மற்றும் மதசார்பின்மை இவற்றிற்கு இடையே கடுமையான விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த புரட்சியை கடத்துவதற்கான முயற்சியை மேற்குலகம் தொடர்ந்து செய்து வருகிறது ஏனெனில் இங்கு ஏற்படும் மாற்றம் ஒரு செயற்கை மாற்றம் என்ற அளவில் இருப்பதற்காக வேண்டிய காரியங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ளவும் இந்த புரட்சி கடத்தப்படாமல் இருக்க இஸ்லாத்தின் பக்கம் தெளிவான அழைப்பை மேற்கொள்ள வேண்டும் மற்றும் அந்த அழைப்பானது இஸ்லாம் முழுமையான அளவில் நடைமுறை படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்? இஸ்லாமிய அமைப்பு தான் மிகச்சிறந்த அமைப்பு என முஸ்லிம்களாகிய அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர் ஆனால் அது நடைமுறையில் எவ்வகையான திட்டங்களை செயல்படுத்தும் என தெளிவாக அறிந்து வைத்திருக்காமல் அதை முஸ்லிம்கள் ஆதரிக்கின்ற காரணத்தால் அவர்களுடைய மனதில் பலவிதமான கேள்விகள் எழும் வாய்ப்புள்ளது. உண்மையில் இஸ்லாத்திற்கு இந்த 21 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்யும் திறன் இருக்கின்றதா? முஸ்லிம் உலகில் உள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வை இஸ்லாம் கொண்டுள்ளதா? வெளி நாடுகளுடனான உறவை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? இன்றைய பிரிவினைவாத பிரச்சினைகளை இஸ்லாம் தீர்க்குமா? இஸ்லாமிய அமைப்பை எங்ஙனம் அமைப்பது? இது தன்னுடைய பொறுப்பை பற்றி கேள்வி கேட்க அனுமதிக்கும் அமைப்பாக இருக்குமா அல்லது பிரதிநிதித்துவ அமைப்பாக இருக்குமா? இது போன்ற நடைமுறை கேள்விகளுக்கு எளிதாக பதிலளிக்கும் நோக்கத்தில் இந்த புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் அரசமைப்பு, பொருளாதாரம், வெளியுறவு கொள்கை மற்றும் சட்டம் போன்ற மிக முக்கிய அம்சங்களை அலசியிருக்கும். சமூக அமைப்பு, அரசியலமைப்பு, பொருளாதார அமைப்பு, நீதித்துறை போன்ற இஸ்லாமிய அமைப்புகள் பற்றி பல நூல்கள் வெளியாகியுள்ளது. இந்த இஸ்லாமிய அமைப்பின் பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி ஆழமாக புரிந்து கொள்வதற்கு இந்த ஒழுங்குககள் தமக்கு மையமாக கொண்டுள்ள அடிப்படை கருத்து பற்றிய ஒரு அடிப்படை புரிந்துணர்வை கொண்டிருப்பது அவசியமாகும்.

இந்த புத்தகத்தின் குறிக்கோள் இஸ்லாமிய நிலைப்பாட்டை விளக்குவதே ஆகும், இதை அதிகப்படியான விவரங்கள் தேவைப்படாமல் தெளிவாகவும் எளிதாகவும் எல்லோராலும் எளிதல் புரிந்து கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பதில்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் விளாவாரியான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு வழிவகை அமைத்து மேற்கொண்டு அது பற்றி தீவிர ஆராய்ச்சி செய்ய உதவி புரியும்.

Sources: sindhanai.org

ஷரீ’ஆ காலாவதி ஆகிவிட்டதா?


இஸ்லாம் மனிதர்களை உணர்வுகளை கொண்டு அமைத்திருப்பதாகவும் அந்த உணர்வுகளை பூர்த்தி செய்ய அவர்கள் தொடர்ந்து பல பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளதாகவும் பார்க்கிறது. இஸ்லாமிய சட்டங்கள் ஆண்களையும் பெண்களையும் ஏழாம் நூற்றாண்டில் அரேபிய பாலைவனத்தில் வசித்த தனி மனிதர்களாக கருதாமல் ஒட்டுமொத்த மனித இனமாகவே கருதி இறக்கி அருளப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தை அல்லது இடத்தை சார்ந்த மனித குலத்திற்கு அனுப்பப்பட்டது அல்ல. இன்றைய மனிதன் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே இருக்கின்றான் மேலும் 1400 வருடங்களுக்கு பிறகும் அவ்வாறே இருப்பான். 1

இஸ்லாம் உதித்து மேலோங்கிய காலத்தை விட இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்டது என்பதில் சந்தேகம் துளி கூட கிடையாது. இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனை விட மாறுபட்டது. அன்றைய காலத்தில் மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர் இன்று நம்மிடம் வின்னை தொடும் கட்டிடங்கள் உள்ளது, ஆனால் அன்று போல் இன்றும் நமக்கு வீடுகளும் நமது தலைகளுக்கு மேல் கூறைகளும் தேவை படுகின்றது. அன்றைய காலகட்டத்தில் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் தூதர்களை வேற்று நாட்டு அரசர்களுக்கு செய்தி அனுப்ப குதிரைகள் மீது அனுப்பி வைத்தார்கள் ஆனால் இன்று ஒரு தகவலை இமெயில், துரித செய்தி(IM) அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்ப முடிகறது. முஹம்மது(ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் குதிரைகள், வில் மற்றும் அம்பு போன்றவற்றை உபயோகித்து பல போர்கள் புரிந்திருக்கிறார்கள், அதேபோல் இன்றும் போர்கள் பல நடத்தப்படுகின்றன ஆனால் அதிநவீன தொழல்நுட்பம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகள் மற்றும் செயற்கைக்கோள் மூலம் புலனாய்வு மேற்கொள்ளுதல் ஆகியவைகளை கொண்டு. முந்தய காலத்தில் முஸ்லிம்கள் வானவியலை பற்றி கற்றறிந்ததால் அவர்கள் எங்கு சென்றாலும் கிப்லாவை நோக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர் மாறாக இன்று அதை ஒரு மின்னனு கடிகாரம் செய்து விடுகிறது. இது மனிதர்கள் அவர்களுடைய தேவைகள் முன்பிருந்ததை போன்று தான் உள்ளது என்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் மாறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. நம் பார்வைக்கு புலப்படும் மாற்றம் என்பது வெறும் கருவிகளின் மாற்றம் அல்லது மனிதர்கள் அந்த பிரச்சினைகளை சரிசெய்யும் போது உபயோகிக்கும் சாதனங்களின் மாற்றம் மட்டுமே.

ஒரு சிந்தனை பொறுத்தமில்லாததாக ஆக்க காலத்தை மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் சிந்தனை என்பது கால வரையறைகள் அற்றது. பண்டைய கிரேக்க தத்துவம், கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு 16 ம் நூற்றாண்டில் அடைந்த மறுமலர்ச்சியை ஐரோப்பாவின் மறுமலர்ச்சி என குறிப்பிடப்பட்டது. உலகளவில் இன்று நமக்கு கிடைக்கும் சட்டங்கள் மூன்று நூற்றாண்டுகள் முன்னர் எழுதப்பட்ட பாரம்பரியம் கொண்டது.

- உதாரணத்திற்கு:

-1791 ல், அமெரிக்காவில் உரிமைகள் சம்மந்தமாக நிறைவேற்றப்பட்ட சட்டம், 1215 ன் உரிமையை உறுதி செய்யும் மகாசாசனத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

- நவீன கால சிவில் சட்டம் பொறுப்புகள் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும், இது முதன் முதலில் ரோமானிய சட்டத்தில் இடம்பெற்றதாகும்.

