Apr 28, 2013

இது குப்ரின் ஒரே ஆதிக்க மொழி!!!

ஓ முஸ்லிமே !?

உனது சிந்தனையை மட்டும் எனது குப்ரிய ஏகாதிபத்திய அதிகார வாழ்வுக்கு சவால் விடும் தனிப்பெரும் மாற்று சக்தியாக இன்று தெளிவாக காண்கிறேன்!

அந்த' இஸ்லாத்தை' உன்னிலிருந்து பிரிக்கும்
வழியில் எனது சித்தாந்தப் போலிகளை உனது சிந்தனை எல்லைக்குள் யதார்த்த மாயை கொண்டு தொடர் உலா விடுகிறேன் ஏற்றுக்கொள்!

என்னை ஜீரனித்த நவ இஸ்லாமிசத்தில்
நீ கரைந்து போ! நரக நெருப்பின் ஒளியில் எனது நாகரீகத்தை அணிவது தவிர ஒரு தீர்வை கனவாகக் கூட நீ காணக் கூடாது!

என்னை மொழிபெயர்! அந்த விலாசத்தில் உன்னில் நான்
என்னைக் காண்பதில் தான் எனது வெற்றி நிச்சயிக்கப் படுகிறது. சக வாழ்வு சாத்தியமாக உனது சத்தியத்தை விலைபேசு!

சுவையான இந்த சமரச பேரத்தில் தான் எனது ஆதிக்க
எல்லையில் உன்னால் ஒரு கொத்தடிமை பிராணியாக தானும் வாழ முடியும் . அல்லாது விடின்.....

நீ இந்த குப்ரிய நரப்பசியில் எனது வேட்டைக் குறியில் ஒரே தெளிவான
இலக்கு!உனது இரத்தமும் , உடமைகளும், உணர்வும், எனது விளையாட்டுப் பொருள்கள்!

1. 5 மில்லியனாக இருந்தென்ன பயன் உனது(கிலாஃபா எனும் ) கேடயத்தை நேற்று நீ உடைக்க உதவிய போது உனது கேவலத்தையும் நீ அணிந்து அனாதை ஆனாய்! அவலம் உனது உற்ற
சொத்தாகவே மாறியது! நீ இப்போது 'வஹ்ன்' சுமந்த வைக்கோல் தான்!

Apr 27, 2013

(இஸ்லாம் என்றால் பயங்கர வாதம் ! முஸ்லீம் என்றால் பயங்கர வாதி!)

அமெரிக்க டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ! முஸ்லீம்கள் மீது முத்திரை குத்தும் இன்னொரு முகமூடித் தாக்குதலா!? ( பகுதி 04)

(இஸ்லாம் என்றால் பயங்கர வாதம் ! முஸ்லீம் என்றால் பயங்கர வாதி!)


பயங்கர வாதம் என்பதட்கான வரைவிலக்கணம் முதலாளித்துவ மேட்கின் அகராதியில் மிகவும் விசித்திரமானது! சுயநலம் மிக்க தமது அதிகார எல்லையை அதி தீவிரமான கருத்தியல் பாதுகாப்பில் வைத்திருக்க 'பச்சோந்தி' தனமாக நிறம் மாறும் ஒரு வடிவமாகவே அந்த வரைவிலக்கணம் அமைந்துள்ளது. 1979 ம் ஆண்டு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து உலவுத் துறையினர் ஒரு மாநாடு ஒன்றை கூட்டி இந்த அட்புதமான முடிவை சொன்னார்கள்!

அந்த வரைவிலக்கணம் இதுதான் " அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதட்காக சமூகத்தின் பொதுவிருப்புக்கு எதிராக வன்முறையை பிரயோகித்தல் என்பதே பயங்கர வாதம் ஆகும்" என்பதே அதுவாகும். ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகனே! எனும் பழமொழிக்கேட்ப
சுய அரசியல் இலாபங்களுக்காக இந்த விடயம் அரசியல் வடிவமாக மாற்றப் பட்டது!அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல மாநாடுகள்; அதன் பின்னால் பல தீர்மாணங்கள் என அந்த 'இராஜதந்திர பாதுகாப்பு வேலி உலகளாவிய ரீதியில் கொண்டு வரப்பட்டது..

பல இயக்கங்கள் ,சங்கங்கள் ,கலகங்கள் இந்த சூதாட்ட அரசியலில் பயங்கரவாத அமைப்புகள் என முத்திரை இடப்பட்டது. இதில் மிகுந்த வேடிக்கை என்னவென்றால் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளை தவிர எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் இந்த 'லிஸ்டில்' சேர்க்கப் பட்டன!
இன்று வரை சேர்க்கப் படுகின்றன! இஸ்லாமிய இயக்கங்கள் இந்த 'லிஸ்டில் 'சேர்க்கப்பட ஒரு சில வார்த்தைகளை உச்சரித்தால் போதும் என்ற சிறப்புத் தகுதியையும் பெற்றுக் கொண்டன.

இந்த கோமாளித் தனமான வரைவிலக்கணம் இஸ்லாத்தையும் , முஸ்லீம்களையும் மிகத் தெளிவாகவே குறிவைத்தது. இந்த சூதாட்ட அரசியலில் 'சியோனிஸமும் , இஸ்ரேலும் தெளிவான 'ஜோக்கர்கள்' போல் பவனிவர பாலஸ்தீனின் பச்சைக் குழந்தையும் பயங்கர
வாதியாக உலகின் முன் காட்சிப்படுத்தப் பட்டனர். "முஸ்லீம் என்றால் குடிநீரோ குடியிருக்க இடமோ கொடுக்க மாட்டோம்" என முஸ்லீம் அல்லாத மக்கள் கூறும் அளவுக்கு அச்சப் படுத்தப் பட்டார்கள்.

இயல்பு வாழ்க்கையில் இருந்து 'இமிக்கிரேசன்' வரை இறுக்கமான ஒரு நிர்ப்பந்த வாழ்வை நோக்கி முஸ்லீம் தள்ளப்பட்டான். இப்போது அவனுக்கு முன் தெரிவுகள் மூன்றானது.

1. குப்ரிய மேலாதிக்க நிபந்தனைகளுக்குகட்டுப்பட்ட ,அதனோடு முரண்படாத ஒரு கூட்டு வாழ்வை நோக்கி தனது இஸ்லாமிய இயல்பு நிலையை மீறி வாழ பழகிக் கொள்ளல்.

2. குப்ரிய மேலாதிக்க நிபந்தனைகளுக்குகட்டுப்படாத இலட்சிய வாத இஸ்லாமிய சித்தாந்த போரை கருததியலாக முன்வைத்து போராடுதல்.

3. கருத்தியல் தொடர்பில் அழுத்தம் கொடுக்காத வன்முறை சார் போராட்ட வடிவத்தை கொண்டு தனது வாழ்வியலை பாதுகாத்தல்.

இந்த முடிவுகளில் மேட்கின் எதிர்பார்ப்புகளுக்கு என்ன நடந்தது? என்பதை இன்ஷா அல்லாஹ் மறுமுறை சொல்கிறேன்.

(தொடரும்)

அமெரிக்க டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ! முஸ்லீம்கள் மீது முத்திரை குத்தும் இன்னொரு முகமூடித் தாக்குதலா!? ( பகுதி 03)

1980 களில் 'சோவியத் நாடு ' எனும் ஒரு சஞ்சிகை வெளி வந்து கொண்டிருந்தது. முதலாளித்துவ எகாதிபத்திய அடக்குமுறைகளுக்கு சவாலாக சோவியத் யூனியனாக நாஸ்திக கம்பியூநிஸம் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த காலப்பகுதி அதுவாகும்.(இந்தசஞ்சிகை அமெரிக்க எதிர்ப்பு மனப்பாங்கு உள்ளவர்களுக்கு தீனி போடும் ரஸ்ய
மார்க்சிய கம்பியூநிசத்தின் கொள்கை மற்றும் சுய சுத்தம் பேசும் சஞ்சிகையாகும்.)

ஆனால் இந்த சஞ்சிகையில் சில சம்பவங்கள் தொடர்பாக ஆதாரங்களையும்,தகவல்களையும் தருவதில் பல உண்மைகள் இருப்பதை எம்மால் மறுக்க முடியாது. அப்படி ஒரு தகவல்
தான் 'பயலாஜிகால் வெப்பனாக' பிரயோகிக்க அமெரிக்க இராணுவ ஆய்வு கூடமொன்றில் திட்டமிட்டு வீரியம் அதிகரிக்கப்பட்ட ஒரு 'வைரஸ்' தான் எச் .ஐ .வீ என்பதும் . அதன் பரீட்சார்த்த கசிவின் விளைவே 'எய்ட்ஸ்' என்பதாகவும் ஒரு நீண்ட விமர்சனம் வெளியிடப்
பட்டிருந்தது.

முழு மனித சமூகத்தையும் பணயம் வைத்து அதிகார ஆதிக்க ஆயுதப் போட்டியில் நீயா நானா ? என அமெரிக்காவும் , சோவியத் யூனியனும் அக்காலத்தில் ஈடுபட்டிருந்ததுபகிரங்க உண்மை.அரிசோனா பாலை வனத்தில் இரும்புப் பாலங்களை சில நொடிகளில் உருக்கிய சிறிய அணு குண்டு பரிசோதனை போதாமல் அதன் அகோரமான அழிக்கும் திறன் 'ஹீரோஸிமா' நாகாஸாக்கியில் ' பிரயோகிக்கப் பட்ட உதாரணமே போதும் !! அமெரிக்காவின் பாதுகாப்பான மனித நலன் மிக்க ஆய்வுத் திறமையை எடுத்துக் காட்ட.

ஆனால் இந்த விடயங்கள் முக்கியத்துவம் பெறாமல் 'அந்திறாக்ஸ்' என்ற 'பக்டீரியா' உலக உருண்டையை மறுபக்கம் சூழட்டியது!? 'மேட் பை அல்கைதா ' எனும் 'லேபில்' ஓட்டப்பட்டு 'இஸ்லாமிக் டேரர் இஸம்' என்ற ஒரு அச்சப் படுத்தும் 'செண்டி மென்டை' மனித உள்ளங்களில் விதைத்தது! காரணம் முஸ்லீம் உலகு ஆக்கிரமிக்கப் பட சில நியாயங்களை அரசியல் இராணுவ ரீதியில் அமைக்க வேண்டிய அவசியம் சீ. ஐ .ஏ இனால் உணரப் பட்டதே. பின்னர் இரட்டை கோபுரத் தாக்குதலை நேரடிக் காரணம் காட்டி ஈராக்கும் , ஆப்கானும் ஆக்கிரமிக்கப் பட்டது.

