May 31, 2014

'VALLEY OF THE WOLVES : PALESTINE ...' ஒரு விமர்சனப் பார்வை .


நியாயத்தை நியாயமாக சொல்வதில் தான் அநியாயம் வார்த்தை அளவிலாவது அழிக்கப்படுகின்றது.பாலஸ்தீனத்தின் விவகாரங்களில் தமக்கொரு நியாயத்தோடு சூழவுள்ள தேசியங்கள் தீர்வு காண புறப்படுவது , அதன் உண்மையான தீர்வு தொடர்பில் ஒரு தடையாகவே ஆகி விடும் . தேசியம் என்பதுதான் எமக்கு முன்னுள்ள முதல் தர 'ஜாஹிலீயத் '.

இந்த தேசிய வரைவிலக்கணத்தை மனதில் சுமந்தவர்களாக எடுக்கப் படும் எந்த முயற்சிக்கும் அந்த 'ஜாஹிலீயத்' கண்டிப்பான எல்லைகளை இட்டிருக்கும் . 'ஓநாய்களின் பள்ளத் தாக்கு பாலஸ்தீனம் ' என்ற துருக்கிய திரைப்படம் சுவையான திருப்பங்கள் , ஆக்கிரோசமான சண்டைக் காட்சிகள் , பாலஸ்தீனர்களின் யதார்த்த வாழ்வு என்பவற்றை பிரதிபலித்தாலும் இஸ்ரேல் , பாலஸ்தீன் என்ற இரண்டு தேசியங்களை அங்கீகரிக்கும் மனோ பாவத்தோடு தான் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது .

அந்த வகையில் 'ஓமர் முக்தார் ' என்ற உண்மையை சுற்றி லிபிய தேசிய வாதம் தத்ரூபமாக பிண்ணப்பட்டது போல் , இங்கும் துருக்கிய துறைமுகம் ஊடாக 'காசா ' துறைமுகம்
நோக்கி நிவாரண உதவிக்காக தன்னார்வ தொண்டர்களை ஏற்றி வந்த கப்பல், யகூதிய கமாண்டோக்களால் தாக்கப் பட்டு திருப்பி அனுப்பப் பட்ட உண்மையை சுற்றியே கதையின் அடிப்படைக் கரு பிண்ணப்பட்டுள்ளது . (அதாவது இத்தாக்குதலை நடாத்திய இராணுவ அதிகாரி கொல்லப் படுவதில் துருக்கி திருப்தியடைகின்றது . இதுவும்' எய்தவன் இருக்க அம்பை நோதல் ' எனும் தத்துவத்தையே நடைமுறை படுத்துகின்றது ).

அப்படியானால் மேற்படி சம்பவம் நடந்திரா விட்டால் ,(திரைக் கதைப்படிகூட) துருக்கிய கமாண்டோக்களின் 'வெஸ்ட் பேங்க் ' நுழைவே நிகழ்ந்திருக்காதா ? அல்லது தனது அரசியல் ,இராணுவ தோல்வியை மறைக்க U .S ஹொலிவூட் பாணியில் துருக்கியும் சினிமாக் கலையால் மக்களை விலை பேசியுள்ளதா ? அப்படியானால் பாலஸ்தீனில் உள்ளார்ந்த யகூதிய அநியாயங்களுக்கு இந்த தேசிய வாத அரசியல் கொள்கையில் தீர்வில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்களா ?

எது எப்படியோ இஸ்லாத்தின் தீர்வை புறம் தள்ளிய மனோபாவத்தை தமது கலைப் படைப்புகளிலும் முஸ்லீம்களை மயக்கும் விதத்தில் காட்சிப்படுத்த ஒரு பழுத்த அனுபவம் தேவை .அந்த வகையில் அற்புதமான் ஹொலிவூட் + பெண்டகன் பொலிடிகல் ஸ்டைல் துருக்கிக்கு கை கொடுத்துள்ளது .

http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks
http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks

இது தான் இன்றைய சினிமா ....

" இன்று படத்துக்கு பாட்டெழுத கம்பனே வந்தாலும் சீதையை பற்றி சிலேடையாக சொன்னால் தான் சினிமா கம்பெனியில் இடமுண்டு "
இந்த வார்த்தைகள் அந்த சினிமாவோடு சம்பந்தப்பட்ட ஒரு கவிஞ்சனால் சொல்லப்பட்டவை . இன்று நல்ல கருத்துக்காக காட்சி சொல்லும்
சினிமாக்களை விட , வசூலுக்காக ஆபாசம் , வன்முறை கலந்த ரீல் விடும் 100% முதலாளித்துவ இலாப நோக்கும் , தமது சிந்தனை செயல்களுக்கான நியாயப் படுத்தலின் பக்காவான கருவியாகவுமே ஹோலிவூட் முதல்
கொலிவூட் வரை சினிமாத்தனம வியாபித்துள்ளது .

இங்கு வெள்ளைக் காக்கா மல்லாக்கா பறப்பதும், சிகப்பு யானை பல்லாக்கு தூக்குவதும் சர்வ சாதாரணம். அப்படி இருக்க முஸ்லீம்களை தீவிரவாதிகளாக , பயங்கரவாதிகளாக ,அடிப்படை வாதிகளாக காட்டுவது ' ப்ரோபிட்பேசில் ' சூடான விடயம்தான் . கியூவில் நின்று டிக்கெட்
எடுத்து ரசித்து விசில் அடித்து கல்லாப்பெட்டிகளை நிரப்ப
காத்திருக்கும் இன ,மதவாத சிந்தனை தரத்திற்கும் , கோட் ,சூட்
போட்ட வெஸ்டேர்ன் உலகத்தின் இன ,மதவாத சிந்தனை தரத்திற்கும் பொதுவாக விரும்பத்தக்க விளையாட்டாய் இஸ்லாம் ,முஸ்லீம் கொச்சைப்படுத்தல் சினிமாத்தனம் அமைந்துள்ளது .
(நடுநிலையாக சிந்திக்கும் மனிதர்கள்
இந்த கருத்துக்குள் உள்ளடங்க மாட்டார்கள் ).
சமூக ஊடகங்களில் இந்த சினிமாவின் தாக்கம் மிக முக்கியமானது என்பதும் அதனூடாக தமது கொள்கை மற்றும் சமூகத்தூண்டல்களோடு இலாபத்தையும் சம்பாதிக்கலாம் என்பது ,யூத இலுமினாட்டி களுக்கு தெரிந்தது போலவே இந்துப்பாசிசமும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது . அந்த
வகையில் இந்தியாவின் இந்துத்துவா என்பது இலுமினாட்டிகளின்
தெற்காசியாவின் தத்துப் பிள்ளைகளில் ஓன்று அல்லது இந்த இலுமினாட்டிகள் இந்துத்துவாவின் 'ரோல் மொடல்கள்' என்பதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்கள் மீதான சினிமா காழ்ப்புணர்ச்சி அரசியலின்
யூகிக்கக் கூடிய ஒரே உண்மை .

துவேசத் தூண்டல் + இலாபாம் =
கொள்கையளவில் இரட்டை இலாபம் ,
அதுதான் இன்றைய இன,
மதவாத சினிமாவின் உண்மை முகம் .