- பொதுச்சட்டம், இது அடிப்படையில் முந்தய நீதிமன்றத்தீ்ர்ப்பிலிருந்து குறிப்பெடுத்து தீர்ப்பளிக்கும் முறையானது முதன்முதலில் மத்திய கால ரோமானிய சட்டத்தில் இடம்பெற்றிருந்தது மற்றும் நார்மன் ஸாக்ஸனிய பழக்கவழக்கத்தால் ஈர்க்கப்பட்டதாகும் இன்றும் அது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவின் சட்டமியற்றுதலுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது.

இதனடிப்படையில் உற்று நோக்கினால் பழங்காலத்திய பூர்வீகம் கொண்டிருப்பதால் ஜனநாயகம் தற்காலத்திற்கு உகந்த நிலையில் இல்லாமல் இருந்திருக்கும். ஆகையால் இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டு அரேபியாவில் உதயமான காரணத்தை கொண்டு தற்காலத்திற்கு பொருத்தமானதல்ல என்ற வாதம் சரியானதல்ல. இஸ்லாமிய சட்டம் மனிதர்கள் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்புடையதாகவும் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் கருவிகளை தொடர்புபடுத்தி இல்லாத காரணத்தால், இஸ்லாமிய ஷரீ’ஆ அன்று அரபு மக்களின் நிலையை உயர்த்தியது போன்று இன்றைய மனிதகுலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.


Sources: sindhanai.org

இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா..??



இன்றைய உலகில் எங்காவது இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறதா, அதாவது சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் (தாலிபானிற்கு கீழ்) போன்ற நாடுகளில்?


ல்லை
, தற்போதய முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தின் சில பகுதிகளை மட்டுமே நடைமுறை படுத்தி வருகின்றன: அதிகப்படியாக அவை குடும்பவியல் சட்டங்களின் சில பகுதிகளை உபயோகித்து வருகின்றன, ஆனால் எந்தவொரு நாடும் முழுமையாக தன் சட்டங்களையும் கொள்கைகளையும் இஸ்லாமிய அடிப்படையில் பிரித்தியேகமாக அமைத்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில், இஸ்லாமிய சட்டத்தை குடும்ப பிரச்சினைகளை தீர்க்கவும் அல்லது இஸ்லாமிய உணர்வுகள் மீது தான் அக்கறை கொண்டுள்ளதாக அடையாள படுத்துவதற்காக மட்டுமே உபயோகித்து வருகிறது, ஹுதூத்(தண்டனை) சட்டத்திலும் இதே நிலை தான். இது தான் தகுதியற்ற ஊழலுற்ற அரசாங்கங்கள் மற்றும் அவைகளின் மேற்கத்திய எஜமானர்கள் மற்றும் ஊடகங்கள் இஸ்லாமிய சட்டம் செயலற்று இருப்பதாகவும் மேலும் அதனால் சமூகத்தை நிர்வகிக்க முடியாது என்று சித்தரிப்பதற்காக செயல்படுத்தும் திட்டமாகும்.3

பல லட்சக்கணக்கான திருக்குர்’ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்களை அன்பளிப்பாக வழங்கலாம் மற்றும் உலகெங்கும் பள்ளிவாயில்கள் நிர்மானிக்க அதிகப்படியான நிதிகளை சவூதி அரேபியா அன்பளிக்காக வழங்கலாம், எவ்வாறிருப்பினும் சில இஸ்லாமிய அடிப்படைகளை கொண்ட சட்டங்கள் மற்றும் சில மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களையும் கொண்டு சவூதி அரேபியா ஒரு கலப்படமான சட்டங்களையே பின்பற்றி வருகின்றது. எனினும் இஸ்லாமிய கண்ணோட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அவைகளை அது சட்டங்கள் என குறிப்பிடுவதில்லை. இஸ்லாமிய சட்டங்களையும் மனிதன் இயற்றிய சட்டங்களையும் வேறுபடுத்தி காட்ட சவூதி பிரத்தியேகமாக குறிப்பிட்ட சில வார்த்தைகளை உபயோகிக்கின்றது. அரசியலமைப்பு சம்மந்தமான ஒரு அரபி நூலில் அதன் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார், “சவூதியில் விதி(ஆனூன்) மற்றும் சட்டம்(தஷ்ரீ’) போன்ற வார்த்தைகள் இஸ்லாமிய ஷரீஆவிலுருந்து எடுக்கப்பட்டவைகளை குறிப்பிடுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது…4 மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களை பொறுத்தவரை அதாவது அமைப்புகள் (அந்திமா) அல்லது வழிமுளைகள (த’லீமாத்) அல்லது பிரகடனங்கள் (அவாமிர்)……. இது தவிர ஒரு பரம்பரை முடியாட்சியான சவூதி அரேபியா மார்க்க நிறுவனங்களை முதலாளித்துவ மற்றும் மேற்கத்திய உலகிற்கு ஆதரவான திட்டங்களுக்கான எதிர்ப்புகளை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக உபயோகித்து வருகிறது.

இதை போன்று தாலீபானும் இஸ்லாத்தின் சில அம்சங்களை நடைமுறை படுத்தி வந்தது. ஆப்கானிஸ்தானை தாலீபான்கள் ஆண்ட போது அவர்கள் ஒருபோதும் தாங்கள் இஸ்லாமிய அரசாங்க முறையான கிலாஃபத் முறையை பின்பற்றுகிறோம் என்று கூறியதில்லை, மாறாக தங்களை ஒரு அமீரகமாகவே அடையாள படுத்தியது அது வெளியுறவு கொள்கை அற்ற ஒரு சில சட்ட வறையறைகளை கொண்டு ஒரு எல்லைக்குள் மட்டுமே செயற்படும் ஒரு அரசியல் நிறுவனமாக தான் செயல்பட்டது. இஸ்லாமிய ஆட்சியமைப்பானது பொருளாதாரம், சமூகவியல், ஆட்சிமுறையாக இருக்கட்டும் மேலும் வெளியுறவு கொள்கை அமைத்து கொள்வது ஆகட்டும் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் நடைமுறை படுத்தக்கூடியதாக இருக்கும், கிலாஃபத்தானது ஒரு தனித்து விடுபடக்கூடிய நாடு கிடையாது.

ஈரானிய அரசியலமைப்பு பல அம்சங்கள் இஸ்லாத்தோடு ஒத்து போகக்கூடிய வகையில் இருக்கின்றன அதேபோல மற்றவைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிராக உள்ளது. ஈரானிய அரசியல் சாசனத்தின் விதி 6 இவ்வாறு கூறுகின்றது: “ஈரானின் இஸ்லாமிய குடியரசு, நாட்டின் விவகாரங்களை ஜனாதிபதி, இஸ்லாமிய கலந்தாய்வு சபை உறுப்பினர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் போன்றவர்களை தேர்தல்கள் நடத்தி தேர்த்தெடுப்பது உட்பட பொதுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் நாட்டின் விவகாரங்களை மேற்கொள்ள வேண்டும், அல்லது பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அதன் சில விவகாரங்களில் அரசியல் சாசனத்தின் இதர விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை தழுவி மேற்கொள்ள வேண்டும்.” இஸ்லாமிய அமைப்பை கொண்ட அரசியலமைப்பு – அதாவது கிலாஃபத்தானது முழுமையாக இஸ்லாமிய ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாகும். ஈரானின் விஷயத்தில் இது பொருந்தாது ஏனெனில் அது தனது அரசியலமைப்பில் ” நாட்டின் விவகாரங்களை தேர்தல்கள் மூலம் வெகுஜன கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவதாக” அறிவிக்கிறது”. இஸ்லாத்தை பொறுத்தவரை நாட்டின் விவகாரங்கள் வெகுஜன கருத்தின் அடிப்படையில் அல்லாமல் ஷரீ’ஆவின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

Sources: sindhanai.org

Jul 17, 2016

மதிப்பிற்குறிய தையுப் எர்தூகான் அவர்களுக்கு!