'கெமிகள் வெப்பன்' நாடகம் மூலம் ஈராக்கினுள் நுழைந்த அமெரிக்கா தகுதியான ஆதாரத்தை அங்கிருந்து தர முடிந்ததா!? 'ஓசாமா பின் லேடனுக்காக' ஆப்கான் நுழைந்த அமெரிக்கா இன்னும் வேறு எதைக் கிழிக்க அங்கே இருக்கிறது!? எனும் சாதாரண கேள்விகளுக்கே இன்னும்
பதில் சரியாக தரப்படவில்லை. 'ஆக்கிரமிப்புக்கான நியாயம் அதனால் இது நியாயமான ஆக்கிரமிப்பு ' எனும் நாடக அரசியல் கதை தவிர உறுப்படியாக இவர்களால் பதில் தர முடியாது .(தொடரும்)

அமெரிக்க டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ! முஸ்லீம்கள் மீது முத்திரை குத்தும் இன்னொரு முகமூடித் தாக்குதலா!? (02)

அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஒரு திசை திருப்பும் உளவியல் தரம் வாய்ந்த ஒரு நடவடிக்கையா? எனும் சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது. அந்த நடவடிக்கை ஏன் செய்யப்பட்டது ? என்பதை புரிந்து கொள்ள ஒரு வரலாற்றுத் தெளிவு அவசியமானது. ஆழமான ஆய்வுகள் இல்லாத விடத்தும் எனக்கு புரிந்தவரை சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

குப்ரிய மேலாதிக்கமுதலாளித்துவ உலகு முஸ்லீம் உலகின் மீது தமது நியாயங்களுக்காகதொடரான ஒரு உளவியல் யுத்தத்தை தொடுத்தே வந்துள்ளது . சர்வதேச மீடியாக்களின் பக்கபலம் , அவைகளின் மிகை விமர்சன பிரச்சார போலிகள் என்பன அமெரிக்கா முதல் இலங்கையின் பொது பல சேனாவின் பிரச்சாரம் வரை ஆதிக்கம் செலுத்தி உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

அது இஸ்லாம் ஒரு வன்முறை வழிமுறை ! அதன் வழி; முஸ்லிம் நிலையான வன்முறையாளன் என்பதும் அந்த வகையில் அடிப்படை வாத ,தீவிர வாத ,பயங்கர வாத முத்திரைகளை குத்தி காட்டுவதன் ஊடாக சரணடைவு, அல்லது சமாதி என்ற அச்சத்தை
முன்னிறுத்தி தமது சித்தாந்த வழிமுறைகளை நிபந்தனைப் படுத்தி முஸ்லிமை கட்டுப்பட வைப்பதே குப்பார்ககளின் தொடரான வழிமுறை ஆகும்.

அதோடு இன்று இஸ்லாத்தை விருப்பு அடிப்படையில் பலதில் ஒன்றாக தேர்வு செய்யும் மனோபாவத்தை நோக்கி முஸ்லிமை இட்டுச் செல்வதே குப்ரிய மேலாதிக்க வாதிகளின் ஒரே தெளிவான முடிவு . ஸரீயா சட்டம் அமுலில் இருக்கும் சவூதி அரேபியாவை ஒருபுறமும் , ஜனநாயக தெரிவின் அடிப்படையில் இஸ்லாத்தை இரண்டாம் தர தெரிவு (மனித விருப்பு)அடிப்படையில் நவ இஸ்லாமிசம் பேசும் தேசிய அரசுகளின் எழுச்சியை மறுபுறமும், ஆப்கான், மாலி, செச்னியா
போன்ற பகுதிகளின் சூழ்நிலையை ஒரு புறமும் என மாற்றி மாற்றி காட்டுவதன் ஊடாக யதார்த்தமான ஜனநாயகத்திட்கும் , காட்டுமிராண்டித் தனமான ஒரு பிட்போக்கு வழிமுறைக்கும் இடையிலான ஒரு தெரிவு நோக்கி முஸ்லிமை நகர்த்துவதே குப்பார்ககளின் அரசியல் இலக்கு. (தொடரும்)

முதலாளித்துவப் பொய்ககளும் முஸ்லீம் உம்மாவும் !!!

பாலஸ்தீனில் படியேறி பக்தாதை ஊடறுத்து
மியன்மரில் இளைப்பாரி காஸ்மீரில்
பாட்டி வடை சுட்ட கதை கூறி
அவல அரங்கேற்றத்திற்கு நியாயக் கவிபாடும்
உன் ஊடகத் தாலாட்டில் உலகம் பூரிக்க
நான் பொய்ப்பிக்கப் பட்டு விட்டேன் !

ஓலங்களை இராகமாயும் குருதியை பாணமாயும்
அழகாய் நீ மாற்றிப் பருக்கிய போது உன்
ஏகாதிபத்திய மாயத் தொட்டிலில்
பூகோளமே உறங்கி விட்டதே !

உன் கசாப்புக் கடைக்கு எம்மை அடிமாடுகளாக்கி விட்டு
முதலைக் கண்ணீரோடு நீ பூசும் சமாதானச் சாயம்
உன் வழமையான வியாபாரம் தான் !

சதிகளின் மீது நீ சுத்த சரித்திரம் எழுதுவது எமக்கு
முதற் தடவை அல்லதான் ! அதை உனது சித்தாந்த
நியாயங்களில் யதார்த்த முத்திரையிட்டு
விதியாக்கிக் கொள்ளும் முட்டாள் தனத்தில்
முஸ்லீம்கள் உள்ள வரை உன் பாடு கொண்டாட்டம் தான் !

சர்வதேச அமைதிக்காகவா ஐ .நா சபை?

மூன்று தசாப்த இனவாத யுத்தத்தின் முற்றுப்புள்ளியை முல்லைத்தீவின் நந்திக்கடல் களப்பில் இட்டதன் பின்னர் ஒரு தொடர்ச்சியான விசாரணைக்கான அழுத்தத்தை ஐநாவின் மனித உரிமை கமிஷன் இலங்கை அரசு மீது இட்டுக்கொண்டு வருகின்றது .

ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை அரச படைகள் நடந்து கொண்ட விதம் சரியா தவறா ? என்ற விடயம் ஒரு பக்கம் இருக்க யுத்தக் குற்றம் என்ற தூண்டிலில் சர்வதேச சட்டம் என்ற இரையை இட்டு, விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதை விழுங்க வைத்து விசாரணை எனும் ஆப்படித்து தீர்ப்பு எனும் சதிக்கு விதி என்ற பெயரிட்டு விடுவதா ? அல்லது ஆதார அச்சப்படுத்தல் மூலம் ஒரு இராஜ தந்திர கட்டுப்பாட்டில் இலங்கை அரசை கொண்டு வந்து ஒரு நாகரீக அடிமைத்துவ உழைப்பை இலங்கை அரசிடமிருந்து ஐ .நா சபை எதிர்பார்க்கிறதா ? இந்தக் கேள்விகள் சிலருக்கு அர்த்தமற்றதாக இருக்கலாம் ஆனால் ஐ .நா .சபையை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இப்படி இரு வினாக்களை கேட்டுவிட்டே விடயத்துக்கு வரவேண்டியுள்ளது .

சுருக்கமாக சொன்னால் யாருக்காகவோ ஒரு குறித்த 'அசைன்மெண்டை ' நிறைவேற்ற துள்ளியமான திட்டங்களோடு ஐ .நா சபை துடிக்கின்றது என்பதுதான் நான் சொல்லவரும் உண்மை . அந்தவகையில் யார் இந்த ஐ .நா சபை ? எனும் வினாவுக்கு நீங்கள் விடையை தெரிந்து கொண்டால் இந்த ஐ .நாவின் விசாரணை என்ற வண்ட வாளம் உண்மை என்ற தண்டவாளத்தில் ஏறி விடும் .

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் சர்வதேச அமைதிக்காக அமைக்கப் பட்ட பொது நிறுவனம் என்பது தான் அனேகமாக எல்லோரும் அறிந்தது .ஆனால் நீதி ,நியாயம் என்ற போர்வையினில் அநீதி மறைக்கப்பட்ட அதன் அதர்ம வடிவம் பற்றி உலகம் ஏமாந்து போனது என்பது புரிந்தும் புரியப்படாத ஒரு உண்மையாகும் .

' ஹிட்லர் ' அழிந்தாலும் 'ஹிட்லரிசத்தை கூட்டாக வாழவைப்போம் ' என்ற ஏகாதிபத்திய விதியை கௌரவ தோற்றத்தில் சர்வதேச மயப்படுத்தல் என்பதற்கு துணை போனதுதான் ஐ .நா இதுவரை செய்துள்ளது . அந்த வகையில் இந்த ஐ .நா. சபைக்கு நான் கொடுக்கும் வரைவிலக்கணம் இது தான்.

'ஏகாதிபத்திய அதர்மத்தில் உலகை பங்காளியாக்கி அநியாயத்தை ,நியாய வடிவத்தில் காட்சிப்படுத்தி சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல் சம்பவங்களை தனக்கு சாதகமாக காட்டி தனக்கான இலாபங்களை அறுவடை செய்ய ஏகாதிபத்தியத்தால் அமைக்கப் பட்ட ஒரு சர்வதேச நிறுவனம் ஐ .நா .சபை ' என்று கூற முடியும் .

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் வல்லரசு கோட்பாடு வலுப்பெற்ற நிலையில் இந்த ஐ .நாவை மீறிய சக்திகளாக நேட்டோ ,மற்றும் வார்சோ ஒப்பந்தங்கள் பனிப்போரின் கொடும் பிடிக்குள் உலகை ஆட்டுவித்த போது 'வீட்டோ 'என்ற மகுடித்தாளத்தில் ஆடி வல்லரசுகளின் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுதல் என்பது தான் ஐ.நாவின் வரலாறு . அதாவது ஊருக்கு உபதேசம் என்பதும் அது சிலருக்கில்லை என்பதே ! அந்த வகையில் கொள்கையளவில் ஐ .நா .சபை கையாலாகாத தோல்வி நிறுவன வடிவம் .

அணு ஆயுதங்கள் , இரசாயன ஆயுதங்கள் , பயலோஜிகள் ஆயுதங்கள் என வகை தொகையற்று சிலர் தயாரிப்பார்கள் பரீட்சிப்பார்கள் ,பயன் படுத்துவார்கள் ! இன்னும் சிலர் அது பற்றி மூச்சு விடவும் கூடாது !? தடை நிபந்தனைகள், குற்றங்கள் யாருக்காக பிரயோகிக்க வேண்டும் என்பதைக்கூட இந்த வல்லரசுகளே தீர்மானிக்குமாம் !

முதலாளித்துவம் , கம்யூனிசம் என்ற இரு கொடும் பேய்களின் பொண்டாட்டியாய் இந்த ஐ .நா பணியாற்றினாலும் அதன் உண்மையான விசுவாசம் என்னவோ இந்த முதலாளித்துவத்தோடு தான் ! இந்த உண்மை உலகத்திற்கு தெளிவாக தெரிந்தது கம்பியூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் தான் .

அந்த வகையில் யுத்தக் குற்றம் ,மனித உரிமை மீறல் என்பன உலகில் இலங்கையில் மட்டுமா கண்ணுக்கு தெரிந்த விடயம் !? வியட்நாமில் , பலஸ்தீனில் ,ஆப்கானில் ,ஈராக்கில் ,ஏன் மியன்மாரில் ,இந்தியாவில் என நீண்டு செல்லும் பட்டியலில் இலங்கை குறிப்பாக குறிவைக்கப் பட்டுள்ளது தமிழர் நலனுக்காக என்று யாரும் நினைத்தால் அப்படியான ஏமாளிகள் கணக்கில் ஐ .நா .சபை இன்னும் உயிர் வாழ்கின்றது

யார் இந்த ஐ .நா சபை?

அந்த' நான் கடவுள் ' என்ற அகம்பாவ தேசங்களின் நெற்றிக்கண் நியாயங்களில் பயங்கர குற்றங்கள் கூட இந்த ஐ .நாவின் பார்வையில் சுத்தமாகவே எப்போதும் மொழி பெயர்க்கப்படும் ! அந்த அராஜகமான கழுகுக் கொள்கையை , அரிவாளும் சம்மட்டியும் கொண்டு எதிர்ப்போம் என்ற புரட்சிகர பூச் சுத்தளில் உலகின் ஒரு பகுதி அணி திரண்டதும் உண்மைதான் .ஆனால் நடந்த கதை வல்லரசுகளின் அடியாட்களாக அந்த குண்டர் படைக்கு தொண்டர் படையாக பனிப்போரில் மனித குலம் பணி செய்தது மட்டும்தான்; இதில் வேடிக்கை என்னவென்றால் சில நடுநிலை நாயகங்கள் 'அணிசேராமலும் ' அடியாளானது !