இஸ்லாம்தான் சவால் ! ஒபாமா குமுறல்


“மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு உண்மையான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்…. ரஷ்யா அல்ல…” இவ்வாறு ஒபாமா தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ……….
“ரஷ்யா முன்பு  சோவியத் யூனியனாக இருந்தபோது தலைமை ஏற்று நடத்தியது போன்று தற்போது எந்த நாடுகளின் கூட்டமைப்பையும் தலைமை ஏற்று நடத்தவில்லை; மேலும் அது தற்போது சர்வதேச சித்தாந்தத்தையும் கொண்டிருக்கவில்லை”
விளக்கம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஜனநாயக சித்தாந்தத்தை சோதிக்கும் வகையில் அமைந்துள்ள சமீபத்திய சவாலாக உக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு எதிராக சர்வதேச நாடுகளின் முயற்சிகள் குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புடினிற்கு பிராந்திய நிலைப்பாட்டை மாற்றும் தகுதி இருப்பதாக ஒபாமா உணர்ந்திருந்தாலும், ரஷ்யா தனது கம்யுனிச சித்தாந்தத்தின் வீழ்ச்சிக்கு பிறகு உலக நிலையை மாற்றும் நிலையில் எவ்வகையிலும் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்.
“Ideology knows the answer before the question has been asked – கேள்வி கேட்கப்படும் முன்பே அதற்கான பதிலை சித்தாந்தம் அறிந்திருக்கும்.” என்ற ஜார்ஜ் பேக்கரின் கூற்று நினைவுக்கு வருகிறது.
சித்த்தாந்தம்  ஒருவருடைய இலக்கு, எதிர்பார்ப்பு மற்றும் செயல்களை உருவாக்கும் . அது உலக கண்ணோட்டத்தை பார்க்கக் கூடிய விஷயமாகவும் அல்லது ஒரு முழுமையான பார்வையை கொண்டதாகவும்ம், சமூகத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மக்களில், சில ஆதிக்கமுடைய வர்க்கத்தினர் முன் வைக்கும் எண்ணங்களின் தொகுப்பாகவும் இருக்கும். உலக கண்ணோட்டம் மக்களின் பொது காரியங்களில் நடைமுறை படுத்தப்படும்; ஆகவே அரசியலில் மையக்கருவாக சித்தாந்தம் விளங்குகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஜப்பானில் ஏற்பட்ட பொருளாதார அதிசயமானது, ஜப்பான் மேற்கத்திய குழுவுடன் இணைந்து முதலாளித்துவ கொள்கைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து அரசின் பொருளாதாரத்தில் தலையிட்டதே முதன்மையான காரணமாகும். நாடுகளுக்கிடையே தொடர்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பதையும்  அதன் சொத்துக்களை எவ்வாறு நிர்மாணம் செய்ய வேண்டும் என்பதையும்  அந்த நாடுகள் பின்பற்றும் சித்தாந்தங்கள் தீர்மானிப்பதால், வேறுபட்ட சித்தாந்தங்களுக்கிடையே அதற்கான ஆதாயங்களை அடையக்கூடிய விஷயத்தில் முரண்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
நிரப்பப்பட்டதுப்பாக்கி
பனிப்போர்  உச்சகட்ட நிலையில் இருந்த காலகட்டத்தில் ஐக்கிய சோவியத் நாடுகள் ஒன்றாக இருந்தது.கம்யூனிசம் மற்றும் முதலாளித்த்துவ சித்தாந்தங்களுக்கிடையில் நிறைய வேற்றுமைகள் இருந்து  இருவேறு துருவங்களாக செயல்பட்ட காரணத்தால் அக்காலத்தில் மக்கள் அவர்களுக்கு எந்த சித்தாந்தம் வேண்டும் என்பதை(பெயரளவிலாவது) தேர்வு செய்ய முடிந்தது. கம்யூனிச சித்தாந்தத்தை உடைய  நாடுகளை சோவியத் யூனியன்  தலைமை தாங்கி உலகளாவிய அச்சுறுத்தலாக விளங்கியது.எனவே காலங்காலமாக அதிகாரத்தை கொண்டிருந்த ஐரோப்பிய சக்திகளும் புதிதாக சக்தி வாய்ந்ததாக வளர்ந்து வந்த அமெரிக்காவும் தங்களுடைய முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு போட்டியாக கம்யூனிசத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளானது. அதாவது மேற்கத்திய முதலாளித்துவம் தனது வாடிக்கையாளரை வென்றெடுக்க வேண்டியிருந்தது, அதற்காக ஊக்கத்தொகை அளிக்க வேண்டியிருந்தது.அதற்கு ஒரு தரமான பொருள் தேவைப்பட்டது. ஜான் மேனார்ட் கேய்ன்ஸ்(கேய்னீஸியேனிஸம்) என்பவரின் கலப்பு பொருளாதார (Hybrid Economics) முறை கம்யூனிசத்துடன் போட்டியிட முதலாளித்துவத்தின் தேவையால் உருவானது. ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் தலைமையின் கீழ் அமெரிக்கா தான் சந்திக்கும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் சீர்படுத்தப்படாத தாராள பொருளாதார சந்தையின் காரணமாக மிகவும் பாதிப்பிற்குள்ளான தனது குடிமக்கள் தங்களுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் மாற்றம் தேவை என கோரி எழுந்த ஒரு வலுவான போராட்டத்தை தடுக்க சில உள்நாட்டு தொடர் திட்டங்களை கொண்டு வந்தார். அந்நேரத்தில் சிலர் முற்றிலும் மாறுபட்ட அடிப்படைக்காக  1932 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 10 லட்சம் அமெரிக்கர்கள் சோசலிச அல்லது கம்யூனிச வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.
இதனடிப்படையில் அமெரிக்க தொழிலதிபர்கள் மனவெறுப்புடன் ரூஸ்வெல்ட்டின் இந்த புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். முதலாளித்துவத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானதால்  யாரும்  பட்டினிக்கு ஆளாகாதவாறு பொதுத்துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி சந்தையை சற்று மிருதுவாக ஆக்கும் நிலை தேவைப்பட்டது. பனிப்போரின் காலத்தில் எவ்வொரு நாடும் இந்த அழுத்தமான நிலையிலிருந்து தடுத்து கொள்ளும் நிலையில் இல்லை. உண்மையில், மத்திய நூற்றாண்டில் முதலாளித்துவம் அமெரிக்காவில் அடைந்த சாதனைகளான- தொழிலாளர் பாதுகாப்பு, ஓய்வூதியம், பொது மருத்துவம் மற்றும் ஏழைகளுக்கான அரசு உதவிகள் – இவையனைத்தும் பலம் வாய்ந்த இடதுசாரிகளிடமிருந்து சலுகையாக பெறும் நடைமுறையில் சாத்தியப்படும் வகையில் நிலவிய சூழ்நிலையில் பெறப்பட்டதாகும். புகழ்பெற்ற “History of the Marshall Plan” ன் ஆசிரியர் கேரொலின் ஈசன்பெர்க் குறிப்பிடுகையில் இந்த அணுகுமுறை பொதுநல பண்பினால் உருவாகவில்லை, ” சோவியத் யூனியன் ஒரு நிரப்பப்பட்ட துப்பாக்கியாகும்” சோவியத் ரஷ்யா மற்றும் கம்யூனிச சித்தாந்தம் இறுதியாக 1991-ல் தாராளமயமாக்கத்திடம் வீழ்ந்ததன் பின்பு, உலகம் வேறொரு இடமாக மாறியது – தாராளமயமான சந்தை தற்போது உலக ஏகாதிபத்தியமாக மாறியுள்ளது.
ஒருதலைப்பட்சமானஉலகமும் “வரலாற்றின்முடிவும்
1989 ஆம் ஆண்டு கோடையில்” The National Interest “எனும் பத்திரிகை அதிரடியான கொட்டை எழுத்துக்களில் “The End of History?” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது, கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நடைபெற்ற சித்தாந்தத்தின் போரானது முடிவுக்கு வந்தது. மேலும் மேற்கத்திய தாராளமயமான ஜனநாயகம் வெற்றி பெற்றது என அதன் ஆசிரியரும் அரசியல் அறிஞருமான ஃப்ரான்சிஸ் ஃபுகுயோமா அறிவித்தார். சோவியத் யூனியன் முழுவதிலும் ஏற்பட்ட கம்யூனிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இந்த கட்டுரையை உண்மைப்படுத்தியது. பன்முனை ராணுவ நிலையிலிருந்து(1815-1945) உலகம் இருமுனை நிலைக்கு(1945-1989) மாறி தற்போது ஒருமுனை நிலையுடைய சூழலுக்கு மாறியுள்ளது. ஃபுகுயோமா அரசியல் அறிவியலில் எதிர்பாராத நட்சத்திரமாக உருவானார். அவர் ஜான் க்ரேயினால் “உலக முதலாளித்துவத்தின் ராஜ தத்துவ ஞானியாக போற்றப்பட்டார்”. அவருடைய புத்தகமான “The End of History? and The Last Man”
வெளியாகிய மூன்றாண்டுகளுக்கு பின் அத்தலைப்பில் உள்ள கேள்விக்குறி காணாமல் போனது.
ஃபுகுயோமா நடப்புகளை பற்றி பேசாமல் சிந்தனைகளைப் பற்றி பேசினார். மேற்கத்திய தாராளமய ஜனநாயகத்தின் சமமான சுதந்திரம் மற்றும் அனைவரும் சமம் என்னும் விஷயத்தை நோக்கி முயற்சிகள் மேற்கொண்டதன் காரணத்தால் இதை யாரும் மிஞ்ச முடியாது எனவும் அதை கடைபிடிப்பதால் உலக நடப்புகளில் ஒரு பொதுவான அமைதி ஏற்படும் எனவும் நீண்ட காலத்திற்கு எடுத்து கொள்வோமேயானால் இது தான் நாட்டிலிருந்தும் ஒரே நம்பகத்தன்மையுடையதாக இருக்கும் என அவர் நம்பினார். அவர் எழுதிய “நாம் இப்போது கண்டுகொண்டிருப்பது”, என்பது “பனிப்போரின் மடிவு மட்டுமல்ல; அல்லது பிந்தைய போர்க்கால வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து செல்வது போலல்லாமல், மாறாக இது வரலாற்றின் முடிவு ஆகும்: அதாவது, மனிதனின் சித்தாந்தத்தின் பரிணாம வளர்ச்சியின் முடிவாகவும் மேற்கத்திய சுதந்திர ஜனநாயகமே மனித அரசமைப்பில் இறுதி வடிவாக உலகமயமாக்கப்படுத்துதலே ஆகும்.
ஆகவே, சில இடங்களில் துடைத்தெறிவதற்கான சண்டைகள் நடந்தாலும்   – சில தேசியவாத எழுச்சிகள் நிகழ்ந்தாலும், சில கம்யூனிச நாடுகள் சிதறாமல் இருந்தாலும்( வட கொரியா அல்லது கியூபா) மற்றும் சில பிரிவினைவாத அரசுகள் (ஈரான்) நிலை கொண்டிருந்தாலும் சந்தைகளும், தனிநபர் உரிமைகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும் மக்கள் தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளும் பாதையாக விளங்கியது. இதன் விளைவாக மேற்குலகம் ரஷ்யா தனக்கு போட்டியாக காட்டிக்கொள்வதை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் அறிவார்ந்த தலைமையை தாங்கி நின்றது. சோவியத்தின் காலத்தில் தனது சித்தாந்தத்தை ரஷ்யா பகிரங்கமாக நெடுதூரம் விரிவான பரப்பளவில் பிரச்சாரம் மேற்கொண்டதை போன்று வாழ்விற்கான ஒரு முழுமையான வழியாக வழங்க ரஷ்யாவால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்திற்கு சவால் விடும் வகையில் அல்லது அதை உள்நாட்டு அளவில் பிரச்சினை கொடுக்க முடியாமல் போனது.
பந்தயபோக்குமாற்றம்
நெடுங்காலமாக ஃபுகயாமாவின் வாதங்கள் இடது சாரிகளின் எதிர்ப்புகளால்  மௌனியாக முடிந்தது. நவீன சுதந்திரமயமாக்கல் ஏகாதிபத்தியமாக இருந்தது. 2008 ம் ஆண்டின் வங்கிகளை மீட்டெடுக்கப்பட்டதற்கு தாமதமாக எழுந்த எதிர்ப்புகளால் கடந்த மூன்றாடுகளில் அதற்கு விரிசல் ஏற்பட தொடங்கியது. உலகளாவிய ஆக்கிரமிப்பு போராட்டங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல இடதுசாரி ஆய்வாளர்களை – பிரான்சின் தத்துவஞானி ஆலன் பேடியோ தனது The Rebirth of History மற்றும் Selma Milne ஆகிய தனது கட்டுரைகளில் – வரலாறு தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளதா என வியக்க வைக்கிறது, “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறார். “அந்த தளர்ந்து போன உலகத்தின் விலையின், தொடர்ச்சியா? தனது வெற்றிகரமான விரிவாக்குவதன் மூலம் ஏற்பட்ட உலகின்ஒரு சுகந்தரும் பிரச்சினையா? அவ்வுலகின் முடிவா? ஒரு மாற்றமான உலக உருவாக்கலின் ஆரம்பமா? அவர் இந்த 2011 ஆண்டின் எழுச்சிகளை ஒரு புதிய அரசியல் முறையை ஏற்படுத்தும் நிலையுடைய முக்கியமான நிகழ்வுகளாக கருதுகிறார். அதேபோல் மில்னேவைப் பொறுத்தவரை அமெரிக்காவினால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் அடைந்த தோல்வியினாலும் பொருளாதார வீழ்ச்சியும் “ஒருமுனை கொண்ட நிலை கடந்து போகும் காலம்”என்னும் நிலையை வெளிப்படுத்துகிறது.
அக்கட்டுரை வெளிவந்து 25 வருடங்கள் கழித்து மற்றும் செப்டம்பர் 11(அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்) நிகழ்ந்து  பதிமூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், ஃபுகுயாமாவின் கணிப்பை மறுபடியும் உற்று நோக்கும் காலம் வந்துள்ளது. “இந்நவீன காலத்தில் தாராளமயத்திற்கும் கம்யூனிசத்திற்கும் மாற்றமான ஒரு ஆளுமையுடைய ஓர் அரசியல் மாற்றத்தை இஸ்லாம் மட்டுமே வழங்குகிறது”. க்ரிமியாவை ரஷ்யா தன்னுடன் சேர்த்து கொண்டதை அடுத்து அது உக்ரைனின் மீது படையெடுப்பு நடத்துமோ என்ற பலரது அச்சம் மற்றும் இப்பிரச்சினை உருவானதை அடுத்து உலகளாவிய கவனத்தை தன் பக்கம் திருப்பிக்கொண்டது- இருந்தாலும் அரசியல் ஆய்வாளர்கள சிரியாவில் வெளிவரும் நிகழ்வுகள் பக்கம் தங்களது கவனங்களை வைத்த வண்ணம் இருக்கின்றனர். “The catastrophe now taking place in and Syria”என்ற கார்டியன் பத்திரிகையின் வெளியுறவு கட்டுரையாளர் தனது சமீபத்திய கட்டுரையில் சுட்டிக்காட்டிய “இப்போதைய பேரழிவானது சிரியா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்பதே அடிப்படையிலான ஒரு சவாலாகவும் மற்றும் தற்போதைய உலக நிலைக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாகவும் எழுதியுள்ளார், இதற்கான மூலகாரணமாக ஜிஹாதிய போராளிகள் “மேற்கத்திய மதிப்பு மற்றும் ஈடுபாடுகளுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதில் ஒற்றுமையாக உள்ளனர்.” முஸ்லிம் உலகம் மற்றும் அதனைத்தாண்டி ஏற்படும் விளைவுகளை பற்றி கூறுவதற்கு முன் அவர் ” உக்ரைனை மறந்து விடுங்கள், சிரியா தற்போதைய உலகத்தின் மிகபெரிய அச்சுறுத்தலாக உள்ளது” என குறிப்பிடுகிறார்.
என்வே ஒரு முழுமையான சித்தாந்தத்தையும் அதை எடுத்துரைக்கும் தூதுவர்களை கொண்ட இஸ்லாம் வெற்றி கொள்வது உண்மையான சவாலாக விளங்குகிறது. கம்யூனிசத்தின் சிவப்பு அச்சுறுத்தல் மற்றும் அடிப்படைவாத இடதுசாரிகளின் பயம் தற்போது இஸ்லாம் மற்றும் ஷரீ’ஆவின் பசுமை அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒரு கொடுங்கோல் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆயுதப்போராட்டத்தை தற்போது வேறு வகையான கண்ணாடி மூலம் இஸ்லாத்தின் மீது நாட்டம் கொண்டிருக்கும் போராட்டமாக காணப்படுவது கண்கூடாக தெரிகின்றது. சிரிய போராட்டத்திற்கு மேற்குலக முஸ்லிம்களிடையே ஆதரவு கிடைத்தி ருப்பதால் பண்டைய கால அமெரிக்க மெகாத்தீயத்தில்(McCarthyism) கடைபிடிக்கப்பட்டது போன்று முஸ்லிம்கள் பல நியாயமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை யுத்திகளுக்கு எதிர்கொள்ள நேரிட்டது; அதாவது அப்போது ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்கள் கம்யூனிஸ்டுகள் எனவும் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டு அரசு அல்லது தனியார் நிறுவன குழு, கமிட்டி மற்றும் ஏஜென்சிகளால் கொடூரமான விசாரணை மற்றும் கேள்விகளுக்கு உட்படும் மக்களாக ஆளானார்கள்.
உஸ்மானிய கிலாஃபா வீழ்த்தப்பட்டதற்கு பின்னர் இஸ்லாமிய சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்கு  இயலாமல்  போனதால்  உலக சூழ்நிலையில் தாக்கத்தை ஏற்படுத்த இயலாத நிலைக்கு முஸ்லிம்கள்  ஆளாயினர். இதன் அடிப்படையில் புரூஸல்ஸில் மேற்கின் ஆதரவு தாங்கி வந்த கோரிக்கைகள் சிரிய முஸ்லிம்களால்  நிராகரிக்கப்பட்டது கருத்தியல் மாற்றத்திற்கான அறிகுறிகள் என சுட்டிக்காட்டுகிறது. ஏற்கனவே இருநூறு கோடி மக்களில் இஸ்லாமிய கொள்கை ஊடுருவியுள்ளது- சட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவகப்படுத்தி அதை மறுபடியும் செயல்படுத்தும் எண்ணத்தை கொண்டுள்ளனர், அது இப்போது நிலவிவரும் சிலர் மட்டுமே அனுபவிக்கும் வகையில் உள்ள மக்களே செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றமான ஒரு வரையறையை கொண்டிருக்கும் அது இப்போதுள்ள நிலையை தங்களுக்கு சாதகமாக ஆக்கி சுகம் அனுபவித்து வருபவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதவாறு இருக்கும்.
மீண்டும்  நாகரிகங்களின்மோதல்
“The Clash of Civilisations” என்ற நூலின் ஆசிரியர் சாமுவேல்  ஹண்டிங்டன் வருங்காலத்தில் உலக அரசியலின் அச்சாணி மேற்கு மற்றும் மேற்கு அல்லாத நாகரீகத்திற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை ஒட்டியே அமைந்திருக்கும் என அறிவுறுத்தினார். அவர் மேற்கத்திய நாடுகள் அல்லாத நாகரீகங்கள் மேற்கின் பொதுவான நடவடிக்கைகளாக தாராளமய விழுமியங்களை ஓங்கி ஒலித்த வண்ணமும் அதனை ஏற்றக்கொள்ள வைக்க அரும்பாடுபடும் விதமாகவும் இருக்கும் என்பதை முன்வைத்தார். தங்களுடைய சொந்த விழுமியங்களை பாதுகாத்துக் கொள்ள நாட்டம் கொள்பவர்கள் அதற்காக அவர்கள் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமானதாக இருக்கும் எனவும் அதை வெகுசில நாடுகள் மட்டுமே செய்ய முடியும் என அவர் வாதிட்டார். சிரிய முஸ்லிம்கள் ஏற்கெனவே மிக அதிக விலையை கொடுத்துள்ளனர் இந்த போராட்டம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படாதது மேற்கிற்கு மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.
இறுதியாக இப்போது நடைபெற்று வரும் க்ரீமியாவின் போராட்டம் மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு சவால் விடக்கூடியதாக இல்லை.  மாறாக முஸ்லிம் உலகின் இஸ்லாமிய நாட்டமானது சமூகத்திற்கு ஒரு மாற்று கண்ணோட்டத்தை முன்னிறுத்துகிறது. ஸைக்ஸ்-பைகாட் ஒப்பந்தத்தின் (Sykes-Picot agreement)மூலம் ஏற்படுத்தப்பட்ட செயற்கை எல்லைகளை களைந்தெறிவது, மேற்கின் நலன்களை அல்லாமல் முஸ்லிம்களின் நலன்களை மட்டுமே தங்களின் விருப்பமாக கொண்டுள்ள தலைமைத்துவம், நெறிமுறை, அரசியல் மற்றும் பொருளாதாரங்களை செயல்படுத்த ஓரு மாறுபட்ட சித்தாந்தம்;இதுவே நாகரீகங்ளுக்கு மத்தியில் போராட்டம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகும். மேலும் இது தற்போது நிலவிவரும் முதலாளித்துவத்தின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக நிலைக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் இருக்கிறது.
இந்த மாறுபட்ட நாகரீகம் 200 கோடி முஸ்லிம்களை ஒரு அரசின் கீழ் கொண்டுவரும் தலைமைத்துவத்தை அஃதாவது கிலாபத்தை மட்டும் நாடாது; மாறாக அதன் பின் இந்த அறிவார்ந்த தலைமைத்துவத்தை உலகெங்கும் கொண்டு செல்வதற்காகவே நாடுகிறது.
“இஸ்லாத்தின் சக்கரமானது சுழன்று கொண்டிருக்கிறது, ஆகவே அது எங்கெல்லாம் சுழல்கிறதோ அதனுடன் சுழன்று கொள்ளுங்கள்.”       [தப்ரானி]