உங்களது விவேகமான முயற்சி மூலம் ஒரு மோசமான விளைவை தரத்தக்க சதிமுயற்சி முறியடிக்கப் பட்டது! அல்ஹம்துலில்லாஹ். உங்கள் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்த மக்கள் மீண்டும் அதே மதிப்பை தருவார்கள் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமுமில்லை.

நீங்கள் ஹிக்மத் என்ற பெயரில் உறவாடிய அல்லாஹ்வின் எதிரிகளே உங்களை கழுத்தறுக்க துணிந்தார்கள் என்பதை தாங்கள் எம்மைவிட நன்றாக அறிவீர்கள். ஆனாலும் துருக்கியின் வெளியுறவுக் கொள்கையின் சகல ஒப்பந்தங்களும் உடன் பாடுகளும் அந்த துரோகிகளுக்கு சாதகமாகவே இன்னும் இருப்பதையும் எம்மை விட நீங்கள் நன்றாக அறிவீர்கள்!


தம்மோடு நட்புறவு பாராட்டிய யூதக் கோத்திரங்களே வஞ்சம் செய்ய துணிந்தபோது அல்லாஹ்வின் தூதரது(ஸல்) முதல் அரசியல் நடவடிக்கை அவர்களுடனான ஒப்பந்தங்களை துண்டித்தது தான்! ஆனால் தாங்கள் இது விடயத்திலும் உங்கள் பாணியில் ஹிக்மத் வர்சனை பின்பற்றி படிப்படியாக முறிப்பதாக கூறுவீர்கள் என்றே எதிர்பார்க்கிறேன். அல்லது (உருப்படியான ஒரு ஜெனரேட்டர் பிளான்ட் கூட இருக்காத )துருக்கியில் உள்ள!!!! ஒரு அமெரிக்கன் மிலிட்டரி பேசுக்கு பவர்கட் செய்து! எம்மனதை குளிரப் பண்ணியது போல காத்திரமான சில பல வேலைகளை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

நீங்கள் உடன்பாடு ரீதியாக உறவு வைத்திருக்கும் அந்த இஸ்லாத்தின் எதிரிகள் நட்புறவோடிருந்து திடீரென வஞ்சத்தில் குதித்தவர்கள் அல்ல! மாறாக காலம் காலமாக துரோகத்தை வழிமுறையாக கொண்டவர்கள்! இதெல்லாம் நாம் சொல்லித்தான் தாங்கள் தெரிய வேண்டியதில்லை! இதற்குப் பிறகும் அவர்கள் எந்த விதத்திலும் நம்பிக்கைக்கு உரித்தானவர்கள் அல்ல! மேலும் இவர்களே முஸ்லீம் நிலங்களில் இரத்த ஆற்றை ஓடவிட்டவர்கள்! இடுகாடாய் மாற்றியவர்கள், மாற்றிக் கொண்டிருப்பவர்கள்! இப்படிப் பட்டவர்களோடு நீங்கள் ஸிலோ மோசனில் ஒப்பந்தங்களை முறிக்கும் போது அவர்கள் வேகமாக எம்மில் பலருக்கு கபன் அணிவிக்கும் பணியை முடிப்பார்கள்!

அதைவிட ஒரு முக்கியமான விடயம் நீங்கள் செக்கியூலரி சத்தையும் தேசிய ஜனநாயகத்தையும் நம்பியுள்ளதே அந்த குள்ள நரிகள் முஸ்லீம் உம்மத்தை ஆடுகளாக்கி தேவைக்கு ஏற்ப பலியெடுக்க போட்ட திட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்! அதற்கு உடந்தையாக இருந்த முஸ்தபா கமால் அத்தாதுர்க் என்ற நயவஞ்சக துரோகியை மதிப்பித்தவாறே துருக்கியின் ஆட்சிக்கதிரையில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை நாம் நினைவூட்ட கடமைப் பட்டுள்ளோம்! அந்தவகையில் ஒரு அடிப்படை சதியின் நிழலில்தான் தாங்கள் அமர்ந்துள்ளீர்கள் என்பதை தங்களால் மறுக்க முடியாது!

இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்; அது சதிப்புரட்சியை தடுக்க மக்களை அழைத்த அதே வார்த்தைகளை கொண்டு செக்கியூலரிச ஜனநாயகம் எனும் கமால் பாட்சாவின் ரூலிங் சிஸ்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து அவ்விடத்தில் இஸ்லாத்தை பிரதியீடு செய்ய மக்களை அழையுங்கள் என்பதே! உங்கள் வார்த்தைகளை நம்பி அதற்கு மக்கள் செவிசாய்க்க மறுத்தால் ஏதோ மிகப்பெரிய தவறு நிகழ்கிறது என்பதை உங்களாலும் எம்மாலும் புரிய முடியும்! இந்த சரியான சந்தர்ப்பத்தை தவறவிட்டால் எப்போதுதான் இவைகளை செய்யப் பேகிறீர்கள்!?

இவண்
முஸ்லிம் உம்மத்தில் ஒருவன்.

கசப்பான சில உண்மைகள்!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்க்கவேண்டும் என்ற துருக்கியின் அந்த நினைப்பு வரவேற்கத் தக்கது. ஆனால் அதுதான் ஒரு முஸ்லிம் எதிர்பார்க்கும் இஸ்லாமிய அரசியலின் ரூபம் என நினைத்தால் அதுவும் ஒரு தவறான நிலைப்பாடு! இஸ்லாத்தின் அரசியல் என்பது முற்றாக வஹிவழியில் தன் அதிகாரக்கட்டமைப்பையும் அதனடி உடனடியாக சிவில் நிர்வாகம் இஸ்லாத்தின் ஏவல் விலக்கள்களை அடிப்படையாக கொண்டு அமுலாக்கப் படுவதாகும்.

இதனடி அந்த நிலத்தின் பொருளாதாரக் கொள்கை , கல்வி கலாச்சாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை போன்ற சகல துறைகளும் ‪#‎வஹியின்‬ கட்டளைக்கு ஏற்ப பிரகடனப்படுத்தப்பட்டு அமுல் நடாத்தப்படுவதாகும்; அதுவரை அந்த நிலம் முஸ்லீம்களை அதிகமாக கொண்டும் ஒரு முஸ்லிமை கொண்டும் ஆளப்பட்டாலும் அது ‪#‎தாருல்‬ குப்ர் என்ற அந்தஸ்த்தை விட்டும் மாறிவிடாது!


முன்னால் சோவியத் யூனியனின் உடைவிற்கு பிறகும் அமெரிக்காவை அதன் பாலிசியை எதிர்க்கும் பல அதிகார வலயங்களை எம்மால் இனங்காட்ட முடியும். கியூபா, வடகொரியா, பிரேசில், கொலம்பியா, வெனிசுலா.... இப்படி இந்த லிஸ்ட் நீண்டது! ஒருவகையில் முஸ்லீம் உலகுக்கான சாதக அரசியலாக இதை கருத முடியுமே தவிர இஸ்லாமிய அரசியலின் வடிவமாக இதை கருத முடியாது! மேலும் அமெரிக்காவுக்கு உள்ளேயே அமெரிக்க எதிர்ப்பாளர்களை ஏராளமாக காணலாம்.