M 16 இற்கு AK 47 , F 16 இற்கு MIC 29 , 'குரூஸ் ' இற்கு 'ஸ்கட் ' , C .I .A இற்கு K .G .B என கொலைகாரத்தனத்தின் மயானக் கோட்பாட்டில் தேச ,தேசிய ,பிராந்திய கோமாளிகளாய் மனித குலம் அறியாமல் பனிப்போர் நாடகம் அரங்கேற்றப்பட்டது . K .G .B இற்காக 'வந்தே மாதரம் ' இந்தியா சொன்னால் C .I .A இற்காக பாகிஸ்தான் ' ஜிந்தாபாத் சொல்லும் ' ! சர்வதேச பக்கா ரவுடிகளின் பிராந்திய சமநிலை பேணும் பேட்டை ரவுடித் தனத்தில் அந்த நாசக் கரங்களோடு நேசக்கரமாய் பலர் இணைந்தது 'ஓப்பன் சீக்கிரட்' .

தடைகளை மீறி இந்தியா 'நியூ கிளியர் 'ஆயுதம் செய்தபோது ,பாகிஸ்தானின் அணுத்துறையில் மறுமலர்ச்சி கண்டு சில வருடங்களில் 'அட்டாமிக் பாம் ' அங்கும் 'சக்சஸ் புல் ' இந்த விதி மீறலை ஐ .நா கேட்டால் , 'சோவியத் வீட்டோ ' இந்தியாவை காக்க ,'U . S வீட்டோ ' வில் பாகிஸ்தான் பதுங்கும் ! 1990 களில் சோவியத்தின் வீழ்ச்சியில் இந்த 'வீட்டோ பவர் ' கம்பியூனிச அணிக்கு சற்று' டாட்டா காட்டியது ' ! 'சீனா தாங்கும் என்ற நப்பாசைக்கும் 'வெஸ்டன் பீஜிங்கின் ' விளம்பரப் பலகைகள் அங்கும் முதலாளிகளின் நாச வரவை நேசமாகக் காட்டியது .

இந்த 'கபிடலிச' ஏகாதிபத்தியத்தில் சந்தை பிடிப்பு நியாயத்தில் 'சமரசம் சாதாரணமாக ' வீட்டோ பவர் ' 'நேட்டோ பவர் 'ஆக அநியாயமாக 500 வருட மசகு எண்ணை கொள் நிலம் ஈராக் அமெரிக்க வசமானது . இந்த 'அப் டு டேட் ' வளக் கொல்லைக்கு பூரண இணை அனுசரணை இந்த ஐ .நா தான் . இந்த ஐ. நா எப்போது 'நேட்டோவில் ' சேர்ந்தது !? என்ற வினாவுக்கு ஈராக் ஒரு தெளிவான சாட்சி . (இப்போதும் 'ஒபெக் ' ஓரமாக இருந்து வேடிக்கை தான் பார்த்தது !? மசகு எண்ணை வளத்தின் கட்டுப்பாட்டுக்காக இந்த 'ஒபெக் 'என்றால் ஏன் இங்கு மௌனம் !? அதன் பதிலை அமெரிக்கன் 'பெப்சி கோலாவே ' சொல்ல வேண்டும் .)

'சர்வதேச அமைதிக்கு ஐ .நா.சபை என்று ஒரு அமைப்பு இல்லை என்பதற்கு இப்படி ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் . அது முதலாளித்துவ அணியாயங்களுக்கான அரங்கேற்ற அமைப்பு ! இங்கு மேற்கின் வெள்ளையனுக்காக ஆபிரிக்கனும் ,ஆசியனும் கூட தலைவராவான் .ஆனால் இலாபம் அடையப் போவது என்னவோ முதலாளித்துவ ஏகாதிபத்தியமே .

Apr 26, 2013

நாம் சந்தித்த வரலாறும் அனுபவிக்கும் வரலாறும்

ஹிஜ்ரி 656 ஆம் ஆண்டு சபர் மாதம் பிறை 4 அன்று மங்கோலியர்கள் (தாத்தாரியர் ) பக்தாத்தில் இருந்த இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிராக படை எடுத்தனர் .ஒரு இலட்சத்துக்கும்அதிகமான முஸ்லீம்களை படுகொலை செய்தனர் பக்தாதை பிணக்காடாக மாற்றினர் . முஸ்லீம்களின் அறிவுப் பொக்கிசமான நூல் நிலையத்தை சின்னா பின்னமாக்கினர் . அந்த 'பைத்துல் ஹிக்மா ' விலுள்ள நூல்களை 'யூப்பிரடீஸ் ' நதியில் வீசியபோது அந்த நதியே சில மாதங்கள் கருப்பாக ஓடியதாக வரலாறு கண்ணீரோடு சொல்கிறது . இந்த வெறியாட்டத்தின் பின் கூட இஸ்லாத்தை துடைத்தெறிய முடியவில்லை .

முஜ்தஹித்களின் பிரச்சார தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது .தடுக்க முடியாது எனக்கருதிய தாத்தாரிய வாட்பலம் 'ஜைன் ஜலூத்தில் ' ஒரு ரமலானில் முஸ்லீம்களால் தவிடு பொடியாக்கப் பட்டது . அதே நேரம் சிந்தனா தரத்தில் தாத்தாரியர் இஸ்லாத்தினால் கவரவும் பட்டார்கள் .காலம் மலர்ந்தது மீண்டும் கிலாபாவின் கீழ் இஸ்லாமிய உம்மத் அணிதிரண்டது .

ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (1924 மார்ச் 3) அதேபோல முதலாளித்துவமும் கிலாபா அரசு மீது தமது காலனித்துவ ஆதிக்க ஆட்சியை நிறுவியது . ஆனால் இம்முறை வன்முறை இராணுவத்தை மறைத்து சிந்தனை இராணுவத்தை முன் அனுப்பியது . இப்போது தேசிய சிறைகளில் இந்த முஸ்லீம் உம்மத்தை சிறைவைத்து , ஏறத்தாள ஒரு நூற்றாண்டை நெருங்கிய நிலையில் தம் இஷ்டம் போல் எதிரிகள் முஸ்லீம் உம்மத்தின் மீது அத்துமீறினார்கள் ,(கம்பியூநிசமும் தமது சிந்தனை, இராணுவத்தோடு இதில் பங்களிப்பு செய்தது )


இப்போதும் முஜ்தஹித்களின் தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது . இந்த எதிர் தாக்குதலை சந்திக்க வன்முறை இராணுவத்தை முதலாளித்துவ தாகூத்கள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் அனுப்பினார்கள் . அத்தோடு ஜனநாயகம் எனும் சிந்தனைக் கிருமி யுத்தத்தையும் மேட்கொண்டார்கள் .(அந்தக்கிருமியின் சிறப்பான பணி என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமின் முன்னும் தன்னை இஸ்லாமாக காட்டும் . இந்த ஆபத்தான கிருமி யுத்தம் இந்த உம்மத்தின் அதிகமானோரை 'சமரசம் 'எனும் தொற்று நோயோடு அலைய விட்டது .) இருந்தும் மறுமலர்ச்சிக்கான சரியான போராட்டமும் தொடர்கின்றது .

Apr 23, 2013

ஹுதைபியா உடன்படிக்கை உணர்த்துவது என்ன ?

அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல் ) மக்கள் அனைவரும் நன்மையையை பற்றியே அதிகமாக வினவினர் .நான் தீமை என்னை மிகைத்து விடாமல் இருக்க தீமையை பற்றியே அதிகம் வினவக்கூடியவனாக இருந்தேன் ...............(ஹுதை பதுள் யமானி (ரலி ) ,முஸ்லிம் )

என்பது ஒரு நீண்ட எதிர்கால முன்னறிவிப்பு தொடர்பான நபிமொழி ஒன்றின் ஆரம்ப வாசகங்களாகும் , இங்கு நான் கருத்தாட வருவது அந்த நபிமொழி பற்றிய விளக்கத்தை அல்ல ; மாறாக இந்த சஹாபியின் வித்தியாசமான அணுகுமுறையில் அளப்பரிய எதிர்கால தெளிவுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச்சென்றுள்ளார்கள்; என்பதினூடாக எதிர்நிளையினூடான பார்வையின் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே .

எல்லோரும் ஒரு விடயத்தின் நன்மையின் தேடல் என்பதிலிருந்துதான் எதையுமே தொடங்குவர் . அந்த எதிபார்ப்பும் பார்வையும் கசப்பான எதிர்விளைவுகள் சந்திக்கப்படும் போது தற்காப்பு நிலையெடுக்கும் சூழ்நிலையையும் மீறி அந்த தீமையால்
விழுங்ககப்பட்டு விடுகிறோம் .

கடந்த காலத்தின் படிப்பினைகளில் இருந்து நிகழ் காலத்தின் சூழ்நிலையை அலசாமல் வரலாற்றின் மீது எமது ஆதாரங்களை தேடுவது சில நேரம் உறங்கு நிலையில் இருக்கும் வைரஸ் ஒன்றை உயிர்பிப்பதாகவும் ஆகிவிடும் .

இன்றைய நிலையில் இஸ்லாமிய தவ்வா , நிலைப்பாடுகள் , காலத்தின் தேவை என்ற ஒருபக்க பார்வைகள் இவை எல்லாவற்றிலும் வஹி வழிகாட்டலும் ,ரசூல் (ஸல் ) அவர்களின் சீராவும் , சஹாபாக்கள் ,தாபியீன்கள் ,தபஹ்தாபிஈன்கள் , இமாம்கள் என இன்றுவரை தொடரும் வரலாறும் அதன் பயன்பாடும் தொடர்பில் எமது பார்வை சற்று மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே எனது
கருத்தாகும் .

(நபியே !) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக , (அந்த ஹுதைபியா உடன்படிக்கை எனும் வெற்றியை )உமக்கு அளித்தோம்
(சூராஹ் அல் பத்ஹ் : வசனம் 01)

ஹுதைபியா உடன்படிக்கை தொடர்பாக அல்லாஹ் (சுப) இந்த வசனத்தை அருளினான் . இந்த ஒப்பந்தம் தொடர்பில் உமர் (ரலி ) உட்பட பல சஹாபாக்கள் கோபத்துடனும் ,கவலையுடனும் இருந்த நிலையில் இந்த வசனம் அருளப்பட்டது .

அல்லாஹ்வின் தூதர் (ஸல் )ஒருவரை உமரிடம் அனுப்பி இந்த வசனத்தை ஓதிக்காட்ட பணித்தார்கள் . அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்த உமர் (ரலி ) "அல்லாஹ்வின் தூதரே இது வெற்றியான விடயமா ? என்று கேட்டார்கள் ;அதற்கு நபி (ஸல் ) ஆம் என்றவுடன் " மன நிறைவோடு திரும்பிச்சென்றார்கள் . இங்கு எமக்கு எழும் கேள்வி அந்த தெளிவான வெற்றி எது என்பதே .

ரசூல் (ஸல் ) அவர்களின் ஸீரா தொடர்பில் எமது ஆய்வு மிகவும் ஆழமாகவும் நிதானமாகவும் அவதானிக்கப்பட வேண்டும் .அண்ணாரது வாழ்க்கையில் இரண்டு பிரதான பக்கங்கள் புரியப்படாவிடத்து இன்று நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கும் , நிர்ப்பந்தங்களுக்கும் , செயற்பாடுகளுக்கும் தவறான ஆதாரமாக
சிலவற்றை கருதிவிட முடியும் .

காலா காலமாக அநேகமான எமது முஸ்லீம் உம்மாவின் இஸ்லாம் பற்றிய புரிதல்கள் வெறும் மத வியாக்கியானம் கொண்ட ஆன்மீக பார்வையிலேயே ஆதாரப்படுத்தியுள்ளது . அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கொண்டு வந்த செய்தி முழு மனிதர்களுக்குமானது என்றவகையில் அதை ஏற்றோர் ,ஏற்காதோர் ,எதிர்ப்போர் தொடர்பில் தொடர்பில் இஸ்லாத்தின் பாணியிலேயே அதற்கான விளக்கங்களை தெளிவு பெறா விடத்து இஸ்லாத்தின் இயங்கியலை முஸ்லீம்களாகிய நாமே கேவலப்படுத்தி விடுவோம் .