May 28, 2014

சுல்தான் முஹம்மத் அல் பாதிஹ்

வரலாற்றிலிருந்து...

மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக
நியமித்து விட்டு அணைத்துப் பொருப்புக்களிலிருந்தும் ஒதுங்கி தூர
இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார். முஹம்மதோ அறிவு, வால் வீச்சு,
குதிரை ஓட்டம், போர் பயிற்சி என்று அணைத்திலும் சிறந்து விளங்கினும் போதிய அனுபவமற்றவனாக இருந்தான்.
இந்நிலையில் கிரீடம் தரித்து சில மாதங்கள் ஆவதற்குள் ரோம பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பு மேற்கொண்டது.

இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக
இருந்தது. எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தான். விரைவாக
வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினான்.
தந்தையிடமிருந்து “இப்பொழுது நீ தான் சுல்தான், படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் வர முடியாது” என்று பதில் வந்தது.

இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு இருந்தது. “ஆம் நான் தான்
சுல்தான். இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக
வந்து படையை வழி நடாத்துங்கள்..!” இந்த சிறுவன் தான் வரலாற்றில் சுல்தான் முஹம்மத் அல் பாதிஹ் என்று போற்றப்படும்.
நபிகளாரால் முன்னறிவுப்பு செய்யப்பட்டபடி இஸ்தான்பூலை (கொன்ஸ்தாந்திநோபில்) ரோமர்களிடமிருந்து கைப்பற்றிய மாவீரனாகும்.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புச் செய்த அந்த ஹதீஸ். 

“கொன்ஸ்தாந்திநோபில் நிச்சயம் வெற்றி கொள்ளப்படும்.
அதை வெற்றி கொள்ளும் தலபதி எவ்வளவு சிறந்த தலபதி..!,
அதை வெற்றி கொள்ளும் படை எவ்வளவு சிறந்த படை..!” 
- ஹதீஸ்

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழஅமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம் “கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் – கொன்ஸ்தாந்து நோபிள் – தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.- முஸ்னத் அஹ்மத் : 6645

கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று இறுதி தூதரின் காலத்தில் பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் பரந்த இரண்டு கிளைகளைக் கொண்டு அமைந்திருந்தது . ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது; கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் கூறினார்கள் ‘கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த படைதான் சிறந்த படை என்றார்கள். -முஸ்னத் அஹ்மத்

அந்த நாள் மறந்து விட்டதா ?


அந்த நாள் மறந்து விட்டதா ? இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது உத்தியோக பூர்வமாக தாகூத்திய அடிமை சாசனம் வரையப்பட்ட நாள் . காசா முதல் காஸ்மீர் வரை கந்தலாக்கப்பட்ட இந்த முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமை மானம் பற்றி தட்டிக்கேட்க நாதியற்றதாக்கி அல்லாஹ்வின் அடிமை மட்டுமே என்ற கண்ணியத்தின் வரலாறு ;தேசம் ,தேசியம் , அரபி, அஜமி, வெள்ளையன்,ஆபிரிக்கன் என்ற எல்லைக் கோடுகள் மூலம் களங்கப் படுத்தப் பட்ட நாள் . இஸ்ரேல் எனும் இரக்கமற்ற இரத்தக் காட்டேரி தன்னை சுற்றியிருந்த அரசியல் விலங்கின் பூட்டை உடைத்து தனது சாவகாசமான
சரித்திரப் படுகொலைகளுக்கு சொடுக்குப்போட்டு பாதை அமைத்த நாள் . 

போஸ்னிய புதைகுழிகளில் குற்றுயிராய் கதறிய இந்த உம்மத்தின் அழைப்பாக " இஸ்லாத்தின் படை எங்கே ?" எனும் வினாவுக்கு வெட்கித்துப்போய் மௌனத்தை பதில் அளிக்க ஏதுவாய் அமைந்த
நாள் . சிந்துவில் எம் உம்மா சிதறடிக்கப்பட்டபோதும் ,காவித் துரியோதனர்கள் துகில் உரித்து எம் சகோதரிகளை மானபங்கப்படுத்திய போதும் "இன்னொரு முஹம்மது பின் காசிம் வரமாட்டாரா ? " என்ற வினாவுக்கு 'பொலிடிகல் டிப்லோமடிக்' புரியாது கண்ணீரோடு வெறுங்கை ஏந்தி பிரார்த்தனை மட்டும்
புரிந்த நாள் . மியன்மாரின் படுகொலை நாடகத்தில் அரசியல் திருப்பத்தின்
இரத்த சாட்சியமாய் இந்த உம்மத்தின் உதிரங்கள் விலைபேசப்
பட்டபோது மாதக்கணக்கில் வேடிக்கை பார்க்க வைத்த நாள் .

மொத்தத்தில் முஸ்லீம் எனும் சகோதரத்துவ சிந்தனை திசைமாறி ; குப்பார் வீசிய பிச்சைப் பாத்திரத்தில் வாழ்க்கை குதிரைஒட்டி சுகம் காண்பதில் சுவனம் நுழையலாம் எனும் ஜாஹிலீயத் மார்க்கமாக முஸ்லிமின் தலையில்
ஏறி யகூதிய கடிவாளத்தை சிலுவையின் முகவரியோடு பூட்டிய நாள். அது எந்தநாள் ??

 இஸ்லாத்தின் ஒரே தலைமையும், அரசியல் இராஜ தந்திர கேடையமுமான
இஸ்லாமிய கிலாபா வீழ்த்தப்பட்ட நாள். அது ஹிஜ்ரி 1342 ரஜப் மாதம் பிறை 28. ஆனால் இது முடிவுரை எனும் தப்புக் கணக்கில் யூத ,கிறிஸ்தவ எதிரிகளால் கொக்கரிக்கப்பட்ட வார்த்தைப் புரளி என்பது புரியும் காலம்
வெகுதூரத்தில் இல்லை . நம்புங்கள் அந்த முஹம்மதின் (ஸல் ) படை மீண்டும்வரும் ;ஏனென்றால் "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே " நீங்கள் அல்லாஹ்வுக்கு (சுப ) உதவி செய்தால்அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதிப் படுத்துவான் . அவன் கேட்கும் உதவி நீங்கள் அவன் பிரதிநிதி என்பதை உறுதிபடுத்த நிபந்தனை அற்று அவனது மார்க்கத்தை மீண்டும்
சக்தியாக்க உதவுங்கள் என்பதே . அல்லாஹ்வின் தூதருக்கும் (ஸல் ) அந்த
சஹாபாக்களுக்கும் உதவிய அதே ஜிப்ரீல் (அலை ) தனது வானவர்
படையோடு எமக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார் . அல்லாஹு அக்பர்............

நாம் ஒன்றும் 'கிங் மேக்கர்கள் 'அல்ல , 'கிங் ஜோக்கர்கள்'!

முற்றுப் பெறாதது சாத்தானின் தூதே ... கஸ்தூரியை சுமந்தவர்கள் குப்ரிய
சாக்கடையில் சுகந்தம் தேடி புறண்டதனால் தூய இலட்சியங்கள் நாறிப்போக
இரத்தமும் சதைகளும் உணர்வுகளும் உரிமைகளும் அற்பமென்றாகி அவல ஊர்வலங்கள் இந்த உம்மாவின் வீதிகளில் வலம் வரத் தொடங்கின !