ஒரு நிலம் முதலாளித்துவ, கம்யூனிச அரசியல் பொருளாதார சமூக கல்வி கலாச்சார நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விடுபட்டு அந்நிலத்தின் இராணுவம், மக்கள் நிபந்தனையற்ற முறையில் இஸ்லாத்தை அமுலாக்கம் செய்ய உடன்படும் நிலையிலேயே அது #தாருல் இஸ்லாமாக மாறுகிறது. அங்கு பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இல்லாதிருப்பினும் சரியே! இத்தகு கோட்பாட்டு உண்மையை கருத்தில் கொண்டே நாம் துருக்கியை மட்டுமல்ல முஸ்லிம் உலகின் சகல அதிகார நிலங்களையும் நோக்க வேண்டியுள்ளது! கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.

இப்போது அமெரிக்க எதிர்ப்பு முகத்தை எர்தூகான் அரசு காட்டினாலும் கமால் பாட்சாவின் துரோக அரசியலை கைவிட்டு அதன் மேல் காறி உமிழ்ந்துவிட்டு அந்த எதிர்ப்பை காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முஸ்லீம் உலகின் மனோபாவத்தை தன் பக்கம் ஈர்க்கும் ஒருவகை மொஸ்மரிச பாலிசியை அவர் கையால்வதாகவே கருத முடிகிறது! இந்தப் பதிவின் மீது ஏகப்பட்ட முரண் விமர்சனங்கள் வரும் என்பதை நான் அறிவேன். அதற்கெல்லாம் பதில் சொல்லப் போவதில்லை காலம் இன்ஷா அல்லாஹ் பல உண்மைகளை புரியவைக்கும்.

Jul 16, 2016

பிரித்தானியாவில் நடந்த ஆடம்பரமான திருமணம்.

முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கில் வறுமையை ஒழிப்பதற்கு....ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடைவுமட்டமாகவும் நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரித்தல்(GDP) தீர்வாக ஊட்டப்படுகிறது.

பிரித்தானியாவில் நடந்த ஆடம்பரமான திருமணம்.


இரு செல்ல பிராணியான நாய்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபா பெறுமதியில் அல்ல , 40 இலட்சத்துக்கும் (20,150 பவுண்ட்ஸ்) அதிகமான ரூபா செலவில் திருமணம் நடாத்தப்பட்டது. இதில் மலர் வலயம் மற்றும் அலங்காரம் போன்றவற்றிற்கு 8 இலட்சமும் ஆபரணங்களுக்காக இரண்டரை இலட்சமும் செலவிடப்பட்டது .

இதே பிரித்தானியாவில் தான் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இருப்பதற்கு இல்லறம் இல்லாத நிலையிலும் இருபத்தைந்து இலட்சத்திற்கு அதிகமான சிறுவர்கள் பாதுகப்பற்ற வீட்டிலும் வசித்து வருகின்றனர்.

இது “மை கார் மை பெட்ரோல்” பொருளாதாரம்.யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் இன்று வறுமையை ஒழிப்பதற்காகவும் ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடைவுமட்டமாகவும் நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரித்தல் தீர்வாக ஊட்டப்படுகிறது.

இத்தீர்வு எத்தகை உண்மையானது!

பிரித்தானியாவில் மாத்திரம் வறியோர் செல்வந்தர்களுக்கான வருமான இடைவெளி முப்பது வருடங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது . ஆனால் அதேவேளை 2012 இல் உலகின் முதன் நூறு செல்வந்தர்களின் மொத்த சொத்தின் பெறுமதி 240 பில்லியனாக காணப்பட்டவை 2013 இல் 1.9 டிரில்லியனாக அதிகரித்தது.
தீர்வு என்ன? இதனால் தான் இஸ்லாத்தில் வருமான பங்கீடே முதன்மை பொருளாதார பிரச்சினையாக நோக்கப்படுகிறது. 


இதனை எவ்வாறு அடையலாம்? 
1.ஸகாத் 
2,வட்டியற்ற பொருளாதரம் 
3.வளங்கள் / சொத்துக்கள் உரிமை கொள்ளும் விதம். 

...........(தொடரும்)

From Mohamed Imran

துருக்கியில் இராணுவச் சதிப்புரட்சி தோல்வி...!!!!


துருக்கியில் இராணுவச் சதிப்புரட்சி தோல்விகண்டிருப்பதும், அர்துகானின் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதும் உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான விடயம். இதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்: வரவிருந்த மாற்றீடு மிக மோசமானது! முஸ்தபா கமாலை “நபியாக” ஏற்றுக்கொண்ட அதிதீவிர மதஒதுக்கல் கொள்கையை “தீனாக” ஏற்றுக்கொண்ட இராணுவ ஆட்சியாளர்கள் ஒரு சாபக்கேடே! அவர்களை எந்த முஸ்லிமாலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

அர்துகானை உள்ளதில் நல்லதாக ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அதேவேளை, இன்னொரு கூட்டமோ அர்துகானிற்கு அப்பால் ஒரு நல்லது இல்லவே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. இந்த இரண்டாம் நிலைப்பாடு ஆரோக்கியம் இல்லாத ஒரு நிலைப்பாடு; அது அர்துகான் என்ற மனிதனின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களைக்கூட பரிசீலனை செய்யவும் ஏற்கவும் மறுக்கின்ற ஒரு நிலைப்பாடு.

பொதுவாக இஸ்லாமிய அரசியல் குழுக்களுக்கு மத்தியில் தங்கள் இலக்குகள் தொடர்பாக கருத்துவேறுபாடுகள் எதுவுமில்லை. (இஸ்லாமிய ஆட்சியினை நிறுவுவதே அனைவரதும் இலக்கு.) இலக்குகளை அடைவது தொடர்பான வழிமுறைகள் தொடர்பாகவே அநேக முரண்பாடுகள் காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், பாராளுமன்ற ஜனாநாயக முறையினூடாக ஒரு இஸ்லாமிய ஆட்சியினை நிறுவுவது சாத்தியம் என்று நம்புகின்றார் அர்துகான். எனவே இவ்வாறன வழிமுறையில் நம்பிக்கை கொண்டோர் பொதுமக்களின் அமோக ஆதரவைத் தம் பக்கம் வைத்திருப்பதிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றார்கள்.

இந்த வழிமுறையை (எனவே அர்துகான் போன்றோரை) விமர்சிப்போரின் நிலைப்பாடு பின்வருமாறு காணப்படுகின்றது:

உண்மையான ஆட்சிமாற்றம் இராணுவத்தின் ஆதரவைப் பெறுவதிலேயே தங்கியுள்ளது; அது வெறுமனே மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் அல்ல.

இதற்கு உதாரணமாக தென்னமெரிக்காவில் இடம்பெற்ற அத்தனை இராணுவப்புரட்சிகளையும் பட்டியல் இடுகின்றார்கள் இவர்கள். அதுமட்டுமல்லாது, அல்ஜீரியா, பாலஸ்தீன், அண்மையில் எகிப்து போன்ற முஸ்லிம் நாடுகளிலும் கூட இராணுவத்தின் ஆதரவு தங்கள் பக்கம் இல்லாததால் தேர்தல்களில் அமோக வெற்றியீட்டிய இஸ்லாமியக் கட்சிகள் எவ்வாறு அதிகாரத்தைப் பிடிக்கமுடியாமல் போயின என்பதையும், பின்னர் எவ்வாறு இராணுவங்களால் துவம்சம் செய்யப்பட்டன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

இந்தக் கருத்துமுரண்பாட்டின் தொடர்ச்சியையே “அர்துகான் எவ்வாறு இராணுவப் புரட்சியிலிருந்து தப்பித்துக்கொண்டார்?” என்ற கேள்விக்கான விடையிலும் அவதானிக்க முடிகின்றது.