ஹுதைபியா ஒப்பந்தத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அலி (ரலி ) யை அழைத்து வாசகங்களை கூற அலி (ரலி ) எழுத ஆரம்பித்தார்கள் . தொடக்கமே குழப்பமானது "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் " என ரசூல் (ஸல் ) கூற குறைசித்தரப்பான "சுஹைல் இப்னு அமர் " அதை மறுத்து "அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! ரஹ்மான் என்றால் யார் ? என்று எங்களுக்கு தெரியாது . எனவே "பிஸ்மிகல்லாஹும்மா " என்று எழுதும்படி கூறினார் .அதை ஏற்று நபியவர்களும் (ஸல் )அலி (ரலி ) இடம் அவ்வாறே எழுதச்சொன்னார்கள் .

பின்பு "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் செய்யும் சமாதான உடன்படிக்கையாகும் " என எழுதும்படி பணிக்கவும் மீண்டும் அமர் இப்னு சுஹைல் குறுக்கிட்டு நீர் அல்லாஹ்வின் தூதர் என நாங்கள் ஏற்றிருந்தால் நாம் உம்மை அவனது வீட்டிலிருந்து தடுத்திருக்க மாட்டோம் ,உம்முடன் போர் செய்திருக்க மாட்டோம் ! எனவே முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதும்படி கூறினார் . அதற்கு நபி (ஸல் ) நீங்கள் என்னை பொய்யன் என்று கூறினாலும் சரியே ; நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான் என்று கூறிவிட்டு அலி (ரலி ) இடம் " ரசூலுல்லாஹ் " எனும் பதத்தை அழித்து முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்று எழுதப்பணிக்க அலி (ரலி ) அவ்வாறு எழுத மறுக்கவே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) தனது கையினால் அதனை அழிக்க பின் சத்து ,சரத்துடன் அந்த ஒப்பந்தம் எழுதிமுடிக்கப்பட்டது முஸ்லீம்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குள்ளான இந்த விடயம் தொடர்பாகவே நான் மேற்சொன்ன அல் குர் ஆன் வசனம் அருளப்பட்டது .

நான் இங்கு குறிப்பிட வரும் விடயம் என்னவென்றால் இந்த உடன்படிக்கை தொடர்பாக அல்லாஹ்வின் பண்புப்பெயர்களில் ஒன்றான" ரஹ்மான் ' என்ற வாசகம் நீக்கப்பட்டது ,மற்றும்" ரசூலுல்லாஹ் " என்ற வாசகம் நீக்கப்பட்டது தொடர்பில் இங்குள்ள விடயமே சுஹைல் இப்னு அம்ர் கூறியது போல் அவர்களுக்கிடையே இருந்த பிரச்சினையே அதுதான் மக்காவில் இஸ்லாமிய அழைப்புப் பணியின் தொடக்கப்புள்ளியே அந்த விடயம்தான் .இதை குறைசிகள் ஏற்றுக்கொண்டிருந்தால் அவர்களுக்கிடையேபோராட்டமே நிகழ்ந்திருக்காது . இப்படி ஒரு ஒப்பந்தம் தேவையற்றதாகியிருக்கும் .

ஆகவே இந்த வாசக நீக்கங்கள் ஒரு விட்டுக்கொடுப்பிற்கான
ஆதாரமா ? அப்படியானால் வஹி கூறும் அந்த தெளிவான
வெற்றி இஸ்லாத்தின் எதிரிகளோடு சந்தர்ப்ப சமரசமும் அதில் எமது பலவீனத்திலும் அவர்களை திருப்திப்படுத்த விட்டுக்கொடுக்கும் விடயங்களில் இஸ்லாத்தின் எந்தப்பகுதியையும் ( அகீதா முதல் ஷரீயா வரை ) பயன்படுத்தலாம் எனும் நிலைப்பாடு தானா ? இந்த கருத்தியல் பிறவிக்குருடன் வரையும் காலைக்காட்சிக்கு ஒப்பானது .

ஆகவே அல் குர் ஆன் கூறும் அந்த வெற்றி எது என்பது தொடர்பில் அந்த ஹிதைபியா விடயங்களை ஆழ்ந்து அவதானிப்பது கட்டாயமானது . இந்த ஹுதைபியா சம்பவம் பற்றி ஆராயும் போது முதலில் தெளிவு பெற வேண்டியது . இஸ்லாத்தின் அன்றைய நிலை . அல்ஹம்துலில்லாஹ் தனக்கென ஒரு கொள்கை நிலம், அரசியல் சிந்தாந்த தெளிவுள்ள மக்கள் கூட்டம் , தேவை ஏற்படின் எந்நிலையிலும் களமாடக்கூடிய கட்டமைக்கப்பட்ட இராணுவ வலிமை இதுதான் அந்தக்காலப்பகுதியின் இஸ்லாத்தின் (மதீனாவின் ) நிலை .

உண்மையில் ரசூல் (ஸல் ) அவர்களின் மதீனா வாழ்வு என்பது இரண்டு முக்கிய செயட்கட்டங்களை கொண்டது . மதீனாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) ஒரு நபியாக மட்டும் இருக்கவில்லை . மாறாக இஸ்லாத்தின் ஆட்சித்தலைவராகவும் இருந்தார் . இங்கு ரசூல் (ஸல் ) அவர்களின் நபித்துவத்தை , அவர் சொன்ன மார்க்கத்தை குறைசிகள் ஏற்கா விட்டாலும் அவரது அதிகாரம் பொருந்திய நிலைக்கான அங்கீகாரமாக குறைசித்தரப்புதான் ஒப்பந்தம் நோக்கி வருகின்றது .

சூழ்நிலையை அவதானியுங்கள் வெறும் உம்ராவிட்கான பயணத்தயாரிப்போடு மட்டும் ஹுதைபியா வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) செல்லவில்லை .* தமது பயணத்தின் போது சாதாரணமாக அரபிகள் அணிந்து செல்லும் ஆயுதங்களைவிட மேலதிக ஆயுதங்கள் இரகசியமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது .
* மக்காவில் இருக்கும் பல்வேறு கோத்திரங்களை சமாளிக்கும் தந்திரங்களையும்செய்தார்கள் ( உதாரணம் அடையாளமிடப்பட்டஅறுப்புப் பிராணிகள் வரிசைப்படுத்தி காட்டப்பட்டமை) ,* மதீனாவில் இருந்தே குறைசிகள் அங்கீகரிக்கும் ஒரு பொதுவான
தூதுவரை உம்ராவிற்கு தாம் வரப்போகும் செய்தியை அழகாக சொல்லி குறைசிகளின் கருத்தை அறிந்ததிருக்கலாம் .

ஆனால் அவ்வாறு செய்யாமல் ஹுதைபியா வரை
வந்து உஸ்மான் (ரலி ) அனுப்பப்படுகிறார் . * மேலும் உஸ்மான் (ரலி ) திரும்பிவருவது தாமனதும் அவர் கொல்லப்பட்டிருப்பார் எனும் அடிப்படையில் மக்காவினுள் நுழைந்து கொல்லப்படும் வரை போராடுவது எனும் பழிவாங்கும் தாக்குதல் யுத்தத்திற்கு (பையதுர்ரில்வான் )சஹாபாக்களிடம் வாக்குறுதி வாங்கியது.*காலித் இப்னு வலீத் (ரலி ), இக்ரிமா (ரலி ) (அந்நிலையில் அவர்கள் எதிர்த்தரப்பின் முன்னணி தளபதிகளாய் இருந்தார்கள் ) போன்றோரின் தாக்குதல் மனோநிலையை தவிர்த்து தற்காப்பு மனோநிலைக்கு செல்லத்தக்க உளவியல் யுத்த தந்திரங்களை மேற்கொண்டது (யுத்த காலத் தொழுகை அமுல் நடாத்தப்பட்டது ).

* ஒப்பந்தம் எழுதப்பட்டு திரும்பிய அடுத்தகட்டம் குறைசிகள் மீது இன்னொரு அதிர்ச்சி வைத்தியம் அது யாரெல்லாம் ஹுதைபியாவில் கலந்து கொண்டார்களோ அவர்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டளையோடு கூடிய கைபர் கோட்டை (யூதக்குள்ள நரிகளுக்கெதிரான) முற்றுகை. (இவர்கள் குறைசிகளோடு இரகசிய உறவாடி முஸ்லீம்களை கருவறுக்க காத்திருந்தவர்கள் ).* தெளிவான ஆதாரங்களின் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் இந்த ஒப்பந்தத்தின் பின் தான் மதீனா எல்லைகளுக்கு அப்பால் உள்ள கவர்னர்களுக்கும் ,அரசர்களுக்கும்இஸ்லாத்தை (ஏற்றுக்கொள் , அல்லது கட்டுப்படு ,அல்லது சண்டையிடு ) பற்றிய வெளிநாட்டுக்கொள்கை பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது . (புகாரி ,பதுஹுள் பாரி )

எனவே இந்த ஹுதைபியா ஒப்பந்தம் ஒரு தோல்விநிலை ஒப்பந்தமல்ல மாறாக ஒரு தெளிவான அரசியல் , இராணுவ நிர்ணயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . ஒரு தெளிவான அழுத்தத்தின் மூலம் குறைசிகள் இஸ்லாத்தின் வெளிநாட்டுக்கொள்கை மீது இழுத்துவரப்பட்டிருக்கின்றார்கள் . வஹிசொன்ன அந்த தெளிவான வெற்றி இதுதான் என்று இப்போது புரிகின்றதா . எனவே நாம் இந்த ஹுதைபியாவை அதாரப்படுத்தும்போது குப்ரிடம் இஸ்லாத்தை அடகு வைக்கும் தவறை செய்யாமல் அல்லாஹ் (சுப) எம்மை பாதுகாக்க வேண்டும் .

Apr 22, 2013

வேஷம் போடும் வேதாளங்களும் 'பாத்தில்' சகதியில் புதைக்கப் படும் 'ஹக்' கும் !!!

முதுகை அழுத்திய அந்த காலனித்துவ பூட்சுகள்
அகற்றத் துணிந்த எமது பார்வைகளை அவர்களது
கண்களால் பார்க்கவே கற்றுத் தந்திருந்தார்கள
அந்த 'வெள்ளைத் தோல் ' போர்த்திய ஏகாதி பத்திய 'SIR 'கள் !
எமது 'ஐயா ' க்களும் அவர்களின் பாதணிகளாகி
பக்குவமாக அவர்களின் பாதங்களுக்கு முகமூடி போட்டார்கள் !

விடுதலை எதிர் பார்ப்புகளுக்கு ஏட்டுச் சுரக்காய் உருவத்தோடு
ஒரு கொடியும் தரப்பட்டது ! - சுவைக்கும் ஆசையோடு ஏற்றினோம் !
உற்சாகமாய் 'சல்யூட்டும் அடித்தோம் . நாம் அடிமையல்ல
என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்களாக . - நடந்த கதை
சுதந்திரத்தின் பெயரால் சுரண்டல் தத்துவத்தின்
இரண்டாம் பாகம் இனிதே அரங்கேறியது !

அந்த நவகாலனித்துவம் தேச எல்லைக்குள் பிரித்துச் சிதைத்து
எமக்கு' திமோகிரசி ' கடிவாளம் பூட்டி கனவுகளோடு
'செக்கியூலிரிச' செக்கிழுக்க வைத்தது . - அதிலும்
எண்ணை 'வெஸ்டனுக்கு ' சென்று விடுமாம் !
புண்ணாக்கை மட்டும் நவீனம் என்ற பெயரில்
ரசித்து ருசித்து புசிக்கத் தருவார்களாம் !!!