கலங்கரை விளக்குகள் குட்டிச் சுவர்களுக்குள் சுயநல வாழ்க்கை தொடரக்
கற்றுக்கொண்டதால் தான் அதற்காகவே காத்திருந்த ஓநாய்கள் சாவகாசமாக முற்றுகையிட்டு எம் நிலங்களிலேயே முகாமிட்டு விஷப்பற்களை பதிக்கத் தொடங்கின!


இன்று ஜாஹிலீய சத்துருக்களின் அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒன்றும் 'கிங் மேக்கர்கள் 'அல்ல , 'கிங் ஜோக்கர்கள்'!


அல்லாஹ்வின் அமானிதத்தை அலட்சியம் செய்துவிட்டு
அசத்திய' பொலிடிக்ஸில்' நவீனம் காண்கிறோம் ! இது அநாகரீக மேடையில் நாகரிக நடனமாம் !

'ஹராத்தில் ' மூழ்கி 'ஹலாலை ' தேடுவது அற்புதக்கலை என்பது அல்லாஹ்வுக்கே(சுப) தெரியாதது !!!

அவனின் தூதர் (ஸல் ) அவர்களுக்கோ புரியாதது !!!
அதிசயமான இந்த வஹிப்பிரதி, மக்கியா ? மதனியா? 'ஹிராவில்' தொடங்கி' ஹஜ்ஜதுல்விதாவரை' இல்லவே இல்லை. சத்தியத்தின் தூதுக்குத்தான்
பூர்த்தி நடந்து விட்டதே !! ஆனால் சாத்தானின் தூதுக்குத் தான் பூர்த்தியே இல்லையே !
ஒருவேளை இந்த நூற்றாண்டின்? சதிப்பிரதி 'சியோனிச 'அருளால் 'பென்டகனில் '
இறங்கி 'வைட் ஹவுஸ் ' மொழியால் அரேபிய நுழைந்திருக்கலாம் !!

நாங்கள் முஹம்மதின் (ஸல் ) படை ...


இந்த முஸ்லீம் உம்மத்தின் வாழ்வின் மீது அநீதப் பூட்டுப் போட்டு அதன் சொந்த முற்றங்களில் அவலங்களால் நிரப்பி ஆனந்தப் படும் அல்லாஹ்வின் எதிரிகளே !?

அயோக்கியத்தை நியாயமாக்கி நீ அடிவருடித்தனத்தை சுயநல இலாப
பிச்சை காட்டி எமக்குள் விதைத்தாய் ! அந்த கோடரிக் காம்புகள்
தேசிய விலங்கிட்டு சகோதரத்துவத்தை ஒருபக்கம் கேள்விக்குறி ஆக்கின !

'ஹரத்தின்' எல்லைக்குள் 'ஹராம்' வந்தாலும் பரவாயில்லை ! என பரம்பரை முடிகாக்க வெள்ளைத்தோல் கொள்ளையருக்கு இஸ்லாத்தின் தூய
நிலங்களில் சல்லாபிக்க மடம் கட்டிப்போட்டு அவன் சாவகாசமாய் பவனி வர கழுதையாய் உழைக்கும் கண்றாவி மன்னர்கள் மறுபக்கம் ! சதிகளும், சாக்கடையில் புரள்வதில் சந்தோசமும் இருண்ட வாழ்வின் மீது சந்தர்ப்ப
நியாயங்களால் வார்த்தை ஒளி கொடுக்கும் 'செக்கியூலர் இஸ்லாமிச' செம்மல்கள் வேறு மல்லாக்காய் பறக்கும் வெள்ளைக் காக்கை காட்டுவோம் !! என்ற குருட்டு நம்பிக்கையில் இன்னொரு புறம் !!

ஆனால் அந்த முஹம்மதின் (ஸல் ) படை மட்டும் ஓயாத அலைகளாய் சத்திய
விடியல்களை படைக்க குருதியின் விலை கொடுத்து சுன்னாவின்
வழி உறுதியோடு உழைக்கிறார்கள் ! சஹாதத்தின் வேட்கையில்மரண பயம் வெருண்டோட அல்லாஹ்வை இன் முகத்தோடு சந்திக்க 'தாகூத்' மீது
இடியாய் இறங்குகிறார்கள் !

இன்ஷா அல்லாஹ் நம்புங்கள இறையாட்சி மீண்டும் பிறக்கும் மனித அடிமை விலங்கு தெறிக்கும்

அல்லாஹு அக்பர் ..
அல்லாஹு அக்பர்..அல்லாஹு அக்பர்

எது ஆன்மீக வறுமை !?

இன்று முஸ்லீம் உம்மாவுக்கு ஏற்பட்டுள்ளது ஆன்மீக வறுமையே என்ற கருத்து சிலரால் அழுத்தமாக முன்வைக்கப் படுகின்றது . மேலும் அஹ்லாக்கின்மையும் ஒழுக்க வீழ்ச்சியும் தான் முஸ்லீம் உம்மாஹ்
எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கான காரணமாகும் என சர்வ சாதாரணமாக
பேசப்பட்டு வந்தாலும் இந்தப் பார்வையில் ஒரு தெளிவின்மை தெரிவதை யாரும்மறுக்க முடியாது .

இஸ்லாத்தின் பார்வையில் ஆன்மீகம் என்பது என்ன ?
என்ற வினாவில் இருந்தே நாம் விடயங்களை ஆராய முற்படுவது சிறந்தது . அதாவது குறிக்கப்பட்ட சில கிரியைகளை அழுத்தமாக ஒருபக்கம் பின்பற்றிவிட்டு ,வாழ்வின் மற்றைய பகுதிகளை எதோ ஒரு வழியில் தொடரும் பகுதிப் பிரயோகமா இஸ்லாம் சொல்லும் ஆன்மிகம் ? அப்படியானால் ஆன்மீகமும் வாழ்வியலும் இரு வேறுபட்ட துருவங்கள்
என்பதா ? உலகத்தை நேசிப்பதும் மரணத்தை வெறுப்பதும் என்பது குப்ரியத்தின் அடிப்படைப்பண்பு குப்ரிய சித்தாந்தம் இந்த எண்ணக்கருவில்
இருந்தே தனது தேடல்களையும் ,தேர்வுகளையும் , தீர்வுகளையும் வேண்டி நிற்கும் .முஸ்லீமும் இத்தகு மனோபாவத்தில் இருப்பானாக
இருந்தால் நிச்சயமாக இங்கு ஓர் சித்தாந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றுதானே அர்த்தம் !

உலகில் வாழ்வுக்காக எதையும் இழக்கும் மனோபாவம் தான் நிச்சயமாக ஆன்மீக வறுமை இறைவனை இன்முகத்தோடு சந்திப்பதற்காக எதையும் தாங்கும் மனோபாவத்தில் தம்மை மாற்றிக் கொள்வதில் இருந்து தான்
இஸ்லாமிய மீள் எழுச்சிக்கான அடிப்படைப் போராளி உதயமாகிறான்.
எனும் உண்மையை முஸ்லீம்களாகிய நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்

இது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தின் வார்த்தைகள்

எத்தனையோ சிறு சிறு கூட்டத்தினர் பெரும் பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி கொண்டிருக்கிறார்கள் .மேலும் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்
" (சூரா அல் பகரா வசனம் 249)

ரமழான் வந்தவுடன் விசேடமாக அல்பத்ர் சமர்க்களம் அனேகமாக
எல்லா முஸ்லீம்களாலும் நினைவு கூறப்படும் .இந்த சமரைப் பற்றி பேசப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் "அதில் ஒரு களப் போராளியாய் நானும்
இருந்திருக்கக் கூடாதா என்ன கைசேதமே" என அதில் கலந்து கொள்ளாத
ஒவ்வொரு முஸ்லிமும் கவலைப்படும் அளவுக்கு அந்தப் போரின் இஸ்லாமிய தரப்பு பங்காளிகளுக்கு அல்லாஹ் (சுப ) ஒரு வாக்குறுதியை அளிக்கிறான் ;

அது சுவனம் நிச்சயிக்கப் பட்ட நன்மாராயமே ஆகும் . இந்தப் போர் தொடர்பில் பக்கம் பக்கமாக விபரிக்க பல விடயங்கள் இருந்தாலும் இஸ்லாமிய சித்தாந்தம் ஆழப்பதிந்த வடித்தெடுத்த சில நூறு மனிதர்கள் குறைசிக காபீர்களின் அதீத இராணுவ வலிமைக்கு முன் கேள்விக்குறியாக்கப்
பட்ட நிலையிலேயே இறைவன் வாக்களித்த இரு வெற்றிகளில் ஒன்றை தேர்வது முஸ்லீம்கள் முன் வைக்கப்படுகின்றது . அந்நிலையில் இஸ்லாமியப்படையணி எடுத்த ஆச்சரியமான முடிவுதான் எம்மை சிந்திக்க
வைக்கின்றது .
வெறும் 40 சண்டை செய்யத்தக்க நபர்களைக் கொண்ட அபூ சுப்யானின் வியாபாரக் கூட்டமா ? பூரண சமரணியாக வரும் அபூஜஹலின் 1000 இராணுவமா ? எடுத்த முடிவோ அதிர்ச்சியானது . சந்திக்கப்போவது குரைசி இராணுவத்தையே !? கிடுகலங்கிய முனாபிக்குகள் வெருண்டோட வழி தேடினர் 'கனீமத்' தேடி களம் வந்த பலருக்கு 'கபுரின்' வாசனை தொடை நடுங்கிகளாக்கி சிதறி ஓடவைத்தது. இப்போது எஞ்சியிருந்தது 'வஹி '
வடித்தெடுத்த வார்ப்புகள் மட்டுமே . வீரம் அவர்களிடம் இல்லை இல்லை வீரமே அவர்களாக ' வாழ்ந்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமை என்ற
வாழ்வு அல்லது ஷஹீத் களாக சுவனத்தில் நுழைவு ' என ஹுப்புதுன்யாவை விரட்டி அடித்து நிமிர்ந்து நின்றார்கள் .அல்லாஹ்வின்
தூதரின் (ஸல்) அவசர ஆலோசனை ஒன்றின் பின் இஸ்லாமிய படையணியின் சுப்ரீம் கமாண்டர்கள் தரத்தில் இருந்த அபூபக்கர்
(ரலி ) ,உமர் (ரலி ) போன்றோர் அந்த சத்தியப் படையின் முன்
உரை நிகழ்த்தினார்கள் . இப்போது முஹாஜிர்களில் ஒருவரான
கமாண்டர் மிக்தாத் இப்னு அமர் (ரலி ) எழுந்து பேசினார்கள் . இதோ அவரது வார்த்தைகள் "அல்லாஹ்வின் தூதரே ! அல்லாஹ் உங்களுக்கு காட்டிய
வழியில் செல்லுங்கள் .நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் .வல்லாஹி !

"மூஸாவே ! அவர்கள் அதில் இருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில்
செல்லவே மாட்டோம் . நீங்களும் உமது இறைவனும் (அங்கு )சென்று (அவர்களுடன் ) போர் புரியுங்கள் .நிச்சயமாக நாங்கள்
இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக் )கொண்டிருப்போம்".
(அல் குர் ஆன் அத்தியாயம் 5: வசனம் 24)

என்று பனூ இஸ்ரவேலர்கள் நபி மூஸா (அலை ) அவர்களிடம் கூறியது போல் நாங்கள் உங்களிடம் கூற மாட்டோம் . மாறாக நீங்களும்
உங்களது இறைவனும் போர் புரியுங்கள் . நாங்களும் உங்கள் இருவருடன்
சேர்ந்து போர் புரிவோம் .சத்தியத்தின் மீது உங்களை அனுப்பியவன் மீதாணையாக !
நீங்கள் எங்களை (மக்காவுக்கு அருகில்உள்ள )'பர்குல் கிமாது ' வரை அழைத்துச்சென்ராலும் உங்களுடன் மிகத்துணிவோடு வருவோம் "
என்று கூறி முடித்தார் . இந்த வீரஉரையைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவரைப் பாராட்டி அவருக்காகபிராத்தனை புரிந்தார்கள் .
இப்போது அன்சாரிகளின் முடிவு பற்றி அல்லாஹ்வின் தூதரின் ஆர்வம் திரும்பியது .காரணமும் இருந்தது அகபா உடன்படிக்கைப் பிரகாரம் மதீனாவுக்கு வெளியில்சென்று போராடுவது என்ற நிபந்தனை இல்லாதிருந்தது .அங்கிருந்து பதில்தந்தது கமாண்டர் ஸ அத் இப்னு மு ஆத்
(ரலி )யின் ரத்தினச் சுருக்கமான அந்தபதில் இது தான் .