பொதுமக்களே இந்தப் புரட்சியைத் தோற்கடித்தனர் என்கின்றனர் அர்துகானிய சிந்தனையாளர்கள். இல்லை! இராணுவத்தில் ஒரு பகுதியே இந்தப் புரட்சியைத் தோற்கடித்தனர் என்கின்றனர் அவரின் அரசியல் போராட்ட வழிமுறையை விமர்சிப்போர்.

இதில் எந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது? பொதுவாக இராணுவங்கள் “ரோபோக்கள்” போன்றவவை. அவற்றிடம் மனிதாபிமானச் சிந்தனைகள் இருப்பதில்லை. சுடுவது, கொல்லுவது, எரிப்பது அவர்களின் தொழில். சீனாவின் தினமன் சதுக்கத்திலும் எகிப்தின் அந்-நஹ்தா சதுக்கத்திலும் இதை நம்மால் காணமுடிந்தது.

துருக்கியில் முயற்சிக்கப்பட்ட இராணுவப் புரட்சியை எதிர்த்து மக்கள் வெள்ளமாக வீதிக்கு இறங்கியது உண்மை. ஆனால், புரட்சிசெய்த இராணுவத்தினரின் யுத்ததாங்கிகளை நிறுத்தியது மக்கள் அல்ல! அது துருக்கிய இராணுவத்தினரின் மற்றொரு பகுதியினரே! புரட்சிக்காரர்களுக்கு இராணுவத்திற்குள் பரவலான ஆதரவு இருக்கவில்லை. எனவே அர்துகானிற்கு ஆதரவான இராணுவப் பகுதியினர் தங்களின் F16 க்கொண்டு பயமுறுத்தியும், தாக்கியும் புரட்சிக்காரர்களைப் பணியவைத்தார்கள்.

இந்த இராணுவப் புரட்சியின் போது துருக்கிய இராணுவத்தின் பெரும் பகுதியினர் அர்துகானுக்கு ஆதரவாக செயற்பட்டது உண்மை. ஆனால், இஸ்ரேலுடனான ஒரு யுத்தமோ அல்லது சிரியாவில் ஒரு மனிதாபிமானத் தலையீடோ என்று வருகின்றபோது இந்த இராணுவம் அர்துகானுக்கு எந்த அளவிற்கு ஆதரவு வழங்கும் என்பதில் பெரும் சந்தேகம் இருக்கின்றது. அர்துகான் ஏற்கனவே இஸ்ரேலுடனான சுமுக நிலையைப் பேணிவருவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம்.


From Mohamed Faizal

காஷ்மீாின் விடுதலை வேட்கையை கிலாஃபத்தே வெற்றி வரை நகா்த்தும்



முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள காஃபிர் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் அத்துமீறலை எதிர்த்து நிற்கக் கூடிய அப்பாவி முஸ்லிம்கள் மீது படுமோசமான , கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற விவகாரம் நாமெல்லோரும் அறிந்த ஒரு விஷயமே.

அவ்வகையில் குஃப்பார்களின் அத்துமீறலுக்கு ஆட்பட்டுள்ள எத்தனையோ நிலங்களில் இன்று பேசுபொருளாகியிருக்கும் பகுதியான காஷ்மீரும் ஒன்றாகும் ...!

ஹிந்துத்துவ இந்திய அரசானது தனது கூலிப் படையை இன்று அப்பாவி காஷ்மீர் மக்கள்மீது ஏவி விட்டுள்ளது . 

உலகிலேயே மிகப்பலம் பொருந்திய ஏழாவது இராணுவ கட்டமைப்பை கொண்டதும் , இராணுவ அளவைப் பொறுத்த வரையில் ஆறாவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளதுமான பாகிஸ்தான் முஸ்லீம் இராணுவம் காஷ்மீர் மக்களுக்கு அருகிலிருந்தும் ஹிந்துத்துவ இந்திய இராணுவம் துணிச்சலாக காஷ்மீரில் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது .

தங்களது முஸ்லிம் சகோதர , சகோதரிகள் மிக அருகே கொல்லப்பட்டு வருகின்ற இவ்வேளையில் மிக சமீபத்திலுள்ள பாகிஸ்தான் இராணுவம் இந்த அநீதிக்கெதிராக அணிதிரள பாகிஸ்தானின் அரசியல் தலைமைகளும், இராணுவ உயர்பீடங்களும் அனுமதிக்காது என்ற அதீத நம்பிக்கை இந்த ஹிந்துத்துவ இராணுத்திற்கு உண்டு.

இதனால் தான் கண்மூடித்தனமான தாக்குதலை துணிந்து அதனால் முன்னெடுக்க முடிகிறது..!

பாரிய மனித உரிமை மீறலை காஷ்மீர் மக்கள் மீது ஷைத்தானிய இந்திய அரசு முன்னெடுத்து வருகிற நேரத்தில் ரஹீல் நவாஸ் தலைமை வகிக்கும் பாகிஸ்தானிலிருந்து சிறியளவிலான இராணுவ உதவி கூட கிட்டாத நிலையில் நம் உறவுகள் காபிர்களின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

முஸ்லிம்களின் நலனை கருத்திற்கொள்ளாத பாகிஸ்தான் அரசு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தன் இராணுவத்தை கோத்திரக்குழுக்கள் வாழும் பகுதிகளில் நியமித்து, சுமார் ஒரு மில்லியன் அளவிலான கோத்திர மக்களை ஆப்கானில் பலவந்தமாக முகாமக்களில் வைத்துள்ளது. இக்காரியத்தை அமெரிக்காவின் நலன் கருதியே செய்துள்ளது..!

பாகிஸ்தான் இராணுவப்பிரிவு தலைமை ஜெனெரல் ரஹீல் நாட்டிற்குள் தன்னை வீரமிக்க, உறுதியான ஒருவராக பாசாங்கு காட்டினாலும் , காஷ்மீரில் இந்திய இராணுவ அத்துமீறல் இடம்பெறும் இவ்வேளையில் தனது இயலாமையை மற்றும் புறக்கணிப்பையே வெளிப்படுத்துகின்றார்..!

ஜெனெரல் ரஹீல் உண்மையிலேயே வீரராய் இருந்திருந்தால் காஷ்மீர் அத்துமீறல் ஏற்பட்ட அடுத்த நிமிடம் தகுந்த பாடம் புகட்டி இருக்க முடியும். இப்படி நடந்திருப்பின் இந்திய இராணுவம் காஷ்மீரில் கைவைக்க நூற்றுக்குக்கு மேற்பட்ட தடவை யோசிக்கும் வகையிலான பெரும் பாடமாக அது ஆகியிருக்கும்.