'வஹி ' சுமந்த கழுதைகளாக இந்த பன்றி திண்ணும்
குட்டிச் சுவர்களுக்குள் சம பந்தியில் அமர்ந்து
நடுத்துண்டு கேட்டோம் ! நிர்ப்பந்தத்தை இபாதத் ஆக்கி
ஹராத்தை இணைத்து ஒரு இஸ்லாமிசமும் செய்தோம் !
நேற்று முழங்கிய 'ஹாக்கிமியத்' வாதங்கள் 'எக்ஸ்ப்பயார்ட் ' ஆக
'பாத்தில்' படுகுழி 'சிஸ்டத்தில்' பக்குவமாய் அது புதைக்கப் பட்டது !!!

அமெரிக்க டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ! முஸ்லீம்கள் மீது முத்திரை குத்தும் இன்னொரு முகமூடித் தாக்குதலா!?

நியாயமாக சிந்திக்கும் மனித சமூகத்திட்கு இறந்த காலம் பல அனுபவங்களை முதலாளித்துவ
மேட்கின் விடயத்தில் கொடுத்திருக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்காது. அந்த வகையில் ஜீ.பீ.எஸ் தொழில் நுட்பம் , அதி நவீனகரமான தேசிய பாதுகாப்பிட்கான உளவு ,
இராணுவ பாதுகாப்பு பிரிவுகள் இப்படி பல்வேறு குறிப்பிடும் தகமைகளில் முதல் தர அந்தஸ்தில் பேசப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உள் வீட்டில் 9/11 , ஓக்லஹோமா, வரிசையில் நிகழ்ந்துள்ள இந்த டெக்ஸாஸ் குண்டு வெடிப்பு பற்றி பல்வேறு கருத்துக்களை முன்வைத்தாலும் சில எதிர்கால நடவடிக்கைகளுக்கான நாடக பாணி ஆதார சம்பவமாகவே நிகழ்வுகளை கருத வேண்டியுள்ளது.

அல்காயிதா அச்சத்தில் அமெரிக்கர்களையும் , உலகத்தையும் ஆழ்த்தி எண்ணை வயல்களை ஏப்பம் விட ஒரு 9/11 (டூவின் டவர்) தாக்குதல் சாதகமாகிப் போக ஈராக்கில் சதாம் வேட்டை
நடாத்தி ; காட்டிய குற்றச் சாட்டுகளுக்கு எங்கு ஆதாரம் தந்தார்கள் என்றிருக்க , ஆப்கானில் புகுந்து ஆதாரம் காட்டுக்கிறோம் என்ற வார்த்தைகளை தவிர இதுவரை என்ன கிழிததார்கள்!? பின்லாடனை ஒரு சீல்ட் கொமாண்டோஸ் மிசனில் பொறி வைத்து பிடித்ததாக கூறி கண் காணாமல் சமுத்திரத்தில் சமாதி ஆக்கி ஹோளிவூட்டுக்கு ஒரு சிறப்பான திரைக்கதை கொடுத்ததை தவிர!?

பயங்கரவாதி , அடிப்படைவாதி , தீவிரவாதி என்ற முத்திரைகளை மட்டும் முஸ்லீம்கள் மீது குத்துவதில் கடந்த கால சம்பவங்கள் எப்போதும் திட்டமிட்டே நகர்த்தப்பட்டு
வந்துள்ளது. என்பதில் இருந்து அந்த சம்பவங்களே (முஸ்லீம்கள் ,முஸ்லீம் உலகில்)சில அடைவுகள் நோக்கி செய்யப் பட்டிருக்க முடியாதா? எனும் சாதாரண ஊகம் கூட வராத விடத்து முதலாளித்துவ அரசியல் தொடர்பில் ஒரு குறை மதிப்பாகவே அத்தகு நிலைப்பாட்டை கருத முடியும். அந்த வகையில் இந்த இந்த டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ஏதட்காக!? எனும் வினாவுக்கு பதிலை ஒரு குத்து மதிப்பாக மறுமுறை தருகிறேன் இன்ஷா அல்லாஹ்.

Apr 20, 2013

ஜிஹாத் - மிகத்தவறாக புரியப்பட்ட புனித வார்த்தை


கடந்த பல தசாப்தங்களாக மேற்குலகைப் பொருத்தவரையில் ஜிஹாத் என்பது ஒரு வாதப்பொருளாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் உண்மையான சக்தியினை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணர்ந்ததாலேயே, மேற்குலகு, ஜிஹாத் என்ற சொல்லிற்கு அஞ்சுகிறது. எனவே அதனது உண்மை அர்த்தத்தினை திரிக்க அவர்கள் முயற்சிப்பது ஒன்றும் முஸ்லிம்களுக்கு புதிதானது அல்ல.

முஸ்லிம் உம்மத்திற்கு எதிராக சிலுவைப்போர் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தம் திரிக்கப்படுகிறது என்பதனை நாம் வரலாறு நெடுகிலும் காண்கின்றோம். ஆனால்; அதன் வடிவங்கள் வேறுபடக்கூடும். உதாரணமாக, டோனி பிளயெரின் கூற்றில் 'இஸ்லாம் ஒரு சமாதானத்திற்கான மார்க்கம்" என்பதாகவும், மேற்குலகை ஆதரிக்கும் இஸ்லாமியவாதிகளின் அர்த்தத்தில், "ஒருவர் தமது மனோ இச்சைகளுக்கு எதிராகப் போராடும் ஒரு விஷயம்" என்பதாகவும் இருக்கலாம்.


இவ்வாறான அர்த்தங்களை திரிக்கும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, மேற்குலகானது, ஜிஹாதினை ஒரு 'பயங்கரமான விஷயமாக" சித்தரிக்கின்ற உபாயங்களையும் தனது வழிமுறையாக கையாண்டு வருகிறது. உதாரணமாக, ஜிஹாத் தொடர்பாக உரை நிகழ்த்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இங்கிலாத்திலுள்ள பின்ஸ்பெரி பார்க் பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டதை நாம் ஊடகங்களினு}டாக அறிந்திருப்போம். பள்ளிவாசல்களை மூடப்படுவதைப்போன்ற இத்தகைய செயற்பாடுகள், ஜிஹாத் தொடர்பான இஸ்லாத்தின் கருத்துக்கள் பள்ளிவாசல்களில் பேசப்படுவதை பெரும்பாலும் தடுத்து விடுகின்றன. உம்மத்திற்கெதிராக அதிகளவில் அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற இன்றைய சூழலில் ஏன் நீங்கள் ஜிஹாத் தொடர்பாக பேச மறுக்கின்றீர்கள் என பொதுமக்கள் பள்ளிவாசல் நிர்வாகங்களை வினவும்போது, அவர்கள், 'பள்ளிவாசல்கள் இழுத்து மூடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை", என தெரிவிக்கின்றனர். இவ்வாறான எத்தகைய வழிமுறைகளையும் கடைப்பிடித்து, ஜிஹாதினுடைய உண்மையான அர்த்தத்தினை திரிபுபடுத்த முயற்சிப்பதில் அவர்கள் கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர்.


இவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். ஏனெனில் யுத்தம் என்பது எமது வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். பாரம்பரியமாகவே, தமது இலக்கினை அடைந்து கொள்வதற்காக, மேற்குலகு, தமது பலத்தினை உபயோகப்படுத்த என்றும் தயங்கியதில்லை. அமெரிக்க கூட்டுப்படையின் ஈராக்கிய யுத்தம் இதற்கொரு சிறந்த உதாரணமாகும். ஆனால், 'இஸ்லாம் பலப்பிரயோத்திற்கு எதிரானது" என முஸ்லிம்களையே கூறவைக்கும் நயவஞ்சக முயற்சிகளை மேற்கொள்வதிலும் அவர்கள் வல்;;லவர்கள். இத்தகைய யுக்திகளை பயன்படுத்துவதன் மூலமாக முஸ்லிம்களின் மனோநிலையை பலவீனப்படுத்தி தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எளிதுபடுத்துவதில் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகண்டுள்ளார்கள்.



யுத்தம் ஏன் தவிர்க்கப்பட முடியாதது?


தனது இறையாண்மையை பாதுகாக்கும் தற்காப்பு உணர்வு உலகின் அனைத்து நாடுகட்கும் அதன் மக்கட்கும் உண்டு. அதனை பாதுகாப்பதற்காக அந்த தேசம் எந்த விலையினையும் கொடுக்கத் தயாராகி விடுகிறது. அதேபோன்று ஒவ்வொரு தேசத்திற்கும் அடிப்படையான இலக்குகளும் காணப்படுகின்றன. மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைவதே மேற்கத்தியத்தின் அடிப்படை நோக்கமாகும். எனினும் இஸ்லாத்தினை பொருத்தமட்டில் அல்லாஹ் (சுபு) வின் திருப்தியை பெற்றுக்கொள்வதே அதனது ஏக இலக்காகும். எனவே இவற்றில் எந்த தேசத்தினை எடுத்துக்கொண்டாலும் அது தனது சித்தாந்தத்தை மேலோங்கச்செய்து தனது இலக்கினை அடைவதற்கு பலம் அவசியமாகும். இதற்காக உள்நாட்டிற்குள் காவல்துறையும் புலனாய்வுத்துறையும் செயற்படுத்தப்படுவதுடன் வெளிநாட்டுறவில் இராணுவமும் புலனாய்வுத்துறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுவாக எந்தவொரு தேசத்தை பொருத்தவரையிலும் அதனது வரவுசெலவுத்திட்டத்தில் பெரும் ஒதுக்கீட்டை பெறுவது பாதுகாப்புத்துறையேயாகும். எனவே எவராவது ஒருவர் பலப்பிரயோகம் தேவையற்றது எனக்கூறுவாரேயானால் அவர் யதார்த்தத்தை மறுக்கிறார் என்பதே உண்மையாகும். பலம் இல்லாத நிலையில் குழப்ப நிலை தொடர்வது தவிர்க்க முடியாதது. இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டால் எமது வாதம் யுத்தத்தை மறுப்பதாக அல்லாமல் அது எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதை நோக்குவதாக இருக்கும்.விசுவாசம் கொண்டோரே! நிராகரிப்போரிலிருந்து உங்களை அடுத்து இருப்போருடன் போர் செய்யுங்கள்; அவர்கள் உங்களிடம் கடுமையையே காண வேண்டும்: இன்னும், நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையோருடன் இருக்கின்றான். (அத்தவ்பா:123)
முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என இறை நிராகரிப்பாளர்கள் கூறும் வரையில் போர் புரியுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன். 

இதேபோன்று, அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச்செய்வதற்கான முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றும் பொருட்டு காபிர்களுடன் போராடுவதே ஜிஹாத் என்பதாக உலமாக்கள் ஏகோபித்த முடிவினைக் கொண்டுள்ளனர்...

இங்கு கவனிக்கத்தக்க முக்கிய இரு விஷயங்கள் இருக்கின்றன.அதாவது.

செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக காபிர்களுடன் போராடுவது.
நோக்கம் குறித்தது: அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வது. அனைத்து சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் பொருத்தவரையிலும், அதனை மேலோங்கச்செய்வதிலும், பரப்புவதிலும், பாதுகாப்பதிலும் போராட்டங்களும் யுத்தங்களும் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேற்குலகின் யுத்தத்திற்கான அடிப்படை உலக இலாபங்களை அடைந்து கொள்வதாகும். அதனை இவ்வாறு சொல்லலாம். ஆதாவது உலக இலாபங்களை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஏற்படும் தடைகளை அகற்றுவதற்காக போராடுதலாகும்.
இங்கும் கவனிக்கத்தக்க முக்கிய இரு விடயங்கள் இருக்கின்றன.அதாவது


செயல் குறித்தது: தடைகளை களைவதற்காக எவருடனும் போராடுவது. நோக்கம் குறித்தது: உலக இலாபங்களை அடைந்து கொள்வது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக முதலாளித்துவ தேசமும் இஸ்லாமிய தேசமும் பலத்தையினை பிரயோகிப்பதை நம்மால் காணமுடிகிறது. எனினும் மிகத்தெளிவான வேறுபாடு அதனது நோக்கத்திலேயே இருக்கிறது. எனவே நோக்கத்தில் காணப்படும் இந்த அடிப்படை வேறுபாட்டினை புரிந்து கொண்டு காபிர்களின் வலையில் சிக்கிவிடுவதிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.


அதாவது ஜிஹாத்தினுடைய அர்த்தத்தினை தமது மனோ இச்சைகளுக்கு எதிரான போராட்டமாக மட்டும் இனம்காட்டுவதன் மூலம் அதனது உண்மை அர்த்தத்தினை மறைத்து முஸ்லிம்களை பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்குள் தள்ளுவதற்கான சகல முயற்சிகளையும் காபிர்கள் எடுப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.



ஜிஹாத் என்பது வெறுமனவே தமது மனோ இச்சைகளுக்கு எதிரான ஒரு போராட்டமா?
இந்த வினா இஸ்லாமிய ஷரியத்திலிருந்து விளங்கிக்கொள்ளப்படவேண்டும். ஜிஹாத் தொடர்பான மேற்குறித்த வாதமானது மிக அரிதான ஷரிஆ ஆதாரத்தின் அடிப்படையிலேயே விளங்கப்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் ஜிஹாத்தினுடைய நேரடி மொழியியல் அர்த்தம் தொடர்பான விளக்கத்திலும்; அதனது ஷரிஆ hPதியான அர்த்தத்திற்குமிடையிலான வேறுபாட்டினையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.



மொழியியல் ரிதியான ஜிஹாத் என்பதன் அர்த்தம் முயற்சித்தல் அல்லது போராடுதல் ஆகும்.

எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ அதை எனக்கு நீ இணையாக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அவ்விஷயத்தில் நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். ( லுக்மான்:15)மேலும் அல்லாஹ்வுடைய வழியில் எவர் ஜிஹாத் செய்கிறாரோ அவர் ஜிஹாத் செய்வதெல்லாம் (அதன் பலனெல்லாம்) தனக்காகத்தான் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.( அல் அன்கபூத்:6) மேலும் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கிறோம். அன்றியும் எதைப்பற்றி உனக்கு அறிவு இல்லையோ அதை எனக்கு இணையாக்குமாறு (மனிதனே) அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விடயத்தில்) நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். (அல் அன்கபூத்:8)மேலும் விசுவாசம் கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் - அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களி(ன் கூட்டத்தாருடன் சுவனத்தி)ல் நுழைவிப்போம். (அல் அன்கபூத்:9)


மொழியியல் ரிதியாக ஜிஹாத்திற்கான அர்த்தம் வழங்கபடுவது மேற்குறிப்பிட்ட நான்கு ஆயத்களில் மாத்திரமேயாகும். இந்த ஆயத்துக்களும் மக்காவில் அருளப்பட்ட மக்கீ ஆயத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.எனவே இந்த ஆயத்துக்களைப்பொருத்தமட்டில் அது உண்மையாகவே யுத்தத்தைக் குறிக்கவில்லை. எனவே இந்த ஆயத்துக்களுக்கு சண்டையிடுதல் அல்லது கொல்லுதல் என அர்த்தம் கற்பிப்பது தவறானதாகும். எனினும் சண்டையிடுவதையும் கொல்வதையுமே ஜிஹாத்திற்கான ஷரிஆ hPதியாக விளக்கமாகக் குறிக்கின்ற 120இற்கும் மேற்பட்ட ஆயத்துக்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.



விசுவாசிகளில் தங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)

இலேசாகவும் கவனமாகவும் ( இளைஞர்கள், முதியவர்கள், செல்வந்தர்கள், செல்வம் இல்லாதவர்கள், வாகனத்தில் ஏறியவர்கள், நடப்பவர்கள் ஆகியோர்) புறப்பட்டு, உங்களின் செல்வங்களாலும், உங்களின் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யுங்கள்: நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும். ( அத்தவ்பா: 41)



(அத்தகைய வியாபாரமானது ) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய (இத்) துதரையும் ஈமான் கொண்டு உங்களுடைய பொருட்களையும் உங்களுடைய உயிர்களையும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் (ஜிஹாத்) செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாக இருக்கும். (அஸ்ஸவ்ப்:11)

இந்த ஆயத்துக்களை பொருத்தமட்டில் இவைகள் நேரடியான சண்டையிடுதலையே குறிப்படுகிறதேயொழிய இவற்றிற்கு நேரடி சொல் விளக்கத்தினை எடுப்பது தவறானதாகும்.ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து உலமாக்களும் ஜிஹாத்திற்கான ஷரிஆ அர்த்தமாக யுத்தம் புரிவதையே சரிகாண்கின்றனர். 
ஹனபி மத்ஹப் - பாதியா அஸ்ஸானியா மாலிக் மத்ஹப் - மன்ஹல் ஜலீல் ஷாபி - அல் இக்னா ஹன்பலி - அல் முஹ்னி சிலர் ஷரிஆ அர்த்தத்தை ( சண்டையிடுதல், கொல்லுதல்) பொருள் hPதியான அர்த்தத்தை(மனோஇச்சைகளுக்கு எதிரான போராட்டம்) விடவும் குறைவாக கணிக்கின்றனர். அதற்காக அவர்கள் கீழ்வரும் ஹதீஸினை முன்வைக்கின்றனர்.


நான் சிறிய ஜிஹாத்திலிருந்து பெரிய ஜிஹாதிற்கு திரும்பியுள்ளேன். இதற்கு ஸஹாபாக்கள் எது பெரிய ஜிஹாத் என நபிகளாரிடம் வினவியபோது அதற்கு அவர்கள் மனோ இச்சைகளுக்கெதிரான ஜிஹாத் என்றார்கள்.மேற்கூறப்படும் ஹதீஸானது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதன்று. ஏனெனில் இது புனைந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஹதீஸ் கலை நிபுணர் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் இப்ராஹீம் பீ அபி அப்லா என்வரின் கூற்று மட்டுமே என அறிவிக்கின்றார்கள்.


மேலும் கீழ்வரும் காரணங்களினால் இதனது கருத்தில் தவறு இருப்பது புலப்படுகிறது.
1. மேற்படி கூற்றானது ஜிஹாதின் மேன்மை குறித்த உறுதியான குர்ஆனின் கருத்திற்கு மாறுபாடானது.

விசுவாசிகளில் சங்கடம் உடையவர்களை தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச்சென்று) தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்கு சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் ( வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கிறான்.( அன்நிஸா:95)

2.மொழியியல் hPதியான பொருளானது பொதுவானதாகும். ஆதாவது அது 'நப்ஸ்" யிற்கு எதிராக போராடுவதையும் சண்டையிடுவதையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் அதனது ஷாPஆ hPதியான அர்த்தமானது காபிர்களுக்கு எதிரான போராட்டமேயாகும்.


3. மேற்படி ஹதீஸானது யுத்தம் செய்வதா, செய்யாது விடுவதா என்பது குறித்து தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கவில்;லை. இது யுத்தத்தினை தடை செய்வதற்கான எவ்வித அறிகுறியையும் தெரிவிப்பதாக இல்லை.


இதேநேரத்தில் சிலர் ஜிஹாதினை தற்பாதுகாப்பிற்கான ஒரு விடயமாக மாத்;திரம் இனம்காட்ட முயற்சிக்கின்றனர். இது மிகமிகத் தவறானதாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை மேலோட்டமாக பார்த்தால் கூட இது தவறான கருத்து என புரிந்து கொள்ளலாம்.


முஅத்ஆ யுத்தமானது ரோமாபுரிக்கெதிராக முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் 200,000 விரர்கள் கொண்ட ரோம இராணுவத்தினை 3000 முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். அதேபோன்று மக்காவெற்றியானது ஹ{னைன் யுத்ததினை தவிர்க்கமுடியாததாக மாற்றியமைத்ததையும் நாம் அறிவோம். தபூக் யுத்தமும் கூட முஸ்லிம்களாலேயே தொடுக்கப்பட்டு அது ரோமர்களை முற்றுமுழுதாக அழித்தொழிப்பதற்கு ஏதுவாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.


ஸஹாபாக்களின் இஜ்மா ( ஏகோபித்த முடிவு) விலும் அவர்கள் ஜிஹாத்தினை ஷாம், ஈராக், ஈரான், எகிப்து, வட ஆபிரிக்கா போன்ற பிரதேசங்களில் ஆரம்பித்திருப்பதை நாம் காணலாம். மேலும் ஷஹீத்களின் அந்தஸ்த்தானது இஸ்லாத்தில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே எவ்வாறு ஜிஹாத்தானது ஏனைய விடயங்களை விட குறைவாக மதிப்பிடப்படலாம்?


இஸ்லாத்தை நோக்கிய முறையான அழைப்பிற்கு பின்பு காபிர்களை இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துவதை இஸ்லாம் தடைசெய்கிறது. மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதில் நிர்ப்பந்தம் இல்லை என்ற குர்ஆனியக்கருத்தும் இதனையே வலியுறுத்துகிறது. எனினும் உலகில் அனைவரையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்காகவே இந்த தீன் இறக்கப்பட்டுள்ளது. இதனை அடைந்து கொள்வதற்கான கருவியே ஜிஹாதாகும். ஜிஹாத் இல்லாமல் அல்லாஹ் கூறுவதைப்போன்று இஸ்லாம் மறைந்து விடும்.



அவன் எத்தகையோன் என்றால் அவன் தன்னுடைய து}தரை நேர்வழியைக்கொண்டும் உண்மையான மார்க்கத்தைக்கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்தபோதிலும் மற்ற எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச்செய்யவே (தன் துதரை அனுப்பிவைத்தான்.)( அஸ் ஸவ்ப்:9)

முஸ்லிம்கள் காபிர்களிடமிருந்தும் தம்முள் காணப்படும் காபிர்களின் முகவர்களிடமிருந்தும் இஸ்லாத்தினை பாதுகாக்க உறுதி கொள்ளவேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்



எவர் அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறுகின்றாரோ அவரைவிட சொல்லால் மிக்க அழகானவர் யார்? (புஸ்ஸிலத்:33)

இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறப்போகிறீர், ஜனாதிபதி அவர்களே!