" அல்லாஹ்வின் தூதரே !தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி புரிவது மட்டுமே கடமை என அன்சார்கள் நினைப்பார்கள் என்று நீங்கள்
அஞ்சுகிறீர்களா ?
அன்சார்கள் சார்பாக நான் பேசுகிறேன் ; அவர்களின் சார்பாக நான் பதில் தருகிறேன் ;நீங்கள் விரும்பிய இடத்துக்கு செல்லுங்கள் ;நீங்கள்
விரும்பியவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளுங்கள் ; விரும்பியவர்களோடு உறவை துண்டித்து விடுங்கள் ; நீங்கள்வேண்டியதை எங்களிடம்
இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் ;நீங்கள் விரும்பியதை எங்களுக்கு கொடுங்கள் ;

நீங்கள் எங்களிடம் இருந்து எடுத்துக்கொண்டது நீங்கள் எங்களுக்காக
விட்டு விடுவதை விடமேலானதாகும் எங்களின் செயல்கள்
உங்களின் கட்டளைக்கு இணங்கவே இருக்கும் ;வல்லாஹி நீங்கள்
எங்களை 'கிம்தான் ' பகுதியில் உள்ள 'பர்க் ' வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களோடு வருவோம் . வல்லாஹி நீங்கள் எங்களை கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் "என்று ஸ அத் இப்னு மு ஆத் (ரலி ) கூறியதன் பின்னர் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகுந்த ஆனந்தம் அடைந்தவர்களாக வெற்றி பற்றிய சுப செய்தியை கூறினார்கள் (.அல்லாஹ்வின் எதிரிகள் வெட்டி வீழ்த்தப்படும் இடங்கள்
தமது கண்களுக்கு தெரிவதாக அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் .)
வெறும் ஆட்கள் தொகையை காரணம் காட்டிய சரணடைவு அரசியலை எவ்வித இராஜ தந்திரப் பின்புலமும் அற்ற ,போர் செய்ய தடை செய்யப் பட்டிருந்த மக்கா வாழ்விலும் முஸ்லீம்கள் செய்திருக்க வில்லை . அரசியல் இராஜ தந்திரப் பின்புலம் மிக்க மதீனாவின்காலப்பகுதியிலும் முஸ்லீம்கள்
செய்திருக்க வில்லை .'குப்ர்' போட்ட 'செக்கியூலரிச'அதிகார ரோட்டில் 'தாகூத்தியகண்டிசனின் 'கீழ் 'ஜாஹிலீய லைசனோடு' இஸ்லாமிய வண்டியோட்ட நினைக்கும் மொடர்ன் இஸ்லாம் சிந்தனைத் தரம்
சுன்னா வழியல்ல என்பதை புரிந்து கொள்ள இஸ்லாத்தின் சீராவை சரியாக ஆராய வேண்டும் தவிர 'அபூஜாஹில்ஹலை ' திருப்திப்படுத்தி அல்ஹம்துலில்லாஹ் என இஸ்லாத்தை வாழவைக்கலாம் என்ற
பார்வையும் மிகத் தவறானது .அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் மிக்க
கிருபையுடையவன் .

தவறு துரோகம் என்பவற்றில் எழும் இஸ்லாமிய எழுச்சி !!

காலத்தின் தேவை , நவீனம் ,வினைத்திறன் ,நடைமுறை சாத்தியம் இந்த
வார்த்தைகளை இன்றைய முஸ்லீம் உலகில் சர்வசாதாரண பயன் பாடாய் நாம் காணமுடியும் . அறிவியல் தொழில் நுட்பத்தையோ , இயந்திரமயமாக்கல
ை நோக்கியோ முஸ்லீம் உம்மாவின் மீது இந்த வார்த்தையாடல்கள்
பிரயோகிக்கப்பட்டிருந்தால் மேட்கத்தேயத்திடம் தங்கி வாழாத
தன்னிறைவு பொருளாதாரம் பற்றி இவர்கள் சிந்திக்கிறார்கள் என
சந்தோசப்பட்டிருக்கலாம் ஆனால் இந்த வார்த்தைகள் இன்றைய
உலகின் தனிப்பெரும் அதிகாரமாய் தன்னை பிரகடனப்படுத்தியிருக்கும்
முதலாளித்துவ ஏகாதிபத்திய நிர்ப்பந்த அரசியலின் கொள்கை சார்
வடிவமாக முஸ்லீம் உம்மாவை ஆக்கிரமிக்கப்பார்க்கும்
தவறு என்பதால் அதன் ஆபத்தை பற்றி பேசவேண்டிய அவசியம்
சத்தியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு .
உண்மை என்னவென்றால் இந்த முதலாளித்துவம் என்பது மக்கள்
நலன் எனும் நோக்கத்தை கொண்ட ஒரு சிந்தனை அல்ல அது கிறிஸ்தவ மதப்
புரோகிதத்திட்கும் ,ஐரோப்பிய அறிவு ஜீவிகளுக்கும் இடையில்
நிகழ்ந்த நீண்ட இரத்தம் சிந்திய போராட்டத்தின் தீர்வாக சமரச
பேரத்தின் அடிப்படையில் உருவான ஒரு கொள்கை (அதற்குள்ளே ஜனநாயகம் ,மனித உரிமைகள் ,கருத்துச் சுதந்திரம் ,பன்மை வாதம் போல் பல
விடயங்களை கொண்டது ) ஆகும் .அதன் அடிப்படையே வாழ்வியலில்
இருந்து மதத்தை பிரிப்பது .இங்கு புரிந்து கொள்ள வேண்டியது இறைவனை அது மறுக்காது மாற்றமாக அவனது வழிகாட்டலை புறக்கணிக்கும்
அவ்வளவுதான் .இந்த சிந்தனை அசத்தியத்தை சத்தியத்திற்கு நெருக்கமாக்கும்
நிராகரிப்பை விசுவாசத்திற்கு நெருக்கமாக்கும் .( இஸ்லாமிய
ஷரீயாவை நிலைநாட்ட முஸ்லீம்களிடமே 51 %
வாக்குகளை எதிர்பார்க்கும் இரகசியமும் ,பெரும்பான்மை விரும்புகிறது எனக்காட்டி ஷரீயா சட்டங்களை இன்று இஸ்லாமிய வாதம் பேசும் மனிதர்கள் புறக்கணிப்பதன் இரகசியம் உங்களுக்கு புரிந்திருக்கும் )
அதாவது இங்கு சத்தியம் மாதிரி இருக்கும் அசத்தியம் . மதச்சார்பின்மை வேறு மத சுதந்திரம் வேறு ஆனால் இங்கு இந்த இரண்டும்
மதச்சார்பின்மை என இனம் காட்டப்பட்டு அது இஸ்லாத்தில் உள்ளது தான் என நிறுவப்படும் .

(இப்போது இஸ்லாமிய சமூகம் என்பது முஸ்லீம் ,முர்தத் ,முஷ்ரிக் ,
பாசிக் என்பவற்றின் கூட்டு !)

May 27, 2014

நீங்கள் ஒரு தலைமையின் கிழ் ஒன்றினைய வேண்டுமா ?


நீங்கள் ஜாஹீல்களாக மரணிப்பதிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமா ?

நீங்கள் ஒரு தலைமையின் கிழ் ஒன்றினைய வேண்டுமா ?


உங்களை வழிநடத்தும் இஸ்லாமிய தலைமை வேண்டுமா ?


உங்களிடையே தொழுகை நிலைநாட்டப்பட வேண்டுமா ?

நீங்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமா ?

பூமியில் அமைதி வேண்டுமா ?

பாகுபாடற்ற நீதி வேண்டுமா ?

இறை சட்டங்கள் அடிப்படையில் தீர்வு வேண்டுமா ?

இறைநெறி மற்றும் இறைதூதின் வழிமுறையில் ஆளப்பட வேண்டுமா ?

இஸ்லாமிய தீன் மேலோங்க வேண்டுமா ?

இன்னும் .......

நாம் நினைவில் கொள்ள வேண்டியது 

***கிலாஃபா***

ஆம் மீண்டும் கிலாஃபா உதிக்க வேண்டும் அதன் கீழ் நாம் வாழ வேண்டும்.

அதற்காக சிறு முயற்ச்சியேனும் செய்ய வேண்டும்.

May 26, 2014

அல்லாஹ் தனது ஒளியை பூரணப்படுத்தியே தீர்வான்…!

இன்று இஸ்லாத்திற்கு எதிரான விஷமப்பிரச்சாரங்களை முடுக்கிவிடும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கையிலும் அதன் பிரச்சார வேலைத்திட்டங்களை பகிரங்கமாக பொ.பல.சே போன்ற மதத்தீவிரவாத அமைப்பினால் முன்னெடுப்பதெல்லாம் அல்லாவுடைய ஒளியை அணைத்து விடவேண்டும் என்ற நோக்கத்துடைனேயே நடைபெறுகிறது. 

“அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள்உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள், தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.” (60:2)

"(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;."(Quran 4:89)

ஆனால் அல்லாஹ் தனது ஒளியை இவர்கள் எவ்வாறு அணைக்க முற்பட்டாலும் பூரணப்படுத்தியே தீர்வான்.

"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்." (Quran 61: 8)

அதற்கு எமது பங்களிப்பு அவசியம். அதுதான் நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதுமாகும்!

இஸ்லாத்திற்கு எதிரான விஷமக்கருத்துக்களை (குறிப்பாக ஒரு முஸ்லிமை அடிப்படைவாதியாக, தீவிரவாதியாகவும், இஸ்லாத்தை காட்டுமிராண்டிச்சட்டங்களை கொண்டு மதமாகவும், ஜனநாயக விரோதியாகவும், முஸ்லிம்கள் பெண்அடிமைத்துவம் செய்பவர்கள், கற்கால வாழ்வை நோக்கி நகர்பவர்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு) எதிர்கொள்வது எனும் தீமையை தடுக்கும் பணியை நாம் செய்யவேண்டும்.

மேலும்இஸ்லாத்தை ஒட்டு மொத்த நன்மையாக பௌத்த பெருமக்களுக்கு ஏவ வேண்டும். அதுவே அவனது ஒளியை பூரணப்படுத்துவதற்கான நடைமுறையாகும்.

இந்த உம்மத்தின் சிறப்பும் கண்ணியமும் “நன்மையை ஏவி தீமையை தடுப்பதில்தான் உள்ளது” என்பது பற்றி அல்லாஹ் இவ்வாறு அவனது திருமறையில் விபரிக்கிறான்.

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;” (3:110)

நாளைய தலைவர்களாக வரவேண்டிய இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சிந்தனைத் தெளிவுகள் என்ன...?


இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்று பொதுவாக எல்லோரும் அழைப்பார்கள். ஆம் நாளைய தலைவர்களாகவுள்ள இன்றைய இளைஞர்கள் எத்தகைய தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். அந்த தலைமைத்துவம் என்ன? 

தலைவர்கள் ஒரு இலக்கு நோக்கி சமூகத்தை வழிநாடாத்துபவர்கள். எந்த இலக்கு நோக்கி இன்று தலைவர்கள் மனிதர்களை வழிநாடாத்துகிறார்கள்? இன்றைய அவர்களது இலக்கு என்ன? நாளைய தலைவர்களாக வரவுள்ள எமது முஸ்லிம் இளைஞர்களின் இலக்கு என்ன? ஒரு முஸ்லிம் தலைமையிடம் இருக்க வேண்டிய இலக்கு என்ன?

ஒரு முஸ்லிம் அவனது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் தமது இலக்கை தீர்மானிக்கவேண்டும். அந்த இலக்கு இஸ்லாமிய சரீஆ வரம்புகளை பாதுகாப்பதாகவும் சரீஆவை உலகில் நிலைநாட்டக் கூடியதாகவும் அமையவேண்டும்.