அடிப்படையில் ரஹீல் நவாஸ் தன்னை வாஷிங்டனின் அடிமையாகவும், எஜமான்களின் சிறந்த கைக்கூலியாகவுமே காட்டிக் கொள்கிறார். அவர் பாகிஸ்தான் இராணுவத்தை கோத்திர முஸ்லிம்களுக்கெதிராக அமெரிக்காவின் யுத்த நலனிற்கேற்ப பணியமர்த்தியுள்ளார். இதனால் பாகிஸ்தான் இராணுவத்தின் எதிர்த்தாக்குதல் பற்றி இந்திய ராணுவத்திற்கு அறவே பயம் இல்லாத அளவுக்கு ஆகிவிட்டது ...!

அதுபோலவே காஷ்மீர் மக்களின் விடுதலையையும், சுபீட்சத்தையும் ஐநாவின் சட்டவிதிகள் ஒருபோதும் உறுதிப்படுத்தாது .

எனவே இந்த ஹிந்துத்துவ இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுக்கட்டும் ஆற்றலானது,

(1)மக்களை இஸ்லாத்தைக் கொண்டு ஆட்சிபுரிந்து,

(2)ஹிந்துத்துவ அரசிற்கெதிராக ஜிஹாதை பிரகடனம் செய்து,

(3)காஷ்மீர் மக்களை குஃப்ரிய சக்திகளிடமிருந்து மீட்கக்கூடிய முஸ்லிம்களின் கேடயமான கலீஃபாவின் மூலமே உறுதிப்படுத்தமுடியும் ...!

காஷ்மீரில் ஆறு தசாப்தங்களையும் தாண்டித் தொடரும் மக்களின் விடுதலை வேட்கையை ஆயிரக்கணக்கான முஜாஹிதீன்களை கொன்றொழித்தும் அவா்களின் தலைமைகளை களையெடுத்தும் தணிக்க வக்கற்ற ஹிந்துத்துவ அரசு பலமும், பக்குவமும், வீரமுமிக்க கிலாஃபத்தின் இராணுவத்தை எவ்வாறு எதிா்கொள்ளும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்...!

ஆகவே முஸ்லிம்களாகிய நாம் உண்மையிலேயே குஃப்ரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்ட எண்ணினால், முஸ்லீம் உலகில் கிலாஃபாவை நிறுவும் பணியில் பங்காற்றுவோராக மாற்றம் பெறவேண்டும் .

ஒரு அரசினை எதிா்கொள்ள இன்னுமொரு அரசினாலேயே முடியும். காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்கு கிலாபாதான் நிரந்தரத் தீர்வு ...!

Source : Darul Aman.net

Jul 14, 2016

எழுதுவதாலும் ,சித்தாந்தம் கற்பிப்பதாலும் கிலாபா வருமா !?

எழுதுவதனால் ,பேசுவதனால் ,மக்களுக்கு சித்தாந்தம் கற்பிப்பதால்  கிலாபா வந்துவிடுமா என்ற கேள்வி எம்மில் சில  சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது . குறிப்பிட்ட சகோதரர்கள் இஸ்லாமிய கிலாபவின் வருகயின்மூலம்தான் முஸ்லிம்களின் மறுமலர்ச்சி உறுதிப்படும் .மற்றும் இஸ்லாம் மேலோங்கும் என்ற விடயத்தை நன்கறிந்தவர்களும் இஸ்லாத்தை நேசிக்கக்கூடியவர்களும் ஆகும் .!!

 இந்த சகோதரர்கள் மத்தியில்  இவ்வாறான ஒரு  கேள்வி எழுகின்றமைக்கான அடிப்படைக்காரணம் இவர்களுக்கு  கிலாபா அரசு இந்த உலகிலிருந்து  இல்லாமால் போனதன் வரலாற்றுப்பின்னணி பற்றிய போதிய தெளிவின்மையே ஆகும் .!!

அந்தவகையில் கிலாபவை இல்லாமல் செய்த வரலாற்றை ஆழமாக  நோக்கும்போது குப்பார்களால் மேற்க்கொள்ளப்பட்ட  மிகப்பிரதான  போர் வகை சிந்தனைப்போர்  என்பதை அறிந்துகொள்ளமுடியும்.!! 

உம்மத்தை ஒன்றிணைக்க உழைப்பவர் மிக முக்கியமாக அறிய வேண்டியது  உம்மத்தை பிரிவிக்குள்ளாக்கி அதன் ஒன்றினைவினூடாக கிலாபத்தை உருவாகாமல் தடுக்கும் அந்த நச்சு சிந்தணைகள் என்ன அவை இன்றைய உலகில் எடுத்துள்ள வடிவங்கள் என்ன ,அவற்றை எவ்வாறு முஸ்லிம்களிடமிருந்து களைவது ,அதில் உள்ள தடைகள் என்ன என்பவை  பற்றி ஆகும் .!!

இவ்வாறன புரிதலோடும்  தெளிவான இஸ்லாமிய  சித்ததாந்த அறிவோடும்   உம்மத்தினுள் தஹ்வா பணி புரிதல் மூலமாகவே  அந்த தவாஹ் பணி கிலாபாவின் வருகைக்கு வழிவகுக்கும் .!!

கிலாபா அரசின் முக்கியத்துவத்தை  முதலில் முஸ்லீம்கள் உணரவேண்டும் .இந்த உணருதலை கொண்டுவர அவர்களை வழி நடாத்தும் பிற சித்ததாந்த சிந்தணைகள் களையப்படுதல் வேண்டும் ;மாற்றுத்தீர்வை அவர்கள் வேண்டிநிற்கும் வேளையில் சிதத்தாந்த இஸ்லாம் அவர்களுக்கு கற்ப்பிக்கப்படுதல்  வேண்டும் இந்தப்பணி பரந்தளவில் உம்மத்தில் ஒரு ஒழுங்குமுறையில் முன்னெடுக்கப்படுதல் வேண்டும் .உம்மத்தில் இடம்பெறும் இந்த  சீரிய விழிப்புணர்வுப்பிரச்சாரத்தின் மூலமாகவே உருவாகும் கிலாபா பலம்பொருந்தியதாகவும் எதிரி அரசுகளின் சதி ,சூழ்ச்சிகளிலிருந்து உலக முஸ்லீம்களால் பாதுகாக்கப்படக்கூடியவாறும் காணப்படும் .!!

கிலாபா என்பது ஒரு வெறும் அரபுப்பெயர்தாங்கிய அரசு அல்ல அது ஒரு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு சித்ததாந்த அரசு .!!

#சிந்தணைகள்_வெடிகுண்டுகளைவிட_சக்திவாய்ந்தவை

from Mohamed Nafras

சிந்துவின் பாலஸ்தீன் காஸ்மீரா!?


ஷஹீத் புர்ஹான் முஸப்பர் வாணி என்ற அந்த இளைஞன் காஸ்மீரிகளின் இதயங்களில் எப்படி வாழ்கிறான் என்பதன் எடுத்துக்காட்டே அவனது ஜனாசா தொழுகையும், தற்போதய காஸ்மீரின் நிலவரமுமாகும்! சுமார் மூன்று இலட்சம் பேர் அவனுக்காக ஜனாசா தொழுதுள்ளனர்! மக்கள் திரளை சந்திக்க முடியாத Indian Slum Dog Army தனது வெறித்தனத்தை அங்கு கட்டவிழ்த்து விட்டுள்ளது!

வஞ்சக ஊடகங்கள் கூட காஸ்மீரின் ராபின் ஹூட் என அவனை தமது பாணியில் வர்ணிக்கின்றன! அவனது ஷஹாதத்தில் பெருமிதம் கொள்வதாக புர்ஹான் வாணியின் தந்தை கூறுகிறார்! சிந்துவின் பாலஸ்தீனாக காஸ்மீர் கொந்தளிக்கிறது!