وَقِفُوهُمْ ۖ إِنَّهُمْ مَسْئُولُونَ

“மேலும் அவர்களை நிறுத்துங்கள், அவர்களிடம் கேள்வி கேட்கப்பட வேண்டும்”
(சூரா அஸ்-ஸாஃப்ஃபாத்:24)


ஜனாதிபதி அவர்களே, சிரியக் கொடுங்கோலனின் பங்காளன் அஹ்மதிநஜாதை வரவேற்றுக் குலாவினீர்களே, அதைப் பற்றி இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறப்போகிறீர்கள்?!
2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 05 ம் திகதி, செவ்வாய்கிழமை, ஈரானிய ஜனாதிபதி ஒருவரால் எகிப்துக்கு 34 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது விஜயமாக ஈரானின் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநஜாத் கெய்ரோ சென்றடைந்தார். அங்கு அவர்கள் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட்தோடு அதன் பின்னர் எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்சியுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். மேலும் அவர் அல்-அஸ்ஹர் பீடத்தின் அறிஞர்களையும் சந்தித்தார். அல்-அஸ்ஹர் பீடாதிபதி அஹ்மத் அல்-தையிப் உடனான சந்திப்பின் போது ஈரானின் பிராந்திய வெளியுறவுக் கொள்கைகள் குறித்து விசனம் தெரிவிக்கப் பட்டுமிருந்தது.
ஜனாதிபதி முர்சி வழங்கிய இந்த வரவேற்பு புதுமையானது, கண்டிக்கத்தக்கது மேலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஓ அதிபர் முர்சி, நீங்கள் ஆரத்தழுவி வரவேற்றது யாரைத்தெரியுமா?நீங்கள் கௌரவித்தது அஷ்-ஷாமின் குழந்தைகளை அனாதைகளாக்கி, பெண்களை விதவைகளாக்கி, வயோதிபர்களைக் கொன்று பள்ளிவாசல்களைத் தரைமட்டமாகிய படுகொலைப் பாதகன் பஷார் அல்-அசாதின் உற்ற நண்பனை. ஒரு கொடுங்கோலனின் கூட்டாளிக்கு அப்படியொரு வரவேற்பு கொடுக்கத்தகுமானதா? அது ஈரானிய அரசு அந்தக் கொடுங்கோலனுக்கு வழங்கிய ஆதரவுக்கும் அவன் உயிரைக் காத்துக்கொள்ள வழங்கிய சகல வகையான உதவிகளுக்கும் எகிப்து கொடுத்த வெகுமதியா?
ஆம், இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்துவத்தையும் அன்பையும் வேண்டி நிற்கிறது தான். உலகலாவிய முஸ்லிம் பிரிவினருக்கிடையில் கூட்டுறவு, கலந்துரையாடல், ஒன்றுபடுதல், விட்டுக்கொடுத்தல் அன்பன அவசியமானவை தான். ஆனால் தன் சொந்த நாட்டு மக்களையே கொன்றுகுவிக்கும் பஷார் அல்-அசாத் போன்ற ஒரு கொடுங்கோலனுக்கு பகிரங்கமாகவே ஆதரவு வழங்கும் ஒருவருடனல்ல. பஷார் அல்-அசாதையும் அவனுடைய ஷபிஹாவையும் பாதுகாப்பதில் ஈரானிய அரசு வெகுதூரம் சென்றிருக்கிறது. உண்மையில், ஈரானியப் புரட்சியின் அதி உயர் தலைவருடைய சர்வதேச விவகாரத்துக்கான ஆலோசகர் அலி அக்பர் வலாயதி ஜனவரி 26, 2013 அன்று “சிரியாவின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல் ஈரானின் மீதான ஒரு தாக்குதலாகவே கருதப்படும்” என்று அறிவித்ததன் மூலம் கொலைகார சிரிய அரசுடனான தன் உறவைப் பிரிக்க முடியாத பிணைப்பாக ஆக்கியுள்ளது. மேலும் இதன் மூலம் பஷாருக்குத் துணையாக ஈரானிய அரசு போராளிகளையும் ராணுவ நிபுணர்களையும் வழங்குகிறது என்ற உண்மை மறுக்க முடியாததாகியுள்ளது.
ஜனாதிபதி முர்சியே, பஷாரின் பங்காளியை உபசரணையுடன் வரவேற்பதை விடுத்து உங்கள் நாட்டிலுள்ள ஈரானியத் தூதரகத்தை மூடுவது தான் உங்கள் தலையாய கடமையாக இருந்திருக்கும். நீங்கள் செய்திருப்பது பெரும் பாவமும் பாரதூரமான குற்றமுமாகும்! டமஸ்கஸில் அப்பாவிப் பிள்ளைகளையும், தர’ஆவில் பயபக்தியுள்ள முதியோர்களையும், விசுவாசமுள்ள அலெப்போவின் வாலிபர்களையும், இடம்பெயர்ந்த இத்லிபின் கற்பொழுக்கமுள்ள பெண்களையும் எந்த முகத்தோடு சந்திக்கப் போகிறீர்கள்?
யா அல்லாஹ், கொடுப்பவர்களில் மிகத் தாராளமானவனே, கேட்கப்படுபவர்களில் அதிகம் கொடுப்பவனே, கொடுங்கோலன் பஷாரையும் அவனின் உதவியாளர்களையும், அவனோடு கைகோர்த்துள்ளவர்களையும், அவனுக்கு பணமோ, ஆயுதமோ, ஆட்களோ கொடுப்பவர்களையும் அழித்துவிடும் படி உன்னிடம் கேட்கின்றோம். யா அல்லாஹ், அஷ்-ஷாமிலுள்ள உன்னையஞ்சிய, தூய்மையான முஜாஹிதீன்களுடன் துணையிருப்பாயாக. அவர்களுக்கு நேர் வழியில் நின்று எம்மத்தியில் இஸ்லாமிய கிலாபத்தை நிறுவுவதற்கு வழிகாட்டுவாயாக. அதன் மூலம் எங்களுக்கு உறுதியும் இறையச்சமுமுள்ள, முகஸ்துதியையும் புகழ்ச்சியையும் எதிர்பாராது முஸ்லிம் உம்மத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தலைவரை அருளுவாயாக. நிச்சயமாக நீ து’ஆக்களை ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றாய்.

إِنَّمَا يَنْهَاكُمْ اللَّهُ عَنْ الَّذِينَ قَاتَلُوكُمْ فِى الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَى إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ
(உங்களுடைய) மார்க்கத்தில் உங்களுடன் போரிடுபவர்கள், உங்கள் வீடுகளை விட்டும் உங்களை வெளியேற்றுபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஆகியோரின் பக்கம் (நட்புக்காகவோ, பாதுகாப்புக்கோ) திரும்புவதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுத்துள்ளான். அவ்வாறு (இந்நிலமைகளில்) திரும்புவோர், அவர்கள் தான் அநியாயக் காரர்கள்.
உத்மான் பகாஷ்
மத்திய ஊடகத்துறை அலுவலக இயக்குநர்
ஹிஸ்புத் தஹ்ரீர்


உங்கள் கருத்தை இணைக்க

Apr 19, 2013

பிளவு படுத்தப் பட்ட முஸ்லீம் உம்மாவும் , பிரித்து மேயும் மேற்கின் அரசியலும்

பிளவு படுத்தப் பட்ட முஸ்லீம் உம்மாவும் , பிரித்து மேயும் மேற்கின் அரசியலும் .


ஓன்று அமெரிக்காவை அடிவருடும் தென்றல் ! மற்றையதோ வெற்று மீடியா மின்னல் !ஒன்றின் அடிவருடும் குளிர்ச்சியும் மற்றையதன் எதிர்ப்பு 'இமேஜ் ' எனும் 'நைதரசனும் 'முதலாளித்துவ ஏகாதிபத்திய நிலைப்புக்கு காலத்தின் தேவைகளே !தவிர முஸ்லீம்கள் தெளிவாகவே ஏமாற்றப் படுகிறார்கள் . இன்னும் நம்ப வைத்தும் கழுத்தறுப்பார்கள் . இந்த வரைவிலக்கணத்தின் கீழ்தான் மத்திய கிழக்கு ,தெற்காசிய முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிலைகள் , முதலாளித்துவ 'தாகூத்தால்' தாபிக்கப் பட்டுள்ளன .

பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கர்சன் பிரபு 1924 ஜூலை 24 இல் 'லௌசான் ' ஒப்பந்தத்தின் பின்னர் தெரிவித்த பிரபல்யமான கருத்து கீழே வருகின்றது .

"இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும் . கிலாபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி கண்டதைப் போல உணர்வு பூர்வமாகவோ , பண்பாட்டு ரீதியாகவோ , வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தின் முக்கிய விடயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்தி விட்டோம் அது ஒருபோதும் மீண்டும் (கிலாபத்தின் அடிப்படையில் )எழுந்து வராது ; (குறுகிய சுல்தானிச ,தேசிய எல்லைகள் அடிப்படையில் எழுந்து வருவதில் நாம் அஞ்சத் தேவையில்லை) ஏனென்றால் நாம் இஸ்லாத்தின் ஆக்க பூர்வமான சக்தியான கிலாபத்தை வீழ்த்தி விட்டோம் .

இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் சவூதி அரேபியா , ஈரான் ,துருக்கி ,கட்டார் ,எகிப்து ,டினூசியா , லிபியா ,ஈராக் ,இந்தோனேசியா , மலேசியா , பாகிஸ்தான் , பங்களாதேஷ் ..... இப்படி ஒரு 'லிஸ்டை ' தயாரித்து பார்த்தால் ; இத்தகு அரசியல் சகதியில் புரட்டி எடுக்கப் பட்ட சாபக்கேட்டு அரசியலின் வடிவங்களாகவே இன்று காட்சி தருகிறார்கள் .

இதற்குள் இருந்து தமது கௌரவ தென்றல் களையும் , கௌரவ மின்னல் களையும் காலத்தின் தேவை கருதி ஏற்படுத்தி விடுவதே முதலாளித்துவ ஏகாதிபத்திய சந்தைக்கு கொழுத்த இலாபத்தை பெற்றுத்தரும் விடயமாகும் . இத்தகு அரசியலில் சேர்த்தல் ,கூட்டல் , கழித்தல் அழித்தல் , அளித்தால் பக்குவமாக நாடக பாணியாக (நேரடி ,மறைமுகமாக ) முதலாளித்துவத்தால் மேற்கொள்ளப்படும் என்பதே 1924 இன் பின்னரான தொடர் நிகழ்வு .

இந்த வரிசையிலே தான் சவூதி ,ஷியா ஈரான்,கட்டார் ,துருக்கி என்ற பாத்திரங்களாகும் ; இங்கு இவர்களின் அரசியல் சேவைகள் முதலாளித்துவத்தின் தேவைகளுக்காகவே என்பது பகிரங்க இரகசியம் இந்த நிலையில் முஸ்லீம் உம்மத்தின் முன் தமது துப்புக்கெட்ட 'இமேஜை' தூக்கிக் காட்ட மட்டுமே சிலவேளை (பர்மா விவகாரம் , மற்றும் ரசூல் (ஸல் ) அவமதித்தது தொடங்கி ,பாலஸ்தீன் விவகாரம் வரை ) வாய் சவாடல் விடுவார்கள் .

நேற்றைய சல்மான் ருஸ்தியும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் , பலஸ்தீனில் யகூதியும் தனது எல்லைகளை அகற்றிக் கொண்டே செல்கிறான் , அமெரிக்காவில் ஓட்டிய அவமதிப்பு 'ரீளின்' வடு காய முன்னே பிரான்சில் அதற்கு விளம்பரப் போஸ்டர் வெளியிடப்பட்டது . பின் பெல்ஜியத்தில் புதிய ரீல் விடப்பட்டுள்ளது !!??பர்மாவில் இன ஆழிப்பு தொடர்கிறது!? காஸ்மீர் அவலம் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளது!?இப்படி இஸ்லாத்தின் மீது அவமதிப்பு தொடர்கிறது ,முஸ்லீம்கள் மீது அநியாயமும் தொடர்கிறது , முதலாளித்துவ ஏகாதிபத்தியத்துக்கு முஸ்லீம்களாகிய நாம் ஒரு கேலிக்குரிய பாத்திரங்களாகி விட்டோம் ! என்பது மட்டும் தான் உண்மை .மொத்தத்தில் இந்த ஜனநாயக தேசிய அரசியலால் 1. 5 மில்லியன் மனித வளமும் , மற்றும்
வளங்களும் திட்டமிட்டு துண்டாடப் பட்டுள்ளது. வாய்சவாடல்களால் எமக்கு ஆகப் போவது எதுவுமில்லை.