ஆனால் இன்று இளைஞர்களது இலக்குகளை மேற்கினது முதலாளித்துவ தலைமை வடிவமைக்கிறது. அதன் மதஒதுக்கல் சிந்தனையின் அடிப்படையில் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனும் தலைமைத்துவப் பயிற்சியை இளைஞர் சமூகத்திற்கு வழங்குகிறது.

ஒரு முஸ்லிம் தனது இலக்கை ஷரீஆ அடிப்படையில் ஒழுங்குபடுத்த கடமைப்பட்டுள்ளான். ஆனால் இன்று அவனது இலக்கை துள்ளியமாக வடிவமைக்கும் இஸ்லாமிய அரசு இல்லாததால் அவன் வேரொறு அகீதாவில் பிறந்துள்ள உலக தலைமையினால் வழிநடாத்தப்படுகிறான். இந்நிலை மிகவும் ஆபத்தான போக்கு. அதனால்தான் அவனுக்கு இஸ்லாம் ஒரு சீரியசான விடயமாக தோனவில்லை. அவனது சிந்தனையில் தெளிவு இல்லை.

ஆகவே, அவனது சிந்தனை சீர்செய்யப்பட வேண்டும். அவனது இலக்குகள் இஸ்லாமிய அடிப்படையில் நெறிப்படுத்தப்படவேண்டும். அவ்வாறு நெறிப்படுத்தப்பட்டு பண்படுத்தப்பட்ட இஸ்லாமிய தலைமையாக மாறும் இளைஞர் சமூகம் நாளைய முஸ்லிம் உம்மத்தை வழிநாடாத்தும் தலைமைகளாக வரவேண்டும். அவர்கள்தான் நாளைய இஸ்லாத்தின் தூதுவர்கள். பாதுகாவலர்கள். தலைவர்கள் என்பதனை உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

பித்ஆவும் இன்றை முஸ்லிம் உம்மாவும்!



இன்று எம்மத்தியில் பித்ஆ பற்றிய பார்வை அவசியம் தேவை என்ற நிலைப்பாடு உள்ளது. ஆனால் அதன் எல்லைப்பரப்பை மிகவும் குறுகிய வட்டத்தினுள் வைத்துப் பார்க்கும் போக்கும் சக முஸ்லிம்களை நோக்கி மிகத் தீவிரமான பத்வாக்களை அள்ளிவீசும் மனப்பாங்கும் நிறைந்துள்ள ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

நிச்சயமாக இஸ்லாத்தில் ஏற்படுத்தப்படும் அனைத்து புதியவைகளும் வழிகேடுகள் அவை நரகத்திற்கு இட்டுச்செல்பவைதான். ஆனால் இன்றைய ஏகத்துவப் பிரச்சாரம் எனும் எல்லைப்பரப்பையும் அவர்கள் முன்வைக்கும் பித்ஆ பற்றிய பரப்பையும் பார்க்கும் போது அது மிகக் குறுகிய சிந்தனையாகவும் பிரச்சாரமாகவும் உள்ளது.

இன்று பித்ஆபற்றிய பார்வை தனிநபரது வணக்க வழிபாடு மற்றும் சில சம்பிரதாய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு பரவலாக வியாக்கியானம் செய்யப்பட்டுவருகின்றது. ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் “மனிதனது பொதுவாழ்வு எவ்வாறு அமையவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையை விட்டுவிலகி மனிதச் சிந்தனைகளால் உருவாக்கப்பட்ட செயலாக்க அமைப்பினைக் கொண்ட வாழ்க்கை முறை காணப்படுகிறது.” உதாரணமாக மேற்கினது “மதஒதுக்கல் சிந்தனையை ( Secularism)அடிப்படையாக கொண்ட சமூக பொருளாதார முறைமை, மன்னராட்சி, தேசியவாதம் (Nationalism), ஜனநாயகம் (Demoracy) என்பவற்றை கோடிட்டுக்காட்டலாம். 

இன்று நபி (ஸல்) அவர்கள் நிறுவிய இஸ்லாமிய அரசு இல்லாத உலகில் முஸ்லிம்கள் பல்வேறு தலைமையினால் ஆட்சிசெய்யப்படுகிறார்கள். இவர்களை ஆட்சிசெய்யும் முறையான சவூதி மற்றும் ஜோர்தான் போன்ற நாடுகளில் காணப்படும் “மன்னராட்சியும்” பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் காணப்படும் “ஜனநாயக ஆட்சியும்” இஸ்லாத்திற்கு புதியவை; அன்னியமானவை என்பதனை உணரவேண்டும்.

ஆனால் இன்றை மிம்பர்களில் இத்தகைய மிக ஆபத்தான நபிவழியல்லாத வாழ்வியல் முறைகள் பற்றி பேசப்படுவதாக தெரியவில்லை. ஏன்? இவைகளைப் பேசுவது அவசியம் இல்லையா? அல்லது இஸ்லாம் வெறுமனே தனிமனித வழிபாட்டை மாத்திரம் ஊக்குவித்து சமூகவாழ்வில் இஸ்லாம் எப்படிவேண்டுமானாலும் இருக்கமுடியும் எனும் அசமந்த போக்கு ஏற்படுத்தும் மற்றுமொரு பித்ஆ வழிமுறையா? பித்ஆபற்றிய சிந்தனைகளை நபிவழில் மீண்டும் ஒரு முறை முழுமையாக சீர்தூக்கிப்பார்க்க மாட்டார்களா?

May 23, 2014

இஸ்லாமியரின் லட்சியம் ....

காரைக்கால் இஸ்லாமிய தாவா சென்டரில் இன்றைய ஜும்மா உரையிலிருந்து சில வரிகள். ..
உரை :
முஹைதீன் பக்ரி
தலைப்பு :இஸ்லாமியரின் லட்சியம் ....


ஒரு முஸ்லிம் தான் வாயால் முன்மொழிந்து தனது செயலால் கலிமாத்து தய்யிபாவை (லாயிலாஹா இல்லல்லாஹ்) பேணி அதை உலகம் முழுக்க பிரகடனபடுத்தவும் ,குரானையும் சுன்னாவையும் இஸ்லாமிய உம்மத்த்களின் வாழ்க்கை நெறியாக மாற்றவும்,இவ்வுலகில் உள்ள முதலாளித்துவம்,
கம்யூனிசம் போன்ற தீனை விட இஸ்லாமிய தீனை நிலைநாட்டவும் , இஸ்லாத்தை மனிதகுல மக்களுக்கு வாழ்க்கை திட்டமாக மாற்றவும் ,மீண்டும் இஸ்லாம் ஒரு தலைமையின் கீழ் வாழவும் அதற்காக தாவா என்ற அழைப்பு பணி செய்வது தான் ஒரு முஸ்லிமின் லட்சியமாக இருக்க வேண்டுமே ஒழிய ஜனநாயகத்திற்காகவும் கம்யுனிசட்திர்காகவும் தனது செயல்பாடுகளை ஒரு முஸ்லிம் ஒரு காலும் செய்ய அனுமதி இல்லை ...இதை எந்த சூழ்நிலை வந்தாலும் எந்த குப்பார் நம்மை ஆலவந்தாளும் நாம் அல்லாஹ்வின் பாதுகாவலை கொண்டு இஸ்லாமிய இகாமத்து தீனை மீண்டும் நிலை நாட்டும் "முயற்ச்சியை " செய்தே ஆக வேண்டும் ....
அல்லாஹ் போதுமானவன் ....

இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது


عادَت أَغاني العُرسِ رَجعَ نُواحِ


திருமண கீதங்கள் ஒப்பாரிக்காக திரும்பின

وَنُعيتِ بَينَ مَعالِمِ الأَفراحِ

உன்னுடைய மரணம் குதூகல அடையாளத்துடன் அறிவிக்கப்பட்டது

كُفِّنتِ في لَيلِ الزَفافِ بِثَوبِه

திருமண இரவன்று அந்த ஆடையால் உனக்கு கஃபனிடப்பட்டது

وَدُفِنتِ عِندَ تَبَلُّجِ الإِصباحِ

அதிகாலைப் பொழுதில் நீ அடக்கம் செய்யப்பட்டாய்

شُيِّعتِ مِن هَلَعٍ بِعَبرَةِ ضاحِكٍ

ஆனந்தக்கண்ணீருடன் திகிலூட்டம் புடைசூழ உன் அடக்கம் நடந்தேறியது

في كُلِّ ناحِيَةٍ وَسَكرَةِ صاح

ஒவ்வொரு நிலப்பகுதியும் மரண வேதனையால் அலறியது

ضَجَّت عَلَيكِ مَآذِنٌ وَمَنابِرٌ

மிம்பர்களும் மினாராக்களும் உனக்காக ஓலமிட்டன

وَبَكَت عَلَيكَ مَمالِكٌ وَنَواحِ

பேரரசுகளும் மாகாணங்களும் உனக்காக அழுதன

الهِندُ والِهَةٌ وَمِصرُ حَزينَةٌ

இந்தியா துக்கத்தால் தடுமாறியது; எகிப்து கவலையுற்றது

تَبكي عَلَيكِ بِمَدمَعٍ سَحّاحِ

இவை உனக்காக கண்ணீர் பெருக்கெடுக்க அழுதன

وَالشامُ تَسأَلُ وَالعِراقُ وَفارِسٌ

ஷாம்,ஈராக் மற்றும் பாரசீகம் வினவின

أَمَحا مِنَ الأَرضِ الخِلافَةَ ماحِ

உங்களுடைய நிலத்திலிருந்து கிலாஃபத்தை யாராவது துடைத்தெறிந்து விட்டார்களா?

وَأَتَت لَكَ الجُمَعُ الجَلائِلُ مَأتَماً

மேன்மை பொருந்திய நன்மக்கள் உன்னுடைய அடக்கத்தில் பங்கெடுத்தனர்

فَقَعَدنَ فيهِ مَقاعِدَ الأَنواحِ

அவர்கள் ஒப்பாரி வைக்குமிடத்தில் அமர்ந்தார்கள்

يا لَلرِجالِ لَحُرَّةٍ مَوؤودَةٍ

ஓ ! மனிதா ! உயிருடன் புதைக்கப்பட்ட கண்ணியமிக்கவளை கவனி !

قُتِلَت بِغَيرِ جَريرَةٍ وَجُناحِ

இவள் எந்த குற்றமோ பாவமோ செய்யாமல் கொல்லப்பட்டிருக்கிறாள்

(“امير الشعراء – கவிஞர்களின் அமீர்” என்று போற்றப்படும் எகிப்திய கவி அஹ்மது ஷவ்கி அவர்கள் முஸ்லிம் உம்மத்தின் ஒரே தலைமையான கிலாஃபா வீழ்த்தப்பட்டபோது மனம் வருந்தி பாடிய அரபுக் கவிதைகளிருந்து சில வரிகள்)

உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் இஸ்தான்புல் நகரில் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார். முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாஸானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை கீழ்க்கண்டவாறு உமிழ்ந்தார்.

“The situation now is that Turkey is dead and will never rise again because we have destroyed its moral strength, the Khilafah and Islam.”

“துருக்கி இப்பொழுது வீழ்ந்துவிட்டது.. அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்ட சக்தியான கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் நாம் வீழ்த்திவிட்டோம்.”

நபி صلى الله عليه وسلمஅவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உஸ்மானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3 ) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை, கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது.

கிலாஃபத்தையும் இஸ்லாத்தையும் தகர்க்கும் முதல் முயற்சியாக பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாவது சிலுவைப்போரை போப் இரண்டாம் உர்பன் துவக்கி வைத்தார்..எனினும் இவர்களின் இருநூறு ஆண்டுகால சிலுவை ஆக்கிரமிப்பை சலாஹுதீன் அய்யூபி(ரஹ்) அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்.

கவுன்ட் ஹென்றி டெகாஸ்ட்ரி என்ற பிரஞ்சு எழுத்தாளர் 1896 ஆம் ஆண்டு எழுதிய “இஸ்லாம்” என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:-

“I cannot imagine what the Muslims would say if they heard the tales of the mediaeval ages and understood what the Christian orators used to say in their hymns; all our hymns even those which emerged before the 12th century emanated from one concept which was the cause of the crusades, these hymns were filled with hatred towards the Muslims due to the total ignorance of their religion. As a result of those hymns and songs, hatred against that religion became fixed in people’s minds, and the erroneous ideas deeply rooted, some of which are still carried nowadays. Everyone used to regard the Muslims as polytheists, disbelievers, idol worshippers and apostates.”