இந்திபாதாவின் பாதச் சுவடுகள் காஸ்மீரை அலங்கரிக்கிறது! ஆம் பாசிச குப்பை மேட்டு நாய்களுக்கு கற்கள் போதுமானதே!

காஸ்மீர் விவகாரத்தில் தீர்வுக்கான ஒரு சிறுகுறிப்பு!


15 சிவிலியன்களுக்கு ஒரு ஜவான் என்ற வகையில் காஸ்மீரில் இந்திய இராணுவமும் CRPF உம் குவிக்கப்பட்டுள்ளது! உலகின் அதிக கெடுபிடிமிக்க இராணுவ வலயங்களில் காஸ்மீர் முக்கிய இடம் வகிக்கிறது! ஆனால் இவ்வளவு ஒடுக்கு முறைக்கு மத்தியிலும் போராட்டம் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டுள்ளது!

தோட்டாக்களினால் காஸ்மீர் போராட்டத்தை ஒடுக்கமுடியும் என இந்தியா நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது! தன் சகோதரன் தன் கண்முன் இந்திய இராணுவத்தால் தாக்கப்படுவதைக் கண்டு 16வயதில் ஓடிய புர்ஹான் வாணி திரும்பி வரும்போது கையில் துப்பாக்கியுடன் வந்தான் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கதையல்ல! மாறாக இராணுவ ஒடுக்கு முறையின் எதிர்வினை!

அதேபோல முதலாளித்துவ ஜனநாயகம் காஸ்மீர் விவகாரத்தை சுமூகமாக தீர்க்கும் என காஸ்மீரிகள் நினைத்தால் அதைவிட அடி முட்டாள்தனம் வேறில்லை! ஜனநாயக போர்வையில் இந்திய அரசுடன் சமரச பேச்சு வார்த்தைக்கு சென்று பக்குவமாக காயடிக்கப்பட்ட JKLF அமைப்பு இதற்கு சிறந்த சான்று!

அச்சப்படுத்தத் தக்க ஒரு உயர்தர இராஜதந்திர அழுத்தம் மட்டுமே காஸ்மீர் விவகாரத்தில் இந்திய கெடுபிடியை இல்லாமல் செய்யும்! அது தேசிய எல்லைகளை கொண்ட முஸ்லீம் தேசங்களால் முடியவே முடியாதது! மாறாக முன்னறிவிக்கப்பட்ட கிலாபா சாம்ராஜியத்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்! அதுவரை பாலஸ்தீனத்துக்கு எது தீர்வோ அதுவே காஸ்மீரிகளுக்கும் தீர்வாகும்! வீதிகளில் கற்களும் ரிகர் அழுத்த விரலும் வலுவோடு இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் இந்திய பாசிசப் படைகள் காஸ்மீரில் நிம்மதியாக இருக்காது!