இந்த வெத்து வேட்டுக்கள் வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சும் பிரச்சாரங்களாகவே ஆகி விடுகின்றன . முஸ்லீம் உம்மத்தின் உண்மையான தீர்வும் , இஸ்லாத்தின் எதிரிகளின் அச்சமும் முஸ்லீம்களாகிய நாம் மீண்டும் ஒரே தலைமையில் ஓன்று பட்டு எழக்கூடிய கிலாபா ஆட்சி முறையிலே தான் தங்கி இருக்கின்றது .

முஸ்லீம் பெரும்பான்மை நிலங்களில் 'மெஜாரிட்டி பவரில் ' மிளிரப் போகும் சத்தியம் .... ஒரு பார்வை .

ஒளியை மிளிரச் செய்ய இருளிடமும் அனுமதி கேட்பதா ? 'ஹக்கை ' அமுல் படுத்த 'மெஜாரிட்டி 'பவரா ? அதுவும் இஸ்லாத்தை அமுல் படுத்த முஸ்லீமிடமே உத்தரவு வேண்டப் படுகின்றதா ? சற்று
குழப்பமான விடயம்தான் . வேலி போட பயிரின் அனுமதி வேண்டுமாம் !!

நியாயங்களை புதைத்து விட்டு ஒப்புக்காக காரணம் தேடுவது அயோக்கியத் தனமானது . 'வஹியின் ' தேவைப்பாடு தொடர்பில் விகிதாசாரம் பார்ப்பது ஒரு முஸ்லிமை பொருத்தவரை
மிகத் தவறானது . அல்லாஹ்வின் மார்க்கத்தை பலதோடு ஒன்றாக நிணைப்பதும் அறிவிற்கு பொருந்தாதது . நடப்பது இதுதான் (நவீன ஜாஹிலீயத் எனும் )ஜனநாயக விழுமியங்களின் கீழ் 'வஹி ' விளையாட்டுத் தனமாக ஏளம் விடப்பட்டுள்ளது .

'வஹி' விருப்பாளர்கள் வெற்றி பெற்றால் அதுவும் சில நிபந்தனைகளோடு பிரயோகிக்கப் படலாம் , 'வஹியை ' விரும்பாதோர் வெற்றிபெற்றால் வழமை போலவே 'வஹி , கிடப்பில் போடப்படும் .அவ்வளவுதான் .

ஜெஸ்மின் புரட்சியின் சடவாத முன்னுரிமை இதுதான் .அதாவது ஆட்கள் தொகையே சத்தியத்தையும் நடைமுறை சாத்தியமாக்கும்.மேலும் நவீனம், காலத்தின் தேவை 'வஹியை ' காலாவதி ஆக்கும் வல்லமை பொருந்தியதாம் .

உண்மையில் இங்கு நடக்கின்ற கதை சாத்தியத்தை காரணம் காட்டி இஸ்லாம் மதச்சார்பின்மை எனும் தூக்குக் கயிற்றின் முன் நிறுத்தப் பட்டுள்ளது . கடைசி நிமிடத்தில் அதனை பெரும்பான்மை சிலநேரம் காப்பாற்றலாம் .அல்லாது விடின் அசத்தியம் சாத்தியமாக உலாவரும் .ஆச்சரியமான தீர்ப்பு ! இது அல்லாஹ்வுக்கே நியூ சிலபஸ் போல் தோன்றவில்லையா !!?

நாம் முஸ்லீம் என்பதிலேயே இன்று வெட்கப்பட வேண்டியுள்ளது . வாக்குச் சாவடிக்குள் முண்டியடித்து 'வோட்டுப்' போட்டுத்தான் அல்லாஹ்வின் மார்க்கத்தை அமுல் நடாத்த கோரவேண்டியுள்ளது . முஸ்லீம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுதல் எனும் பொருள் உண்டு தெரியுமா ?எதற்கு ?என்ற இன்னொரு கேள்வி கேட்டால் இங்கு நாறிப் போகும் பிழைப்பு !!

இந்த முஸ்லீம் உம்மத்தின்உயிரோட்டம் மழுங்கடிக்கப் பட்டுள்ளது. அது சுத்திச் சுத்தி சுப்பனின் கொல்லை என்பது போல் 'திமோகிரசி ' கண்ணாடி போட்டுத்தான் உலகத்தை பார்க்க வேண்டுமாம் .என்பது ஏவல் விலக்கல் தொடர்பில் முஸ்லீம்களுக்கு கிறிஸ்தவம் போல இனி ஒரு புதிய ஏற்பாடு .அதாவது வாழ்வியலை தீர்மானிப்பது' மெஜாரிட்டி பவர் ' !! சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது .

இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு அது தன்னை அமுல் படுத்த நிபந்தனையற்ற உதவியையே வேண்டி நிற்கும் .அந்த உறுதிப்பாடான நிலை உருவாகும் வரை சிந்தனா ரீதியாக போராடும் .தனது எழுச்சிக்காக ஆள் வளத்தை திரட்டுவதென்பதுவேறு ,தன்னை நியாயப் படுத்த ஆள்வளத்தில் தங்கி நிற்பது வேறு .இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றாகி விடாது . தவிர 'சுன்னாவில்' இருந்து ஆதாரம் காட்ட முடியாதது .

சத்தியத்தின் போராட்டம் என்பது கிடைப்பதை சுருட்டிக் கொண்டு கிடைக்காததற்கு பெரும் பான்மையின் வாக்குப் பிச்சை வேண்டுவதல்ல . இஸ்லாத்தை இகாமத் செய்யவே இங்கு அதிகாரம் கோரப்படும். அதிகாரத்துக்காகஇஸ்லாம் சோடை போக வைக்கப்படக் கூடாது . அல்லாஹ்தான் நம் அனைவரையும் யகூதி ,நசாராவை பின்பற்றும் கீழ்த்தரமான வழிமுறைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

எது சமூக மாற்றம் ? (பகுதி 02 )


Apr 15, 2013

முதலாளித்துவ அரசியல் சதிகளில் சிக்கியுள்ள மனித சமூகம் .

முதலாளித்துவ அரசியல் சதிகளில் சிக்கியுள்ள மனித சமூகம் .

இந்த பதிவு சித்தாந்த ரீதியில் முதலாளித்துவ வடிவத்தை முன்வைக்கும் அடிப்படையில் எழுதப்பட்டதல்ல .நிகழ்காலத்தின்உண்மைகளை அரசியல் தரத்தில் மனித சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு சிறு முயற்சியாகும் .

ஒவ்வொரு தேசியமும் தனது எல்லைகளுக்குள் நலனையும் நியாயத்தையும் பேண முற்படும் போது . அதன் எல்லைகளுக்கு வெளியே வாழும் மனிதன் கருத்தளவில் மிருகத்தை விட கேவலமாகப் பார்க்கப் படுகிறான் என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . இதுதான் இன்றைய சர்வதேச அரசியல் .

இவ்வாறே ஒவ்வொரு தேசியமும் தனக்குள் பெரும்பான்மை எனும் ஜனநாயக நியாயத்தில் கரைந்து போகும் போது இனவாதம் ,மதவாதம் என்ற உருவமெடுத்து பேரினவாதம் என்ற பார்வையில் சிறுபான்மை அடக்குமுறை அரசியலாக்கப் படுகின்றது . இப்போது அது தவிர்க்க முடியாமல் எஜமான் அடிமை என்ற கீழ்த்தரமான தேசிய அரசியலாகின்றது .

இந்த சாபக்கேடான பார்வைகளுக்குப் பின்னால் 
அவைகளை இயக்கும் தரத்தில் அமர்ந்திருப்பதுமுதலாளித்துவம் தான் என்பதை மறுப்பவர்கள் முடிந்தால் தங்கள் நியாயங்களை சொல்லட்டும் .
சுயநலம் , தான்தோன்றித்தனம் என்பவற்றை தவிர அதிகாரங்களோ அரசியலோ இன்று ஆதிக்கத்தில் இல்லை .

U .N இன் வீட்டோ அதிகாரம் முதல் , N A T O வின் சர்வாதிகாரம் வரை சர்வதேச சட்டங்களும் ,அமைப்புகளும் சுயநலத்தில் அல்லாமல் இயங்கவில்லை என்பதை நியாயப்படுத்த தைரியமுள்ள ஒருவரை வரச் சொல்லுங்கள் . 

மதச் சார்பின்மை என்ற மதத்தின் கீழ் ஆளப்படுவதே நியாயம் எனக் கூறிவிட்டு ஆடு புலி ஆட்டமாக சிறுபான்மையை ஜனநாயக முற்றுகையில் வெட்டுக்காய் ஆக்கி சந்தர்ப்ப வாத அரசியலில் குளிர் காயும் இந்தியா , இலங்கை போதுமே முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழிக்க .

அமெரிக்கா ஈராக்கிலோ , ஆப்கானிலோ புகுந்த அரசியலுக்கும் , பாலஸ்தீன விவகாரத்தின் சர்வதேச அதிகார சக்திகளின் பார்வை , பிரான்ஸ் மாலி மீது ஆக்கிரமித்த அரசியலுக்கும் , அல்லது இந்தியா இலங்கையில் அமைதி காப்பு போர்வையில் அனுப்பிய I .P .K .F இராணுவத்திற்கும் , சோமாலியாவின் வறுமைக்கு நிவாரணம் கொடுத்தேன் பேர்வழி என்ற போர்வையில் நுழைந்து நிர்வாணமாக அடிவாங்கி வெளியேறிய U .S மரின்களுக்கும் இடையில் ஒரு பொதுத் தொடர்பு உண்டு .

அல்லது தனது அரசியல் இலாபத்துக்காக U .S மரின்கலுக்கு எதிராக மக்களை திருப்பிய யுத்தப் பிரபு ஜெனரல் பரா ஐடிட்டுக்கும் , பர்மிய கோரப் படுகொலைகளுக்கும் , அதை எச்சரிக்கிறேன் பேர்வழி என ஏறத்தாள எல்லாம் முடிந்த பின் தலைமைத்துவ முகம் காட்ட பர்மா வந்த துருக்கியதூதுவர்கள் போன்ற சம்பவங்களின் பொதுவான இடைத்தொடர்பு சமூக நலன் என்பதைவிட சாக்கடை முதலாளித்துவ அரசியல் தான் . 

செர்பிய இராணுவ முகாம்களில் பொஸ்னிய முஸ்லீம் பெண்கள் கிறிஸ்தவ சிப்பாய்களின் கருக்கொள்ளப்படும் வரையான காம வெறியாட்டத்தின் முன் சிதைக்கப் பட்டபோது , ஈராக்கின் முஸ்லீம் பெண்கள் மீதான அமெரிக்க இராணுவ வெறியாட்டம் வெளித்தெரிந்த போதோ அடங்கி இருந்த மனித உரிமை ,பெண்ணுரிமை அமைப்புகள் ஆப்கானில் ஒரு பெண்ணின் கழுத்தை சிராய்த்து சென்ற ஒரு தோட்டாவுக்குப் பின் துள்ளி எழுந்த பிரச்சார அரசியலும் இந்த முதலாளித்துவ சுயநலப் பார்வையின் வடிவமே .

ஓ மனித சமூகமே ! நீ நீதியை தேடினால் நியாயத்தை தேடினால் உனது மௌனத்தை உடைத்து சரியானதை புரிந்து கொள்ள முயற்சி செய் . உலகின் சம்பவங்களை கோர்த்துப்பார் ஒரு உண்மை உனக்குப் புரியும் அது இந்த சர்வதேச அநியாயக் காரர்கள் ஒட்டுமொத்தமாக பயங்கர வாதமாக விரல் நீட்டிக்காட்டுவது இஸ்லாத்தின் மீதே ஆகும் . அநியாயம் அதைப் பார்த்து அஞ்சுகிறது என்றால் நியாயம் அதன் பக்கம் தான் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேறு வார்த்தை தேவையில்லை .