“மத்தியகால கற்பனை கதைகளைப்பற்றி கேள்விப்பட்டாலோ,அதைப்பற்றி கிறிஸ்தவ கதாசிரியர்களின் கடவுள் துதிபாடுதலில் கூறப்பட்டவற்றை கேள்விப் பட்டாலோ முஸ்லிம்கள் என்ன கூறுவார்கள் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. நமது அனைத்து துதிபாடுகளும் 12-ம் நூற்றாண்டிற்கு முன்னர் கிளம்பிய ஒரு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டவைகள். அதுவே சிலுவைப் போர் ஏற்பட காரணமாக அமைந்தது. இப்புகழ் பாட்டுக்கள் அனைத்தும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உள்ளடக்கியதாக இருந்தது. இது முஸ்லிம்களின் மதத்தை பற்றிய அவர்களின் அறியாமையால் ஏற்பட்டது. இவ்வகையான துதிபாட்டுகள், இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான வெறுப்பை கிறிஸ்தவ மக்களின் மனதில் நிரந்தரமாக்கியது.இதன் மூலம் ஆழ்ந்து வேரூன்றிய சில தவறான எண்ணங்கள் இன்றளவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரும் முஸ்லிம்களை பல் தெய்வ கொள்கை உடையவர்கள் எனவும் இறைமறுப்பாளர்கள் எனவும் சிலை வழிபாட்டாளர்கள் எனவும் கிரிஸ்தவ சமயத்திலிருந்து வெளியானவர்கள் எனவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்”.

முஸ்லிம்களுடன் நீண்டகாலம் போராடி தோல்வி கண்ட சிலுவை ஆக்கிரமிப்பாளர்கள், ஆயதப்போராட்டத்தால் முஸ்லிம்ளை ஒருபோதும் வீழ்த்தமுடியாது என்பதை விளங்கிக் கொண்டார்கள். எனவே முஸ்லிம்களை சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என்பதை உணர்ந்து அதற்கான சதித் திட்டங்களைத் தீட்டினார்கள். எனவே இதற்காக 16 ஆம் நூற்றாண்டின் முடிவில் மால்டாவில் ஒரு மையத்தை கிறிஸ்தவ மிஸனரியினர் நிறுவினார்கள்.மால்டாவை தலைமையிடமாக்க் கொண்டு முஸ்லிம்களின் உள்ளத்தில் மேற்கத்திய நச்சு சிந்தனைகளை பிரிட்டிஷ்-பிரஞ்சு-அமெரிக்க மிஸனரியினர் விதைக்கலாயினர்.இந்த காலகட்டத்தில்தான் முஸ்லிம்களிடையே மேற்கத்திய சிந்தனைகள் ஊடுருவத் துவங்கியது.

இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தைத் தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள். இதற்காக பெய்ரூட் மையம் துவக்கப்பட்டது.கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஸனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதின் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர்.அவர்கள் சமூகத்தில் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்குள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளைக் கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றிபெற முடியும் என்பதால், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும், துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.இதற்காக துருக்கிய இளைஞர் சங்கம் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.கிலாஃபத்தை அழித்த முஸ்தஃபா கமால் பாஷா இதில் உறுப்பினராக இருந்தான்.

எனவேதான் முஸ்தபா கமால் இவ்வாறு கூறினான்:-

“Was it not because of the Khilafah, Islam and the clergy that the Turkish peasants fought and died for five centuries? It is high time Turkey looked after her own interests and ignored the Indians and the Arabs. Turkey should rid itself of leading the Muslims.”

“துருக்கி குடியானவர்கள் கடந்த ஐந்து நூற்றாண்டு காலமாக கிலாஃபா, இஸ்லாம் மற்றும் திருச்சபைக்காக சண்டையிட்டு உயிர் நீத்துள்ளார்கள். இனி துருக்கி தன்னுடைய நலன்களை மட்டுமே கவனித்துக் கொண்டு இந்தியர்கள் மற்றும் அரபியர்களை புறக்கணிக்க வேண்டும். மேலும் முஸ்லிம்ளை தலைமை தாங்குவதிலிருந்து துருக்கி தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும்”

ஒரே அமீரின் கீழிருந்த கிலாஃபத்தின் நிலப்பரப்பை பல நாடுகளாக கூறுபோட்டு தங்களின் ஏஜண்டுகளை ஆட்சியில் அமர்த்துவதற்காக 1916 ஆம் ஆண்டு பிரிட்டனும் ஃபிரான்ஸும் ஒன்றிணைந்து Sykes-Picot agreement என்று அறியப்படும் ரகசிய ஒப்பந்த்ததை ஏற்படுத்தினர். ஃபிரான்ஸ் தூதர் Georges-Picot மற்றும் பிரிட்டிஷ் அரசியல் ஆலோசகர் Mark Sykes மத்தியில் இந்த சதித்திட்டத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்கிழக்கு துருக்கிய பகுதி, ஈராக்கின் வட பகுதி,சிரியா,லெபனான் போன்ற நிலப்பரப்புகளை ஃபிரான்ஸ் எடுத்துக் கொள்வது எனவும்,ஜோர்டான்,ஈராக்,ஹைஃபா போன்ற பகுதிகளை பிரிட்டன் எடுத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.இன்றைய மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைக்கோடுகள் Sykes-Picot ஒப்பந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன.

கிலாஃபத்தை வீழ்த்துவதற்கு பிரிட்டன், ஃபிரான்ஸ்,ரஷ்யா போன்ற நாடுகள் திட்டம் தீட்டினர்.இதில் முஸ்தஃபா கமாலை முன்னிறுத்தி பிரிட்டன் சதிவலையை பின்னியிருந்தது.இதன் விளைவாகவே முஸ்தஃபா கமால் பாஷா உஸ்மானிய கிலாஃபத்தின் அதிகாரத்தில் நுழைய முடிந்தது.துருக்கியின் விடுதலைக் குறித்து விவாதிக்க 1922 ஆம் ஆண்டு லாஸான் மாநாட்டை பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் கர்ஸன் பிரபு கூட்டினார்.கிலாஃபத்திலிருந்து துருக்கியை விடுவிக்க கீழ்க்கண்ட நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.

1.கிலாஃபத்தின் ஒட்டுமொத்த மறைவு

2. கிலாஃபத்தின் எல்லையிலிருந்து கலீஃபாவை வெளியே துரத்துதல்

3.கிலாஃபத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்

4. துருக்கியை மதச்சார்பற்ற நாடாக பிரகடனம் செய்தல்


இந்த நான்கு நிபந்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் மாநாடு வெற்றியாக கருதப்பட்டது.எனினும் துருக்கியில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் கிலாஃபத்தை தங்களின் இதயத்தில் வைத்து போற்றியதால் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த முஸ்லிகளின் தலைமையை ஒரேயடியாக வீழ்த்த முடியவில்லை.இதனால் லாஸான் மாநாட்டு தீர்மானங்கள் தோல்வியை தழுவியது.ஆயினும் பிரிட்டன் தன்னுடைய தந்திர முயற்சியை விட்டுவிடவில்லை. எனவே தங்களின் கங்காணி முஸ்தஃபா கமாலை முழு பலத்தையும் பிரயோகித்து கிலாஃபத்தை வீழ்த்துமாறு கூறினர்.இறுதியாக கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் முழு பலத்தை வைத்து அச்சுறுத்தி கிலாஃபத்தை அகற்றுவதற்கான மசோதாவைக் கொண்டுவந்து கிலாஃபத்தை அழித்தான்.

முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற பிரிட்டனின் கங்காணி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட்தும் முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாமிய பூமி பல தேசங்களாக பிளவுபடுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃப்ஃபார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர். மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர். அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கிவருகின்றனர்

கிலாஃபத்தை அழித்தபின்னர் காலனியாதிக்க காஃபிர்கள் ஓய்ந்துவிடவில்ல. அந்த கிலாஃபா மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான் கர்ஸன் பிரபு இவ்வாறு கூறினார்:-

“We must put an end to anything which brings about any Islamic unity between the sons of the Muslims. As we have already succeeded in finishing off the Caliphate, so we must ensure that there will never arise again unity for the Muslims, whether it be intellectual or cultural unity”

“முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

எனவேதான் கிலாஃபத்தின் மீள்வருகை குறித்து அச்சமும் கவலையும் கொண்டிருந்த அமெரிக்க அதிபராயிருந்த புஷ் இவ்வாறு கூறினார்:-

“…establish a violent political utopia across the Middle East, which they call Khilafah, where all would be ruled according to their hateful ideology… This Khilafah would be a totalitarian Islamic empire encompassing all current and former Muslim lands, stretching from Europe to North Africa, the Middle East and Southeast Asia”. …………Washington Post

“ மத்திய கிழக்கில் கிலாஃபத்திற்காக அழைப்பு விடுப்பவர்கள் வெறுப்புமிக்க சித்தாந்தத்தின்(இஸ்லாம்) அடிப்படையில் ஆட்சி செய்ய முயல்வதாகவும், அந்த கிலாஃபா என்பது தற்போதைய மற்றும் முந்தைய இஸ்லாமிய நிலங்களை உள்ளடக்கிய …பரந்து விரிந்த ஐரோப்பாவிலிருந்து வடஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலான பகுதிகளை உள்ளடக்கிய முழுமையான இஸ்லாமிய அரசாகும்”.


ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் சமீபத்தில் இரண்டாவது ஜெனீவா மாநாடு முடிவுற்றதும் NTV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“It is important that the political process is accompanied by combining the healthy forces, who are thinking about their homeland, and not about the establishment of the Khilafah in the Middle East and North Africa. To unite them and help them in many different ways to combat a terrorist threat. This is a goal for the whole region and for the world”.

“சிரியாவின் அரசியல் நிகழ்வானது தன் தாய்நாட்டின் சிந்தனை கொண்ட ஆரோக்கியமான சக்திகளுக்கிடையே ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டுமே தவிர, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் கிலாஃபத்தினை மீண்டும் நிறுவுவதற்காக அமையக்கூடாது. தாய்நாட்டின் சிந்தனை கொண்ட சக்திகளை ஒருங்கிணைத்து பல வழிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். இதுவே அனைத்து பிராந்தியத்திற்கும் அனைத்து உலகிற்குமான குறிக்கோளாகும்.


மேற்குலகினர் மீண்டும் கிலாஃபா ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏராளமான தடைக்கற்களை ஏற்படுத்தியுள்ளனர்.

*தேசியவாதம்,தேசப்பற்று,சோஷலிஸம்,மதச்சார்பின்மை போன்ற சிந்தனைகளை முஸ்லிம்களின் உள்ளத்தில் திணித்துவிட்டனர்.இதற்கான அரசியல் குழுக்களையும் தன்னார்வ நிறுவனங்களையும் முஸ்லிம் உலகில் ஏற்படுத்தியுள்ளனர்.

*இஸ்லாத்திற்கு முரணான பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை இதற்காகவே வடிவமைத்தனர்.இது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

*முஸ்லிம் உலகின் பொருளாதாரத்தை மேற்கத்திய காலனியாதிக்க அரசுகளும், அந்நாட்டின் தனியார் நிறுவனங்களும் தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.இதனால் முஸ்லிம் உம்மா தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

*முஸ்லிம் நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனைகளை ஊக்குவித்து அதில் மேற்குலகம் குளிர் காய்ந்து வருகிறது.

அரபு லீக்,இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC - Organisation of Islamic countries) போன்ற அமைப்புகளை மேற்குலகினர் தோற்றுவித்து முஸ்லிம்களின் பிரச்சனைகளை இதன் மூலமாகவே தீர்த்துவைக்க முடியும் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

*முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்கத்தியர்களின் ஏஜண்டுகளாக இருப்பதால் இஸ்லாத்தை முற்றாக புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ ஆட்சியமைப்பை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். மேலும் இஸ்லாத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநாட்ட பாடுபட்டுவரும் முஸ்லிம்களை தங்களின் மேற்கத்திய எஜமானர்களின் முழு ஆசீர்வாதத்துடன் ஒடுக்கி வருகின்றனர்.