Abdur Raheem

Jul 11, 2016

சிரியாவை துண்டாட அமெரிக்காவின் திட்டம்



ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்தின் நூறாவது ஆண்டு மற்றும் சிரிய புரட்சியின் ஐந்தாவது ஆண்டில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி சிரியாவிற்கான அமெரிக்காவின் திட்டம் உறுதியானது என கூறினார். அவையின் வெளியறவு கமிட்டியிடம் அமெரிக்க அமைச்சர் தாம் ஏற்கனவே திட்டமிட்டபடி போர் நிறுத்தம் ஏற்படாமல் போனால் அல்லது ஒரு மாற்று அரசு ஏற்படுவதற்கான ஒரு உண்மையான மாற்றம் வரும் மாதங்களில் ஏற்படாமல் போனால் சிரியாவை பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ள தனது அடுத்த திட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாக கூறினார். “சிரியாவை முழுமையாக இப்படியே காலம் தாழ்த்தி வைத்திருப்போமேயானால் மிகவும் காலம் கடந்து போயிருக்கும்”, என ஜான் கெர்ரி கூறினார். [1] “நாம் (பேச்சுவார்த்தை) மேஜையில் வெற்றி பெறாமல் போனால் கைவசம் உள்ள அடுத்த திட்டத்தை மேற்கொள்வது குறித்து தற்போது  தீவிரமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது”[2]. ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்தின் நூறாவது ஆண்டு மற்றும் சிரிய புரட்சியுன் 5வது ஆண்டில் அமெரிக்கா என்ன விலை கொடுத்தேனும் தற்போது நிலவி வரும் நிலை நீடித்து இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா நீண்ட நாட்களாக முயற்சித்து வரும் போர் நிறுத்தமானது 2015  டிசம்பர் மாதம் வியன்னா மாநாட்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது, இது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜெனீவா மாநாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.  அனைத்து உச்சிமாநாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் மையமாக அல்-அசாதுடன் எதிரணியினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு ஒரு மாற்று அரசை உருவாக்குவதே. இது போன்ற மாநாடுகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட அழைப்புகள் எப்போதும் ஒரு சிலருக்கு மட்டுமே விடுக்கப்பட்டது அதிலும் குறிப்பாக இந்த திட்டத்திற்கு ஓத்து போகும் சில குழுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து விடுக்கப்பட்டது. முந்தய அரசில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களை சேர்த்து கொண்டதும் அரசின் மாற்றத்தை கோரிக்கையாக வைத்த ஆதிக்கம் வாய்ந்த குழுக்களை வெளியேற்றியதும் இந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகள் அல்-அசாத் அரசை தக்கவைப்பதற்காக வேண்டியே நடைபெறுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது மற்றும் இந்த திட்டத்தை எதிர்ப்போரை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறது. தற்போது நிலவிவரும் போர் நிறுத்தமும் நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்பது எதிர்மாறானதல்ல மாறாக அது அமெரிக்காவின் நிலைபாடான தமாஸ்கஸில் அரசை தக்கவைப்பதன் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இது அல் ஜசீராவால் குறிப்பிடப்பட்டது:  “இந்த பிரச்சினையின் தொடக்கத்தில், அமெரிக்கா வெளிப்படையாக (சிரிய அதிபர்) பஷார் அல்-அசாதிற்கு எதிராக நின்றது. ஆனால் அதே சமயம் எதிரணியருக்கு தவறான வாக்குறுதிகளை தொடர்ந்து கொடுத்து வந்தது. இப்போது அதன் உண்மையான நிலைபாடு வெளிப்பட்டுள்ளது. அமெரிக்கா அசாதிற்கு எதிராக நிற்கவில்லை.  பேச்சுவார்த்தையில் அசாத் கலந்துகொள்ள அது சம்மதம் தெரிவித்துள்ளது மேலும் அவரை ஒரு தலைவராகவும் அங்கீகரித்துள்ளது. [3]
மேலும் சிரியாவையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் துண்டாடும் கொள்கையை அமெரிக்கா சில காலமாக கொண்டுள்ளது. இன்று, அமெரிக்க அதிகாரிகள் ஒரு காலத்தில் அரபுலகை துண்டாடுவது சாத்தியப்படாத ஒரு இலக்காகவும் வெளிப்படையாக அதை பற்றி துண்டாடும் எண்ணம் என்பது ஆபத்தானது என்று கருதிய காலாவதியான திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். அரபுலகின் பிரச்சினை குறித்து பல்வேறு வாக்கியங்களை உபயோகித்து விவரித்து வருகின்றது அதாவது “மண்ணில் மூழ்குகிறது,” “பிரச்சினையின் உச்சி,” “பால்கனைசேஷன்,” அல்லது “மத்திய கிழக்கின் மிகப்பெரிய முயற்சி,” போன்ற அனைத்தும் இன்று வரை தொடர்ந்து நீடித்து வரும் ஐரோப்பிய மேலாதிக்கத்தையும் நலன்களையும் பாதுகாத்து வந்த 1916 ல் நடைபெற்ற ஸைக்ஸ் பைகாட் ஒப்பந்தத்திலிருந்து திருப்பி விடுவதற்கான முயற்சிகளாகும். 2006 ம் ஆண்டு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல்.  ரால்ஃப் பீட்டர்ஸ்  பழங்குடி, பிரிவினைவாத மற்றும் கோத்திரத்தின் அடிப்படையிலான மத்தியகிழக்கு மற்றும் ஆசிய எல்லைகளை சிந்திப்பது என்னும் ஆயதப்படை ஜர்னலில்
 ”இரத்த எல்லை (Blood borders)”யை கோடிட்டு காட்டினார்.[4] சிரியா மற்றும் பெரும்பாலான மத்தியகிழக்கு பகுதிகளை துண்டாடும் எண்ணத்தை புஷ்ஷின் ஆதரவாளர்கள் கொண்டிருந்தனர் அவர்கள் ஒரு தெளிவான பிளவு: realm ஐ தக்கவைத்து கொள்வதற்கான ஒரு புதிய வழிமுறை(strategy) என்னும் திட்டத்தை வரைந்தனர். இந்த ஆவணம் சதாம் ஹுசேனை அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் சிரியாவை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தது.   பிரிவினையை ஒரு கருவியாக உபயோகித்து தற்போது நிலவிவரும் நிலையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்கா நெடு நாட்களாக கொண்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
தற்போது போர் நடைபெற்று வரும் சிரியா எல்லைகள் தான் அமெரிக்கா நாடிய எல்லைக்கோடுகளாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன சிரியாவை பிரிக்கும் வகையில் வட பகுதிகளான ஹஸாகா முதல் கோபானி மற்றும் துருக்கிய எல்லை வரையிலான பகுதிகளில்  வரலாற்றின் பெரும் பகுதியல் அதிகமாக குர்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வட பகுதியான இத்லிப் மாகானத்திலிருந்து யுப்ரைடஸை கடந்து ஈராக்கிய எல்லையிலுள்ள அல்-ரக்கா வரையில் அஹ்லுஸ் சுன்னாவினர் பெரும்பான்மையாக வசித்து வரும் பகுதியாகும். நாட்டின் மையப்பகுதியான டமாஸ்கஸலிருந்து லடாக்கியா மாகாணம் வரை, அரசின் விசுவாசிகள் மற்றும் சிறுபான்மையினரான அலவிகள் வசித்து வருகின்றனர் இந்த பகுதி தானாக ஒரு நாடாக உருவாகக்கூடும். இந்த புதிய வரைபடம்  ஸைக்ஸ்-பைகாட் ஒப்பந்தம் ஏற்பட்ட பின் சிரியா எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையான பிரஞ்சு வரைபடத்தை காட்டிலும் வேறுபட்டிருக்கவில்லை மக்களிடம் பிரித்து இந்த நாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயன்றதால் பிரான்ஸ் இந்த வரைபடத்தில்  1920 களில் பல திறுத்தங்கள் மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளானது. எவ்வாறிருப்பினும் இப்போது எழும் கேள்வி என்னவெனில் ஜான் கெர்ரியும் அவரது கூட்டாளிகளும் தீட்டும் வரைபடமானது இப்போது நிலவி வரும் நிலையிலிருந்து  மாறுபட்டிருக்குமா மேலும் அது நிலைத்திருக்குமா என்பது தான்?
மக்களுடைய மதிப்பு மற்றும் கலாச்சாரம் ஸைக்ஸ்-பைக்காடிற்கு முற்றிலும் மாறுபட்டிருந்த காரணத்தால் அது தோல்வி அடைந்துவிட்டது. நூறு வருடங்களுக்கு பிறகு ஸைக்ஸ்-பைக்காட் வரைந்த எல்லையை போன்று வரையப்பட்டுள்ள இன்றைய எல்லைகளும் அந்த பிராந்திய மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை அதனால் இன்றும் அது நிலைபெறுவதில் தோல்வியை சந்தித்து வருகிறது எல்லையை போல் மக்கள் தங்களது
இஸ்லாமிய அடிப்படையில் கொண்டுள்ள ஒற்றுமையை கைவிட்டு தேசியவாத அடையாளங்களை  தனதாக்கி கொள்ளவார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை இல்லாத இந்த எல்லைகள் புது அமைப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு ஈராக்கியர், சிரியர், ஜோர்டானியர் அல்லது லெபனியர் போன்ற ஒன்று இல்லாமல் இருந்தது, இந்த தேசங்கள் திட்டமிட்டு உருவாப்கப்பட்டவை ஆகும். தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் வல்லுனர்கள் முன்வைப்பது புதிய வகையான இனம் சார்ந்த பிரிவினைவாத அடையாளங்களை தவிர வேறில்லை. கெர்ரி மற்றும் ஒபாமாவின் ஸைக்ஸ்-பைகாட்டின் 21ம் நூற்றாண்டின் வடிவமானது இனவாத அடிப்படையில் எல்லைகளை பிரித்து உருவாக்க வேண்டும், இவைகளை குழுக்கள் போன்ற அமைப்பதால் இந்த பிராந்தியத்தில் இவைகளால் ஆதிக்கம் செலுத்த முடியாது இது மட்டுமல்லாமல் இவை அனைத்து வகையிலும் நிலைத்திருக்க அரும்பாடு பட வேண்டும். இதன் காரணத்தால் தான் கெர்ரி மேற்கொள்ளும் இத்திட்டமும் தோல்வி அடையும்.
சிரியாவை பிரிப்பது குறித்த ஜான் கெர்ரியின் அறிவப்பு உண்மையான மாற்றம் வேண்டும் என்ற புரட்சிப்படையினர் தங்களது கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதற்காக
பல கருத்தரங்கங்கள் மற்றும் உச்சி மாநாடுகள் நடத்திய பிறகும் அவர்களை சம்மதிக்க வைப்பதில் அமெரிக்கா தோல்வி அடைந்ததை ஒட்டி வந்ததாகும். ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிரியாவின் போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்பது யாரும் எதிர்பாராதது, ஆனால் அம்மக்கள் சிரிய அரசை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளனர், புரட்சியாளர்கள் மீது தாக்குதல்களை கொண்டு செல்வதற்கு பதிலாக தனது அரசை தற்காத்து கொள்ளவதற்கே வெளியிலிலுந்து உதவியை தொடர்ந்து எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் நிச்சயமாக தோல்வியை அடையக்கூடும், ஏனெனில் இதில் அரசிற்கு எதிராக போராடும் புரட்சி குழுவினர் ஈடுபடுத்தவில்லை, மற்றும் இந்த சிரிய புரட்சியின் எதிர்காலம் அமெரிக்கா இந்த விஷயத்தில் பெரும்பாலும் எவ்வாறு  அனுகுகிறது என்பதை பொறுத்து தீர்மானிக்கும்.
அத்நான் கான்
[1]http://www.theguardian.com/world/2016/feb/23/john-kerry-partition-syria-peace-talks
[2]http://sputniknews.com/politics/20160225/1035293806/kerry-plan-.html#ixzz41Hnw8Yve
[3]http://www.aljazeera.com/blogs/middleeast/2016/01/shifting-lines-syria-160131100323293.html
[4] http://www.armedforcesjournal.com/blood-borders/

sindhanai.org