எனினும் இவர்களின் சதிவலைகளையெல்லாம் அறுத்தெறிந்து உலகளாவிய முஸ்லிம்கள் முன்னேறி வருகின்றனர்.எனவே இந்த மாபெரும் பணியில் பங்கெடுக்காத சகோதர சகோதரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் கிலாஃபத்தின் மீள்வருகைக்காக பாடுபடுபவர்களுடன் இணைந்து தோள் கொடுப்போம்.

May 17, 2014

சத்தியம் எது? அசத்தியம் என்பது என்ன?

உண்மையான,என்றும் மாறாத,நிலையான,சரியான விழுமங்களுக்கு பெயர் தான் சத்தியம். உலக மக்கள் ஏற்றுக் கொள்வதால் யாதொன்றும் சத்தியம் ஆவதில்லை.”சுயமாக” இருப்பது தான் சத்தியம். இதனை தெளிவாக நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.

ஒட்டு மொத்த மக்களும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் முற்றாக ஒதுக்கி தள்ளினாலும் சத்தியம் அசத்தியம் ஆகி விடாது. அப்போதும் அது சத்தியமாகதான் இருக்கும். உலக மக்கள் ஏற்று கொண்டால் தான் சத்தியமாக நீடிக்கும் என்கிற கட்டாயத்திற்கு அப்பாற்பட்டது தான் சத்தியம்.

உலகம் சத்தியத்தை ஏற்கின்றதா இல்லையா என்பது ஒரு பொருட்டே கிடையாது. உலகம் ஏற்று கொள்ள மறுப்பதால் சத்தியம் தோற்று போவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி அசத்தியத்தை ஏற்றுக் கொண்ட உலகம் தான் தோற்று போனது.

துன்பங்களும் துயரங்களும் சத்தியத்திற்கு வருவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மீது தான் அவை மழையாய் பொழியும். நன்கு ஆராய்ந்து எல்லாக் கோணங்களிலும் சீர்தூக்கிப் பார்த்து முழுமையான மனதிருப்தியுடன் சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள், சத்தியமே மேலோங்க வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் ஓயாமல் ஒழியாமல் உழைப்பவர்கள்,சத்தியமே மேலோங்க வேண்டும் என்பதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் மீது துன்பங்களும் துயரங்களும் புயலாய் வீசலாம். ஆனால் அவர்களை தோற்றுப் போனவர்களாகச் சொல்ல முடியாது.

இறைத்தூதர்களில் சிலர் வாழ்நாள் முழுவதையும் சத்திய அழைப்பில் செலவிட்ட பிறகும் அவர்களை பின்பற்றி நடக்க எவருமே முன் வரவில்லை என்கிற வரலாற்று குறிப்பை நபிமொழிகளில் வாசிக்க முடிகின்றது. அப்படியானால் அந்த இறைதூதர்களை தோற்றுப் போனவர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக கிடையாது. அவர்களை ஏற்று கொள்ள மறுத்த அசத்தியவாதிகளைத் தங்களின் தலைவர்களாக ஏற்று கொண்ட சமூகத்தினர் தான் தோற்றுப் போனவர்கள்...!

நம்முடைய கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமக்கு முன் இருக்கின்ற பணி ஒன்றே ஒன்றுதான். இருள்களை விரட்டியடிக்க வழி விளக்குகளை ஏற்றுவது தான்...! சாகின்ற வரை இதனை செய்து கொண்டிருப்போம்...!

வழிகெட்டுப் போனவர்கள்,வழிகெடுப்பவர்களின் பட்டியலில் நம்முடைய பெயர் இடம் பெற்று விடக்கூடாது என்பது தான் நமக்கு இருக்கின்ற ஒற்றை கவலை...! இதற்காக இறைவனிடம் பாதுகாவலைத் தேடிக் கொண்டே இருப்போம்...!

அசத்திய இருட்டை விரட்டியடிக்கின்ற மிக பெரும் பணியில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்தியிருக்கின்றான். இந்த மாபெரும் பணிக்காக அல்லாஹ் நம்மை தேர்ந்தெடுத்திருக்கின்றான். இவ்வாறு நம் மீது மிகப்பெரும் அருளை பொழிந்திருக்கின்றான்.

அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்கு ஓரே வழிதான் இருக்கின்றது. இருளை விரட்டி அடிக்க விளக்குகளை ஏற்றிக் கொண்டே போவது...! அதே பணியில் உயிரைத் துறப்பது...!

இன்ஷா அல்லாஹ்....

இறுதி மூச்சு வரை இதே பணி தான்


மெளலானா மெளதூதி (ரஹ்) நன்றி : சமரசம்


நன்றி http://islamiyakolgai.blogspot.in/

இஸ்லாமிய உம்மத் தற்போது சிந்திக்க வேண்டிய தருணமிது ....

இஸ்லாமிய உம்மத்களின் (இந்திய முஸ்லிம்களின்) சக்தி,உணர்ச்சி ,உணர்வு ,உழைப்பு எல்லாம் பாராளுமன்ற ஜனநாயக குப்ர் ஆட்சியமைப்பு தேர்தலில் வீண் விரயமாய் போனது....
இஸ்லாமிய சமுதாயம் முன்னுக்கு வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு ஒவ்வரு இஸ்லாமிய இயக்கங்களும் ,கட்சிகளும், அமைப்புகளும் , தத்தமது சிந்தனையின் பால் ஆளுக்கொரு வழிமுறையை கொண்டு முழுவதுமாக தோல்வியை தழுவியது ...ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்ற கோசத்தை வைத்து சமாதானம் அடைய வேண்டாம் ...காரணம் முஸ்லிம்களின் பிரதிநிகளாக தங்களை காட்டிகொண்ட அத்தனை இயக்கங்களும் ஒரே அணியில் இருந்தும் பலனில்லை.
இது எதை காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும் ....
இஸ்லாமிய உம்மத் எதை நோக்கி பயணிக்க வேண்டுமோ அதை விட்டு விட்டு வேறொரு சிந்தனையின் பால் வழி தவறிப்போய் என்னசெய்வதேண்டு தெரியாமல் சிக்கி தவிக்கிறது ...
இஸ்லாமிய உம்மத் தற்போது சிந்திக்க வேண்டிய தருணமிது ....
1. இஸ்லாத்தை மேலோங்க செய்ய அதனது அகீதாவை வாழ்க்கை திட்டமாக எடுத்து செயல்பட நபி ஸல் சுன்னாவின் பிரகாரம் தனது சிந்தனையில் துல்லியமும் தெளிவும் வேண்டும்.
2. தங்களது சிந்தனையில் எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற சரியான வழிமுறை அறிய வேண்டும்.
3. சிந்தனை எந்த ஒரு தனிநபரையும் சார்ந்து இருக்க கூடாது .
4. இஸ்லாமிய வாழ்க்கை திட்டத்தை அமுல்படுத்த நினைக்கும் ஒவ்வருவரிடமும் சரியான பிணைப்பு இருக்க வேண்டும்....
இப்படி சரியான திட்டமிடுதல் ஒரு அமைப்பிடம் இருக்குமெனில் இஸ்லாம் மறுமலர்ச்சி அடையும் அல்லாஹ்வின் உதவியோடு.....
மிக சமீபத்தில் ....

வேர்களை தேடும் விழுது



வேர்களை தேடும் விழுது
மங்காப் பொன் மாநபியின் சமூகத்திற்கு
எனை அழைத்து செல்லுங்கள்
கொஞ்சம் உலகாயத மோகம் கலைந்து...
இதமாய் இதயத்தை வருடி விட
அந்த மாநபியின் சமூகத்துக்கு
எனை இட்டுச் செல்லுங்கள்.
 
எங்கே
எமது நபியின் குயில் பிலால்
பிலாலே !
உங்கள் சுருதி மாறா குரலெடுத்து
எனக்காக ஒரு முறை
அதான் சொல்லுங்களேன்.
 
காது இனிக்க இனிக்க
இப்னு மஸீதின்
கிராத் கேட்க வேண்டுமே
 
அஸ்ஸலாமு அலைக்கும்
ஹாரிதா இப்னு நுஃமான்
எங்கே உங்களது தாய் -
பெற்றவருக்கு பணிவிடை செய்து
சொர்க்கத்தில் குரான் ஓதும்
பாக்கியம் பெற்றவரல்லவா நீங்கள்
 
அபூ ஹீரைரா !
உங்களிடம் எனக்காக
புத்தம் புது ஹதீஸ்
ஒன்று இருக்கிறதா
 
அபுபக்கரே !
உங்கள் ஈமானின் ஒரு துளியை
தூவுங்களேன்
 
உமரே !
பகுத்தறிவின் ஆழத்தின்
நுணுக்கம் தெரிந்த அறிவு ஜீவியே !
எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு திறமை
ஆச்சரியம் எனக்கில்லை
நீங்களெல்லாம்
முஹம்மது எனும் சுடரில்
பாடம் பயின்ற மேதைகள் அல்லவா
 
ஓ முஸைப் இப்னு உமைரா
எங்கே உங்களது எமன் தேசத்து
காலணி பட்டில் நெய்த சீமை சட்டை
சுகந்தம் வீசும் அத்தர் மணம்
ஈமானின் சுகம் கண்டு
இத்தனை செளகரியமும்
துறந்ததாய் சொன்னார்கள்
இத்தியாகத்தின் பாசறையில்
என்னையும் சேருங்களேன்
எனது ஈமான் தளும்பும் போதுகளில்
எங்கே ஹன்ழரா ?
 
உங்கள் கவலையில் எனக்கும்
இடம் உண்டா ?
 
முதல் இரவில் வியர்வை காயுமுன்னே
விடியலின் வெள்ளி மறையும் முன்னே
போர்களத்தில் குருதி சிந்திய
ஷாஹிதே ஹன்ழராவே
உங்கள் இளம் மனைவிக்கும்
 
அல்லாஹ் அருள் சொறியட்டும்
உஹது மலையே ! உஹது மலையே !
ஹம்ஸா அம்பு பட்டு சாய்ந்த போது
உன்னால் அசையாமல் இருக்க முடிந்ததா?
 
எனது அன்னை ஆயிஷாவை
கண் நிறைய காண வேண்டும்
சொர்க்கம் சொந்தமாகியும்
அழுது அழுது குரான் ஓதும்
 
என் அன்பு தாயே
பதினெட்டு தாண்டு முன்
துணை இழந்த இளமையே
உங்கள் ஈமானின் பலம் புதிரில்லை
எமக்கு புதிதுமில்லை
அபுபக்கரின் மகளல்லவா நீங்கள்..
 
எனது உம்மா கதீஜாவிடம்
என்னை இட்டு செல்லுங்கள்
எங்கள் நபிக்கு தோள் கொடுத்து
அல்லாஹ்வின் சலாம் ஏற்று
பாத்திமாவெனும் மாணிக்கத்தை
கருவில் சுமந்த
அந்த தூய ஆத்மா
என் உயிர் தாயின் மடியில்
ஒரு கணம் சாய வேண்டும்
அள்ளி கொடுக்க கை நீளும்
 
அன்னை ஜைனப் எங்கே ?
தாயே எனக்கும் பசிக்கிறது
அன்ன கரண்டி எடுத்து
நரகம் தீண்டாத அந்த விரல்களால்
கொஞ்சம் ஊட்டி விடுங்கள்ளேன்
 
ஸ அத் இப்னு முஆத் உடைய
மரண ஊர்வலத்தில்
எனக்கும் கலந்து கொள்ள
இடம் இருக்குமா
மலாயிக்காமார்களுடன் நடந்து செல்லும்
பாக்கியமேனும் கிட்டுமே
 
என் உயிர் நபியே ! யா ரசூலே !
உங்கள் சமூகத்தின்
இதமான வாழ்க்கைக்குள்
நானும் வருகிறேனே
கொஞ்சம் உறங்கி, நிறைய விழித்து
அழுது தொழுது
ஏழையாய், ஆனந்தமாய் வாழ
என் உயிர் மேலும் ஆளுமை
கொண்ட நபியே ! யா ரசூலே !
 
உங்கள் பாசறையில்
என்னையும்
அணைத்துக் கொள்ளுங்களேன்.
நீங்கள் கருணையின் ஊற்று
எனக்காக உங்கள் இரக்கத்தில் இன்ஷா அல்லாஹ் இடம் இருக்கும்...


நன்றி !...